BREAKING NEWS
Search

இளையராஜா – ஆர் சுந்தர்ராஜன்: இதயங்களைக் கொள்ளையடித்த இசைக் கூட்டணி – பகுதி-2

இளையராஜா – ஆர் சுந்தர்ராஜன்: இதயங்களைக் கொள்ளையடித்த இசைக் கூட்டணி – பகுதி-2

பின்னிரவு நேரம்… நிலவொளியில் பனிச் சிதறும் குளிர்காலம்… காதலில் உருக வைக்கும் தனிமை…

வானொலி அல்லது குறுவட்டில் இந்தப் பாடல் ஒலிக்கிறது…

நிலவு தூங்கும் நேரம்…
நினைவு தூங்கிடாது…
இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது…
இது ஒரு தொடர்கதை…!

-மனம் நம் வசமிழந்து, எல்லையற்ற பரவசத்தில் மிதப்பது போன்ற ஒரு உணர்வு தெரியும்.

அந்த மாயாஜாலத்தைச் செய்யும் சக்தி  ‘இசைஞானி இளையராஜாவுக்கு’ மட்டுமே உரியது. வேறு யாராலும் சொந்தம் கொண்டாட முடியாதது!

கீதை போல காதல் மிகப் புனிதமானது
கோதை நெஞ்சில் ஆடும்
இந்த சிலுவைப் போன்றது…

-என்ற வரிகள் வரும்போது மனதின் நெகிழ்வு கண்ணீராய் இறங்கும், நம் கட்டுப்பாட்டையும் மீறி!

வைதேகி காத்திருந்தாள் படத்துக்குப் பிறகு இளையராஜா – ஆர் சுந்தரராஜன் கூட்டணியில் உருவான படம் குங்குமச் சிமிழ். மோகன், ரேவதி, இளவரசி நடித்த இந்தப் படமும் பாடல்களுக்காவே பார்க்கப்பட்டதுதான். 1985-ம் ஆண்டு வெளியானது.

நிலவு தூங்கும் நேரம்… பாடல் இருமுறை ஒலிக்கும். கங்கை அமரன் எழுதியிருந்தார்.

இந்தப் பாடல்களைத் தவிர, பூங்காற்றே தீண்டாதே…, கைவலிக்குது கைவலிக்குது மாமா…, கூட்ஸ் வண்டியிலே…, வச்சாளாம் நெத்திப் பொட்டு… என கலக்கலான பாடல்கள் இடம்பெற்ற படம் இது.


1. நிலவு தூங்கும் நேரம் -1

(பாடியவர்: எஸ்பிபி, பாடலாசிரியர்: கங்கை அமரன்)

2. நிலவு தூங்கும் நேரம்… -2

(இந்தப் பாடல் படமாக்கப்பட்டதில் இருந்த அத்தனை குறைகளையும் ஏன் என்று கேள்வியே கேட்காமல் ஏற்றுக் கொள்ள வைத்தது… இளையராஜாவின் இசை, கங்கை அமரனின் வரிகள்தான்!)

அம்மன் கோயில் கிழக்காலே… (1986)

அது என்னமோ தெரியவில்லை… இந்தப் படத்தின் விளம்பரங்கள் அல்லது பாடல்களை எங்கு பார்த்தாலும் / கேட்டாலும் மனம் உற்சாகத்தில் துள்ள ஆரம்பித்துவிடும்.

akk11yy9

காரணம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை… இளையராஜாவும் கங்கை அமரனும் தமிழ் ரசிகர்களை அப்படியே கட்டிப் போட்டார்கள் தங்கள் இசை மற்றும் அருமையான வரிகளில்.

எல்லாப் பாடல்களையும் கங்கை அமரன்தான் எழுதியிருந்தார். இந்தப் படத்தில் இதுதான் சிறந்த பாடல் என்று ஒன்றை மட்டும் குறிப்பிடவே முடியாது. எல்லாமே ‘தி பெஸ்ட்’தான்!

3. சின்னமணி குயிலே..

சின்னமணிக் குயிலே (எஸ்பிபி) மாதிரி இன்னொரு துள்ளலான பாடலை கேட்பது சாத்தியம்தானா… இந்தப் பாடலின் விசேஷம், குரல் கொடுத்த எஸ்பிபிக்கு இணையாக, ராஜாவின் இசையே இன்னொரு குரலாய் மாறிப் பாடும். பாடலின் இடையிடையே ஆங்காங்கே அந்த இசைக்கருவிகள் கொஞ்சும், கெஞ்சும், கிண்டலடிக்கும், குழையும், கிறக்கமூட்டும்….

4. கடை வீதி கலகலக்கும்…

இன்றைக்கு ‘குத்து சாங்’ என்று தங்களைத் தாங்களே கேவலப்படுத்திக் கொள்கிறார்கள் இசையமைப்பாளர்கள்.

ஆனால் ராஜா இந்த வகை கலாட்டா பாடல்களுக்கு வைத்த பெயர் தெம்மாங்கு. அசல் தெம்மாங்கு, எப்படியிருக்கும் என்பதற்கு இதோ ஒரு சரியான உதாரணம். அதிலும் இந்தப் பாடல் ஆரம்பிக்கும்போது, போகிற போக்கில் ராஜா ஒரு இசைத் துணுக்கை ஒலிக்க விடுவார் பாருங்கள்… சான்ஸே இல்லை!

5. உன் பார்வையில் ஓராயிரம்….

ஆர்மோனியத்தில் ஆரம்பித்து அப்படியே சித்ரா, ஜேசுதாஸ் குரல்களில் ராஜாவின் இசை பிரவாகமாய் கலக்கும் அதிசயத்தை வார்த்தைகளில் சொல்லிக் கொண்டிருப்பது வீண். கேட்டுப் பரவசமடைய வேண்டிய பாடல்…

இந்தப் பாடல் தனிப்பட்ட முறையிலும் பலரது நெஞ்சுக்கு நெருக்கமான ஒன்று. கல்லூரியின் ஆரம்ப நாட்களில் பலருக்கு காதல் தூது. காதலின் ஆரம்பக் கட்டத்தில் அதுவே இதயத்தின் பரிமாறல்களாகவும்…

6. காலை நேரப் பூங்குயில்…

இதற்கு இணையான மெலடி மெட்டு, அதற்குப் பொருத்தமான தமிழ் பாடல் வரிகளை வேறு எங்காவது கண்டுபிடித்துத் தருபவர்களை, வாய்ப்புக் கிடைத்தால் ராஜா சாரிடமே அழைத்துப் போகலாம் (அதைவிட பெரிய பரிசு இருக்கா என்ன?).

ஒரே வரியில் சொன்னால்… இனிமையின் உச்சம் இந்தப் பாடல்!

இறுதிப் பாகம் ஞாயிற்றுக்கிழமை… சண்டே ஸ்பெஷலாக. இதில் இரண்டு சிறப்பு விஷயங்கள் உண்டு.

ஒன்று சூப்பர் ஸ்டார் ரஜினியின் ராஜாதி ராஜா படப் பாடல்கள் குறித்த சிறப்புப் பதிவு, அதிலேயே ஆர் சுந்தர்ராஜன் பேட்டியும் இடம்பெறுகிறது!

-சங்கநாதன்

முதல் பகுதியைப் படிக்க/கேட்க…

14 thoughts on “இளையராஜா – ஆர் சுந்தர்ராஜன்: இதயங்களைக் கொள்ளையடித்த இசைக் கூட்டணி – பகுதி-2

 1. Manoharan

  Chinna Mani Kuiley is one of the best fast song I have ever heard. Since movie release till now I heard it lots n lots of times but still it creates an energy while hearing. Music and SPB has mingled ultimately. Kadaiveethi also is a Superb song which the music directors it present could not even imagine to compose a song like this.

 2. r.v.saravanan

  இளையராஜா – ஆர் சுந்தர்ராஜன்: இதயங்களைக் கொள்ளையடித்த இசைக் கூட்டணி

  ஒரே வரியில் சொன்னால்… இனிமையின் உச்சம் இந்த கூட்டணி

  sanganathan and vino i am waiting next part

 3. Suresh கிருஷ்ணா

  என் கல்லூரி நண்பர்கள் அடிக்கடி இப்படிச் சொல்வார்கள்…

  ‘நம்ம மொட்ட பாஸ் ரொம்ப மோசம்யா (சிவாஜி வருவதற்கு முன்பே… மொட்ட பாஸ்னு செல்லமா நம்ம ராஜா சாரைத்தான் குறிப்பிடுவோம்)… இப்படி போதைக்கு அடிமையானவங்க மாதிரி, அவரோட இசைக்கு நம்மை அடிமையாக்கிட்டாரு’, என்று.

  உண்மைதான்.

  அம்மன் கோயில் கிழக்காலே பட இசை தந்த போதை இறங்க, இந்த ஆயுள் முழுக்க தீர வேண்டும்… அப்படி ஒரு இனிமை.

  நன்றி ‘சங்கநாதன்’! 😉

  -Suresh கிருஷ்ணா

 4. Suresh கிருஷ்ணா

  ஹாங்…இன்னொரு முக்கியமான சமாச்சாரம்…

  அம்மன் கோயில் கிழக்காலே படத்துல, ராஜா சார் இசை மாதிரி இன்னொரு அழகான விஷயம் ராதா ராதா ராதா… அதை ‘ஜொள்ளியே’ ஆகணும்! 🙂

  -Suresh கிருஷ்ணா

 5. thamizhan

  really i appriciate your work abt THE RAJA .

  Our past, old ,golden days come real with that time
  mind set up,feelings when we hear his songs..

 6. கிரி

  //ஒன்று சூப்பர் ஸ்டார் ரஜினியின் ராஜாதி ராஜா படப் பாடல்கள் குறித்த சிறப்புப் பதிவு//

  சூப்பரு! எனக்கு இதில் வரும் மலையாள கரையோரம் பாட்டு ரொம்ப ரொம்ப பிடித்த பாட்டு.. இதில் அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் தான்.

 7. Paarvai

  குங்குமச் சிமிழ் நிலவு தூங்கும் நேரம் பாடலின் BGM மாத்திரம் பல சீன்களில் வந்து போகும்….ஆஹா அருமை…(இது மாதிரி ராஜா அவர்கள் பல படங்களில் செய்துள்ளார்…சமீபத்தில் கூட இதனை ஏதோ ஒரு படத்தில் காப்பி அடித்திருந்தார்கள்). அடுத்தது “ராஜாதி ராஜா” வா….சூப்பர்….தலைவரின் “மலையாளக் கரையோரம்( தலைவரின் ஸ்டைல் இந்த பாடலில் ம்ம்ம்) , “மீனம்மா…” பாடகர் மனோவிற்கு ஏற்றம் கொடுத்த ஒரு படம். சுரேஷ் க்ருஷ்னா சார்…சுந்தர் ராஜனின் ஆஸ்தான ஹீரோயின் ராதா தான். ராதாவிடம் ஒரு இனிமையான கவர்ச்சி …இதையும் “ஜொள்ளியே” ஆகணும்…

 8. saravanakumar

  Arumayana pathivugal..continue your post…

  one small correction – Un parvaiyil orayiram song sung by Mrs. K.S.Chithra not S.Janaki amma.
  ________
  நன்றி

 9. A Sivakumar

  Hello,

  I am waiting for your 3 rd part continuation for this article…when it will be published.

  It’s been long time and many Sundays have gone in between.

  Rgds
  Siva
  ________________
  நன்றி சிவா… விரைவில்!

 10. காத்தவராயன்

  சங்கநாதன் சார்,

  குங்குமச்சிமிழ் படத்திலுள்ள அனைத்து பாடல்களையும் எழுதியது கவிஞர் வாலி.

  உன்பார்வையிலே ஓர் ஆயிரம் பாடல் மெல்லத்திறந்தது கதவு படத்திற்காக கம்போஸ் செய்யப்பட்ட பாடல் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். வரிகளை நன்றாக கேட்டுப்பாருங்க, வா.. வெண்ணிலா பாடலை இது replace செய்யுதான்னு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *