BREAKING NEWS
Search

இளையராஜாவை இஞ்செ கூட்டிக்கொண்டு வாருங்களேன்! – பிரபாகரன்

இளையராஜாவை இஞ்செ கூட்டிக்கொண்டு வாருங்களேன்! – பிரபாகரன்

ங்கள் கட்டுப்பாட்டில் இருந்த முல்லைத் தீவு மற்றும் கிளிநொச்சியில் இளையராஜாவின் இசைக் கச்சேரியை நடத்த விரும்பினார் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன். இந்தத் தகவலை அருட்தந்தை ஜெகத் கஸ்பர் வெளியிட்டுள்ளார். ilayarajasweetdreams1

இதுகுறித்து அவர் ‘நக்கீரனி’ல் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதாவது:

குறும்பு, குழந்தைத்தனம், இயல் பான நகைச்சுவை, தன்னைப் பற்றின சுய பிரக்ஞையே இல்லாத எளிமை, தெளிவு, தீர்க்கம், உறுதி இவை யாவுமானதான ஓர் அற்புத ஆளுமையாகவே தமிழீழ விடுதலைப் புலிகதள் தலைவர் பிரபாகரனைக் காணமுடிந்தது. முன்பொரு முறை நான் குறிப் பிட்டது போல் தமிழ் வரலாற்றில் ஆறுபடைகளை கட்டி யெழுப்பிய இந்த அதிசய மனிதர் அவர்.

“ஃபாதர்… ஏ.ஆர்.ரஹ்மானின் கண்ணாமூச்சி ஏனடா பாட்டு கேட்டினிங்களா? என்னென்டு மியூசிக் போட்டிருக்கார்… சரியான திறமைக்காரன்”, என்று கபடும் கசடுமின்றி வியக்கிற விடலைப் பிள்ளையாகவும் இருந்தார்.

மதிய உணவின் போது இசைஞானி இளையராஜா அவர்களுடன் சிம்பொனியில் திருவாசகம் செய்து கொண்டிருப்பது பற்றிக் கூறினேன். “ஆளெ (இளையராஜாவை) இஞ்செ கூட்டிக்கொண்டு வாருங்களேன்… தமிழ்ச்செல்வன் எல்லா ஒழுங்குகளையும் செய்து தருவார். அவரின்டெ பாட்டுகளால்தானே ஒரு தலைமுறைக்கு தமிழ்மொழி மேல் ஈர்ப்பு அதிகமாச்சுது… நீங்க எப்ப வேண்டுமென்டாலும் வரலாம். கிளிநொச்சியிலெ விஸ்தாரமான திறந்தவெளி அரங்கெல்லாம் இருக்குது. எங்கட சனமும் பெரிய இசைக் கச்சேரி பார்க்கலாம்தானே… திருவாசகம் செய்யிறதென்டா முல்லைத்தீவு அம்மன் கோயில் அருகாலெ செய்யலாம்…” என்று பேசிக் கொண்டே இருந்தார்.

இந்த முல்லைத்தீவு அம்மன் கோயில் ஈழத்தமிழ் வரலாற்றின் அதி உயர் இரகசியங்கள் சிலவற்றிற்கு சாட்சியாய் இருந்திருக்கக் கூடும். ஏனென்றால் மே-15 அன்று முல்லைத்தீவு களத்தை விட்டு வேலுப்பிள்ளை பிரபாகரனும் அவரது முதல் வட்ட தற்கொலைப் படையணியும் இந்த முல்லைத்தீவு அம்மன் கோயில் வழியாகத்தான் வெளியேறும் திட்டம் வைத்திருந்ததாக மிக மிக நம்பகமானதோர் தகவல் கடந்த வாரம் கிடைத்தது. அது தொடர்பான விபரங்களை பின்னர் நிச்சயம் எழுதுவேன்”, என்று அவர் எழுதியுள்ளார்.
6 thoughts on “இளையராஜாவை இஞ்செ கூட்டிக்கொண்டு வாருங்களேன்! – பிரபாகரன்

 1. Suresh கிருஷ்ணா

  ஒரு சந்தேகம்…

  ஒரு பேட்டியை இத்தனை வாரங்களுக்கா நீட்டி முழக்கிக் கொண்டிருப்பார்கள்?

  நக்கீரனின் பிஸினஸ் பிளானுக்கு நிகராக இன்னொருத்தரைக் காட்ட முடியாது போங்க.

  -Suresh கிருஷ்ணா

 2. Suresh கிருஷ்ணா

  எது எப்படியோ… நக்கீரன் பற்றிய விமர்சனங்களுக்கு அப்பால் நின்று பார்த்தால்-

  இளையராஜா குறித்து பிரபாகரன் சொன்னது 100 சதவிகிதம் உண்மைதான்.

  இசைத் தமிழை இளைஞர்களின் விருப்பமாக மாற்றிய பெருமை இளையராஜாவுக்கே உரியது.

  -Suresh கிருஷ்ணா

 3. Anwar Bai

  If Nakkheeran publishing news about Tamil Eelam for bussiness than why the rest of the media avoiding it…..unless the rest(other media) are running their business with Rajapakse’s funding.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *