இளையராஜாவுடன் சென்னையில் ‘பா’ பார்த்த அமிதாப்!
பா படத்தின் வெற்றி இந்திப் பட உலகையே நிமிர வைத்திருக்கிறது. அதிரடி மசாலா, திகட்டத் திகட்ட காதல்… இல்லாவிட்டால் பார்க்க முடியாத அளவு குரூரம் போன்ற கதைகளுடன் வரும் படங்களைத் தாண்டி ஒரு மகா வித்தியாசமான முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாக இந்தப் படம் பார்க்கப்படுகிறது.
இதைவிட முக்கியம் படத்தின் இசையமைப்பாளர் இளையராஜாவைக் கொண்டாடுகிறது வட இந்திய மீடியா. படத்தின் பாடல்கள் மற்றும் இசைத் தொகுப்பைக் கேட்டுவிட்டு கண்கலங்கினார் அமிதாப் என நாம் முன்பே குறிப்பிட்டது நினைவிருக்கும்.
படம் வெளியான பிறகு, அந்தப் படத்தை ராஜாவோடு அமர்ந்து பார்க்க வேண்டும் என ஆசைப்பட்ட அமிதாப், சிறப்புக் காட்சி ஒன்றை மும்பையில் ஏற்பாடு செய்தார் நேற்று. ஆனால் இளையராஜாவால் நேற்று மும்பை போக முடியவில்லை.
ஆனாலும் மனசு கேட்கவில்லையாம் அமிதாப்புக்கு. உடனே இளையராஜாவுக்காக சென்னையிலேயே ஒரு சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார். அடுத்த ஒரு மணி நேரத்தில் சத்யம் திரையரங்கை மொத்தமாக முன்பதிவு செய்துவிட்டது அமிதாப்பின் ஏபி கார்ப்பரேஷன் (பா தயாரிப்பாளர்).
சனிக்கிழமை மாலைக் காட்சியை இளையராஜாவுடன் சத்யம் திரையரங்கில் பார்த்துவிட்டு, ராஜாவை கட்டிப் பிடித்து மனசார பாராட்டிவிட்டுத்தான் கிளம்பினார் அமிதாப்!
-என்வழி
இங்கு இந்திய சினிமா என்பது இந்தி சினிமா மட்டும் இல்லை என்ற நிலை மாறனும் . இளையராஜா அதில் மறக்கப்பட்ட அல்லது மறுக்கப்பட்ட ஒரு இசைமேதை,
அமிதாப் அவர்களுக்கு தெரிந்தது இன்னும் இங்கே உள்ள பலருக்கு தெரியாமல் போனது வருத்தம் தரும் விஷயம் .
ராஜன் .
vino
you are claiming that Ilaya rajah is well appreciate dby North media. But the Baru nivedhidha chi charunnu type panna sonna barunnu adikkudhu keyboard avaroda blogla ilayarajava northla ivaroda isai enna isainnum rahmanai kondaduraathavum pottrukkaru. konjam ilayaraja and Pa north reacxtion paththi vivaramma podunga boss
Prasanth,
சாரு நிவேதிதா அவருடைய வலை தளத்தில் இளையராஜாவின் பா படத்து இசையை விமர்சித்து இருந்ததை நானும் படித்தேன். அவருக்கு இளையராஜாவை பிடிக்காமல் போனது அவருடைய விருப்பம். அதை பற்றி ஒன்றும் விமர்சிப்பதற்கு இல்லை. அவருக்கு கமலையும் பிடிக்காது. ஆனால் தனக்கு பிடிக்காதது எதுவுமே தரமானது இல்லை, தான் நினைப்பது போலவே தான் உலகம் முழுதும் நினைகிறார்கள் (வட இந்திய மீடியாவில் பா இசையை கேட்டுவிட்டு சிரிக்கிறார்களாம்) என்பது போன்ற அவர் பதிவுகள் ரொம்பவும் immatured. மேலும் “தன்னை போன்ற ஒரு எழுத்தாளன் பிரான்சில் இருந்திருந்தால் கொண்டாடியிருப்பார்கள். ஆனால் இங்கே என் அருமை யாருக்கும் தெரிவதில்லை, எழுத்தாளனை கொண்டாடாத சமூகம் இது” என்று வேறு புலம்புவார். எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா keetru.com ல் (http://www.keetru.com/literature/interview/aadhavan_2.php) சொன்னது தான் ஞாபகம் வருகிறது. “கலைஞனைக் கொண்டாடாத சமூகம் உருப்படாது என்று சொன்னால் உழவனையோ, தொழிலாளியையோ கொண்டாடாத சமூகம் மட்டும் உருப்பட்டு விடுமா? நீ எழுதும் கவிதைகளைத் தூக்கி வைத்து கொஞ்சிக் கொண்டிருக்கும் எந்த அவசியமும் இந்த சமூகத்துக்குக் கிடையாது.”
ஆகவே சாரு சொல்வது அவருடைய தனிப்பட்ட கருத்து. கேட்டு விட்டு போய்கொண்டே இருங்கள்.
படத்தின் இசையமைப்பாளர் இளையராஜாவைக் கொண்டாடுகிறது வட இந்திய மீடியா.
we are happy …………….
prasanth ,
நான் பா திரைபடத்தை பார்த்தது north india வில் தான் . இங்கே அனைவரும் பா பாடல்களை மிகவும் ரசித்தனர் . பா theme music இங்கே மிகவும் பிரபலம் ஆகி விட்டது . படம் பார்த்த பின்னர் என்னிடமிருந்த பா பாடல்களை விரும்பி வாங்கி கொண்டனர் . இது ஒன்று போதாதா இசைஞானியின் இசை எவ்வாறு கொண்டாடபடுகிறது என்பதற்கு . அமிதாப் இங்கே வந்து அவருடன் சேர்ந்து படம் பார்த்திருக்கிறார் அவர் இளையராஜாவை எவ்வளவு மதிக்கிறார் என்று புரிந்திருக்கும் . அதனால் வீண் வதந்திகளை நம்பாதீர்கள்.
ராஜன் .
இளையராஜாவின் ‘பா’ படத்து இசை பற்றி *********** ல் சாரு எழுதியிருப்பது இது.
“நான் ஜோக்கரா இல்லையா என்பதை காலம் தீர்மானிக்கட்டும். பா என்ற இந்திப் படத்துக்கு உன் இளையராஜா எப்படி பாட்டுப் போட்டிருக்கிறார் என்பதை தயவு செய்து இசை தெரிந்தவர்களிடம் கேட்டுப் பார். வட இந்திய சினிமாவில் இப்படி ஒரு நகைச்சுவையைக் கேள்வி கூடப் பட்டது கிடையாது என்று சிரிக்கிறார்கள். இளையராஜாவை பா படத்தின் காரணமாக அங்கே எல்லோரும் ஜோக்கராகவே பார்க்கிறார்கள். இல்லை என்று யாராவது நிரூபித்தால் நான் எழுதுவதையே நிறுத்திக் கொள்கிறேன்.”
இளையராஜாவை பற்றி சாரு இவ்விதம் எழுதியது சரியா? ஆனால் ஆச்சர்யமாக நேற்றைய அவருடைய பதிவில் மிஷ்கினின் நந்தலாலா படத்திற்கு இளையராஜாவின் இசை, ‘உலகத் தரம்’ என்று எழுதியுள்ளார் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.
_______________
அந்த லிங்க் இங்கு வேண்டாம் என்பதால் எடிட் செய்துள்ளேன். Carry on!
-Vino
“தன்னை போன்ற ஒரு எழுத்தாளன் பிரான்சில் இருந்திருந்தால் கொண்டாடியிருப்பார்கள். ஆனால் இங்கே என் அருமை யாருக்கும் தெரிவதில்லை, எழுத்தாளனை கொண்டாடாத சமூகம் இது” என்று வேறு புலம்புவார்”
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்!
இவர் ஏன் எதுக்கு எடுத்தாலும் இதையே சொல்லிட்டு இருக்காரு! ப்ரான்ஸ்ல அப்படி என்ன தான் இவரை தூக்கி வைத்து ஆடினார்களோ! ஒன்றும் புரியவில்லை.
ஏன் என்றால் நானும் பல நிகழ்ச்சிகளில் பேட்டிகளில் கவனித்து இருக்கிறேன்..ப்ரான்சையே உதாரணம் கூறுவார்.
மாற்றுக்கருத்து கூறுவது ஒவ்வொருவர் தனிப்பட்ட விஷயம்.. ஒருவரை அனைவருக்கும் பிடிக்க வேண்டியது இல்லை… அதற்காக நான் கூறுவது தான் சரி என்கிற தோரணையில் பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
கிரி, கண்ணையா, ராஜன் அவர்களுக்கு ,
நன்றி
நான் கேட்டதே நம் மாதிரி ரசிகர்கள் வெளிபடவேண்டும் என்று தான் கிரி மலையாளத்தை விட்டுடீங்களே அது மட்டும் இல்லை இவர் வருஷக்கணக்கா தியாகம் பண்ணிட்டு பின் நவீனத்துவத்தை எழுதறாரமா? இவரு சிவாஜி பத்தி சொன்னதை கேட்டப்பவே கேட்டவார்தையில திட்டNuமுன்னு தோணிச்சி அதான் வடக்குல என்ன மாதிரி வரவேற்புன்னு தெரிஞ்சு அண்ணாத்தையை ஒருக்கா kekkanumnuthaan .
இளையராஜா ஒரு சிறந்த இசை மேதை. அவருடைய பாடல்கள் மற்றும் இசை metuukalai
என்றுமே மறக்க முடியாது. அவர் ஒரு காலத்தால் அழியாத காவியம்.”இசையின் வர்ணனையை கேட்கும்போது நாடி நரம்புகள் வேலை செய்வதும், மன அமைதிபெருவதும் அவருடைய இசை காவியத்தால் மட்டுமே முடியும்”. அப்படிப்பட்ட ஒரு தென்னிந்திய
இசைமேதையை மக்கள் இன்னும் கண்டுகொள்ள வில்லை. ஆனால் “பா” படத்தின் மூலமாக அவரின் புகழ் இன்னும் சிறக்க வேண்டும் என்று நான் ஆசைபடுகிறேன்.
என்றும் அன்புடன்…
அன்பரசி
ம.எ .தகவல் தொடர்பியல்
புதுவை
சாரு ஒரு மனரீதியாக பாதிக்கப்பட்ட நோயாளி
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை
சாரு என்ன இசை மேதையா
தமிழ் நாட்டில் இரண்டு பேர் இருக்கிறார்கள் ஒருவர் சாரு நிவேதிதா மத்தவர் ஞானி
இவர்கள் இருவரும் குறை கூறுவதில் வல்லவர்கள். இவர்களுக்கு பாராட்டி பழக்கமில்லை.
இவர்களது உளர்களை கணக்கெடுக்க வேண்டாம்