BREAKING NEWS
Search

இளைஞன் விழாவில் ‘வசீகரன்’! – ஸ்பெஷல் படங்கள்

இளைஞன் விழாவில் ‘வசீகரன்’! – ஸ்பெஷல் படங்கள்


எல்லாப் புகழும் இறைவனுக்கே!

ளைஞன் இசை வெளியீட்டு விழாவுக்கு முதல்வர் கலைஞர்தான் தலைவர் என்றாலும், விழாவில் வழக்கம்போல அனைவரையும் வசீகரித்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிதான்.

ஒவ்வொரு முறை அவர் பெயர் உச்சரிக்கப்பட்ட போதும் ஆர்ப்பரித்து அடங்கியது அரங்கம். அரங்கைச் சுற்றி நின்றிருந்த போலீஸ்கார்ரகள் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர் (அதற்கு எத்தனையோ அர்த்தம் உண்டு!).

வாலி மைக் பிடித்து, கடவுளாக நான் பார்க்கும் கலைஞரே என்று ஆரமபித்தார். அரங்கில் பேரமைதி… உடனே, “அடுத்து யார் பேரைச் சொன்னா கைத்தட்ட பலமா வருமோ அவர் பேரைச் சொல்லப் போறேன்…. சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களே..” என்று, நிமிர, பலத்த கைதட்டல். முகத்தில் சலனமின்றிப் பார்த்துக் கொண்டிருந்தார் வாலியின் ‘கடவுள்’!

துணை முதல்வர் முக ஸ்டாலினை கீழே அமர வைத்து, கனிமொழியை மேடையேற்றியிருந்தனர். இத்தனைக்கும் சினிமாவுடன் நேரடித் தொடர்பு ஸ்டாலினுக்குத்தான் உண்டு (ஹீரோவா நடிச்சவராச்சே!).

இந்தப் படத்தை இயக்க சுரேஷ் கிருஷ்ணாவை ஒப்பந்தம் செய்ததும், அதுபற்றி ரஜினியுடன் ஒரு முறை ஆலோசனைக் கேட்டாராம் முதல்வர்.

ரஜினி பேசும்போது, உத்தர் கர்நாடக பக்தி இலக்கியவாதி தொட்டன்ன கவுடா பற்றி கூறும்போது, கவனமாகக் கேட்டுக் கொண்டார் முதல்வர்.

முதல்வர் பேசும்போது, ஒரு கை கொடுப்பதை மறு கை அறியாத வண்ணம் தருபவர் ரஜினி என்று குறிப்பிட்டார்.  அதற்கு முந்தைய நாள்தான் ரஜினி தனது மதுரை ரசிகர்களின் குடும்பத்துக்கு ரூ 4.4 லட்சம் உதவிசெய்திருந்தார், அதுபற்றி சின்ன பிரஸ் ரிலீஸ், செய்தி கூடத் தராமல்!

விழா முடிந்ததும் ரம்யா மற்றும் ரம்யா நம்பீசன் ஆகிய இரு நடிகைகள் ஓடி வந்தனர்… “சார் உங்க கூட ஒரே ஒரு போட்டோவாவது நாங்க எடுத்துக்கணும்” என்று கேட்க, சட்டென்று ரஜினி புகைப்படக்காரர்களைப் பார்க்க, ப்ளாஷ்கள் மின்னின!

விழா படங்கள் சில…

"ரஜினி அவர்களே... அடுத்தது என்னோட முறை... இதே மாதிரி ஒரு போஸ்... அப்புறம் பாருங்க அந்த விழாவும் மாஸ்!

'நானும் எத்தனையோ நட்சத்திரங்களுக்கு எழுதிட்டேன் பாட்டு... ஆனா உங்களுக்கு எழுதும்போது மட்டும்தான் என் வரிகளும் நட்சத்திரங்களா மின்னுது போங்க!'

எதை எதனோடு முடிச்சுப் போடுகிறார் பாருங்க... ஸ்பெக்ட்ரமுக்கும் எந்திரனுக்கும் என்ன சம்பந்தம்!

'ஊரெல்லாம் மழை வெள்ளம்... முதலமைச்சரோ சினிமா விழாவில்' அப்டீன்னு சிலர் கமெண்ட் அடிப்பாங்கன்னு நெனச்சேன்... நடந்துடுச்சி!

அப்படியே, படம் ரிலீசாகும்போது ஒரு 'லெட்டர்' குடுத்துடுங்க ரஜினி!

ஆட்சிக்கு வர்றதுக்கே உதவி பண்ணியிருக்கீங்க கழகத்துக்கு... இப்ப இந்த முகவுக்காக இன்னுமொரு உதவி.. படம் ரிலீசாகும்போது மறக்காம ஒரு 'லெட்டர்' கொடுப்பீங்களா!

இந்த காஸ்ட்யூம்தான் நல்லாருக்கா... சரி சரி, கூடிய சீக்கிரம் நிரந்தரமாக்கிடுவோம்!

-என்வழி ஸ்பெஷல்
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *