BREAKING NEWS
Search

இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றம்… இன்னுமொரு ஆதாரம்!

இலங்கை ராணுவத்தின் வெறியாட்டம்… இன்னுமொரு ஆதாரம்!

கொழும்பு: இலங்கையின் போர்க்குற்றத்தின் கோர முகத்தை சர்வதேசம் உணரும் தருணம் நெருங்குகிறது. சர்வதேச போர் சட்டங்களுக்குப் புறம்பான அத்தனை அக்கிரமங்களையும் புலிகளுக்கு எதிரான போரில் நடத்தியுள்ளது சிங்கள ராணுவம்.

இதற்கான ஓளிப்பட ஆதாரங்கள் ஒவ்வொன்றாக வெளிவரத் துவங்கியுள்ளன.

முன்பு, தங்களிடம் பிடிபட்ட புலிப் போராளிகளின் கண்களைக் கட்டி உயிரோடு தலையில் சுட்டுக் கொன்ற காட்சிகளை சேனல் 4 வெளியிட்டது. அதனை இலங்கை அரசு மறுத்தது. ஆனால் வீடியோவின் உண்மைத் தன்மையை ஆதாரப்பூர்வமாக நிரூபித்தது சேனல் 4.

பெண் புலிகளை நிர்வாணப்படுத்தி சிதைத்துக் கொன்றது, பிடிபட்ட போராளியை துடிக்கத் துடிக்க கத்தியால் அறுத்துக் கொன்றது… இப்படி ஏராளமான ஆதாரங்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன.

இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளிடம் தாம் பெற்ற உதவிகளைக் கொண்டு எத்தகைய கோரத் தாண்டவத்தை இலங்கை ஆடியுள்ளது என்பதற்கு இதோ இன்னும் சில ஆதாரங்களை வெளியிட்டுள்ளது அதிர்வு இணையதளம்.

சர்வதேசத்தால் தடைசெய்யப்பட்ட பாஸ்பரஸ் குண்டுகள் மற்றும் இதர ரசாயண ஆயுதங்களைப் பயன்படுத்தி புலிகளைக் கொன்று குவித்த சிங்கள ராணுவம், இறந்த போராளிகளை குதறி வைத்துள்ளது.

பெண் போராளிகளை நிர்வாணப்படுத்தி, உறுப்புகளைச் சிதைத்து தங்கள் வெறியாட்டத்தை அரங்கேற்றியுள்ளனர்.

வெள்ளைக் கொடியோடு சரணடைந்த நடேசன், பூலித்தேவன் உள்ளிட்ட தலைவர்களை ராணுவம் சுட்டுக் கொன்றதற்கான ஆதாரங்களும் விரைவில் வெளிவர உள்ளன.

இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைக் குழுவை ஐநா நியமித்துள்ள நிலையில், போர்க்குற்றம் தொடர்பான மேலும் பல ஆவணங்கள் வெளிவரக் கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

படங்கள்: அதிர்வு
5 thoughts on “இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றம்… இன்னுமொரு ஆதாரம்!

 1. Raja

  வினோ
  இது போன்ற படங்களை சிறிதாக போட்டு ,கிளிக் செய்தால் பெரிதாக வருமாறு செய்யவும். பார்க்ககவே மனது வலிக்கிறது.
  இதை இன்னும் செயல்படுத்தும் இலங்கையை தட்டி கொடுக்கிறது இந்தியா. வருத்தமாக இருக்கிறது.

 2. govind

  இந்தியாவும் இப்படி ஆகிவிட்டதே காந்தி பிறந்த நாடு , முசிலினி பிறந்த மண்ணில் பிறந்த பெண்ணை ராஜீவ் காந்தி கட்டியதால் வந்த வினை , இந்த கொடுரத்துக்கு இந்தியா என்ன விலை தர போகிறது ….

 3. Muthu

  தமிழ் இன காவலன் என்று சொல்லி கொண்டு தமிழை கொண்டு தமிழ் நாட்டு மக்களை ஏமாற்றி கொண்டிருக்கும் தமிழகத்தை ஆளும் தமிழ் நாட்டின் கருணாவின் வீட்டு பெண்களுக்கு இப்படி ஒரு கதி ஆகி இருந்தால் அந்த தமிழ் இனத்தின் துரோகி டில்லி காங்கிரஸ் நயவஞ்சக நரிகளுக்கு கடிதம் எழுதி கொண்டிருக்குமா????

 4. குமரன்

  இத்தனைக் கொடூரங்களும் நடக்கும்போது தமிழக முதல்வராக இருந்துகொண்டு வெறுமே கடிதம் எழுதுவதும் (காலை நாஷ்டாவுக்கும் மதிய சாப்பாட்டுக்கும் இடையில்) ஆறு மணி நேர உண்ணாவிரத நாடகம் நடத்துவதுமாக இருந்த கருணாநிதியை விடக் கொடிய தமிழினத் துரோகி இதுவரை பிறந்ததுமில்லை, இனிப் பிறக்கப் போவதுமில்லை. கனிமொழியும் தொப்புள்கொடி உறவு என்றெல்லாம் பசப்பி நாடகமாடியது நன்றாகப் புரிந்துவிட்டது.

 5. sankar

  இதுபோன்ற கொடுமையான நிகழ்வுகள் ஏராளம் நிகழ்ந்துள்ளது நிகழ்ந்துகொண்டு இருக்கிறது…
  உலகில் தமிழனின் அறிவையும், முன்னேற்றத்தையும், தமிழ் மொழியின், இனத்தின் முதன்மை தன்மையை பொறுத்துக்கொள்ளமுடியாத ஈனபிறவிகளின் கொடூரத்தை இன்னும் நாம் அனுபவித்துக்கொண்டுதான் இருப்போம். இந்த கொலையாளிகளுக்கும்,மலையாளிகளுக்கும், கொடுமைக்கு துணைபுரியும் துரோகிகளுக்கும்,சவுக்கடிகொடுத்து, தமிழினத்தின் விடுதலைக்கு போராடும் தலைவர்களின், உணர்வாளர்களின், வளர்ச்சியை பொருதுக்கொள்ளமுடியாமலும், தன்னுடைய ஊழல் வாழ்க்கைக்கு பாதுகாப்பான அதிகாரவாழ்வு எங்கே நம்மை விட்டு விலகிவிட்டால் தன பரம்பரை சொகுசுவால்வில் குறைகண்டுவிடுமே என்று தன நயவஞ்சகத்தனதால் ஈழ விடுதலைக்கு தொடர்ந்து துரோகம் செய்து வரும் கறுநாய்நிதியைவிட ராஜபக்சே மேல்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *