BREAKING NEWS
Search

இலங்கையை வீழ்த்தி உலக சாம்பியன் ஆனது பாக்.!

உலக சாம்பியன் ஆனது பாகிஸ்தான்!

லண்டன்: இரண்டாவது ‘ட்வென்டி-20’ உலக கோப்பை பைனலில் இலங்கை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை முதல் முறையாகக் கைப்பற்றியுள்ளது பாகிஸ்தான். t20

‘ட்வென்டி-20’ உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நடந்தது. நேற்று லார்ட்சில் நடந்த பைனலில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் சங்ககரா, பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

ஆனால் இலங்கை அணி துவக்கத்திலேயே ஆட்டம் கண்டது. பாகிஸ்தானின் இளம் வீரர் முகமது ஆமர் வீசிய முதல் ஓவரில் தில்ஷன் ‘டக்’ அவுட்டானார்.

இதற்கு பின் பந்துவீசிய அப்துல் ரசாக் மிரட்டினார். தனது ஒவ்வொரு ஓவரிலும் ஒரு விக்கெட் வீழ்த்தி அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்தார். தனது முதல் ஓவரில் முபாரக்(0) வீழ்த்திய ரசாக், அடுத்த ஓவரின் 5வது பந்தில் ஜெயசூர்யாவை(17) க்ளீன் போல்டாக்கினார்.

தனது 3வது ஓவரில் ஜெயவர்தனாவை(1) வெளியேற்றிய ரசாக், இலங்கை அணியின் முன்னணி வீரர்களை அடுத்தடுத்து வீழ்த்தி நிலைகுலைய வைத்தார். அப்போது 5.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 32 ரன்கள் எடுத்து தத்தளித்துக் கொண்டிருந்தது.

பின்னர் கேப்டன் சங்ககரா, சமர சில்வா இணைந்து போராடினர். அப்ரிதி சுழல் பந்து வீச்சில் சங்ககரா அடுத்தடுத்து 2 பவுண்டரி விளாசி நம்பிக்கை தந்தார். ஆனால் மறுமுனையிலிருந்த சமர சில்வா(14) வை பெவிலியனுக்கு அனுப்பினார் பாக் வீரர் உமர் குல்.

பிற இலங்கை வீரர்களும் சொதப்பலாக ஆட, சங்ககரா மட்டும் அவுட் ஆகாமல் 64 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் சார்பில் ரசாக் அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார். இலங்கை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 138 ரன்கள் மட்டும் எடுத்தது.

139 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு கம்ரான் அக்மல், ஹசன் இணைந்து அசத்தல் துவக்கம் தந்தனர். மெண்டிஸ், மாத்யூஸ் பந்துகளில் தலா ஒரு சிக்சர் அடித்த கம்ரான் 37 ரன்களுக்கு வெளியேறினார். முரளிதரன் சுழலில் ஹசன்(19) அவுட்டானார்.

அடுத்து வந்த அப்ரிதி மற்றும் சோயப் மாலிக் இருவரும் நிதானமாக ஆடி வெற்றி தேடித்தந்தனர்.

பாகிஸ்தானை 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 139 ரன்களை சுலபமாக எடுத்தது.

இதன்மூலம் தனது முதல் 20 ஓவர் உலகக் கோப்பையை வென்றுள்ளது பாகிஸ்தான்.

பாகிஸ்தானுக்கு இந்த கோப்பை கிடைக்கக் காரணமாக இருந்த ரசாக், கபில் தேவின் ஐசிஎல் (இந்தியாவில் 20 ஓவர் போட்டிகளை அறிமுகப்படுத்தியவர் கபில் மற்றும் அவரது ஐசிஎல்தான்!) அமைப்பில் விளையாடிக் கொண்டிருந்தார். இதனால் பிற போட்டிகளில் விளையாட அவரை அனுமதிக்கக் கூடாது என பிசிசிஐ பிடிவாதம் காட்டி வந்தது. சமீபத்தில்தான் அந்தப் பிடிவாதத்தை பிசிசிஐ தளர்த்தியது. இதனால் கடைசி நேரத்தில் பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்த ரசாக், இந்த வெற்றியின் நாயகனாகத் திகழ்கிறார்.




5 thoughts on “இலங்கையை வீழ்த்தி உலக சாம்பியன் ஆனது பாக்.!

  1. வடக்குப்பட்டி ராமசாமி

    இலங்கை இனவெறி பிடித்த நாடுதான்!

    ஆனால் இந்த வெற்றியில் எதோ (FIX) வேறு ஒரு விளையாட்டு இருக்கும் போலிரிக்கு! நீங்க என்ன சொல்றீங்க?

  2. Manithan

    Pakistanla nadakira ivalo problems naduvola avanga T20 world cup win panadu andha naatu makaluku romba santhosama irrukum…..namma natukum oru vidhathula ithu santhosamana visayam than….

  3. வடக்குப்பட்டி ராமசாமி

    hello Manithan, என்ன பேசுறீங்க நீங்க, நாம(தமிழர்கள்) சும்மா இல்லை(ஈழ மக்கள் சாவதை பார்த்துகிட்டு). அதுனால இதெல்லாம் (அல்கொய்தா, தாலி அறுப்பான்) ஒரு பிரச்சனேயே இல்லை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *