BREAKING NEWS
Search

இலங்கையில் 200 லஷ்கர் – இ – தொய்பா தீவிரவாதிகளுக்குப் பயிற்சி!

இலங்கையில் 200 லஷ்கர் – இ – தொய்பா தீவிரவாதிகளுக்குப் பயிற்சி!

கொழும்பு: இந்தியாவுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வரும் பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 200 பேருக்கு இலங்கையில் தீவிர ஆயுதப் பயிற்சி அளிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் தனது பயிற்சித் தளங்களை அமைத்து செயல்பட்டு வந்த லஷ்கர் இ தொய்பாவுக்கு தற்போது புதிய வாசஸ்தலமாக இலங்கை மாறியுள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கையின் வனப் பகுதிகளில், குறிப்பாக கிழக்கு மாகாண பகுதிகளில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் பயிற்சிப் பெற்று வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இதை அந்த நாட்டின் பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபயா மறுத்திருந்தார்.

ஆனால் தற்போது 200 தீவிரவாதிகள் இலங்கையில் தீவிர ஆயுதப் பயிற்சி மேற்கொண்டு வருவதாக இலங்கை தமிழ் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க உளவுத்துறை இந்த தகவலை தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்திகள் கூறுகின்றன. இந்தியாவுக்குள் ஊடுறுவ, இலங்கை நல்ல வாய்ப்பாகவும், எளிய வழியாகவும் இருப்பதாக தீவிரவாதிகள் கருதுவதால் இலங்கையை தங்களது புதிய களமாக தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

புனேவில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் சிக்கிய இருவர், தாங்கள் கொழும்பில் வைத்து பயிற்சி பெற்றதாக கூறியிருந்தனர். இதை கோத்தபயா மறுத்திருந்தார். ஆனால் தற்போது 200 பேர் வரை பயிற்சி பெறுவதாக வெளியாகியுள்ள செய்தி இந்தியத் தரப்பில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.




4 thoughts on “இலங்கையில் 200 லஷ்கர் – இ – தொய்பா தீவிரவாதிகளுக்குப் பயிற்சி!

  1. palPalani

    காஷ்மீருல வெறும் 650 தீவிரவாதிகளை 5 லட்சம் மிலிட்டறியவச்சு தேடுறோம், இந்த 200 -க்கு எத்தன லட்சம் பேர சேக்குறது?

  2. sakthivel

    சிங்கள ஓநாய்களை நம்பிய வடஇந்திய கோமாளிகளுக்கு நல்ல பாடம். இன்னும் பல அதிர்ச்சிகள் அடையவேண்டி வரலாம்…

  3. P.G.R

    இலங்கையே இந்தியா மீது போர் தொடுத்தால்கூட இனி ஆச்சர்யப்பட ஒண்ணுமில்லை.. எப்படினாலும் முதலில் பாதிக்க படுவது தமிழர்கள் மட்டுமே… அதைப்பற்றி யாரும் கவலைபடுவதாகவும் தெரிவதில்லை… தென் இந்தியாவில் இதுவரை பெரியஅளவில் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இல்லாமல் இருந்தது இப்போது அதற்கும் நாமே வழி ஏற்படுத்தி குடுதிருகிறோம்… சுண்டைக்காய் நாடான இலங்கையின் ராஜதந்திரத்திற்கு முன்னால் ஆசியாவின் வல்லரசான இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்குறியானது என்னவோ உண்மை…. இதற்காக இன்றைய ஆட்சியாளர்கள் வருத்தப்படவேண்டிய நாள் ரொம்ப தொலைவில் இல்லை…

    எது எப்படி இருந்தாலும் மானங்கெட்ட தமிழனுக்கு படும்வரை புத்தி வராது…

  4. Karthi

    தமிழ்மக்களை கொல்லும் போது சிரிந்த இந்தியாவே இப்போது என்ன செய்வாய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *