BREAKING NEWS
Search

இலங்கைப் பிரச்சினை.. நடவடிக்கையில் மனநிறைவு இல்லை! – கருணாநிதி

இலங்கை பிரச்சினையில் மத்திய அரசு நடவடிக்கையில் போதிய மனநிறைவு இல்லை- கருணாநிதி

சென்னை: இலங்கையில் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் போதிய மனநிறைவு அளிப்பதாக இல்லை என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் முடிந்த பிறகு முதல்வர் கருணாநிதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அந்தப் பேட்டி விவரம்:

உயர்நிலை செயல்திட்டக் குழுவில் ராஜதந்திரமான ஒரு முடிவை பா.ம.க. உறவு குறித்து தீர்மானமாக நிறைவேற்றியிருக்கிறீர்கள். இதை பா.ம.க. ஏற்றுக் கொள்ளும் என்று நம்புகிறீர்களா?

எனக்குத் தெரியாது. நாங்கள் நல்ல எண்ணத்தோடு எடுத்த முடிவு இது. இதிலே ராஜதந்திரம் ஒன்றும் கிடையாது.

தீர்மானத்தைப் பார்க்கும்போது பா.ம.க. இந்த கூட்டணியில் தொடர்ந்து இருப்பதை உறுதி செய்யும் வகையில் முடிவு செய்திருக்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா?

ஆமாம்.

பா.ம.க.வின் ‘விசுவாசத்துக்கு’ திமுக வைத்துள்ள சோதனையா இது?

உங்களுடைய கற்பனைக்கெல்லாம் நான் ஆள் அல்ல. என்னுடைய கற்பனையாக நிறைய எழுத முடியும். சொல்ல முடியும். ஆனால் இந்தக் கற்பனைக்கெல்லாம் நான் ஆள் அல்ல.

பா.ம.க. உங்கள் கூட்டணியில் சேருவதற்கு காங்கிரஸ் தலைவர்கள் ஒப்புக் கொள்வார்கள் என்று நினைக்கிறீர்களா?

ஒப்புக் கொள்ள வைப்பதற்கு முயற்சிப்பேன்.

செய்தியாளர்கள் பேசாததையா பாமகவினர் பேசினார்கள்?

பா.ம.க. சில நாட்களுக்கு முன்பு வரை உங்களை தரக்குறைவாகப் பேசினார்கள். திடீரென்று அவர்களுடன் கூட்டணிக்கு என்ன காரணம்?

உங்களைப் போன்ற சில செய்தியாளர்கள் பேசாததையா அவர்கள் பேசிவிட்டார்கள்? யார் யார் உண்மையாக என்னை வாழ்த்துவார்கள், யார் யார் தரக் குறைவாக பேசுவார்கள் என்பதெல்லாம் எனக்கு தெரியும்.

தி.மு.க., பா.ம.க. கூட்டணி என்று சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் டாக்டர் ராமதாஸ் தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திரத்தைப் புறக்கணிப்போம் என்று சொல்லியிருக்கிறார். அந்த கருத்தை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?

நான் அவரைப் பற்றியும், அவருடைய தலைமையிலே உள்ள கட்சியைப் பற்றியும் தி.மு.க.வின் உயர்நிலை செயல்திட்டக் குழுவிலே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் விளக்கிச் சொல்லியிருக்கிறேன். இதுபோன்ற கேள்விகளைக் கேட்டு நான் பதில் சொல்லி, அவரை நீங்கள் பதில் சொல்ல வைத்து ஒரு “சிண்டு முடிகிற” வேலையை தயவு செய்து செய்ய வேண்டாம்.

ஈரோட்டைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சு.முத்துசாமி தி.மு.க.வில் சேரப் போவதாக கடந்த மூன்று நாட்களாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறதே?

தி.மு.க.வில் சேருவதைப் பற்றி முத்துசாமி இன்னும் எங்களிடம் பேசவில்லை.

முன்னாள் அமைச்சர் சு.முத்துசாமி தி.மு.க.வில் இணைந்தால் ஏற்றுக் கொள்வீர்களா?

ஏற்றுக் கொள்ளலாமா, வேண்டாமா? நீங்கள் என்ன சொல்கிறீர்கள்.

இலங்கை தமிழர் பிரச்சினை குறித்த தீர்மானத்தில் இனியாவது ஆக்கப்பூர்வமாக நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறீர்கள். அப்படியென்றால் இதுவரை அவர்கள் செய்ததில் உங்களுக்கு திருப்தி இல்லை என்று சொல்லலாமா?

திருப்தியே இல்லை என்று சொல்லமுடியாது. போதுமான அளவிற்கு மனநிறைவு இல்லை.

இலங்கை பிரச்சினையில் மத்திய அரசு என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

அனுப்பப்பட்ட பொருள்களை இன்னும் சரிவர அவர்களுக்கு விநியோகிக்கப்படவில்லை என்று புகார் இருக்கின்றது. அது உண்மையாக இருந்தால், அதை மத்திய அரசு உடனடியாக சரி செய்ய வேண்டுமென்பது எங்களுடைய வேண்டுகோள்.

செம்மொழி மாநாட்டு இலச்சினை மாறுமா?

கோவை செம்மொழி மாநாட்டுக்காக உங்களைப் பாராட்டுகிறோம். ஆனால் மாநாட்டு இலச்சினையில் தமிழ் பிராமி எழுத்துக்கள் ஒன்று கூட இடம் பெறவில்லையே? சிந்து சமவெளி நாகரிகம் தான் அதிலே இடம்பெற்றுள்ளது.

திராவிட நாகரிகத்தினுடைய ஆதி சிந்து நாகரிகம்.

மாநாட்டு இலச்சினையைத் திருத்தி தமிழ் பிராமி எழுத்துக்களை இடம்பெறச் செய்வீர்களா?

அந்த இலச்சினையை மீண்டும் வரைய வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் திருத்தம் சரியென்றால் ஏற்றுக் கொள்வோம்.

ஜெயலலிதா வெற்றி பெற்று பழைய சட்ட மன்றத்திலே ஆட்சி அமைப்போம் என்று சொல்லியிருக்கிறாரே?

(சிரிப்பையே பதிலாகத் தருகிறார் முதல்வர்)

சிறுதாவூர் நில பிரச்சினைக்காக தி.மு.க. எப்போது ஆர்ப்பாட்டம் நடத்தப் போகிறது?

காஞ்சீபுரம் மாவட்டக் கழகத்தின் சார்பில் அந்த போராட்டத்தை நடத்துவதற்கு எங்களிடம் அனுமதி கேட்டிருக்கிறார்கள். நாங்கள் அதற்கு அனுமதி கொடுப்பதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறோம்…”, என்றார்.




11 thoughts on “இலங்கைப் பிரச்சினை.. நடவடிக்கையில் மனநிறைவு இல்லை! – கருணாநிதி

  1. gobinath

    ama thrupthi illa anga tamilan konja peru metham irukkaranga athanala thrupthi ill
    ellarum setthuta thrupthiya irukkum
    kelattu nai election pakkathula vanthathum peccha paru

  2. Mariappan

    கிழம் இன்னும் வாய்சவடால் பேச்சை வைச்சு வண்டி ஓட்டுது.

  3. palPalani

    ஏன் எந்த ஒப்பந்தமும் உங்க குடும்ப பேருல கிடைக்கலையோ?

  4. mani

    நல்லவங்க சீக்கிரம் செத்துடுவாங்க MGR ,

    சனியன் கேட்டவன் சீக்கிரம் சாக மாட்டான் KARUNAAINITHI

  5. sakthivel

    கிழக்குரங்கு வேறு கிளை தாவ அடிபோடுகிறது… இந்த ஈனபிறப்புக்கு எப்போது முடிவு…..????

  6. யாழ்

    யாருக்காவது ஏதாவது பதவி பெறுவதற்கு கருநாய்நிதி ஆயத்தப்படுத்துகிறனோ? இந்த நரிகள் என்று ஈழப்பிரச்சனையில் தமது அசிங்க விரலை நுழைத்தார்களோ அன்றே ஈழத்தமிழனின் அழிவு ஆரம்பமாகிவிட்டது. இனியாவது கிழவா உன் நாரல் வாயைப் பொத்திக் கொண்டு சும்மாகிட.

    யாழ்

  7. யாழ்

    கிழம் தன் சொந்தங்கள் யாருக்காவது அரசில் பதவி பெற்று கொடுக்க ஆயத்தமாகிறானா? என்று எம் ஈழப் பிரச்சனைக்குள் இந்த அரசில் நரிகள் விரலை நுழைத்தார்களோ அன்றே ஈழததமிழனின் அழிவு ஆரம்பமாகிவிட்டது. இனியாவது இந்த கிழட்டு நரி தனது நாரல் வாயைப் பொத்திக் கொண்டு சும்மாயிருந்தாலே போதும். செய்த நாசங்கள் போதும்.

    யாழ்

  8. கனவு

    ஒரு வருடத்திற்கு முன்பு மத்திய அரசின் பதில் மன நிறைவு அளிக்கிறது என்று சொல்லி பல்லாயிரம் மக்கள் படுகொலை செய்யப்படுவதை வேடிக்கை பார்த்தார். இன்று மனநிறைவு அளிக்கவில்லை என்று முதலைகண்ணீர் வடிக்கிறார். இந்த கவலை அன்றே இருந்து இருந்தால் அந்த அப்பாவி மக்களையாவது காப்பாற்றி இருக்கலாம். இன்று ஏன் இந்த நாடகமோ?

  9. raj.s

    கைப்புள்ள கருணாநிதி -” இந்த உலகம் இன்னுமாட நம்மள நம்பிட்டு இருக்கு “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *