BREAKING NEWS
Search

‘இலங்கைத் தயாரிப்புகளைப் புறக்கணிப்போம்!’ – அதிர வைக்கும் ஒரு போராட்டம்

‘இலங்கைத் தயாரிப்புகளைப் புறக்கணிப்போம்!’ – அதிர வைக்கும் ஒரு போராட்டம்

நியூயார்க்: கத்தியில்லை… துப்பாக்கிகளில்லை… ரத்தமில்லை… ஆனால் இது மரண வலியாகத் தெரிகிறது இலங்கைக்கு. அதுதான் புலம்பெயர் தமிழர்கள் நடத்தும் புறக்கணிப்புப் போராட்டம்.

“இனப்படுகொலை என்ற படுபாதகத்தைச் செய்துவரும் இலங்கையில் தயாரிக்கப்படும் ஆயத்த ஆடைகள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் வாங்குவதைத் தவிருங்கள். Made in Sri Lanka என்ற லேபிளுடன் வரும் எந்தப் பொருளை நீங்கள் வாங்கினாலும், அங்கு தமிழர்கள் அழிக்கப்பட நீங்களும் துணை போகிறீர்கள் என்று அர்த்தம்..” போன்ற வாசகங்கள் அடங்கிய தட்டிகளைத் தாங்கி தமிழர்கள் நிற்க, அதை ஒருவித இரக்கத்தோடு பார்த்துச் செல்லும் வெளிநாட்டவர், சம்பந்தப்பட்ட கடையில் வேறு நாட்டுப் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

மீண்டும் அந்தத் தட்டிகளைக் கடக்கும் முன், நாங்கள் இலங்கைப் பொருட்களை வாங்கவில்லை என்று கூறிவிட்டுச் செல்கின்றனர்.

சும்மா ஏதோ ஒப்புக்கு நடத்தாமல், தொடர்ச்சியாக அமெரிக்காவின் பெரிய நகரங்கள் அனைத்திலுமே ஒரேநரத்தில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டதில் கைமேல் பலன் கிடைத்துள்ளது.

இன்னொரு பக்கம் இலங்கையில் தங்கள் முதலீடுகளை பெருமளவில் செய்துள்ள சர்வதேச நிறுவனங்களிடமும் இந்தப் போராட்டம் குறித்து எடுத்துசொல்லி, அவர்களது முதலீடுகளை வாபஸ் பெற வைக்கும் முயற்சியிலும் இந்தத் தமிழர்கள் இறங்கியுள்ளனர். இதற்கும் பலன் கிடைக்கும் தருணம் உருவாகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அமெரிக்காவின் முக்கிய நகரங்களான வாஷிங்டன் டிசி, நியூயார்க், அட்லாண்டா, மியாமி, சான்பிரான்ஸிஸ்கோ, டல்லாஸ், பிரின்ஸ்டன், நியூஜெர்ஸி, சிகாகோ, ரேலி, சார்ல்ஸ்டன், கொலம்பஸ்,  ஒஹியோ மற்றும் பாஸ்டனில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட இந்த போராட்டம் இலங்கையை அதிர வைத்துள்ளது.

Stop made in Srilanka-1

இலங்கையில் ஆடைகள் தயாரித்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்து விற்கும் முதன்மை நிறுவனங்களான விக்டோரியா சீக்ரட் (Victoria’s Secret) மற்றும் GAP ஆகிய நிறுவனங்களின் சில்லறை விற்பனைக் கடைகள் முன்பாகவே இந்தப் போராட்டங்கள் முழு வீச்சுடன் நடத்தப்பட்டன.

சிறிய அளவில் – சில மாதங்களிற்கு முன்னதாக – ஓரிரு நகரங்களில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம் – இப்போது, அமெரிக்காவின் பல நகரங்களிற்கும் விரிவாக்கம் பெற்று தொடர்ந்து நடத்தப்பட்டு வருவது சர்வதேச சமுதாயத்தை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

அமெரிக்கத் தமிழ் அரசியல் செயல்அவையின் [United States Tamil Political Action Committee – USTPAC] ‘இலங்கை தயாரிப்புக்கள் புறக்கணிப்புப் போராட்டக் குழு’ [Sri Lankan Products Boycott Committee] இந்தப் போராட்டங்களை ஒழுங்கமைத்து நடத்தி வருகிறது.

போராட்டக் குழுவினரின் கோரிக்கை மிகத் தெளிவாக இருந்தது:

“நண்பர்களே… இந்தக் கடைகளுக்குச் சென்று எதையும் வாங்க வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை. தாராளமாக செல்லுங்கள். ஆனால் எந்தத் தயாரிப்பிலாது ‘Made in Srilanka’ என்று இருந்தால் அதை அங்கேயே போட்டுவிடுங்கள். அதில் இனப்படுகொலை செய்யப்பட்ட பல ஆயிரம் தமிழரது ரத்தம் தோய்ந்திருக்கிறது!”

இந்த வாசகங்கள் தாங்கிய அட்டைகளைக் கைகளில் தாங்கியபடி தமிழ் உணர்வாளர்கள் போராடினர்.

இதற்கு நல்ல பலனும் கிடைத்துள்ளது.

இந்த ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாண்டி கடைகளுக்குச் செல்லும் வாடிக்கையாளர்கள் இலங்கைத் தயாரிப்புகளைத் தவிர்த்துவிட்டு பிற நாட்டு தயாரிப்புகளை மட்டுமே வாங்கிச் செல்வதாகவும் தெரிவித்துள்ளனர். சிலர் தாங்கள் இலங்கைப் பொருட்களை வாங்கவில்லை என போராட்டத்தை முன்னெடுத்தவர்களுக்கு உறுதிமொழி கொடுத்துவிட்டு சென்றதும் நடந்தது.

VS2

சில அமெரிக்கர்கள், “இலங்கையில் நடந்த விஷயங்களை நாங்கள் அறிவோம். இப்போது நடக்கும் அவலங்களைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். எங்களால் எப்படி இலங்கை தயாரிப்புகளை வாங்க முடியும்” என்றும் சில அமெரிக்கர்கள் திருப்பிக் கேட்டது போராட்டக்காரர்களுக்கு பெரும் ஆறுதலாக இருந்தது.

அதே நேரம், குறிப்பிட்ட கடைகள் இந்தப் போராட்டத்தைக் கண்டு கோபம் கொண்டுள்ளதும் உண்மையே. இந்தக் கடைகளை நடத்துவோர், இறங்கிவந்து போராட்டக்காரர்களிடம் “எங்கள் வியாபாரம் பாதிக்கப்படுகிறது. தயவு செய்து போராட்டத்தை விலக்கிக் கொள்ளுங்கள்” என்று கேட்கிறார்கள்.

அவர்களுக்கு போராட்டக்காரர்கள் சொல்லும் பதில், “நாங்கள் அனைத்து பொருட்களையும் வாங்கவிடாமல் தடுக்கவில்லை. இலங்கை தயாரிப்புகளை வாங்காதீர்கள் என்று வாடிக்கையாளர்களின் மனசாட்சியைத் தொட்டுக் கேட்கிறோம். இந்த சங்கடத்தை நீங்கள் தவிர்க்க நினைத்தால் முதலில் இலங்கையில் முதலீடு செய்வதை நிறுத்துங்கள். தற்போதுள்ள முதலீடுகளை திரும்பப் பெறுங்கள்” என்கிறார் அமெரிக்க தமிழ் அரசியல் செயல் அவையின் துணைத் தலைவரும் போராட்டத்தை முன்னின்று நடத்துபவர்களில் ஒருவருமான டாக்டர் எலீன் ஷாண்டர்.

“இலங்கை அரசு செய்த தமிழினப் படுகெலையை நாம் படங்களாகக் காட்டுகின்றோம்; இலட்சக் கணக்கான தமிழர்கள் இராணுவத் தடுப்பு முகாம்களுக்குள் இன்னும் அடைத்து வைக்கப்பட்டிருப்பதை நாம் ஆதாரங்களோடு காட்டுகிறோம்; பதாகை அட்டைகளைப் பிடிப்பது மட்டும் இல்லாமல், எல்லா விபரங்களையும் சிறிய பிரசுரங்களாக அச்சிட்டு வாடிக்கையாளர்களின் கைகளில் கொடுக்கின்றோம். இவை எல்லாம் அவர்களைச் சிந்திக்கத் தூண்டும்.Gap_Nov28_5

சாதாரணமாக ஒரு உடையை வாங்குவதன் மூலம் அவர்கள் கொடுக்கும் பணம், ஒரு மனித சமுதாயத்தின் அழிவுக்கு எப்படியெல்லாம் செலவிடப்படுகின்றது என்பதை விளக்குகின்றோம். இவையெல்லாம் – சாதாரண குடிமகனின் இதயத்தைக் கட்டாயம் உலுக்கும்; நிச்சயமாக உலுக்குகின்றது” என்றார் போராட்டத்தில் பங்கேற்ற சிவா நாதன்.

இந்த ஆர்ப்பாட்டங்கள் ஏதோ இன்று நேற்று தொடங்கியவை அல்ல… சில மாதங்களுக்கு முன்பே ஐரோப்பாவிலும் ஆஸ்திரேலியாவிலும் முன்னெடுக்கப்பட்டவையே. அதே நேரத்தில் அமெரிக்காவிலும் இப்போராட்டத்தை ஆரம்பித்தனர். பிரிட்டனின் கார்டியன் மற்றும் டைம்ஸ் பத்திரிகைகள் ‘இனப்படுகொலை செய்த இலங்கையில் தயாராகும் துணிகள் உள்ளிட்ட எதையும் வாங்காமல் புறக்கணிக்க வேண்டும்’ என்று பொது மக்களுக்கு கோரிக்கையே வைத்தன.

இன்று இந்தப் போராட்டம் உலகின் கவனத்தை ஈர்க்கும் அளவு விரிவடைந்துள்ளது. முக்கியமாக இலங்கையின் முதுகில் விழும் பெரும் அடியாக மாறிக் கொண்டுள்ளது!
25 thoughts on “‘இலங்கைத் தயாரிப்புகளைப் புறக்கணிப்போம்!’ – அதிர வைக்கும் ஒரு போராட்டம்

 1. ksk

  நியாயமான உணர்வு. உளமார்ந்த போராட்டம். நான் இனிமேல் ‘Made In Srilanka’ பெயர் உள்ள தயாரிப்புகளை தவிர்த்து விடுவேன்.

 2. palPalani

  நம்மூரில் விர்ப்பனையாகும் கொலைகாரர்களின் பட்டியில் தேவை.

 3. Tamilan

  ‘Made In Srilanka’ பொருட்களை நான் வாங்குவதே இல்லை.
  தயவுசெய்து எந்த பொருட்களை வாங்கினாலும் அது எங்கு தயாரிக்கப்பட்டது என்று பார்த்து ‘Made In Srilanka’ வை ஒதுக்கவும்.

 4. Kannaiah

  ஒன்னு செய்யலாம். இப்போ நடுந்துகிட்டு இருக்கிற இந்தியா – இலங்கை Cricket Match ஐ யாரும் பார்க்க மாட்டோம், அதை பற்றி பேசக் கூட மாட்டோம்னு தமிழ் உணர்வாளர்கள் எல்லாரும் பிரகடனப்படுத்தலாம். E-mail, SMS அப்படீன்னு எல்லா கருவியையும் இதற்க்கு பயன் படுத்தலாம். என்வழி. thatstamil போன்ற வலை தளங்கள் இதற்காகவே ஒரு பதிவு பக்கத்தை உருவாக்கி நம் எல்லோருடைய உணர்வையும் ஒருமுகமாய் பதிவு செய்து வெளிப்படுத்தலாம். இது பரவலா நடந்ததுன்னா, நிச்சயம் ஒளி பரப்பு செய்யும் ஊடகங்களுக்கும், விளம்பரதாரர்களுக்கும், இது பாதிப்பை ஏற்படுத்தும். அதன் மூலம் நிச்சயம் இந்த உணர்வு அதிகார மையங்களை எட்டும். பகிஷ்கரிப்புன்னா, இந்த matches ஐ பற்றி ஒரு தகவல் கூட பரிமாறிக் கொள்ளக்கூடாது. It should be out and out in total.

  உடனே “விளையாட்ட, விளையாட்டா பாருங்க, இதெல்லாம் வேஸ்ட்” அப்படீன்னு ‘கருத்து கந்தசாமிங்க’ யாரும் குதிக்க வேணாம். இனவெறியை கடைபிடிச்ச தென் ஆப்ரிக்காவை, அப்படி தான் Cricket ல இருந்து எல்லாரும் ஒதுக்கி வச்சாங்க. எப்படியும் நம்ம அரசு செய்யப் போவதில்லை. Atleast மக்களாவது செய்வோமே.

  வேற யாராச்சும் இன்னும் ஏதாவது வழி இருந்தாலும் சொல்லலாம். வெறும் வார்த்தைகளா மட்டும் இல்லாம, வாங்க எல்லோரும் சேர்ந்து செயல்ல காட்டுவோம்.

  இதற்கு ஆதரவு தெரிவிக்கறவங்க இப்பவே உங்கள் கருத்தை இங்கே பதிவு பண்ணுங்க. வாங்க முதல் திரிய கொளுத்துவோம்.

  “நான் இந்திய இலங்கை Cricket Series ஐ பகிஷ்கரிக்கிறேன். அதன் தொடர்பான எந்த செய்தியையும் நான் பரிமாறிக்கொள்ள மாட்டேன். அதன் ஒளி பரப்பை அடியோடு பகிஷ்கரிக்கிறேன்”

 5. Kirishanthan

  “நான் இந்திய இலங்கை Cricket Series ஐ பகிஷ்கரிக்கிறேன். அதன் தொடர்பான எந்த செய்தியையும் நான் பரிமாறிக்கொள்ள மாட்டேன். அதன் ஒளி பரப்பை அடியோடு பகிஷ்கரிக்கிறேன்”

 6. Guevara

  கண்ணையாவின் அதிர வைக்கும் கருத்துக்களுக்கு மிக்க உடன்பாடு !!!!

 7. Tamilan

  நான் கண்ணையா அவர்கள் சொன்னதை ஆமோதிக்கிறேன். இலங்கை இந்திய கிரிக்கெட் பற்றி பேசுவதும் இல்லை, பார்ப்பதும் இல்லை.. நண்பர்களே இதை முதல் முயற்சியாக வெற்றிகரமாக செய்துகாட்டவேண்டும்!!!!

 8. eelam tamil

  Good Kanniah. Can some TV stations and tamil website join hands on this..? or make announcement to reject whoever sponsor this match series telecast in TV… IF you think little more, you have more way to strengthen our hands… Can i have your hands guys for us?

 9. Shankar

  இதே போன்ற அகிம்சைப் போராட்டத்தை நண்பர் அருண் வேறு ஒரு பின்னுட்டத்தில் சொல்லியிருந்தார். நமது நண்பர்கள் அவரை கடித்து குதறி விட்டார்கள். அதற்காக புலிகளின் போராட்டம் தவறு என்று நான் சொல்லமாட்டேன். அத்தகைய காலகட்டங்களில் அதுவே அவசியமாக இருந்தது.

 10. Doctor

  no,mr,kanniah,

  IT’s possible,because this cricket game is watching all over india…

  This indian’s should nt support our ilam matter,his main aim is to support the sonia,

  even our tamilnadu politicians also….

  SO,our next fight at europe and latian american countries,….That wil be give us better
  solution,,…..Nothing wil happns in india…OUR INDIAN TAMILIANS also slaves in india…

  So,we cant help them,until Mr.karunadithi is alive,,…..so,our tamil peoples in aboard,

  Plz save our peoples in ilam….we r like handicapped ……………

 11. pJS

  நான் கண்ணையா அவர்கள் சொன்னதை ஆமோதிக்கிறேன். இலங்கை இந்திய கிரிக்கெட் பற்றி பேசுவதும் இல்லை, பார்ப்பதும் இல்லை.. நண்பர்களே இதை முதல் முயற்சியாக வெற்றிகரமாக செய்துகாட்டவேண்டும்!!!!

 12. pJS

  கத்தியில்லை… துப்பாக்கிகளில்லை… ரத்தமில்லை… ஆனால் இது மரண வலி

 13. Kannaiah

  நண்பர்களே. நெஞ்சு நெகிழ்கிறது. அனைவரும் ஒன்று சேர்ந்து குரல் கொடுப்போம். வினோ, நீங்கள் இதற்காகவே ஒரு பதிவு பக்கத்தை வைப்பது ஒரு பெரிய impact ஐ கொடுக்கும்.

  நண்பர்களே, இந்த பதிவோடு நமது அர்ப்பணிப்பு முடியவில்லை. E-mail, SMS என உடனே நாம் இந்திய இலங்கை Cricket Match புறக்கணிப்பை தொடங்குவோம்.

  E-mail & SMS: “Freinds, As a mark of protest in support of our ill fated Borthers & Sisters lodged in sickening Camps in Sri Lanka, let us vow to not to watch the on-going India-Sri Lanka Cricket Match series either live or in TV. We will not listen, talk, share any news about the Match with any one. Please spread this message to all you know”.

 14. Kannaiah

  Spelling mistake corrected

  E-mail & SMS: “Friends, As a mark of protest in support of our ill fated Brothers & Sisters lodged in sickening Camps in Sri Lanka, let us vow to not to watch the on-going India-Sri Lanka Cricket Match series either live or in TV. We will not listen, talk, share any news about the Match with any one. Please spread this message to all you know”.

 15. ahhori

  கண்ணையா சொல்வது சரியாய் தோன்றுகிறது. அவ்வாறே செய்வோம்.

 16. Manoharan

  ///பிரிட்டனின் கார்டியன் மற்றும் டைம்ஸ் பத்திரிகைகள் ‘இனப்படுகொலை செய்த இலங்கையில் தயாராகும் துணிகள் உள்ளிட்ட எதையும் வாங்காமல் புறக்கணிக்க வேண்டும்’ என்று பொது மக்களுக்கு கோரிக்கையே வைத்தன.///

  But our Newspapers…………? Particularly Those two Bas….ds Hindu and Dinamalar.

 17. envazhi Post author

  திரு கன்னையா… இலங்கை தயாரிப்புகள் புறக்கணிப்பு குறித்து விரைவில் ஒரு தனி கட்டுரை வெளியிடவிருக்கிறோம். அதிலேயே உங்கள் மேலான கருத்தையும் சேர்த்துவிடுகிறோம். நன்றி.

 18. கன்னையா

  நன்றி வினோ. இந்த கருத்தை நீங்கள் இன்னும் வலிமைபடுத்தி வெளியிடுவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. விரைவில் செய்யுங்கள். நம் அனைவரது முயற்சியும் ஒன்று சேர்ந்து ஒரு மாற்றத்தை உருவாக்கும் என்று நம்புவோம்.

  தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்து செய்வோம்.

 19. r.v.saravanan

  இப்போ நடுந்துகிட்டு இருக்கிற இந்தியா – இலங்கை Cricket Match ஐ யாரும் பார்க்க மாட்டோம், அதை பற்றி பேசக் கூட மாட்டோம்னு தமிழ் உணர்வாளர்கள் எல்லாரும் பிரகடனப்படுத்தலாம்.

  நிச்சயம் ஒளி பரப்பு செய்யும் ஊடகங்களுக்கும், விளம்பரதாரர்களுக்கும், இது பாதிப்பை ஏற்படுத்தும். அதன் மூலம் நிச்சயம் இந்த உணர்வு அதிகார மையங்களை எட்டும்.

  idhu அகிம்சை vazhi

  very good idea kanniah

  idhu அகிம்சை vazhi

 20. Arun

  நன்றி வினோ மற்றும் கன்னையா. இந்த approach நிச்சயம் வெற்றி பெரும் நு நம்பிக்கை இருக்கு. என்னோட நண்பர்கள் அனைவர்க்கும் SMS அனுப்ப ஆரம்பிச்சுட்டேன்.

 21. Parthiban

  நான் கண்ணையா அவர்கள் சொன்னதை ஆமோதிக்கிறேன். இலங்கை இந்திய கிரிக்கெட் பற்றி பேசுவதும் இல்லை, பார்ப்பதும் இல்லை.. நண்பர்களே இதை முதல் முயற்சியாக வெற்றிகரமாக செய்துகாட்டவேண்டும்!!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *