BREAKING NEWS
Search

இலங்கைக்கு சிறப்புப் பிரதிநிதி – பிரதமருக்கு கருணாநிதி கடிதம்

இலங்கையில் தமிழர் பகுதிகளில் மறுவாழ்வு மற்றும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்ய சிறப்புப் பிரதிநிதியை அனுப்ப வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் கருணாநிதி யோசனை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் கருணாநிதி சனிக்கிழமை எழுதிய கடித விவரம்:

இலங்கைப் பிரச்னைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காண்பது தொடர்பாக எனது

கருத்துகளையும், ஆலோசனைகளையும் கோரி ஜூலை 9-ம் தேதியிட்ட உங்களது கடிதம் கிடைத்தது.

இலங்கைத் தமிழர்கள் சுயமரியாதையுடனும், கண்ணியத்துடனும் வாழ்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று நீங்கள் தெரிவித்துள்ளதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தப் பிரச்னைக்கு அரசியல் ரீதியாக நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்று தி.மு.க. சார்பில் கேட்டு வந்துள்ளோம். இதுதொடர்பாக இந்திய அரசு தொடர்ந்து முயற்சிகள் எடுத்தபோதும், அனைத்துத் தரப்பினரையும் திருப்திப்படுத்தும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் இயல்பு நிலையை ஏற்படுத்துவதும், போரினால் இடம்பெயர்ந்தவர்களுக்கு விரைந்து நிவாரணம் வழங்குவதும் இப்போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணிகளாகும்.

அங்கு போர் முடிந்து ஓராண்டு ஆன பிறகும் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் அவர்களது வாழ்விடங்களுக்குத் திரும்ப அனுமதிக்கப்படவில்லை. இதுதொடர்பாக, கிளிநொச்சிக்கு சென்ற இலங்கை அதிபர் ராஜபட்சவிடம் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளதையும் உங்களது கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

இலங்கையில் நிவாரணப் பணிகளுக்காக இந்திய அரசு 500 கோடி ரூபாய் நிதியை பல மாதங்களுக்கு முன்னர் வழங்கியது. ஆனால், அங்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகள் எதிர்பார்த்த அளவுக்கு வேகமாக நடைபெறாதது வருத்தமளிக்கிறது. இதன்காரணமாக, உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் முகாம்களில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலவும் உண்மை நிலையை ராஜீய வழிமுறைகள் மூலமாகவோ அல்லது சிறப்புப் பிரதிநிதியை அனுப்பியோ ஆய்வு செய்ய வேண்டும்.

இலங்கை அரசின் மறுவாழ்வுப் பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும், மறுகுடியமர்த்தல் பணிகளை முடிப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயிப்பது குறித்தும் இந்தப் பிரதிநிதி ஆய்வு செய்ய வேண்டும்.

இடம்பெயர்ந்துள்ள தமிழர்கள் அமைதியான முறையிலும், உரிமைகளோடும் வாழ்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை திட்டமிட இது உதவும் என்று முதல்வர் கருணாநிதி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
9 thoughts on “இலங்கைக்கு சிறப்புப் பிரதிநிதி – பிரதமருக்கு கருணாநிதி கடிதம்

 1. Cuddalore Shanthakumar

  திமுக தலைவரும் ,தமிழக முதல்வருமான கருணாநிதிக்கு கடிதங்கள் எழுதுவதுதான் அவருடைய உச்சக்கட்ட கடமையாக கருதுகிறார். ஈழத் தமிழர் கொன்று குவிக்கப்பட்ட பொழுதுகளிலும் கடிதம் எழுதினார். காவேரி , முல்லையாறு பிரச்சனைகளிலும் கடிதம் எழுதினார். எதற்கெடுத்தாலும் கடிதம் எழுதுவதையும், பதில் கடிதம் பெறுவதையுமே தீர்வாக நினைக்கும் கருணாநிதி இண்டர்நெட் , செல் போன், வீடியோ கான்பிரஸ்சிங் , என தகவல் தொழிற்நுட்பம் வளர்ந்து விட்ட காலத்திலும் பிடிவாதமாக கடிதம் எழுத குந்த வைத்து உட்காருவது மாபெரும் அதியசமே.
  அப்பவும் நீங்க விட்டீங்களா.. ஒரே கடிதம் ஒராயிரம் முறை பதிலா வந்தாலும்.. மறு நாள் காலை தினந்தந்தி பேப்பர்ல புது நியூஸ் போல போட்டுவுட்டுவீங்கல்ல.. அதான் சூப்பர் .

  விடுங்க தலைவா..பேசறவன் பேசட்டும். தூத்தறவன் தூத்தட்டும். அவனுக்கும் நீங்க ஒரு கடிதம் எழுதி அவனையும் கலங்கடியுங்க. அந்த கடிதத்திற்கு பிறகு நடுத்தெருவுல நின்னு நாண்டுகிட்டு சாவாமல் அவன் உயிரோடு இருப்பான்னு நினைக்கிறீங்களா..?

 2. P.G.R

  இதெல்லாம் ஊரை ஏமாற்றும் வேலை… தமிழக மக்கள் முட்டாள்களாக இருக்கும் வரை இவர் தமிழர் நலனுக்காக கடிதம் மட்டுமே எழுதுவார்… எழுதியபிறகு சாதா தபாலில் அனுப்பி இருக்கிறேன் டெல்லி போய் சேர தாமதமாகும்னு கலைஞர் டிவியில் பேட்டி குடுத்தாலும் ஆச்சர்யப்பட ஒண்ணுமில்லை… இதென்ன அப்பாவி தமிழனின் உயிர் பிரச்சனை தானே பிறகென்ன அவர் குடும்ப உறுப்பினர்களின் பதவி பிரச்சனையா உடனே டெல்லிக்கு போன் போட்டு பேசுவதற்கும் விமானம் ஏறி போய் உடனே பேசுவதற்கும்!!!!
  ஒரு முறை தலைவர் ரஜினிகாந்த் மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது என்று கூறினார்… அது இப்போது கலைஞர்க்கும் காங்கிரஸ்கும் மிக சரியாய் பொருந்தும்!!!! அந்த அளவுக்கு தமிழன் நிலை மிகவும் தாழ்ந்து போய்விட்டது!!!

 3. ram

  டேய்…இதெல்லாம் ஒரு பொழப்பா! கபட நாடகம் ஏண்டா…

 4. குமரன்

  இதே போல கடிதம் எழுதியிருந்தால் அழகிரியும் தயாநிதி மாறனும் மத்திய மந்திரி ஆகியிருப்பார்களா? அ.ராஜாவுக்குத தொலைத் தொடர்புத்துறை கிடைத்திருக்குமா?

  அப்போது தில்லி சென்று பத்து நாட்கள் சக்கர நாற்காலியில் சுத்தியமாதிரி ஈழத்தமிலருக்காகச் செல்லக் கூடாதா?

  குடும்பத்துக்கு ஒரு வகை முயற்சி, அப்பாவித்தமிலருக்கு ஒருவகை முயற்சி.

  சுயநலவாதி கருணாநிதி.

 5. Cuddalore Shanthakumar

  நடுநிலையாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன் , முந்தைய பதிவை பிரசுரியுங்கள்

 6. kumaran

  இங்கே கொடுத்துள்ள “தமிழர்களின் கடல் கடந்த சோகம்: ஓர் ஆராய்ச்சி” என்ற கட்டுரையை என்வழியில் மறுபதிப்புச்செய்யலாம் என்று கருதுகிறேன். கடல்கடந்து வாழும் தமிழர்களின் அவலநிலையை ஆவணப்படுத்துகிறது.

  தமிழர்களின் கடல் கடந்த சோகம்: ஓர் ஆராய்ச்சி
  http://www.tamilhindu.com/2010/07/the-pathetic-situation-of-tamils-beyond-tamilnaadu/

  நன்றி

 7. மா இளங்கண்ணன்

  எல்லாம் கவனிக்கப்படும்,,, வேண்டுமானால் உண்ணாமைப் போராட்டம் நடத்தலாம், முடித்து வைக்க சீனர்கள் வருவர்கள், அச்சா கை

 8. Ravanan

  ஆடு பகை ஆனால் குட்டி உறவு: அமெரிக்காவும் மன்மோகன்சிங்கும்
  21 July, 2010 by admin
  ஒரு புறம் அமெரிக்காவுடன் நல்லுறைப் பேணிவருகிறார் மன்மோகன் சிங். இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரிதும் அமெரிக்காவை நம்பியிருக்கும் மன்மோகன் சிங் கடந்த காலங்களில் அணு சக்த்தி ஒப்பந்தங்கள் உட்பட பல ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளார். ஆனால் அமெரிக்காவில் வசித்துவரும் அவர் மகள் அம்ரிட் சிங், புஷ் நிர்வாகத்தில் இருக்கும்போது ஈராக்கில் அமெரிக்க இராணுவம் மேற்கொண்ட சித்திரவதைகள் தொடர்பாக ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். சித்திரவதையின் நிர்வாகம் என்ற இப் புத்தகத்தில் அமெரிக்க இராணுவம் ஈரானில் மேற்கொண்ட குற்றச் செயல்கள் தொடர்பாகவும், சித்திரவதைகள் தொடர்பாகவும் எழுதியுள்ளார்.

  ஆடு பகை குட்டி உறவு என்பார்கள். ஆனால் மன்மோகன் சிங்கைப் பொறுத்தவரை அது தலைகீழாக மாறியுள்ளது. குட்டி பகை ஆடு உறவு என்ற நிலை தோன்றியுள்ளது. இப் புத்தக வெளியீட்டின் மூலம் பல பின் விளைவுகள் தோன்றலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்ச்சைக்குரிய இப் புத்தகம் புஷ் அரசாங்கத்தை கடுமையாகச் சாடியுள்ளதோடு, புஷ் அரசாங்கம் ஒரு சித்திரவதைகளின் நிர்வாகம் என்ற பொருட்பட எழுதப்பட்டிருப்பதாக அதிர்வு இணையம் அறிகிறது. இப் புத்தகத்தை மன்மோகன் சிங்கின் இரண்டாவது மகள் எழுதியுள்ளார் என்ற விடயம் பலருக்குத் தெரியாது. எழுத்தாளர் குறித்த விபரம் அமெரிக்காவில் வெளியாகும் போது அமெரிக்க மக்களின் எதிர்வினை எப்படி இருக்கும் என்று பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *