BREAKING NEWS
Search

இமயமலையில் ரஜினி… புதிய படங்கள்!

இமயமலையில் ரஜினி… புதிய படங்கள்!

ந்திரனின் இமாலய வெற்றிக்குப் பிறகு, இமயமலைப் பயணம் மேற்கொண்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

உலகமே அவர் படத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்க, அவர் தனிமையும் அமைதியும் நிறைந்த இமயத்தில், இரு நண்பர்கள் துணையுடன் பாபாவைத் தேடிச் சென்றுள்ளார்.

உலகின் அதிக சம்பளம் பெறும் கலைஞன்…  உண்பது நாழி, உடுப்பது இரண்டே என்ற வாழ்க்கை. ஆனால் இந்த எளிமை நிச்சயம் வேஷமல்ல என்பது மட்டும் புரிகிறது!

அவரது இந்த இமயமலைப் பயணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில…

வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு, வழியோரத்தில் நின்றபடி கிடைத்த உணவை ருசித்து அனுபவித்துச் சாப்பிடும் இந்த மனிதர்தான், இந்தியாவின் மிகப் பிரமாணடமான, ‘ஆல் டைம் பிளாக்பஸ்டர்’ படத்தைக் கொடுத்தவர் என்றால் நம்ப முடிகிறதா…

படையப்பாவிலும் எந்திரனிலும் கூட பார்த்திராத பட்டையைக் கிளப்பும் நிஜ ஸ்டைல்!

இந்த சந்தோஷம் எப்போதும் நிலைக்கட்டும்!

கடவுள் மிகப் பெரியவன்... கிடைக்க வேண்டிய நேரத்தில் உரியதைத் தருவான்!

ஏன்... நான் ஹேப்பியா போஸ் கொடுக்கக் கூடாதா!

இனி மாறுவேஷம் உதவாதுன்னு சொல்லிட்டாங்க... அதான் அப்டியே புறப்பட்டாச்சு!

சந்தோஷம், துயரம் எல்லாத்திலும் நண்பர்கள் முக்கியம்!

ஏன் அடிக்கடி இமயமலை போறேன்னு கேக்கறீங்கல்ல... அதை இங்க வந்து போனப்புறம்தான் தெரிஞ்சிக்க முடியும்!

கிடைச்ச இடத்தில் சாப்பாடு....

... அமர்ந்த இடத்தில் கண்ணுறக்கம், இது போதும் எனக்கு!

மற்றபடி... எல்லாப் புகழும் இறைவனுக்கே!

-என்வழி ஸ்பெஷல்
52 thoughts on “இமயமலையில் ரஜினி… புதிய படங்கள்!

 1. KIcha

  எளிமை, எளிமை, எளிமை இந்த வார்த்தைக்கு ஒரே அர்த்தம் ரஜினி.

  தனது புகழ், வசதி எல்லாத்தையும் விட்டு, தான் ஒரு சாதாரண மனிதன் அப்படிங்கற உணர்வோடு, அவர் மேற்கொண்டு இருக்கும் இந்த பயணம் அவரோட இயல்பை சொல்லுது.

  தேங்க்ஸ் வினோ. Superb Stills. எங்கிருந்துதான் உங்களுக்கு இந்த stills எல்லாம் கிடைக்குதோ. பின்தொடர்ந்து போய்டீங்கள என்ன?

 2. nk

  enna azagu da.make up illaamal azaga irupadu en thalaivar oruvar taan.padayappa style appadiye iruku .elimayin chinnam,adakattin avataram,rasigargalin deivam,varungala …?Edu vendumaanulum irukalam.maasatra orey thalaivar superstar.kadavuley koviluku selgirar.

 3. eppoodi

  சூப்பர், தலைவரை இவளவு மகிழ்ச்சியாக, கம்பீரமாக இதற்கு முன்பு புகைப்படங்களில் பார்த்ததேயில்லை, இது எதிரிகளை சத்தமில்லாமல் சாவடித்ததன் வெற்றிக்களிப்பாக இருக்கலாமோ?

  புகைப்படம் 8 …….

  வேட்டிய மடிச்சு கட்டினா இன்னைக்கும் நீங்க பதினாறுக்கு போட்டிதான் சார். நீங்க கலக்குங்க தலைவா ………………………..

 4. இனியவன்

  சூப்பர்.. தலைவர் அருகில் இருப்பது ஹரிதானே….. செங்கல்பட்டு ஆசிரம நிர்வாகிதானே………………….

 5. கொ கோயிந்து

  eppoodi says:
  //எதிரிகளை சத்தமில்லாமல் சாவடித்ததன் வெற்றிக்களிப்பாக இருக்கலாமோ//

  அவருடைய ஆன்மீக அமைதி தேடலுக்கும் உங்க வார்த்தைகளுக்கும், ரொம்ப முரண்பாடா இருக்கே. ஒருவேளை, பாவம் செஞ்சுட்டு கங்கையில போய் மூழ்கி பாவத்தை தொலைப்பாங்களே அந்த மாதிரி அர்த்ததுல சொல்றீங்களா?

 6. முத்துசிவா

  வினோ சார்…. தலைவர் படங்கள் அருமை…
  இன்னொரு விண்ணப்பம்…..

  ரஜினியின் அடுத்த படத்துக்கான போல்லிங் ல “நடிக்கலாம்”, “அவர் விருப்பம்”, “கட்சி தொடங்கலாம்”, “வேண்டாம்” ன்னு நாலு option குடுத்துருக்கீங்க.. அதுல ஒரு சின்ன திருத்தம் பண்ணலாமே….

  “நடிக்க வேண்டும்”, “அவர் விருப்பம்” ன்னு இந்த ரெண்டு option மட்டும் இருந்தாலே போதும்….

  அவர் அடுத்து நடிக்க மாட்டாரா ன்னு தான் எல்லாரும் ஏங்கிக்கிட்டு இருக்காங்க… ஆன இங்க அவரு நடிக்கலாமா நடிக்க கூடாதான்னு நாம தலைவருக்கு சொல்வது போல இருக்கு இங்க இருக்குற அந்த “நடிக்கலாம்”ங்குற option . தயவு செய்து பரிசீலிக்கவும்…

 7. Manoharan

  டைகர்னு பேர் வெச்சவனெல்லாம் டைகராக முடியாதுடா நாயே ….

 8. Manoharan

  இது இவர் ஒருவரால் மட்டுமே முடியும். ரஜினி தன் சொந்த உலகத்தில் இருக்கிறார். இந்தப் புகைப்படங்களை பார்க்கும்போது நமக்கும் இமயமலை போக ஆசை வருகிறது.

 9. முத்துசிவா

  @Tiger :
  சுவாமி நித்யானந்தாவ பத்தி தான சொல்றீங்க… ஆமாண்ணே… ரொம்ப மோசம் அவரு… ஆமா அவர பத்தின கமெண்ட் ah ஏன் இங்க போடுறீங்க…..

  சரி விடுங்க…. ஆமா நீங்கதான் டைகரா…. எடுத்ததா எடுக்காததா?

  நீங்க இந்த site க்கு வர்றது இதுவே கடைசி தடவையா இருக்கணும்… சரியாண்ணே.. அப்புடியே ஓடிப்போயிருங்க….

 10. mathan

  கோயிந்து கோ விந்து போப்பா உன் பாவத்தை கூவம் ஆத்தில் கழுவு

 11. santhosh

  அனைத்து படங்களும் அழகு….

  தலைவர் சாப்பிடும் படம், முதல் மற்றும் முன்றாவது படம் பார்க்கும் போது மனதில் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி..

 12. கொ கோயிந்து

  பரபரப்பு வெளிச்சத்தில் இருந்து தனிமை நாடி, அமைதி நாடி ரொம்ப தூரம் போகிறவர் கூட வருடா வருடம் ஒரு Photographer ம் சேர்ந்துக்குறாரே??? யாருயா அது, தலைவனோட privacy யை disturb பண்றது. பாருங்க, ரஜினி சார் ரொம்ப சிம்பிளா வேட்டிய மடிச்சு கட்டி ரிலாக்ஸ்டா சாப்பிடும்போதும் விட மாட்டறாரு, அட அமைதியா தியானம் செஞ்சாலும் அதையும் விட மாட்டேங்கறாரு. ஆனா ஒன்னு prompt ஆ photos ஐ உடனே அனுப்பி எல்லாரையும் பார்க்க வச்சிடுறாரு. தலைவனுக்கு இந்த விளம்பரம் எல்லாம் பிடிக்காதே??? இதெல்லாம் வேணாம்னு தானே கொஞ்ச நாள் தனியா நிம்மதியா இருக்க போறாரு. ரஜினி சார், அடுத்த தடவை அந்த photographer ஐ ஆட்டத்துல சேர்த்துக்காதீங்க. உங்க privacy தான் கெட்டு போகுது. நீங்க எப்போ இமய மலை போனாலும், ரோட்டு ஓர கடையில டீ குடிக்கறது, கிழிஞ்ச சட்டையோட குகைக்குள்ள கஷ்டப்பட்டு நுழைஞ்சு போறது, பிளாட்பார்ம்ல படுத்து தூங்கறது, தியானம் பண்றது எல்லாத்தையும் நிறைய தடவை ஏற்கனவே பார்த்து இருக்கோம். நீங்க சிம்பிளா இருக்கறது எங்களுக்கு தெரியாதா என்ன?

 13. khalifa

  யாருடா அது டுபாகூர் tiger .
  உலகமே வியந்து பார்க்கும் இமயமலைக்கு உச்சியில் சூப்பர் ஸ்டார்..
  வினோ கலக்கல் புகை படங்கள்.
  உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளை dictionary இல் தேடுகிறேன்

 14. eppoodi

  கொ கோயிந்து

  //அவருடைய ஆன்மீக அமைதி தேடலுக்கும் உங்க வார்த்தைகளுக்கும், ரொம்ப முரண்பாடா இருக்கே. ஒருவேளை, பாவம் செஞ்சுட்டு கங்கையில போய் மூழ்கி பாவத்தை தொலைப்பாங்களே அந்த மாதிரி அர்த்ததுல சொல்றீங்களா?//

  பாவம் செய்தவன் மட்டும்தான் கங்கையில் மூள்கவேண்டுமா என்ன?

  ஒருவன் போரிலே எதிரிகளை வீழ்த்திய பின்னர் ஆண்டவனை தரிக்சிக்க போனால் அதற்கு பாவம் செய்துவிட்டு போவதாகவா உங்கள் அகராதியில் அர்த்தம்?

  அவரது முகத்தில் தெரிவது வெற்றிக்களிப்பின் உற்ச்சாகம், அதில் என்ன தவறிருக்கிறது? முகத்தில் தெரியும் மகிழ்ச்சியை தலையில் ஏற்றக்கூடாதென்பதற்காகத்தான் தலைவர் ஒவ்வொரு படம் முடிந்தபின்னரும் தன்னை தயார்ப்படுத்த இமயமலைக்கு போகிறார்.

  மகளின் திருமணம், எந்திரன் வெற்றி, எதிரிகளுக்கு மவுனத்தால் கொடுத்த மூக்குடைப்பு போன்றவற்றால் அவரது மனதில் இப்போது சலமில்லை, சஞ்சலமில்லை அதனால்தான் முகத்தில் அந்த தேஜஸ். அது உங்களுக்கு பொறுக்கவில்லையா?

  ஆன்மீகத்தை தேடிப்போவதே மன நிறைவுக்காகவும், மன அமைதிக்காகவும், அதனால் ஏற்படும் பரவசநிலையை உணர்வதற்க்கும்தான். அமைதியை தேடிப்போகும்போது சஞ்சலத்தோடுதான் போகவேண்டுமென்று நினைத்தால் அது உங்களது முட்டாள்தனம்.

  மனதில் சஞ்சலத்தோடும் கவலைகலோடும் அமைதியை தேடி வருபவர்களிடம் ஒரு சுயநலம் இருக்கிறது. மன நிறைவோடும் சாதித்த திருப்தியோடும் இருக்கும் ஒருவர் அமைதியை நாடுவது 100 கோடியில் ஒருவராகத்தான் இருக்கமுடியும். அதுதான் தலைவர்.

 15. eppoodi

  மகளின் திருமணம், எந்திரன் வெற்றி, எதிரிகளுக்கு மவுனத்தால் கொடுத்த மூக்குடைப்பு போன்றவற்றால் அவரது மனதில் இப்போது ////சலமில்லை,//// சஞ்சலமில்லை அதனால்தான் முகத்தில் அந்த தேஜஸ். அது உங்களுக்கு பொறுக்கவில்லையா?

  ////சலமில்லை,////

  அது சலனமில்லை என்று வரும், எழுத்துப்பிழை.

 16. eppoodi

  @ Tiger

  தம்பி கைகாலெல்லாம் சவுக்கியமா இருக்கா? கொஞ்சம் கவனமா பாத்துக்கப்பா.

 17. கொ கோயிந்து

  eppoodi உங்க வியாக்கியானம் எல்லாம் சரி தான். ஆனா நீங்க என் கேள்விக்கு பதில் சொல்லவே இல்லை.

  //எதிரிகளை சத்தமில்லாமல் சாவடித்ததன் வெற்றிக்களிப்பாக இருக்கலாமோ//

  அது என்னங்க எப்பப் பாரு எதிரிங்க அவர எந்நேரமும் ரவுண்டு கட்டுற மாதிரியும் இவுரு என்னவோ சக்கர வியூகத்துல மாட்டின அபிமன்யு கணக்கா போராடி ஜெயிக்கிற மாதிரியும் பில்ட்-அப் குடுக்கறீங்க. அவரு வேட்டி கட்டி இருந்தா அதுக்கும் ஒரு எளிமை பில்ட்-அப் ஜிகர்தண்டா குடுக்கறீங்க. T.ராஜேந்தர் கூட அப்பிடி தான், அவரை யாருமே கண்டுக்கலேன்னா கூட, நான் எதிர்ப்பிலேயே வளர்ந்தவன், MGR ஐ எதிர்த்தவன், ஜப்பான்ல ஜாக்கி சானை ஜெயிச்சவன்னு அளந்து விட்டுக்கிட்டே இருப்பாரு. இப்போ அதே trend ஐ ரஜினி ரசிகர்களும் எடுத்துகிட்டாங்க. ஏன் ஒரு வெற்றியை positive ஆக கொண்டாடாமல் அதையே எதிரி, சாவடி அப்படீன்னு ஒரே சீன் போடறீங்க. இங்கே யாரும் ரஜினியை எதிரியாக பார்க்கவில்லை. அப்படி பார்ப்பதாக நீங்கள் நினைத்தால் அது உங்கள் குறை அல்லது ரஜினியின் குறை. இன்னும் எத்தனை நாளைக்கு தான் புளிச்சு போன அவருடைய எளிமை பில்ட்-அப்பை வச்சு பந்தல் போடுவீங்களோ தெரியலை. எளிமையா இருக்கறது ரஜினிக்கு வசதி (comfort). அதனால இருந்துட்டு போறாரு. அம்பானியா இருக்குறதாலே வைரம் பதிச்ச ஜட்டியவா போட்டுக்கிட்டு திரிய முடியும். MGR தன்னுடைய கடைசி காலம் வரைக்கும் தரையில பாய் மட்டும் போட்டு தான் தூங்குவாருன்னு ஒரு முறை ஜானகி அம்மாள் சொல்லி இருக்காங்க. இது எத்தனை பேருக்கு தெரியும். அது எளிமை இல்லை. அது தான் அவருக்கு வசதி (comfort).

 18. simple fan of superstar!

  அட, கொ கோ விந்து… ரஜினி என்ன செய்தாலும், சொன்னாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்கும். வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒரு குரு இருப்பார்கள், எங்களுக்கு ரஜினி அப்படித்தான். உன்னை மாதிரி ஆட்களுக்கு அது புரியாது. அதுக்கு நாங்க என்ன பண்ண முடியும்?

  ரஜினி மாதிரி ஆட்களை கடவுள் அனுப்பி வைப்பதே, உன்னை மாதிரி வீணாப் போனவங்க அவர் வாழ்க்கையைப் பார்த்தாவது உருப்படியா ஏதாவது வேலை பாக்கணுமேன்னுதான். இப்படி வக்கிரமா கமெண்ட் போட்டு நெகடிவா யோசிக்கிறது நீதானே தவிர, ரஜினி ரசிகர்களல்ல. நாங்கள் அவர் வாழ்க்கையிலிருந்து பாஸிடிவான விஷயங்களையே கற்றுக் கொள்கிறோம்.

  எந்திரன் என்ற படம் நன்றாக ஓடுவது பொறுக்காமல் உன்னைப் போன்ற வக்கிர ஆசாமிகள் பரப்பும் பொய்ச் செய்திதான் எத்தனையெத்தனை. அதையெல்லாம் சாவடித்து வெற்றிகரமாக படம் ஓடுகிறது. சாவடி என்றால் கத்தி எடுத்துக் குத்துவது என்று அர்த்தமில்ல மூதேவியே… உன்னை மாதிரி ஆட்கள், இதைப் பார்த்து பொறுக்க மாட்டாமல் வாயிலும் மாரிலும் அடித்துக் கொண்டு, உங்களை நீங்களே அடித்துக் கொண்டு சாவறீ்ங்களே, அதுதான் ‘சாவடி’. அதைத்தான் எப்பூடி அப்படிச் சொல்லியிருக்கிறார்.

  எளிமையாக இருப்பது பெரிசுல்ல, அவர் ரேஞ்சிலிருக்கும் ஒருவன் எளிமையாக இருப்பதுதான் பெருசு, பெருமைக்குரியது.

  உன்னை மாதிரி நாதாரிகளுக்கு எங்கே அந்த அளவு சிந்திக்க தெரியப்போகிறது. போய்யா, போய் உட்கார்ந்து அடுத்த வக்கிர கமெண்டுக்கு யோசி. உன்னை மாதிரி ஜென்மங்களுக்கு அது ஒன்னுதான் தெரியும்!!!

 19. kicha

  @கொ கோயிந்த

  Ippo unga problem enna sir?
  TR rayum, rajini yaiyum oppittu pesara ungaluku oru vidhyasam therilaye?

  TR pathi TR thavira yaarum pesaradhu illai. RAJINI pathi RAJINI eppavume pesaradhu illai. Naama Ellarumdhan avar pathi pesarom. Ungalai pola silarum pesareengale adhudhan avaradhu saadhanai.

  //அது என்னங்க எப்பப் பாரு எதிரிங்க
  அவர எந்நேரமும் ரவுண்டு கட்டுற
  மாதிரியும் இவுரு என்னவோ சக்கர
  வியூகத்துல மாட்டின
  அபிமன்யு கணக்கா போராடி ஜெயிக்கிற
  மாதிரியும் பில்ட் -அப்
  குடுக்கறீங்க//

  indha 21st centuryla por vaalum, kedayamum illadha por engum iruku. Adhuvum rajini ninnaalum, utkaarndhaalum kurai solra kootam onnu iruku. Avangalai enna solradhu nanbargalna?
  Avangalla niraya per edhirigal kooda illa, dhrogigal. Avangalai veezhthi avar vetridhan petru irukar. Sandai pottu vetri peralai, samaadhanathal petra vetri. Saadhanayal petra vetri.

  Idhukum edhavadhu solveenganu therium. Ungalai pola sonnavanga palar maariyaachu. Neengalum maaralam.

 20. கொ கோயிந்து

  simple fan of superstar! says:
  //வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒரு குரு இருப்பார்கள், எங்களுக்கு ரஜினி அப்படித்தான்…நாங்கள் அவர் வாழ்க்கையிலிருந்து பாஸிடிவான விஷயங்களையே கற்றுக் கொள்கிறோம்………..”மூதேவியே……உன்னை மாதிரி நாதாரிகளுக்கு…..உன்னை மாதிரி ஜென்மங்களுக்கு ” ….//

  நல்லா பாசிடிவா, நாகரீகமா பதிவு போட அவர் வாழ்க்கையிலிருந்து தான் கத்துக்கிட்டீங்களோ? உங்களை கேவலப் படுத்திக்கிட்டதும் இல்லாம உங்க மாதிரி ஆளுங்களுக்கு குருன்னு சொல்லி அவரையும் அசிங்கப்படுத்தரீங்களே!!!

 21. Manoharan

  கொ கோயிந்துக்கு என்ன அர்த்தம்..? ***** கோயிந்தா ? எங்களாலும் விதண்டாவாதம் பேசமுடியும் கண்ணா. ரஜினி என்ன செய்தாலும் அது வெளியே தெரியவேண்டும் . அப்போதுதான் அவர் செய்யும் நல்ல விஷயங்களை பின்பற்றுபவர்களுக்கு அது வழிகாட்டியாக இருக்கும். பெரும் புகழும், பெயரும், பணமும், மக்கள் சக்தியும் இருக்கும் ஒருவர் சிம்பிலாக இருப்பது பல பேருக்கு பாடம். அவரை விட இது எல்லாவற்றிலும் ஒன்றுமே இல்லாமல் இருப்பவர்கள் போடும் ஆட்டம் அதிகம், ஒரு விஷயமும் தெரியாமல் எல்லாம் தெரியும் என ஆடும் உன்னைப் போன்ற அரைகுறைகளுக்கும் இது பாடம். ஆனால் பாடம் படிப்பவர்கள் வாழ்கிறார்கள். மற்றவர்கள் சீரழிகிறார்கள். சோறு இருக்க நான் மலம்தான் தின்பேன் என்று சொன்னால் தின்னுட்டு போ என்றுதான் இந்த அசிங்கத்தை சொல்லவேண்டும்.

 22. Manoharan

  @ கொ*** . அவருக்கு எதிரிகள் இருக்கிறார்களா என்றா கேட்டாய் ? இருக்கிறார்கள். ஆனால் வெளிப்படையாக அவரை எதிர்க்க எவனுக்கும் துணிச்சல் இல்லை. அவரின் வான் புகழ் கண்டு மனசுக்குள்ளேயே பொறாமைப்பட்டும் புழுங்கி சாகுபவனும் இங்கே நிறைய உண்டு. அவனுகள் அத்தனை பேருக்கும் எந்திரன் வெற்றி செருப்படி. ஆமா நீ என்ன விஜய் படம் நிறைய பார்ப்பியா ? இவ்வளவு மட்டமா யோசிக்கிறே ?

 23. DEEN_UK

  @Tiger says:
  poli saamiyaar vedam, too bad.
  அவர் என்ன உன்கிட்ட சாமியாரா மாறிட்டேன்னு சொன்னாரா? ஏன் அவர் உன்னையும் உன் குடும்பத்தயும் அருள் தரேன்னு சொல்லி ஏமாத்தினாரா? ( நீங்க குடும்பத்தோட நித்தி கிட்ட ஏமாந்த விரக்தில பேசுறீங்கன்னு நினைக்கிறன்.).அப்போ நித்தியானந்தம் ,பிரேமானந்தா மாதிரி ஆட்கள் காவி கட்டினா நீங்க நம்புவீங்க? ரஜினி போலி சாமியார் தான் (நீங்க என்ன கொட்டை எடுத்த புலியா இல்ல கொட்டை எடுக்காத புளிய? )
  புளியன்னே! நீங்க அவரை நம்பாதிங்க ..அவர் போலி..உங்களை ஏமாதிடுவார்.நீங்க குடும்பத்தோட,எல்லோரும் நித்தியானந்தம் சாமி கிட்ட போங்க..!! அவர் nalllllllllaaaaa அருள் தருவார்..பாவம் ரஞ்சி இல்லாம கஷ்ட படுறாராம்.புது ஆள் தேடுறாராம்.இந்த சைட் கு வந்து டைம் வேஸ்ட் பண்ணாதீங்க…பசங்க எல்லாம் சேந்து கொட்டை எடுத்து ( புளிஇலிருந்து தான் ) ரசம் வட்சுட போறாங்க

 24. DEEN_UK

  MEDICAL PRESCRIPTION FOR கோ..விந்து …..
  தினமும் மூன்று வேளை சாப்பாட்டிற்கு பின்….ஒரு கிலோ ஜெலுசில் (எந்திரன் ரிலீஸ் க்கு பிறகு நமது நாட்டில் ஜெலுசில் தட்டுப்பாடு என்று பிபிசி செய்தில சொன்னாங்க..ஜெலுசில் கிடைக்க வாழ்த்துக்கள். )சாப்பிட்டு வர உங்களுக்கு குணமாகும்..அப்படியும் வயிதெரிச்சல் குறையவில்லை என்றால்..இரண்டு கிலோ ஜெளுசிலாக அதிகமாக சாப்பிடவும்…இதுவும் சரிவரவில்லைஎனில் நேராக கீழ்பாக்கம் ஹாஸ்பிடல் ல சேந்துடுங்க.. பயபடுரதுக்கு ஒன்னும் இல்ல..குணமாகிடும் (இப்போ குணா வா இருக்கிற நீங்க குணம் ஆகிடுவீங்க!)

 25. Manoharan

  இமயமலையில்
  இந்த மலை நின்றால்
  இதுதான் மைய மலையாகத்
  தெரிகிறது.
  இந்த மலைக்கு முன்னால்
  இமயமும் Ever – Rest தான்.

 26. Manoharan

  இமயமலையில்
  இந்த மலை நின்றால்
  இதுதான் மைய மலையாகத்
  தெரிகிறது.
  இந்த மலை
  இயங்கினால்
  இமயத்துக்கும் Ever – Rest தான்.

 27. கொ கோயிந்து

  அடடடா வேட்டிய வரிஞ்சு கட்டிக்கிட்டு வர்ற அத்தனை பேரும் விஷயத்தை பத்தி விவாதிக்காம எங்கே எங்கேயோ போய் காத்தாடி விடுறீங்களே. அது உங்க பலவீனம்னு எனக்கு நல்லா தெரியும். உங்களை போன்ற ரசிக கண்மணிகளுக்கு பதில் சொல்ல தெரியலேன்னா தனிப்பட்ட தூற்றல்களும், அநாகரீக வார்த்தைகளும் (மூதேவி, நாதாரி, ***** கோயிந்தா, மலம்தான் தின்பேன்) தேவை இல்லாத கிண்டல்களும் (இப்போ குணா வா இருக்கிற நீங்க குணம் ஆகிடுவீங்க!), தான் துணை. என்ன செய்யறது Simple Fan of Superstar சொன்ன மாதிரி நீங்க உங்க குரு கிட்ட மானசீகமா அதை மட்டும் தான் கத்துக்கிட்டீங்களோ என்னமோ. விஷயம் இருக்கறவன் தான் விஷயத்தை பத்தி பேச முடியும். நீங்க… சரி அதை விடுங்க.

  உங்களுக்கு எல்லாம் மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கறது வேஸ்ட் தான். இருந்தாலும் முயற்சி பண்றேன். மீண்டும் என் முந்தைய பதிவை போய் பாருங்க, எங்கேயாவது நான் ரஜினியை தரம் தாழ்த்தி பதிவு செஞ்சி இருக்கேனா?

  எல்லார்க்கும் தான் வாழ்க்கை ஒரு போராட்டம். ரஜினிக்கு ஒவ்வொரு படத்திற்கு அப்புறம் உயர்வு தான். இந்தியாவில் மிக அதிக சம்பளம் வாங்கும் சூப்பர் ஸ்டார். ஒவ்வொரு படமும் இந்தியாவில் மற்ற நடிகர்களை விட வியாபார ரீதியில் பெரும் வெற்றி தான். மிக அதிக அளவு ரசிகர்கள் கொண்ட ஒரு நடிகர். உலக அளவில் அறியப்படும் ஒரு இந்திய நடிகர். இப்படி எல்லாமே positive ஆக இருக்கையில், அது ஏன் இன்றும் கூட அவர் போராடி தான் வெற்றி பெறுகிறார், என்கின்ற பில்ட்-அப் என்பது தான் ஏன் கேள்வி. அவர் இந்த நிலைக்கு வர அவர் உழைப்பும், அர்பணிப்பும் தான் காரணம் என்பதை மறுப்பதற்கு இல்லை. மற்றவர்கள் எல்லாம் (ஏன் கமல் உட்பட) வியாபார ரீதியாக தங்கள் படங்கள் வெற்றி பெற போராடிக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் ரஜினி என்னும் மந்திர சொல்லுக்காகவே Cake Walk ஆக அவர் படங்கள் வியாபாரம் ஆகும் போதும், ஓடும் போதும் இன்னமும் கூட அவர் போராடுகிறார், எதிரிகள் நிறைய, அவர் வாழ்க்கையில் சந்திப்பது சோதனைகள் தான் என்கின்ற sentiment பில்ட்-அப் எல்லாம் எதற்காக? அவருக்கு மட்டும் தான் அப்படி எல்லாம் நடப்பது போலவும் மற்றவர்களுக்கு எல்லாம் வாழ்க்கையில் போராட்டமே இல்லை என்பது போலவும் எதற்காக இப்படி ஒரு கட்டுமானம்? கமலையும், விஜய்யையும் தூற்றாத தூற்றுக்களா, செய்யாத கிண்டல்களா இல்லை அவர்கள் படங்கள் காணாத தோல்விகளா? விக்ரம் தன்னை நிரூபிக்க பட்ட பாடும் எடுத்துக்கொண்ட காலமும் உலகறியும். அவர்களும் போராடிக்கொண்டு தானே இருக்கிறார்கள். வெற்றி மட்டுமே பெறுபவர்களை ஆராதிப்பது எளிது. அது ஒரு Mob psychology. ஆனால் தோல்வியிலும் துவளாமல் முயன்று கொண்டே இருப்பது எளிதல்ல. கடந்த 10 வருடங்களில் ரஜினி சந்தித்தது இரண்டே இரண்டு தோல்விகள் தான் (பாபா, குசேலன்) (அதற்கே பதட்டப்பட்டவர் ரஜினி என்பது வேறு விஷயம்). ஆனால் கமல், விஜய், அஜித், விக்ரம் இவர்கள் சந்தித்தது எத்தனை தோல்விகள்? அவர்கள் இன்னும் தொடர்ந்துக்கொண்டு தானே இருக்கிறார்கள்.

  அடுத்த வேளை உணவே போராட்டமாகவும், சாதனை ஆகவும் வாழ்கின்ற கோடானு கோடி மக்களும் நம் நாட்டில் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வாழ்க்கை எல்லோர்க்கும் போராட்டம் தான்.

  மீண்டும் அநாகரீக வார்த்தைகள் தான் எங்களுக்கு துணை என்று நீங்கள் கிளம்பினால் உங்கள் தகுதியை நீங்களே நிரூபணம் செய்கிறீர்கள் என்று தான் அர்த்தம். என்னை நீங்கள் ….மகன் என்று திட்டினாலும் நான் வருந்தப் போவதில்லை. ஏன் என்றால் அது நான் இல்லை. அதனால் உங்கள் அநாகரீக வார்த்தைகளை என்னை திட்டி விரயம் செய்யாதீர்கள்.
  ______________________________________

  கொ கோயிந்து…

  நீங்கள் குறிப்பிட்ட படங்களில் தலைவர் ரஜினி சந்தித்தது தோல்விகள் அல்ல. அவை சதிகள் என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும். தோல்வியடைந்தாலும், வெற்றி பெற்றாலும் அவர் மீது விமர்சனம் வைக்க மட்டும் யாரும் தயங்குவதே இல்லை. அவற்றையெல்லாம் அவர் தனது மனவலிமை மற்றும் ரசிகர் பலத்தால் புறம்தள்ளி விடுகிறார். தோல்வியைப் போலவே வெற்றியையும் இயல்பாக எடுத்துக் கொண்டு அடுத்த கட்டத்துக்கு நகர்கிறார்.

  அவரது வெற்றியை அவர் கொண்டாடாவிட்டாலும், அவரை மனதில் தாங்கியிருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆர்ப்பரித்துக் கொண்டாடவே செய்வார்கள். காரணம் தோல்வியின்போது அதை நேரடியாக அனுபவித்தவர்கள் அவர்களே.

  ஆனால் நீங்கள் குறிப்பிடும் நடிகர்கள் அனைவரையும் தாங்கிப் பிடிக்கவே பெரும்பான்மை தமிழ் ஊடகங்கள் உள்ளன. பின்னணியில் நிறைய பெரிய மனிதர்களும் உள்ளனர். விஜய் 6 படங்களில் நஷ்டம் ஏற்படுத்தியதாகச் சொல்கிறார்களே… அவருக்கு ‘சிவப்பு அட்டை’ நடவடிக்கை எடுத்தார்களா என்ன? ஆளவந்தான் நஷ்டத்துக்காக கமலுக்கு சிவப்பு அட்டை காட்டினார்களா… இல்லையே. ஆனால் குசேலனில், கவுரவ வேடத்தில் நடித்த ரஜினிக்கு சிவப்பு அட்டை காட்ட கொடிபிடித்தார்கள். அன்றைக்கு எல்லோரும், வேடிக்கைதான் பார்த்தார்கள்.

  இந்த நாட்டில் எத்தனையோ வெட்டிக் கொண்டாட்டங்கள் நடக்கின்றன. காமன்வெல்த் போட்டி என்ற பெயரில் ஒரு கூட்டமே உட்கார்ந்து 20 ஆயிரம் கோடிக்குமேல் சாப்பிட்டு ஏப்பம் விட்டுக் கொண்டிருக்கிறது. இதையல்லாம் குறைந்தபட்சம் பேசியாவது இருப்பீர்களா நீங்களெல்லாம். ஆனால் ரஜினி இன்னும் உயரத்துக்குச் சென்றுவிட்டார் என ரசிகர்கள் சிலாகிக்கும்போதுமட்டும் சிலருக்கு நாட்டில் உள்ள வறுமையும், பசியும் பளிச்சென்று தெரிகிறது!

  வாழ்க்கை எல்லோருக்கும் போராட்டம்தான்… அப்படிப்போராடிக் கொண்டிருப்பவர்களில் ஒருவர் இன்னும் போராடி சிகரத்தைத் தொட்டுவிட்டால்… அதை அவரைச் சார்ந்தவர்கள் கொண்டாடி மகிழ்வார்கள். இன்னும் சிலர் காலை வாரப் பார்ப்பார்கள், விமர்சனம், நடுநிலை என்ற பெயரில். நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்!

  -வினோ

 28. vasanth

  மனதில் சஞ்சலத்தோடும் கவலைகலோடும் அமைதியை தேடி வருபவர்களிடம் ஒரு சுயநலம் இருக்கிறது. மன நிறைவோடும் சாதித்த திருப்தியோடும் இருக்கும் ஒருவர் அமைதியை நாடுவது 100 கோடியில் ஒருவராகத்தான் இருக்கமுடியும். அதுதான் தலைவர்,நண்பரின் அருமையான கருத்து ,இதற்கு மேல் எதுபும் சொல்லத்தேவை இல்லை

 29. VELMURUGAN

  திரு. கோவிந்து அவர்களே ,
  நாகரிகம் பற்றி ரஜினி ரசிகர்களுக்கு நீங்கள் பாடம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் வீட்டில் இருப்பவர்கள் செய்யும் நல்ல செயலை பற்றி உங்கள் வீட்டுக்கே வந்து தவறாக சொன்னால் உங்களுக்கு என்ன உணர்ச்சி வருமோ அதே உணர்ச்சியின் வெளிப்பாடுதான் அந்த வசைபாடுகள்.
  அந்த உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாத குருவை நீங்கள் பெற்று இருக்கலாம். அது எங்களுக்கு தேவை இல்லை. இந்த பதிவுகள் பிடிக்காவிட்டால் நீங்கள் உங்கள் வேலை என்னவோ அதை பார்க்கலாம். இல்லை , இதுதான் உங்கள் வேலை என்றல் தொடரவும்.

  நன்றி . ஜெய் ஹிந்த் .
  வேல்முருகன்.

 30. eppoodi

  //eppoodi உங்க வியாக்கியானம் எல்லாம் சரி தான். ஆனா நீங்க என் கேள்விக்கு பதில் சொல்லவே இல்லை.//

  நான் எதிரிகளின்னு சொன்னது அவரோட பங்காளிகளையோ இல்லை மாமன் மச்சாங்களையோ இல்லை, உங்களைபோன்ற விசம பிரச்சார பீரங்கிகளைதான். படம் வரும் வரைக்கும் எத்தனை அலுப்பு குடுத்திருப்பீங்க? எத்தின விஷம பிரச்சாரம் பண்ணியிருப்பீங்க? உங்களுக்கெல்லாம் மவுனமாக இருந்து வைச்ச ஆப்புதான் கண்ணா சத்தமில்லாமல் சாவடிக்கிறதென்கிறது . சாவடிக்கிறதின்னா கத்தி, துப்பாகியலா மட்டும்தான் சாவடிக்கிரதின்னு அர்த்தமில்லை, மவுனத்தலாயும் சாவடிக்கலாம்; அதுதான் இப்ப தலைவர் உங்களுக்கெல்லாம் நிகழ்த்தியிருப்பது. இப்படி தலைவரை வீண்வம்புக்கிழுத்து, சீண்டி கடைசியில தலைவரது மவுனத்தால சாவடிக்கப்பட்டவங்க நிறையபேரு, நீங்கெல்லாம் புதுசு கண்ணா, அதனால கொஞ்சம் ஓவரா துள்ளுறீங்க. தலைவரை வலிந்து எதிர்த்து பின்னர் மூக்குடைபடுபவர்கள் ஏராளம், புதுசெங்கிறதால கொஞ்சம் சங்கடமாத்தான் இருக்கும், கவலையைவிடுங்க போகப்போக உங்களுக்கே மூக்குடைபட்டு பழக்கமாயிடும்.

  //அது என்னங்க எப்பப் பாரு எதிரிங்க அவர எந்நேரமும் ரவுண்டு கட்டுற மாதிரியும் இவுரு என்னவோ சக்கர வியூகத்துல மாட்டின அபிமன்யு கணக்கா போராடி ஜெயிக்கிற மாதிரியும் பில்ட்-அப் குடுக்கறீங்க.//

  முதல்ல மகாபாரதம் ஒழுங்கா தெரியுமா? அபிமன்யு சக்கரவியூகத்தில இருந்து எப்ப போராடி ஜெயிச்சாரு? ? அபிமன்யு சக்கரவியூகத்தை உடைத்து உள்ளே போனார், திரும்பி வரத்தெரியாம உள்ளேயே கொல்லப்பட்டார், எல்லாம் தெரிஞ்சமாதிரி உளறகூடாது. நீங்க எந்த வியூகம் போட்டாலும் அதை தலைவரர் மவுனம் என்கிற ஒரு பிரம்மாஸ்திரத்தாலேயே உடைத்துவிடுவார்.

  //அவரு வேட்டி கட்டி இருந்தா அதுக்கும் ஒரு எளிமை பில்ட்-அப் ஜிகர்தண்டா குடுக்கறீங்க. T.ராஜேந்தர் கூட அப்பிடி தான், அவரை யாருமே கண்டுக்கலேன்னா கூட, நான் எதிர்ப்பிலேயே வளர்ந்தவன், MGR ஐ எதிர்த்தவன், ஜப்பான்ல ஜாக்கி சானை ஜெயிச்சவன்னு அளந்து விட்டுக்கிட்டே இருப்பாரு.இப்போ அதே trend ஐ ரஜினி ரசிகர்களும் எடுத்துகிட்டாங்க. //

  ரஜினியோட எளிமை எப்பிடின்னு எங்களுக்கு தெரியும், சக நடிகர்களுக்கு தெரியும், சினிமாதுறையில இருக்கிற எல்லோருக்கும் தெரியும், அதை நீங்கள் சொல்லி தெரிய வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் நாங்கள் இல்லை. T.ராஜேந்தரயும் ரஜினியையும் ஒரே தட்டில வைத்து பார்ப்பது உங்களது முதிர்ச்சியின்மையை காட்டுகிறது, ரஜினி எங்காவது நான் இப்பிடி, அவனை அப்பிடி ஜெயித்தவன், இவனை இப்படி ஜெயித்தவன் என்று கூறியிருக்கிறாரா? ரஜினி என்ன செய்தாலும் அதற்கு அர்த்தம் கற்பிப்பதே நீங்கள்தான், அவரல்ல.

  ரோட்டில போற ஒருத்தன் நான்தான் உங்கப்பான்னா ஒத்துக்கொள்ளுவீங்களா? இல்லையில்ல? அதேமாதிரிதான் இதுவும், முதல்ல ஒரு விஷயத்தை யாராவது சொன்னா அதை பகுத்துபார்க்க பழகுங்க.

  //ஏன் ஒரு வெற்றியை positive ஆக கொண்டாடாமல் அதையே எதிரி, சாவடி அப்படீன்னு ஒரே சீன் போடறீங்க. இங்கே யாரும் ரஜினியை எதிரியாக பார்க்கவில்லை. அப்படி பார்ப்பதாக நீங்கள் நினைத்தால் அது உங்கள் குறை அல்லது ரஜினியின் குறை.//

  நீங்கென்ன நேற்றுதான் சந்திர மணடலத்தில இருந்து திரும்பி வந்தீங்களா? இப்பிடி காமடி பண்ணிறீங்க, எந்திரனுக்கு வந்தமாதிரி வயித்தெரிச்சலால் வந்த எதிர்வினை ஒசாமாவுக்கும் வரல, ஒபாமாவுக்கும் வரல; இது படம் வருவதற்கு முன்னாடியும்சரி படம் வந்த பின்னாடியும்சரி எப்ப வேணுமினாலும் பொருந்தும், இதுகூட உங்களுக்கு தெரியலயின்னா அது உங்க குறையில்ல, அது உங்க ஆறாம் அறிவின் குறைதான். போயி நல்ல மனநல டாக்டர பாருங்க தம்பி.

  //இன்னும் எத்தனை நாளைக்கு தான் புளிச்சு போன அவருடைய எளிமை பில்ட்-அப்பை வச்சு பந்தல் போடுவீங்களோ தெரியலை//

  அது பில்டப்பில்லை கண்ணா, அதுதான் உண்மை, உண்மையை உங்க வயித்தெரிச்சல் எல்லாம் அடங்கு மட்டும் சொல்லிகிட்டுதான் இருப்பம். (உங்க வயித்தெரிச்சல்தான் கடைசிவரைக்கும் அடங்க போறதில்லையே)

  //எளிமையா இருக்கறது ரஜினிக்கு வசதி (comfort). அதனால இருந்துட்டு போறாரு. அம்பானியா இருக்குறதாலே வைரம் பதிச்ச ஜட்டியவா போட்டுக்கிட்டு திரிய முடியும். MGR தன்னுடைய கடைசி காலம் வரைக்கும் தரையில பாய் மட்டும் போட்டு தான் தூங்குவாருன்னு ஒரு முறை ஜானகி அம்மாள் சொல்லி இருக்காங்க. இது எத்தனை பேருக்கு தெரியும். அது எளிமை இல்லை. அது தான் அவருக்கு வசதி (comfort).//

  மீண்டும் உங்கள் அறிவு மெய்சிலிர்க்க வைக்கிறது, சிறு வயதில் இருந்து பழகும் பழக்கம்தான் பாயில்படுப்பது, இலையில் சாப்பிடுவது, கிணற்றில் குளிப்பது எல்லாமே, அதுதான் வசதி (comfort). அனால் ரஜினியின் ஆன்மீக வாழ்வுக்கு அப்படி ஆரம்பம் முதலே இருந்ததல்ல. 1980 இக்கு முன்னர் ரஜினி எப்படி இருந்தார் என்பது உமக்கு தெரியுமா? ரஜினியை ஆன்மிகம் எப்படி மாற்றியது என்பது உமக்கு தெரியுமா? ரஜினியின் ஆன்மிகம் வசதியில்ல; அது தேடல். அந்த தேடலின் வெற்றியின் வீச்சு ரஜினிக்கு தெரியும், எங்களுக்கு தெறியும். உம்மால் தேடலுக்கும் வசதிக்கும் வித்தியாசத்தை புரிந்து கொள்ள முடியாது. அதை புரிந்துகொள்கிற அளவுக்கு உமக்கு பக்குவமும் முதிர்ச்சியும் இல்லை.

 31. Senthil Pammal

  Pl. Try to avoid to reply to the comments made with wrong intention. Let them comment rajini and his fans. Their concious will give answer to all personal misunderstanding of them . Men may come, men may go. Men is mortal but rajini’s good attitudes and its strength are immortal. Yes, his nature are/will be followed continuously.

 32. DEEN_UK

  @கோயிந்து
  நாங்க தலைவர் வழி பின்பற்றுவதால் தான் கொஞ்சமா பதில் சொல்றோம்..எங்களை விட நாகரீகம் தெரிந்த ரசிகர்கள் யாரும் கிடையாது..தலைவரா இருந்தால் உங்கள் பினாதலுக்கு பதில் கூட சொல்ல மாட்டார் என்பது வேறு விஷயம்…இதில் நிச்சயம் நாங்கள் தலைவரிலிருந்து கொஞ்சம் மாறுகிறோம் என்பது தான் உண்மை..ஏனென்றால் அவர் எதிரிகளையும் அரவணைப்பவர்..அவரால் அப்படி இருக்க முடியும்..காரணம் அவர் ஞானி..நாங்கள் சாதாரண மனிதர்கள்.. நாங்கள் வேறு எந்த நடிகரையும் நாகரிகம் இன்றி கமெண்ட் செய்வதில்லை.எந்த நடிகரை பற்றியும் இங்கு தரக்குறைவாக கூட பேசி கொள்வதில்லை..யாரை பற்றியும் எங்களுக்கு கவலையும் இல்லை.உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் எங்களால் பதில் சொல்ல முடியும்.அதற்கு அவசியம் இல்லை என கருதுகிறோம்..காரணம் நீங்கள் சொல்லி தான் எங்கள் தலைவர் பற்றி தெரிய வேண்டிய அவசியம் இல்லை.அதே நேரம் உங்களுக்கு பதில் சொல்லி தான் நாங்கள் பெயர் எடுக்க வேண்டுமென்ற அவசியமுமில்லை.நாங்கள் முட்டாளாகவே இருந்துவிட்டு போகிறோம்.நீங்கள் அறிவுஜீவியாகவே இருந்துவிட்டு போங்க…அதை நினைத்து நீங்கள் சந்தோஷ பட்டு கொள்ளுங்கள்..ஏன் எங்களுக்கு வேற வேலை இல்லையா?.
  .எங்களது வீட்டில் வந்து நாங்கள் பேசிக்கொள்கிறோம்.கொண்டாடுகிறோம்.வீட்டுக்குள் உங்களை போல கொசுத்தொல்லை வந்தால் டார்ட்டாய்ஸ் கொசுவர்த்தி கொளுத்த தான் செய்வோம்…(கவனிக்க: கொசுவை அடிப்பதில்லை !) ..உங்களுக்கு வாக்குவாதம் செய்ய ஆசையாக இருந்தால் ஒரு பட்டிமன்றதுல போய் பேசிக்கொள்ளுங்கள்.
  இவ்வளவு நேரம் நாங்கள் நாகரீகமாக எழுதுவதற்கு காரணம் என் தலைவன் தான்…உங்களுக்கு நிறைய பதிலடி கொடுக்க ஆசை தான்….
  இந்த வீட்டில் பெண் ரசிகைகளும் இருப்பதால் நாகரீகம் கருதி அனைவரும் அடக்கி வாசிக்கிறார்கள்..போங்க..போய் வீட்ல புள்ளைகுட்டிகள படிக்க வைங்க.வேலைய பாருங்க..உங்க வீடு உருப்பட வழிய பாருங்க..இந்த வீட்ல பழையது ஒன்னும் இல்ல..போய் அடுத்த வீடு பாருங்க..

 33. Sathish

  கோவிந்த்,
  //பரபரப்பு வெளிச்சத்தில் இருந்து தனிமை நாடி, அமைதி நாடி ரொம்ப தூரம் போகிறவர் கூட வருடா வருடம் ஒரு Photographer ம் சேர்ந்துக்குறாரே???//
  இந்த தடவை அவர் போயிருப்பது ஒரு வெற்றிக்கு நன்றி சொல்ல, அதனால் மத்த நேரத்துல போறத விட கொஞ்சம் சந்தோசமா இருக்காரு. Photographer வந்து அவர் கூட இருக்குறவங்க சும்மா எடுத்ததா இருக்கும். இது என்ன பெரிய குற்றமா? அதுவும் இல்லாம இது ரஜினி ரசிகர்கள் பாக்குரதுக்காஹா .
  உங்களுக்கு பிடிக்கலேன்ன விட்டுடுங்க ….அதுக்கு போய் ஏன் வீனா விவாதம் ?

 34. devraj

  Excellent pictures. See the simplicity and humbleness. This helps Rajini to attain great heights.Proud to be a fan of a great human being.

 35. Sathish

  ரஜினி சார் கொஞ்சம் சந்தோசமா போட்டோவுக்கு போஸே குடுக்க கூடாதா? உடனே ஏன் எல்லாருக்கும் இப்டி காண்டு ஆகுது? தட்டுல சாப்பாடு இருந்த நிம்மதியா சாப்பிடனும் , அத விட்டுட்டு எப்ப பார்த்தாலும் கிளறி கிட்டே இருக்க கூடாது …அப்படி இருக்குறவங்க இப்படித்தான் கொறை சொல்லிகிட்டே இருப்பாங்க …..கொறை சொல்றது விட்டுட்டு கொஞ்சம் பாராட்டி பாருங்க (ரஜினின்னு இல்ல உங்களுக்கு பிடிச்ச யாருன்னாலும் ) மனசு சந்தோசமா இருக்கும் .

 36. balaji

  வெட்டி நியாயங்கள் பேசும் மக்களுக்கு மத்தியில், எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாதவன் போல் வாழும் எங்கள் அன்புத் தலைவர்!

 37. DEEN_UK

  @எப்பூடி!………..!! எப்பூடி இப்டிலாம் பதில் சொல்றீங்க? கண்ட கண்ட ……….கெல்லாம் இப்டி ஏன் டைம் வேஸ்ட் பண்றீங்க நண்பா?
  ///T.ராஜேந்தரயும் ரஜினியையும் ஒரே தட்டில வைத்து பார்ப்பது உங்களது முதிர்ச்சியின்மையை காட்டுகிறது,///
  சூப்பர் மூக்குடைப்பு!! உங்களுக்கு ஒன்னு தெரியுமா? நாங்க (என்னோட பிரண்ட்ஸ்..) மூட் அவுட் ஆனாலும்,மனசு கஷ்டமா இருந்தாலும்,டி .ஆர் ஆவேசமா கோபமா ,சீரியசா பேசும் யு ட்யூப் வீடியோ பார்த்து சிரிச்சுட்டு இருப்போம்..!! இப்போ லேடேஷ்டா பார்த்து சிரிச்சது அவரோட அடுத்த படம் பற்றி அவர் யு ட்யூப் ல பேசி இருக்கார் பாருங்க!! வயிறு புண்ணா போய்டும்!!அதிலயும் இவர் ரஜினிய திட்டி பேசின பேச்செல்லாம் காமெடியின் உச்ச கட்டம்!! இவனை பற்றி இந்த ஆள் பேசுரான்னா ,இவனை பற்றி நாம் புரிந்து கொள்ள வேண்டியது தான்..!!
  நான் பேச நினைத்ததை நீங்க அவனுக்கு சொல்லிடீங்க.. பு எனக்கு இன்னும் பதில் சொல்லணும் இவனுக்கு..நாகரீகம் கருதி அடக்கி வாசிக்க வேண்டி இருக்கு..

 38. DEEN_UK

  சரி கோயிந்தா..
  உங்களுக்கு எவ்வளவோ நாகரீகமா சொல்லி பாத்தாச்சு….நீங்க பேசுவேன்னு ஒத்தகால்ல நிக்குறீங்க…..எங்க வீட்ல (சைட் ல ) இருக்கிறவங்க எல்லாம் முட்டாள்கள் தான்..நானும் முட்டாள் தான்..
  பு என் அறிவுக்கு எட்டின வரைக்கும் நான் உனக்கு பதில் சொல்றேன்..ஓகே?
  நீ கேளு..யாரும் இங்க உனக்கு பதில் சொல்ல மாட்டாங்க…அவங்க சூரியனை பார்த்து நாய் குரைக்குது நு போய்டுவாங்க.(அது உண்மை தான் !)
  ஆனால் நான் உனக்கு பதில் சொல்றேன்….வாங்க கோ விந்து….வாங்க..
  உன் பிரச்னை என்ன? உனக்கு என்ன பதில் வேணும்? நீ யார்? ஓநாய் மாதிரி ஊளை விட்டு அழுது ,இது தான் நடிப்பு நு சொல்வானே,அவன் வெறியனா? இல்ல,என் தலைவன் நடிப்பையும்,உண்மையான வாழ்க்கையும் காப்பி அடிச்சு வாழ்ந்துட்டு ,அடுத்த சூப்பர் ஸ்டார் ,முதல்வர் நாற்காலிக்கு கனவு கண்டுட்டு இருக்கும் பொறம்போக்குகள் ரசிகனா? வா..பேசுவோம்….இங்க யாரும் பதில் சொல்ல மாட்டாங்க..நாம மட்டும் பேசிக்கலாம்..கேளு..உன் கேள்வி என்ன?
  நீ என்ன கேள்வி வேணா கேட்டுக்கோ….உனக்கு நான் மட்டும் பதில் சொல்றேன்..இந்த சைட் ல யாரும் உன்னை கண்டுக்க மாட்டாங்க…ஓகே?
  நீ கேளு…நான் சொல்றேன்..ஆனா எங்கிட்ட நாகரீகமான வார்த்தைகள் எதிர் பார்க்க வேணாம்…நீயும் என்னை அப்படி பேசிக்கலாம்..நான் அதை பற்றி கேர் பண்ண மாட்டேன்…வா…கேளு…உன் பிரச்னை என்ன?

 39. DEEN_UK

  அது என்ன கோயிந்து?
  koodave போடோக்ராபர் kootittu povaangala?
  neenga வெளியூருக்கு ponal உங்க veetla ullavangakooda photo eduthukka maatteengala?

 40. naveen

  kanna avaru ninnaalum seithi nadandalum seithi.engalukku thevai thalaivarin sirippu magilchi,naan ingu santhosamaga irukiren endru engalukku anupiya seitiyaga naangal eduthukolvom.

 41. karthik

  அவரை படத்தில் பார்பதோடு நம் நிருதுகொண்டல் அவர் மகிழ்வார். தனிமை தேடித்தான் அவர் இமயம் சென்றார். அங்கும் பினடியாயே போய் அவரை நாம் தொல்லை செய்யவேண்டாம். அவரை பார்க்க அடுத்த படம் வரை காத்து இருப்போம். அதுவரை நம் வேலையை நாம் செய்வோம், அவர் வேலைய அவர் பாத்துக்குவார்.

 42. haji

  அட அதெல்லாம் விடுங்கப்பா.

  5 வது படம் பார்க்கும்போது “தளபதி” படத்துல
  “தொட்ரா பாக்கலாம், தொட்ரா பாக்கலாம்” ம்னு சொல்லுற மாதிரியே இல்ல.

 43. T.S.MURALEE

  ஹாய், வேர்ல்ட் தி பெஸ்ட் அக்டோர் இன் எ எவரெஸ்ட் மண்

 44. Ash

  ivanunga elam enga irundu kelambranunganne therila , thalaiavar pathina blog la kooda ivanunga tholla thaanga mudeela vara vara , dei eduna kathanumna sonthama eduna blog arambichu olarunga da enga en vanthu engala tension paduhti enga nimmathiya kedukreenga , inga vanthu enga vayala archana vangina than ungalauku elam thookam varauma , nanga patuku enga velaya pakrom , ithu engaluku pidichiruku , idu nallada kettadha nu elam una advice kekala , unaku pidikalana poi neeye oru blog arambichu una senthavanaga elarayum kootitu alu , inga vanthu tholla panadha , kelambu modala!!…narayana intha kosu tholla thaaanga mudeela da appa!!

 45. shriram

  திரு கோவிந்த் என்ன சொல்ல வருகிறார் என்றே புரியவில்லை. சம்பந்தமே இல்லாமல் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறார். விஜய் அஜித் விக்ரம் போன்ற நடிகர்களை எதற்காக ரஜினி யோடு compare பண்ண வேண்டும்? ரஜினி போன்ற நடிகர்களை வைத்து படம் எடுத்து அதை உலகம் முழுவதும் மார்க்கெட் செய்ய எத்தனை உழைப்பு தேவைப்படும் என்பதை கற்பனை கூட இவரால் பண்ண முடியாது. மேலும், இவர், எல்லோரும் கஷ்டபடுகிறார்கள், ரஜினி தந்த தோல்வி ரெண்டே ரெண்டு தான் என மிகவும் சிறுபிள்ளை தனமாக ஒருவரின் வெற்றி தோல்விக்கு விளக்கம் தருகிறார். சச்சின் டெண்டுல்கரின் தோல்வி மற்ற மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களை விட மிகவும் குறைவு. ஆகையால் சச்சின் வெற்றி கஷ்டப்பட்டு தோல்வி அடைகின்ற மற்றவர்களை விட குறைந்தது என்று ஒரு புது ந்யாயம்கற்பிக்க போகிறாரா? சர்வ அபத்தம். ஒருவன் எந்த துறையிலும் மிக உயர்ந்த இடத்திற்கு செல்வது ஒரு விஷயமே இல்லை. அந்த இடத்தை தக்க வைக்க நடக்கும் போராட்டம் இருக்கிறதே அது தான் மிக பெரிய சவால். சச்சின் ரஜினி கமல் அமிதாப் என சிகரத்தை தொட்டவர்களுக்கு தான் புரியும். தனிப்பட்ட வெறுப்பு கொண்டு திரியும் எந்த மனிதனுக்கும் புரியாது. ரஜினியின் வெற்றி தோல்வி யை ஆராய்ந்து விஷத்தை கக்குவதை விட்டுவிட்டு, தன்னை சுய பரிசோதனை இந்த நண்பர் செய்து கொள்ளட்டும். மேலும் நல்ல விஷயங்கள் யார் செய்தாலும், நல்ல வெற்றி யை யார் கொடுத்தாலும் அதை நம்மால் கொண்டாடும் மனம் இல்லாவிட்டாலும், குற்றம் கண்டு பிடித்து, தூற்றாமல் இருக்க பழகி கொள்வோம். ரஜினி யின் வெற்றி ஒவ்வொரு சாமானியனின் வெற்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *