BREAKING NEWS
Search

இன்று, இசைக்கு பிறந்த நாள்!

இன்று, இசைக்கு பிறந்த நாள்!


ளையராஜா…

தமிழ் இசையை புதிய சிகரத்துக்குக் கொண்டு போன நம் இசைக்கலைஞன்.

35 ஆண்டுகள் தன் இசையால், பாடல்களால், குரலால் இந்த தமிழ் சமூகத்தையே கட்டிப்போட்ட ஒப்பற்ற இசைப் படைப்பாளி. இசையில் அவர் செய்யாத புரட்சியே இல்லை.

பண்டிதர் மட்டுமே படித்து உருகிக் கொண்டிருந்த மாணிக்கவாசகரின் திருவாசகத்துக்கு பாமர ரசிகர்களையும் உருகவைத்த பெருமை இளையராஜாவுக்கு மட்டுமே உண்டு.

தாய்நாடு தாண்டி, எங்கோ ஜெர்மனியில் வசித்த ஒரு தாயின் கருவிலுள்ள குழந்தையும் உடலை அசைத்து உள்வாங்கிக் கொண்ட ஜீவ இசைக்குச் சொந்தக்காரர்.

திருவாசகம் குறுந்தகடை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இளையராஜா கொடுக்கச் சென்றபோது அவரை அறிமுகப்படுத்திய வைகோ,”எங்கள் மண்ணின் ஒப்பற்ற இசைக் கலைஞன், இவர் குரலுக்கு இசை ரசிகர்கள் அத்தனை பேரும் அடிமை” என்று கூறினார். அதற்கு பிரதமர் சொன்ன பதில், “ஆம்… நானும் அறிவேன்!”

இன்றும் பல புதிய இசைக்கு தோற்றுவாயாக இருப்பது ராஜாவின் பழைய பாடல்கள்தான். ஒரு புதிய பாடலுக்கு உள்ள வரவேற்பை விட, ராஜாவின் பழைய பாடலின் ரீமிக்ஸுக்கு எத்தனை வரவேற்புள்ளது என்பதற்கு சர்வம் தீம் இசையே சான்று.

சுப்ரமண்யபுரம் என்ற படத்துக்கே புதிய வண்ணத்தைத் தந்தது, இசைஞானியின் இசை. இத்தனைக்கும் அந்தப் படத்துக்கு அவர் இசையமைக்கவில்லை!

“இளையராஜா எங்க அண்ணன். அவர் இசையை அவரைக் கேட்காமலே பயன்படுத்தும் அளவு உரிமை எங்களுக்குண்டு. என் படத்தைப் பொறுத்தவரை அவர் இசையமைக்காமலேயே, அவரது இசை அமைந்துவிட்டது. அந்தக் காட்சிகளுக்கு கிடைத்த வரவேற்பு ரசிகர்கள் அறியாததல்ல” என்கிறார் இயக்குநர் சசிகுமார்.

இப்படி இன்னும் சொல்ல ஏராளம் உண்டு… அதை தனியாக பின்னர் தருகிறோம்.

பொதுவாக பிறந்த நாளை கொண்டாடாமல் வெளியூர் கிளம்பிவிடும் ராஜா, இந்த முறை தனது ரசிகர்களின் அன்பு வேண்டுதலுக்காக சென்னையில் பிறந்த நாள் கொண்டாடினார்.

சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் இன்று பிற்பகல் கேக் வெட்டி பிறந்த நாளைக் கொண்டாடினார். ஏராளமான திரையுலகப் பிரபலங்கள் பங்கேற்றனர்.

முதல்வர் – ரஜினி வாழ்த்து!

முன்னதாக தமிழக முதல்வர் கருணாநிதி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் உள்ளிட்டோர் அவருக்கு போனில் வாழ்த்து தெரிவித்தனர்.

இளையராஜாவின் பிறந்த நாள் ஸ்பெஷல் இசை நிகழ்ச்சி ஒன்றிற்கு வரும் ஜூன் 5-ம் தேதி அவரது மகள் பவதாரிணி ஏற்பாடு செய்துள்ளார். இதில் தமிழ், இந்தி பிரபல பாடகர்கள் பங்கேற்றுப் பாடுகிறார்கள். இளையராஜாவின் புகழ்பெற்ற நத்திங் பட் விண்ட் ஆல்பத்தை முழுவதுமாக பாடுகிறார்கள் பாடகர்கள்.

நம் மண்ணின் கலைஞனுக்கு, வாழும் இசை வரலாறுக்கு பெருமையுடன் பிறந்த நாள் வாழ்த்து சொல்வோம்!
8 thoughts on “இன்று, இசைக்கு பிறந்த நாள்!

 1. mukesh

  முதல்வர் – ரஜினி வாழ்த்து!!!!!!

  நோ கமெண்ட்ஸ்

 2. Manoharan

  Happy Birthday to BOth the geniuses of Tamil Cinema Illayaraja the great and Manirathnam
  the trend setter. It will be wonderfull if they join together again. From Pagal Nilavu to Thalapathy they together have given master pieces. Will they work together again…?

 3. Mariappan

  UNMAIYIL OSCAR KODUKKA VENDIYATHU ILAYARAJA VUKKUTHAN, TAMIL MANNIN MAPERUM KALAINGAN.

 4. Mariappan

  UNMAIYIL OSCAR KODUKKA VENDIYATHU ILAYARAJA VUKKUTHAN. TAMIL MANNIN MAPERAUM KALAINGAN. VAAZHTHA VAYATHILLAI. ENVAZHIYIL AVARAI GOURAVAPADTHIYATHARKKU NANDRI .

 5. Thoma

  இசை போல நீடூழி வாழ இறைவனை இறைஞ்சிகிறேன்.

  வெளியிட்டதற்கு நன்றி வினோ

 6. r.v.saravanan

  இசையே உன்னை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *