BREAKING NEWS
Search

இனி ‘விஜய்… அரசியல்’ பத்தி மட்டும் கேட்காதீங்க! – எஸ்ஏசி

‘விஜய்… அரசியல்’ பத்தி மட்டும் கேட்காதீங்க! – எஸ்ஏசி

வெளுத்துக்கட்டு படத்துக்காக தான் வைக்கும் பிரஸ் மீட்களில் இனி விஜய் பற்றியோ,. அவரது அரசியல் பிரவேசம் குறித்தோ கேள்வி கேட்காதீர்கள். அதனால் பல பின்விளைகளைச் சந்திக்க வேண்டியுள்ளது என்றார் இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகரன்.

னது வெளுத்துக்கட்டு படத்துக்காக தமிழகத்தின் மற்ற நகரங்களில் பிரஸ் மீட் வைத்து விளம்பரம் செய்து வருகிறார் இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர்.

இந்தப்படத்தை அவர் தயாரிக்கிறார். இயக்கவில்லை. கதிர் என்ற புதுமுக ஹீரோவையும், மூன்று புதிய நாயகிகளையும் அறிமுகப்படுத்துகிறார். தன்னுடன் இந்த புதுமுகங்களையும் அழைத்துச் செல்லும் எஸ்ஏசி, படம் குறித்து பேட்டிகள் அளித்து வருகிறார். சமீபத்தில் திருச்சியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், “விஜய் அரசியலுக்கு வருவதை யாரும் தடுக்க முடியாது” என்றார். இதற்கு கடுமையான எதிர்விளைவுகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து அரசியல் பற்றிப் பேசுவதை நிறுத்திக் கொண்டுள்ளார் எஸ்ஏசி.

நேற்று வேலூரில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் எஸ்ஏ சந்திரசேகரன் கூறியது:

“இந்தக் கதை மிகப் புதிதாக இருக்கும். எந்தப் படத்தின் சாயலும் இருக்காது. காரணம் எஸ்.ஏ.சந்திரசேகரான என்னைப் பற்றியதுதான் இந்தப்படம். என் சிறு வயதில், இளைய பருவத்தில், நடந்த விஷயங்களை படத்தின் கதை.

இந்தப் படம் மாபெரும் வெற்றி பெரும் என்று நம்புகிறேன். சினிமா உலகத்தில் நான் அறிமுகப்படுத்திய விஜய், சிம்ரன், விஜயகாந்த் ஆகியோர் சினிமா உலகத்தில் வெற்றி பெற்று மிகப்பெரிய பிரபலத்தோடு இருக்கிறார்கள்.

அதேபோல், இந்தப் படத்திலும் நான், கதிர் என்கிற இளைஞரை அறிமுகப்படுத்தியுள்ளேன். இவர் தமிழ்நாட்டு பையன்.

இதேபோல் படம் இளைஞர்களுக்குப் பிடித்த மாதிரி, செக்ஸியாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆந்திராவில் பிறந்து, கர்நாடகாவில் வளர்ந்த ஒரு பெண்ணை அறிமுகப்படுத்துகிறேன். இன்னொரு பெண்ணை கிராமத்து தென்றலாக வருவது போல் அறிமுகப்படுத்துகிறேன். இதோடு இன்னோரு பெண்ணையும் அறிமுகப்படுத்துகிறேன். மொத்தம் இந்தப் படத்தில் மூன்று கதாநாயகிகள். படம் இளம் ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பதுபோல் இருக்கும்” என்றார்.

அவரிடம், அண்மையில் விஜய் நடித்த படங்கள் சரியாக ஓடவில்லை என்று விநியோகஸ்தர்கள் 35 சதவீதம் பணத்தை திருப்பி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்களே?, என நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு பதிலளித்த சந்திரசேகரன், “தயவு செய்து விஜய் பற்றியும், அரசியல் பற்றியும் கேட்க வேண்டாம். ப்ளீஸ்… இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பு முழுக்க முழுக்க வெளுத்துக்கட்டு படத்தை பற்றிதான்…” என்று எஸ்ஸானார்!
13 thoughts on “இனி ‘விஜய்… அரசியல்’ பத்தி மட்டும் கேட்காதீங்க! – எஸ்ஏசி

 1. stonecold

  இந்த கொசு தொல்லை தாங்கலட நாராயண….

 2. goyyala

  ************* அப்பனும் மவனும் சீக்கிரம் மாட்டுவீங்கட ****************************

 3. Juu

  // “தயவு செய்து விஜய் பற்றியும், அரசியல் பற்றியும் கேட்க வேண்டாம். ப்ளீஸ்…//
  ஏன்னா!! போன் ஒயர் பிஞ்சு நாலு நாள் ஆச்சு….

 4. குமரன்

  அட்ரா சக்கை, அட்ரா சக்கை, அட்ரா சக்கை

  அடுத்ததாக கூடிய விரைவில் விஜய்-சினிமா பற்றியும் தயவு செய்து பேசாதீர்கள் என்று சொல்வார்

 5. Robo Venkatesh

  Vijay oru dubuku vijay uda appa dubuku o dubuku. Vijay and his family comedy piece.

 6. ஜானகிராமன்

  //சினிமா உலகத்தில் நான் அறிமுகப்படுத்திய விஜய், சிம்ரன், விஜயகாந்த் ஆகியோர் சினிமா உலகத்தில் வெற்றி பெற்று மிகப்பெரிய பிரபலத்தோடு இருக்கிறார்கள்//

  ண்ணா… நீங்க சொன்ன 3 பேருமே இப்ப பீல்டு அவுட்டுண்ணா. புதுசா எதாவது சொல்லுங்க.

 7. Raj Devar

  விஜய் fan: தளபதி வாங்க செஸ் விளையாடலாம்….

  * இளயதளபதி: நீங்க போங்க நான் ஸ்போர்ட்ஸ் shoe போட்டுட்டு வந்துடறேன்….

 8. ஜோசியக்காரன்

  விஜய் அரசியலுக்கு வருவதில் தப்பில்லை. ஆனால் வந்துவிட்டால் திரும்ப பின்வாங்காமல் இருப்பார் என்று நினைக்கிறேன். அவரிடம் ஏதோ ஒரு எழுச்சி இருக்குன்னு எனக்கு தோணுது. பொதுவாவே அவர் ஆரம்ப காலத்திலிருந்தே தனது ரசிகர் மன்றம் மூலம் நிறைய விளம்பரமில்லாத உதவிகள் செய்து வருவதை நானும் அறிந்திருக்கிறேன். நெறைய நடிகர்கள் வர்றாங்க. சிலர் ஸ்டெடியாயிர்றாங்க. பலர் காணாம போயிர்றாங்க. எல்லாம் கெரகம் நல்லா இருக்கணும். விஜயோட ஜாதகம் என்னிடம் இல்லை. கிடைத்தால் துல்லியமாக சொல்லிரலாம். மற்றபடி அவர் ஆசைப்படுவதில் தப்பொன்றும் இல்லை. அரசியலுக்கு வருவதால் அவருடைய இமேஜ் ஒன்றும் பாதிக்காதுன்னு நான் நெனைக்கிறேன். நீங்க ஏன் அரசியலுக்கு வந்து தோற்ற நடிகர்களை பாக்கிறீங்க. ஜெயிச்சவங்களை பாருங்க. அப்புறம் ஒரு விஷயம், நான் எந்த ஒரு நடிகனின் ரசிகனும் இல்லை. எந்த ஒரு கட்சியை சார்ந்தவனும் இல்லை. எனக்கு பிடித்த ஒரே நபர் இளையராஜா மட்டும்தான். அன்றும் இன்றும் என்றென்றும்.

  நான் இப்ப சொல்லப்போற மேட்டர் எல்லாருக்கும் ஜீரணிக்க கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். இத நான் சொல்லல. கிரகங்கள் சொல்றதத்தான் நான் இங்க சொல்லப்போறேன். வரப்போகிற சட்டமன்ற தேர்தல்ல ஜெயலலிதாதான் ஜெயிப்பார். ஆனால் கருணாநிதி எவ்வளவோ மக்களுக்கு நல்லது செய்றார், எப்படி அதிமுக ஜெயிக்கும்னு உறுதியா சொல்றேன்னு நீங்க கேட்கலாம். தப்பில்லை. ஜெயலலிதாவின் ஜாதகப்படி வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் ஆட்சியில் அமரனும்னு கிரகங்கள் உறுதியா சொல்லுது. எனக்கு எந்த அரசியல்வாதியையும் பிடிக்காது என்பதை ஏற்கனவே சொல்லிட்டேன். ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கு கவலை இல்லை. என்னுடைய கணிப்பு இறைவன் அருளால் நிச்சயம் நடக்கும் என்பதை நாத்திகர்கள் முன்னிலையில் சமர்ப்பிக்கிறேன். எனக்கு எந்த ஈ.எஸ்.பி சக்தியும் கிடையாது. சாதாரண சராசரி ஜோசியக்காரந்தான் என்பதை மிகவும் தாழ்மையுடன் தெரிவித்துக்கொண்டு விடைபெறுகிறேன். என்னுடைய கணிப்பு பலித்தால் என்னை பாராட்ட மறந்தாலும் பரவாயில்லை. ஆனால் நான் சொன்னது நடக்கவில்லை என்றால் என்னை காரசாரமான் வார்த்தைகளால் அர்ச்சனை செய்ய மட்டும் மறந்துவிடாதீர்கள். அதாவது கல்யாணத்துக்கு போறோமோ இல்லியோ, துஷ்டிக்கு லீவி போட்டு போறோம்லா அதமாதிரி வச்சிக்கோங்க. ஒகே பாய்.

  jothidarathna@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *