BREAKING NEWS
Search

இனி திரும்பி வரமாட்டேன் என எழுதித் தர வேண்டும்! – ஈழத் தமிழர்களுக்கு அரசு புது நிபந்தனை

இனி திரும்பி வரமாட்டேன் என எழுதித் தர வேண்டும்! – ஈழத் தமிழர்களுக்கு அரசு புது நிபந்தனை

சென்னை: இலங்கைக்கு திரும்பச் செல்ல விரும்பும் அகதிகள், இனிமேல் திரும்பி வர மாட்டேன் என எழுதித் தர வேண்டும் என தமிழக அரசு திடீர் நிபந்தனை விதித்துள்ளது. camp

இதனால் பெரும் மன உளைச்சலுக்கும், குழப்பத்துக்கும் ஆளாகியுள்ளனர் ஈழத் தமிழர்கள்.

கடந்த 1983ம் ஆண்டு இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக மிகப் பெரிய இனக் கலவரம் வெடித்தது. நூற்றுக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பெண்கள் மிகக் கொடூரமான பாலியல் சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டனர்.

இதையடுத்து அங்கிருந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்தனர்.

இந்த அகதிகள் அனைவரும் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

83க்குப் பிறகு தொடர்ந்து அவ்வப்போது அகதிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

தற்போது இலங்கையில் போர் ஓய்ந்துள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பை இலங்கை அரசு முடக்கி விட்டது. இதையடுத்து அகதிகளில் பலர் மீண்டும் தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் அவர்களுக்கு அரசு தற்போது ஒரு புதிய நிபந்தனையை விதித்துள்ளது. அதன்படி, இலங்கைக்கு திரும்பிச் செல்ல விரும்புவோர், ‘இனிமேல் நான் மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பி வர மாட்டேன்’ என கியூ பிரிவு போலீஸாருக்கு எழுத்து மூலமாக உத்தரவாதம் தர வேண்டும் என அந்த நிபந்தனை கூறுகிறதாம்.

இதனால் ஈழத் தமிழர்கள் பெரும் குழப்பத்திலும் அச்சத்திலும் உள்ளனர்.

இங்கே இருப்பதால் இனி அவமானங்கள்தான் மிச்சம் என பலரும் கருதுவதால், கேட்டபடி எழுதிக் கொடுத்துவிட்டு தங்கள் தாயகத்திலேயே இறுதி மூச்சை விடலாம். மீண்டும் இந்தியாவுக்கு, தமிழகத்துக்கோ வரவேண்டாம், என்று பலர் யோசனை தெரிவிப்பதாக மண்டபத்தில் தங்கியுள்ள தமிழர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.




3 thoughts on “இனி திரும்பி வரமாட்டேன் என எழுதித் தர வேண்டும்! – ஈழத் தமிழர்களுக்கு அரசு புது நிபந்தனை

  1. Ramasamy

    எனதுயிர் மத்திய/மாநில அரசியல் வியாதிகளே, தயவுசெய்து இந்த மக்களுக்கு ஒரு திட்டம் போட்டு, அதில முக்கால்வாசியை நீங்களே தின்னுட்டு மிச்சம் மீதிய கொடுங்க! நாங்க யாரும் கேட்க மாட்டோம்!

  2. Nat

    Thevadiya pasanga… Is govt. giving money from their own pocket? bull shit politicians..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *