BREAKING NEWS
Search

இனமா… பணமா… 13-ம் தேதி காட்டுங்கள்! – சீமான்

இனமா… பணமா… என்பதை மெய்ப்பியுங்கள்! – சீமான்

திண்டுக்கல்: இனமா, பணமா என மெய்ப்பிக்க வேண்டிய நாள் வெகு தொலைவில் இல்லை. இனம்தான் வென்றது என்று  வரும் 16 ஆம் நாள் நாம் உலகுக்குத் தெரிய வைக்க வேண்டும் என்று  இயக்குநர் சீமான் கூறியுள்ளார்.seemaan_20090507002

திண்டுக்கல்லில் பெரும் திரளான மக்கள் கூட்டத்துக்கிடையே புதன்கிழமை நடந்த தமிழீழ ஆதரவு இயக்கப் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றியபோது அவர் மேலும் கூறியதாவது:

சென்னை வரவேண்டிய சோனியா காந்தி நாங்கள் எதிர்ப்புத் தெரிவிப்போம் என்று நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டார்.

சென்ற முறை நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பரிசு கொடுத்தோம். சோனியா காந்தியை இந்தியாவின் மருமகளாக ஏற்றுக் கொண்டோம். ஆனால், அவர் தமிழ் மக்களுக்கும், அவரின் மாமியாருக்கும் துரோகம் செய்து விட்டார்.

இலங்கையில் தமிழர்கள் செத்து மடிந்து கொண்டிருக்கிறார்கள். இங்கு தமிழ்நாட்டில் இழவு வீட்டில் காங்கிரஸ்காரர்கள் வெட்கமில்லாமல் வாக்குக் கேட்கிறார்கள்.

இலங்கைத் தமிழர்கள் படும் அவதியால் ஆறரைக் கோடி தமிழ் மக்கள் மனநோயாளர்களாக மாறி விட்டனர். இந்தப் பெருமை காங்கிரஸ் கட்சியையே சேரும். இங்குள்ள காங்கிரஸ்” கட்சியின் பெரிய தலைவர்கள் ஒன்றுகூடி இந்தியா, இலங்கைத் தமிழர்களுக்குச் செய்த ஒரே ஒரு நன்மையை எடுத்துக் கூற முடியுமா?

இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பணத்தை கொடுத்து வாக்கு வாங்கி விடலாம் என நினைத்துக்கொண்டுள்ளது. பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள். அந்தப் பணம் நம் பணம். நம்மிடம் கொள்ளையடித்த பணம். ஆனால், இன உணர்வை வாக்குகளில் காட்டுங்கள். seemaan_20090507003

இந்தத் தேர்தலில் இனமா, பணமா என மெய்ப்பிக்க வேண்டிய நாள் வெகு தொலைவில் இல்லை. இனம்தான் வென்றது என்று 16 ஆம் நாள் நாம் உலகுக்குத் தெரிய வைக்க வேண்டும். அதற்காக அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார் அவர்.

முன்னதாக இயக்குநர் ஐந்து கோவிலான் ஒருங்கிணைப்பில் ‘கறுப்புக்குரல்’ என்ற ஈழத் தமிழர்களின் அவலநிலை பற்றிய நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் இயக்குநர்கள் சிவா, சிபி சுந்தர், கவுதமன், அறிவுமதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

படங்கள்: புதினம்
8 thoughts on “இனமா… பணமா… 13-ம் தேதி காட்டுங்கள்! – சீமான்

 1. Prasad

  Will seeman run away from tamilnadu if jayalalitha allies with congress in future ? Can he promise the voters that ADMK will never be allies with congress?

 2. palPalani

  மனிதாபிமானமா? மரத்துப்போன நிலையா? மானிடமே பதில் சொல்!

 3. Ramanan

  Prasad, How can Seeman guarantee that Jaya won’t align with Congress.
  It is Thamizhnadu’s fate that we have to choose between the Amavasai and the next day to Amavasai.
  What other choices we have – Atleast she is saying that she will help in Eazham and tomorrow she will say – if I join Congress then we can stop the war.

  Ethellam Arasiyal Sathaaranam!

 4. Ramasamy

  Very good, excellent thought Prasad, we should through Seeman, nedumaaran. All Tamils should follow thanga balu, sidambaram, ilangovan, rahul jee & soniya jee.

  Note to Prasad: we(Tamil people) need 2 more thanga balu & few more sidambaram & some real periyan grand sons. please provide you ASAP.

 5. Prasad

  Mr.Ramasamy – Though i dont understand what u are trying to say…all i am saying is Your jayalalitha-ji cannot do anything on her own without support frm central government(every sane person can understand this) and all i am saying is nobody can guarantee that she will not join with sonia-ji and rahul-ji tomorrow

 6. mukesh

  எனக்கும் சீமானைப் போலே ஞானம் வந்து விட்டது. ஜெயலலிதா தமிழ் ஈழம் வாங்கி தருவார். அதற்காக அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து விடலாம்.

 7. பொன் எண்ணம்

  சீமானே! அம்மாவை வணங்குவது இருக்கட்டும், நீங்கள் பிரபாகரனை அண்ணனாக ஏற்றுக் கொண்டது போல் அம்மா அவர்கள் பிரபாகரனை தம்பியாக தத்து எடுத்துக் கொள்ள தயாரா? கொஞ்சம் அம்மாவிடம் கேட்டு சொல்லுங்கள். சீமானே! கொஞ்சம் பொறுத்திருங்கள் அம்மா ஆட்சிக்கு வரட்டும் உங்களை புழல் சிறையில் அச்சு சோத்துக்கு நிரந்தர சொந்தக்காராக்கி விடுவார் கவலை வேண்டாம். பெரியாரின் கொள்கைகள் ஜெயா என்னும் பாப்பாத்தியின் முந்தானைக்குள் முடமாகிப் போனதுதான் மிச்சம். வாழ்க பெரியாரிஸ்டுகள். வளர்க பார்ப்பனரின் ராஜதந்திரம்

 8. raj.s

  Its not the time to think whether ADMK will align with congress., WE Tamils should punish congress in this election for killing so many tamils.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *