BREAKING NEWS
Search

இந்த உள்ளூர் ஹீரோவை, நீங்கள் நினைத்தால் உலக ஹீரோவாக்கலாம்!

இந்த உள்ளூர் ஹீரோவை, நீங்கள் நினைத்தால் உலக ஹீரோவாக்கலாம்!

நாராயணன் கிருஷ்ணனுக்கு வயது 29. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஹோட்டல் நிர்வாகப் படிப்பில் கோல்ட் மெடலிஸ்ட்!

பிரபல தாஜ் ஹோட்டலின் பெங்களூர் கிளையில் தலைமை சமையல் கலைஞராக பணியிலிருந்தவரின் திறமை புரிந்து அவரை தங்களின் ஸ்விட்ஸர்லாந்துக் கிளையில் பணியாற்ற தேர்வு செய்திருந்தனர்.

இன்னும் ஒருவாரத்தில் கிளம்ப வேண்டும். பெற்றோர்களிடமும், நண்பர்களிடமும் விடைபெற்றுக் கொள்வதற்காக மதுரைக்குச் சென்றார்.

அங்கே, மீனாட்சி அம்மனை தரிசிப்பதற்காக ஒருநாள் காலையில் தாய், தந்தை, சகோதரியுடன் காரில் புறப்பட்டார். மேம்பாலம் அருகே கார் செல்லும்போது அவர் கண்ட காட்சி அவரை அதிர வைத்தது என்பது மிகச் சாதாரண வார்த்தை!

பாலத்தின் அடியில் ஒரு முதியவர், தனது மலத்தைத் தானே எடுத்து வாயில் வைப்பதைப் பார்த்தார். பசியின் கொடுமை!

பதறிப் போய் நடுச் சாலையில் அப்படியே காரை நிறுத்தியவர், அருகில் இருந்த கடைக்கு ஓடிச் சென்று இட்லி வாங்கி அவரிடம் கொடுத்தார். ஒரு நிமிடத்திற்குள் அத்தனை இட்லியையும் விழுங்கிவிட்டு நிமிர்ந்த முதியவரின் கண்களில் கண்ணீர். தனது கையை வேஷ்டி நுனியில் துடைத்துக் கொண்டு, வானத்தை அண்ணாந்து பார்த்தார். ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. நன்றி என்றும் சொல்லவில்லை. சொல்லவும் தெரியாது. காரணம், அவர் ஒரு மனநோயாளி!

அவர் ஒரு மனநோயாளி என்றறிந்ததும் அந்த இளைஞருக்கு ஒரே அதிர்ச்சி. குடும்பத்தினருடன் ஆலயத்திற்குச் சென்று மீனாட்சியை வழிபட்ட போதும் அவரது மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. அந்தப் பெரியவரையே சுற்றிச் சுற்றி வந்தது. மதியம் தனக்கான தயிர் சாதத்தைப் பொட்டலமாகக் கட்டிக் கொண்டு போய் அவருக்குக் கொடுத்தார். பெரியவர் எந்தவித உணர்ச்சியுமில்லாமல் அதையும் வாங்கி உண்டார்.

இந்தப் பெரியவரின் பரிதாப நிலை அவரை அப்படியே புரட்டிப் போட்டு விட்டது. இதுகுறித்து அவர் கூறுகையில், “அந்தக் காட்சியைப் பார்த்து நான் பெரும் அதிர்ச்சி அடைந்தேன். எனது சொந்த சகோதரர் ஒருவர் இப்படிப்பட்ட அவலமான நிலையில் இருக்கும்போது வெளிநாட்டு வேலை எனக்குத் தேவையில்லை என்ற முடிவுக்கு நான் வந்தேன். இந்தியாவிலேயே தங்க முடிவு செய்தேன்.

முதல் வேலையாக அந்த முதியவருக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்தேன். அவருக்கு நல்ல உடை கொடுத்து, தலைமுடியை வெட்டி சரிப்படுத்தினேன். அன்று தொடங்கியது எனது இந்த பணி.

பின்னர் இதை பெரிய அளவில் செய்ய வேண்டும் என்பதற்காக 2003ம் ஆண்டு அட்சயா டிரஸ்ட்டைத் தொடங்கினேன். அட்சயப் பாத்திரத்தை ஏந்திய மணிமேகலையின் நினைவாக இந்தப் பெயரை வைத்தேன். அந்த அட்சயப் பாத்திரத்தில் அள்ள அள்ள குறையாமல் வந்ததுபோலு எனது திட்டமும் நிற்காமல் தொடர்ந்து இயங்க வேண்டும் என்ற நம்பிக்கையில்தான் இந்தப் பெயரை வைத்தேன்…,” என்றார் கிருஷ்ணன்.

கிருஷ்ணனும், அவரது அறக்கட்டளைக் குழுவினரும் அதிகாலை 4 மணிக்கே எழுந்து விடுகின்றனர். தனது கையால் சமைத்த உணவுப் பொருட்களை பொட்டலமாக போட்டு எடுத்துக் கொண்டு கிட்டத்தட்ட 170 கி.மீ அளவுக்கு சுற்றி வந்து ஏழை, எளிய மக்களை சாப்பிட வைக்கின்றனர்.

ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 400 பேர் வரை கிருஷ்ணனால் சாப்பிடும் வாய்ப்பைப் பெறுகின்றனராம்.

இத்துடன் நிற்கவில்லை இவர்களது வேலை. சாப்பாடு கொடுக்கிறார். அதை சாப்பிடக் கூட முடியாத நிலையில் (மன வளம் குன்றியவர்கள்) இருந்தால், பக்கத்திலேயே உட்கார்ந்து அவர்களுக்கு சாப்பாட்டை ஊட்டி விடுகின்றனர். குடிக்க தண்ணீரும் கொடுத்து அவர்கள் சாப்பிட்டு முடித்த பின்னர்தான் இடத்தை விட்டு நகர்கின்றனர்.

அத்தோடு நிற்காமல் அழுக்குப் படிந்த தலைமுடி, காடாக வளர்ந்து கிடக்கும் தாடியுடன் யாராவது இருந்தால் அவர்களை தனது காரில் ஏற்றி தனது இருப்பிடத்திற்கு அழைத்து வருகிறார். அவர்களுக்கு தானே உட்கார்ந்து அழகாக முடி வெட்டி, தாடியை ஒட்ட வழித்தெடுத்து, முகத்தை சீராக்குகிறார் கிருஷ்ணன்.

பிறகு தான் பெற்ற குழந்தைக்குச் செய்வது போல ஒரு ஸ்டூலைப் போட்டு அவர்களை உட்கார வைத்து சோப்பு போட்டு குளிக்க வைத்து அழகுபடுத்தி நல்ல உடையைக் கொடுத்து உடுத்திக் கொள்ள வைக்கிறார். அப்போது தங்களையே புதிதாக பார்த்த மகிழ்ச்சியில் அவர்களது முகத்தில் தெரியும் வெட்கச் சிரிப்பைப் பார்த்து கிருஷ்ணன் அடையும் பூரிப்பு-அதை வார்த்தையால் சொல்ல முடியாது.

இதுவரை கிட்டத்தட்ட 10.2 லட்சம் சாப்பாட்டுப் பொட்டலங்களை இலவசமாக விநியோகித்துள்ளாராம் கிருஷ்ணன்.

கிருஷ்ணன் குழுவினர் அணுகும் ஏழைகளில் பெரும்பாலானோர் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள்தான். தனக்காக சாப்பாடு தரும் நாராயணனுக்கு நன்றி சொல்லக் கூடத் தெரியாத அளவுக்கு மனதால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள்.

இது தனக்கு பெரும் மன நிறைவு தருவதாக கூறுகிறார் கிருஷ்ணன். நான் சமைப்பதை விட அதை சாப்பிடும்போது அவர்கள் முகத்தில் தெரியும் நிம்மதிதான் எனக்கு பெரும் மன நிறைவைத் தருகிறது. அவர்களின் ஆன்மா திருப்தி அடைவதை அவர்களின் முகத்தில் பார்க்கிறேன். எனது மக்களை பட்டினியிலிருந்து காக்க விரும்புகிறேன் என்றார் கண்களில் நீர் துளிர்க்க.

ஹீரோவாக தேர்வு செய்ய…

உலகளவில் நல்ல மாற்றத்தினை கொண்டு வருபவர்களில் 10 பேரை தேர்ந்தெடுத்து மக்கள் வாக்களிப்பின் மூலம் அவர்களில் ஒருவரை ஒவ்வொரு ஆண்டும் ஹீரோவாக தேர்ந்தெடுத்து விருது அளித்து வருகிறது சிஎன்என் தொலைக்காட்சி. இந்த வருடம் சிஎன்என் தேர்ந்தெடுத்த பத்து பேரில் நாராயணன் கிருஷ்ணனும் ஒருவர்.

இவருக்கு விருது கிடைத்தால் விருதுக்குத்தான் பெருமையாக இருக்கும். ஆனால் இந்த விருதின் மூலம் அவர் பணி மேலும் வளர்ந்து விரிவடைந்து பெரிய ஆலமரமாக வாய்ப்புள்ளது. நீங்களும் அவருக்கு ஆதரவாக வாக்க அளிக்க இங்கு சென்று வாக்களிக்கலாம். நவம்பர் 18-ம் தேதிக்குள் இந்த வாக்கை செலுத்த வேண்டும்.

http://heroes.cnn.com/vote.aspx

இது நாராயணன் கிருஷ்ணனின் அட்சயா டிரஸ்ட்டின் இணையதளம். நாராயணனின் சேவையில் பங்கெடுக்க விரும்புவோர் இதை அணுகலாம்.

http://www.akshayatrust.org/

இவரைப்பற்றி சிஎன்என் வெளியிட்டுள்ள ஆங்கிலக் கட்டுரை இது: Once a rising star, chef now feeds hungry

கிருஷ்ணனின் தொலைபேசி: +91 (0) 452 4353439 / 2587104  செல்பேசி:+91 98433 19933

இமெயில்: ramdost@sancharnet.in

-என்வழி
63 thoughts on “இந்த உள்ளூர் ஹீரோவை, நீங்கள் நினைத்தால் உலக ஹீரோவாக்கலாம்!

 1. Muralidharan

  இவரக்கு வாழ்த்து சொல்ல எனக்கு தகுதி இல்லை வயதும் இல்லை இருந்தாலும் இவர் பல ஆனது காலம் இந்த பணியினை தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
  எனக்கு இவரடுடைய மெயில் முகவரியை எனக்கு அனுப்புமாறு கேட்டு கொள்கிறேன்.என்னால் முடிந்தவரை உதவி செய்கிறேன்.
  நன்றி
  முரளிதரன்
  துபாய்
  _________
  Email: ramdost@sancharnet.in
  -Vino

 2. santhosh

  நாராயணனுக்கு என் மனம் கனிந்த வாழ்த்துக்கள்…

  இப்படி ஒரு மனிதரை பார்ப்பது அரிது… கடவுளின் அனுகரகாம் நாராயணன் அண்ட் கோவிற்கு நிச்சியம் உண்டு…….

 3. சகோதரன்

  நல்லவர்களெல்லாம் ஒரே மாதிரி யோசிப்பார்கள் என்பது உண்மையாகிறது.

  இதோடு நான் படிக்கும் நான்காவது வலைப்பூ கட்டுரை இது.

  படைப்பாளி, மீனாட்சி, ஹரி என மூன்று பேர் இவரைப் பற்றி கட்டுரையை வெளியிட்டுள்ளார்கள். இப்போது என்வழியும் தன்னுடைய ஏராளமான வாசகர்களுக்கு நல்ல மனிதனை அறிமுகம் செய்திருக்கிறது,

  நன்றி.

 4. Arun

  Hi vino

  I am unable to vote.Received below error.
  Oops, that wasn’t quite right. Please try again!

  Pls adv .

 5. Sadagopan

  Good Vino,
  For giving a full detail about the person who is serving his entire life with the abnormal person….

 6. laskar, pondy

  வாழ்க வளமுடன் yennal mudintha உதவிகளை seyya thayaraga இருக்கிறேன் மனித நேயம் வாழ்க வளர்க.

 7. Aaryan

  நண்பர்களே !

  நாம் கட்டாயம் இவரை ஊக்குவிக்க வேண்டும் , தயவு செய்து அனைவரும் ஒன்றிணைந்து அவருக்கு வாக்களிப்போம் .

 8. YESMI

  Hi vino

  I am unable to vote.Received below error.
  Oops, that wasn’t quite right. Please try again!

  Pls adv .

 9. RAJA

  இவரக்கு வாழ்த்து சொல்ல எனக்கு தகுதி இல்லை வயதும் இல்லை இருந்தாலும் ,இவர் இந்த பணியினை தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  நன்றி,நன்றி,நன்றி……………………………………>,

  கோட்டை ராஜா கோவை….௧.

 10. Thinesh

  என்னால் இவருக்கு வாழ்த்துக்கள் கூற முடியாது. காரணம் இவர் வாழ்த்தப்படக் கூடியவர் அல்ல போற்றப்பட வேண்டியவர். இப்பொழுது படித்து கொண்டிருப்பதனால் எதுவும் செய்ய முடியவில்லையே என்று வருந்துகிறேன்.
  இன்னும் இரு வருடங்களுக்குள் எனது உதவியை முடிந்தவரை இவருடன் தொடர்பு கொண்டு செய்கிறேன்.

  உங்களில் வயது குறைந்த ஒரு இளைஞனின் பணிவான வேண்டு கோள்…. வாக்கை போடாதிர்கள் குவியுங்கள் இவருக்கு…..

 11. s.n.ganapathi

  அன்புடன் வணக்கம் ஆறு முறை ஒட்டு போட்டாச்சு ? ஆனா இது போன்ற ஒரு மகாத்மாவுக்கு ஒட்டு மட்டும் காணதுங்க
  வேற!!! வேற !!!!! ஏதாவது செய்யணும் .. வலைதளத்தில் இருக்கும் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து செய முயலுங்களேன்.???
  நான் சிறுது பணம் அனுப்ப போகிறேன்!!!!!.இதை படிக்கும் நீங்கள் ?… நீங்களும் ஏதாவது செய்வீர்கள்தானே.!!!!உங்கள் பதில் ஆம்!!!.

 12. karatepkannan

  மண்ணில் மரங்களை வளர்க மறந்தாலும்
  மனித நேயத்தை. மனிதன் மறக்க வில்லை
  வாழ்க வளர்க வளமுடன்
  வெற்றி உனக்கே

 13. இராமலிங்கம் பண்ணாகம்,இலங்கை

  தங்கள் மனு சேவைக்கு எமது குடும்பம் சார்பாக நன்றி கூறுகின்றேன்
  நீடுளி வாழ்க உங்கள் பணி தொடரவும்
  யாவர்குமாம் உண்ணும் போது கைப்பிடி

 14. THIYAGU

  உங்களது சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் .

 15. MANGAL

  UNMAYIL தினம் தினம் தீபாவளி கொண்டாடுபவன் நீதான் !!!

 16. kousalya

  எத்தனை வோட் போட்டாலும் இன்னும் எனக்கு திருப்தி இல்லை ….! நாம் முழுமனதுடன் போற்றக்கூடிய அளவிற்கு மிக உயர்ந்த மனிதர் கிருஷ்ணன் அவர்கள். பகிர்வுக்கு நன்றி.

 17. saravanan

  வார்த்தைகள் இல்லை இவரை வாழ்த்துவதற்கு வணங்கதன வேண்டும் ,

 18. saravanan

  வணக்கம் வினோ அவர்களுக்கு,
  நான் தங்களின் இந்த இணைய பகுதியை வெகு நாட்களாக படித்து வருகிறேன்.
  (இது தலைவரின் தளம் என்பது யாவரும் அறிந்ததே,நான் தலைவரின் தீவிர வெறியன் என்பதை விட பக்தன். இருப்பினும் நான் இது வரை ஒரு முறை கூட தங்கள் தளத்தில் ஒரு கருத்துரை கூட பதியவில்லை ஏனெனில் அவரை நம்புவோரை ஓர் புன்னகையோடும்,அவரை பழிப்போரை என் காலனி என மதிப்பவன் நான்.)
  எனினும் நான் கருத்துரை இட காரணம் என்னை போன்று ஒத்த கருத்து உள்ளவர்கள் நான் குறிப்பிடும் இந்த தளத்திற்கு சென்று http://vennirairavugal.blogspot.com/2010/10/2000.html பார்க்குமாறு கேட்டு கொள்கிறேன் . அவர் வாந்தி எடுத்து வைத்து இருக்கிறார் .

 19. babu

  dr.விஜய் தீபாவளி நல்வாழ்த்து சொல்ல கூட கொஞ்சமாவது சிரித்தபடி சொல்ல கூடாதா??? இத்தனை வருசம் நாடிச்சு என்னதான் கிழிசீங்க?? மொக த் தை சும்மா கில்லி மாதிரி வெரப்பா வச்சுக்கிட்டு ” இந்த தீபாவளி திருநாளில் இன்பம் பொங்கட்டும்” சரிங்கன்ணா!!! னு சொன்னா எப்படி???

 20. saran swetha

  நான் 3 வோட்டு போட்டுவிட்டேன் உங்கள் பனி தொடர வாழ்த்துக்கள் ..

 21. saran swetha

  நான் 3 ஓட்ஸ் போட்டுவிட்டேன் ….உங்கள் பனி தொடர vaazththukkal

 22. c.pugalendran

  உதவும்
  உள்ளம் அனைவரிடமும் இர்ருபதிலை அந்த உள்ளம் உள்ளவர்கள் கடவுளுக்கு இனையனவர்கள் உங்கலை போல்!
  உங்கள்ளுக்கு கடவுள் என்றும் துணைஇறுப்பர்

 23. c.pugalendran

  உதவும்
  உள்ளம் அனைவரிடமும் இர்ருபதிலை அந்த உள்ளம் உள்ளவர்கள் கடவுளுக்கு இனையனவர்கள் உங்கலை போல்!

 24. E.Parthiban

  I watched the clip and read the article….I felt like an advertisement for that CNN’s “HERO” show..
  this episode is a strong record to show the whole world that we are still undeveloped ,emphasising and re-establishing the meaning for the word ”INDIAN” by a powerful western media….
  My personal belief…. that incident which made him to change is susceptible, we should appreciate CNN’s creativity in that clip showing similar in the background….

  All most all Indians living by giving…. one of the most self-sacrificing community in the world we are simple and not ambitious, but we are/were abused by western media at large…

  I find this episode can damage our reputation again.

  I recommend to rise against when any media degrade us, (like china banning some websites, companies.)..we need to be highly sensitive on this kind of issues.

  Thanks….

  E.Parthiban

 25. Sokka_balu

  ஏதோ ஒரு மாற்றம் என் மனதில்… உன்னால் நண்பா… நன்றி நண்பா உன் சேவைக்கு…உன்னை வணங்குகிறேன்..

 26. balaji

  இவருக்கு ஒரு ஒட்டு நம்ம போட்ட பத்தாது டெய்லி மிநிமும் எவ்ளோ ஒட்டு போட முடியுமோ அவ்ளோ ஒட்டு போட்ட தான் இந்த அற்புத மனித வடிவில் உள்ள தெய்வதேய் வணஙகுகியதற்கு  சமம். இப்படி செய்தால் கண்டிப்பா இறைவனின் அருள் நமக்கு எல்லோருக்கும் உண்டு. இது தான் உண்மையான ரஜினி ரசிகன்    

 27. chella

  நல்ல மனம் படைத்த மனிதர்களை பார்க்கும் பொழுது மனித பிறப்பு எவ்வளவு

  உன்னதமானது என்று உணரப்டுகிருது . இதுபோல் மனிதநேயம் வளர

  வேண்டும் .

 28. sreeram

  நல்ல மனம் படைத்த மனிதர்களை பார்க்கும் பொழுது மனித பிறப்பு எவ்வளவு

  உன்னதமானது என்று உணரப்டுகிருது . இதுபோல் மனிதநேயம் வளர

  வேண்டும் .

 29. marimuthu

  உங்கள் பணி சிறக்க எனது வாழ்த்துக்கள் …….
  நீங்கள் அனைத்து மனிதர்களுக்கும்
  ஓர் நல்ல உதாரணம் …….
  வாழ்த்துக்கள்………

 30. thirumathi bs sridhar

  உங்களுக்கும் உங்களை மகனாக பெற்றோருக்கும் எனது வணக்கம்!
  தற்செயலாக தங்களது இணைய தளத்தை பார்த்ததால் தங்களுக்கு வாகளித்துள்ளேன்.2008 2009 மற்றும் 2010 ல் அந்த டாப் டென்ல் நீங்கள் மட்டும்தான் தமிழர் என்று நினைக்கிறேன்.நான் சரியாக கவனிக்கவில்லை என்றால் மன்னிக்கவும்.
  விசுவின் மக்கள் அரங்க நிகழ்ச்சியில் உங்களையும்,உங்களது சேவைகளையும் கண்டு மனம் நெகிழ்ந்து கண்ணீர் விட்டது ஞாபகம் உள்ளது.அவர்தானோ நீங்கள் என்ற சந்தேகத்துடன் தளத்தில் என்டர் செய்தேன்.அவரேதான் நீங்கள்.
  உடல் மற்றும் மனநிலை சரியில்லாதவர்களை நாடி நீங்கள் உதவி செய்வதும் அவர்கள் தங்களிடமிருந்து உதவியும் ஆறுதலும் பெறுவதும் மகத்தான செயல.ஆனால் உடல் மற்றும் மனநிலை சரியிருந்தும் சிலர் பொது மக்களை தொல்லை கொடுப்பதை அவர்களாகவே தவிர்த்தால் நல்லது.

 31. veeramani

  என்னால் இவருக்கு வாழ்த்துக்கள் கூற முடியாது. காரணம் இவர் வாழ்த்தப்படக் கூடியவர் அல்ல போற்றப்பட வேண்டியவர். இப்பொழுது படித்து கொண்டிருப்பதனால் எதுவும் செய்ய முடியவில்லையே என்று வருந்துகிறேன்.
  இன்னும் இரு வருடங்களுக்குள் எனது உதவியை முடிந்தவரை இவருடன் தொடர்பு கொண்டு செய்கிறேன்.

  உங்களில் வயது குறைந்த ஒரு இளைஞனின் பணிவான வேண்டு கோள்…. வாக்கை போடாதிர்கள் குவியுங்கள் இவருக்கு…..

 32. கும்மி

  நேபாளத்தைச் சேர்ந்த அனுராதா கொய்ராலா CNN Hero – 2010 ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு 1 லட்சம் டாலர் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது. நாராயணன் கிருஷ்ணன் 25 ஆயிரம் டாலர் பரிசுத்தொகையாகப் பெறுகின்றார்.

  மேலும் விபரங்களுக்கு
  http://edition.cnn.com/2010/LIVING/11/21/cnnheroes.hero.of.year/index.html

 33. k.s.sureshkumar

  அவரின் சேவையை உங்கள் படைப்பினில் வெளியிட்டதனால் நீங்களும்
  உயர்ந்த மனிதர் வாழ்த்துக்கள் நண்பர் அவர்களே……………

 34. karun

  இதை படிக்கும் போது ஒர் உணர்ச்சி பிறக்கிறது. என்னால் இவருக்கு வாழ்த்துக்கள் கூற முடியாது. காரணம் இவர் வாழ்த்தப்படக் கூடியவர் அல்ல போற்றப்பட வேண்டியவர்.

  http://sakthistudycentre.blogspot.com

 35. mahalakshmi

  சாரி நான் இப்பதான் கிருஷ்ணன் அவர்களை பற்றி கேள்விபடுகிறேன், இப்ப அவர் ஹீரோவா செலக்ட் ஆனாரா? இல்லையா? யாராவது தெரிந்தால் சொல்லுங்கள் ப்ளீஸ். கால அவகாசம் இன்னும் இருக்கிறதென்றால் எனது வாக்கினையும் பதிவு செய்வேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *