BREAKING NEWS
Search

இந்தி ரோபோ ‘கோயிங் ஸ்டெடி’… ஒரு உற்சாக ரிப்போர்ட்!

இந்தி ரோபோ ‘கோயிங் ஸ்டெடி’… ஒரு உற்சாக ரிப்போர்ட்!


பாலிவுட்டின் பிரபலமான பாலிவுட் ஹங்காமா இணையதளம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட, பாலிவுட் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் இங்கே தரப்பட்டுளளது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரோபோ வெளியாகி இரண்டாவது வாரமாக இந்தியில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது. இதுவரை இந்திப் பதிப்பு மட்டுமே ரூ 31 கோடிக்கும் அதிகமாக வசூலைக் குவித்திருக்கிறது (உள்நாடு-வெளிநாடு இரண்டிலும்). வட இந்தியாவின் உள்ளார்ந்த பிரதேசங்களிலும் இந்தப் படம் பிக்-அப் ஆகி வருவதாக தகவல்கள் வருகின்றன.

இதனை உறுதிப்படுத்துகிறது, தரண் ஆதர்ஷின் பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட். இதற்கு அவர் தந்துள்ள தலைப்பே, ‘Midweek B.O.: ‘Robot’ picks up, ‘Crook’ rejected’ என்பதுதான்!

அவர் தந்துள்ள தகவலின்படி, ரோபோவுடன் வெளியான ரன்பீர் கபூரின் படம் வசூலையும் பார்வையாளர்களையும் கணிசமாக இழந்துவிட்டது, இரண்டாம் வாரத்தில். இசை உரிமை விற்பனை, தொலைக்காட்சி உரிமை விற்பனை போன்றவற்றையெல்லாம் சேர்த்துப் பார்த்தால் இந்தப் படம் ஓரளவு லாபம் ஈட்டிவிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ரோபோவுக்குப் பிறகு கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியான இம்ரான் ஹாஷ்மியின் ‘க்ரூக்’ திரைப்படத்தை ரசிகர்கள் நிராகரித்துள்ளனர். இந்தவாரம் வெளியான இன்னொரு படமான ‘தோ தூணி சார்’ சுமாராகப் போகிறது.

ஆனால்-

ரஜினியின் ரோபோ இந்த இரண்டாவது வாரத்தில் தனது நிலையை சிறப்பாக தக்கவைத்துக் கொண்டுள்ளது. வட இந்தியாவின் பல சென்டர்களில் ரோபோவின் வர்த்தகம் ஏறுமுகத்தில் உள்ளது (Wholesome entertainer with Rajnikant like never before, Maintained very well in its second weekend. The business showed an upward trend at several centres), என்று குறிப்பிட்டுள்ளார் தரண் ஆதர்ஷ்.

ஒரு டப்பிங் படம் என்ற வகையில் பார்த்தால், ரோபோ செய்திருப்பது, இப்போதே சரித்திர சாதனைதான். ஆனாலும் இன்னும் இரண்டு வாரங்கள் இந்தியில் இதே நிலை தொடர்ந்தால், ரோபோவின் வசூல், 3 இடியட்ஸ், தபாங், மைநேம் ஈஸ் கான் வரிசையில் தனிப்பெரும் சாதனையாகத் திகழும் என்கிறார் பிரபல விநியோகஸ்தர் சஞ்சய்.

தெலுங்கு, தமிழ் பதிப்புகளின் மொத்த வசூலையும் கணக்கில் கொண்டால், எந்திரன் ஏற்கெனவே இந்திய சினிமாவில் அதிகபட்ச வசூல் என்ற  ‘3 இடியட்ஸி’ன் சாதனையைக் கடந்துவிட்டது குறிப்பிடத்தக்கது!

Midweek B.O.: ‘Robot’ picks up, ‘Crook’ rejected
Film Cast Plusses Minusses Verdict

Crook: It’s Good To Be Bad
Emraan Hashmi, Neha, Gulshan Grover, Mashhoor Amrohi, Arjan Bajwa, Smilee Suri Interesting concept Confused script Has been rejected. The opening weekend business remained on the lower side

Robot
Rajnikant, Aishwarya Rai Bachchan, Danny Denzongpa Wholesome entertainer with Rajnikant like never before Slightly lengthy Maintained very well in its second weekend. The business showed an upward trend at several centres

Anjaana Anjaani
Ranbir Kapoor, Priyanka Chopra, Zayed Khan, Tanvi Azmi Terrific performances Screenplay could be tighter Showed a big decline in its second weekend. Overall, average [theatrical business]. However, the film is expected to make decent profits, since a large chunk of investment has been recovered from sale of Satellite Rights, Music Rights and various territories

Do Dooni Chaar
Rishi Kapoor, Neetu Kapoor, Archit, Aditi, Akhilendra Mishra, Supriya Shukla A well-made film in all respects with powerhouse performances Second half could’ve been tighter Picked up on Saturday and Sunday, but the business is not corresponding with the appreciation for the film

Dabangg
Salman Khan, Sonakshi Sinha, Arbaaz Khan, Sonu Sood, Vinod Khanna, Dimple Kapadia, Anupam Kher, Om Puri, Mahesh Manjrekar, Mahi Gill, Tinnu Anand, Murli Sharma, Malaika Arora Khan Full on mass entertainer with Salman Khan like never before Predictable storyline Blockbuster

(Ratings are based on the box office collections and the cost of the film)

Courtesy: Taran Aadarsh,  Bollywoodhungama.com

-வினோ
4 thoughts on “இந்தி ரோபோ ‘கோயிங் ஸ்டெடி’… ஒரு உற்சாக ரிப்போர்ட்!

 1. Rasigan

  Dear Vino

  How do you react to self proclaimed writer like Charu and few others who have started personal attacks on our thailavar. While everyone has their rights to express their opinions, low life characters like Charu and few mallu bloggers are writing nonsense about our thailavar.

 2. Kicha

  தமிழ்நாட்டு பத்திரிகைகள் தவிர அணைத்து மொழிகளிலும் எந்திரனை பாரட்டரங்க. இங்க இருக்கற வயிதெரிச்சல் புடிச்சவங்கதன் தங்களோட அழுக்கு மனச விமர்சனத்தில காட்டரனுங்க.

 3. Vazeer

  வினோ உங்களுக்கு தெரியுமா குவைத்தில் எந்திரன் 30 செப் 2010 க்கு வெளியானது அந்த நாளிலிருந்து இரண்டு வாரம் வரை தினசரி 6 காட்சிகளாக இருந்தது. அப்படி இருந்தும் கூட்டம் குறைந்த பாடில்லை… இன்று முதல் 4 காட்சிகளாக வெற்றி கரமாக மூன்றாவது வாரம்.. இது மிகப் பெரிய விஷயம்… அது மட்டுமா….? குவைத் டாப் 10ல் எந்திரன் முதலிடம் அய்யா …. லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்…. இது எந்த ஒரு இந்திய படத்துக்கும் குவைத்தில் கிடைக்காத பாக்கியமாகும்.

  http://webserver2.kncc.com/movienews.php

  பாஸுக்கு பின்னாடி இருக்கிற ஷங்கர் என்கிற பிக் பாஸுக்கு கோடான கோடி நன்றிகள்…. வினோஜி இந்த செய்தியை சன் குழுமத்துக்கு தெரிவித்து அவங்களோட பத்திரிகை மற்றும் தொலைக்காட்சியில் வெளியிட ஆவன செய்யுமாறு வேண்டுகிறேன்… மற்றும் உங்கள் தளத்திலும் & தட்ஸ்தமிழிலும் இந்த செய்தியை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். அத்தோடு செய்தியை தெரிவித்தவர் குவைத்திலிருந்து அப்துல் வசீர் என்றும் தயவு செய்து குறிப்பிடுமாறு பணிவுடன் வேண்டுகிறேன். நன்றி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *