BREAKING NEWS
Search

இந்தி சினிமா… ஆபாசம், வன்முறை, வக்கிரம்! – லாலு பிரசாத் யாதவ்

இந்தி சினிமா… ஆபாசம், வன்முறை, வக்கிரம்! – லாலு பிரசாத் யாதவ்

ந்தி சினிமாவை குடும்பத்துடன் பார்க்கவே முடியலை. ஒரே ஆபாசம், என்று கருத்து தெரிவித்துள்ளார் லாலு பிரசாத் யாதவ்.

இதுகுறித்து முன்னாள் ரெயில்வே அமைச்சரும், ராஷ்டீரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் அளித்த பேட்டி:

“நான் இளவயதில் நிறைய இந்தி படங்கள் பார்ப்பேன். அதில் மனதை வருடும் இனிய பாடல்கள், புதுப்புது கருத்துக்களை சொல்லும் கதைகள் இருந்தன. இதனால் ஒவ்வொரு படமும் எனக்கு ஒவ்வொரு விதத்தில் பிடிக்கும்.

ஆனால் சமீபகாலமாக வரும் இந்தி படங்களில் நல்ல கருத்துள்ள பாடல்களே இல்லை. இசையும் ரம்மியமாக இல்லை.

நல்ல கருத்துக்களை சிந்தித்து எழுத முடியாததால் பாடல் ஆசிரியர்கள் இரட்டை அர்த்தம் மிகுந்த, ஆபாச பாடல்களை எழுதுகிறார்கள். இது சமுதாயத்தை சீர்குலைத்து விடும். இப்படிப்பட்ட பாடல்களை நாம் அனுமதிக்க கூடாது.

இதே போல் படத்தில் தொடக்கம் முதல் கிளைமாக்ஸ் வரை ஆபாச காட்சிகள்தான் இடம் பெறுகின்றன. ஆக்ஷன் என்ற பெயரில் வெறும் வன்முறை, வக்கிரத்தைத்தான் காட்டுகிறார்கள். இதனால் நாம் குடும்பத்துடன் சென்று இந்த படங்களை பார்க்க முடிவதில்லை.

எனக்கு வாய்ப்பு கிடைத்தால் ரெயில்வே துறையில் சீர்திருத்தம் கொண்டு வந்தது போல் சினிமாத் துறையிலும் பல்வேறு முன்னேற்றங்களைக் கொண்டு வருவேன்.

காலத்திற்கேற்ற வகையில் தரமான சினிமா எடுத்தால் எல்லோரும் குடும்பத்துடன் வந்து பார்ப்பார்கள். ஆனால் பழைய சினிமாவையும் கதைகளையும் காப்பியடித்து எடுத்தால் அதைப் பார்க்க வேண்டும் என்று ஆசையே போய்விடும்.

சினிமா ஒரு நல்ல தொழில். தற்போது அதில் திறமைசாலிகள் குறைந்து போனதால் நஷ்டத்தை சந்திக்கிறது. ஆபாசத்தை தவிர்த்து நல்ல படங்கள் எடுத்தால் கூட்டம் அதிகம் வரும். ஆபாசத்தை விரும்பும் 10 சதவீதம் பேருக்கு மட்டும் படம் எடுத்தால் 90 சதவீதம் பேர் எப்படி வருவார்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
7 thoughts on “இந்தி சினிமா… ஆபாசம், வன்முறை, வக்கிரம்! – லாலு பிரசாத் யாதவ்

 1. Raja

  –ஆபாசத்தை விரும்பும் 10 சதவீதம் பேருக்கு மட்டும் படம் எடுத்தால் 90 சதவீதம் பேர் எப்படி வருவார்கள்?”–
  நியாமான கேள்வி.

 2. Gopiramesh

  lallu parka kamediyan pola irundhalum avar sonna indhe karutthukal sindhinge vendiyavai…

 3. குமரன்

  லாலு பிரசாத் யாதவ் சிறந்த அறிஞர். ஜனரஞ்சகமாக இருக்கவேண்டும் என்பதற்காக வேடிக்கையாகப் பேசுவதால் அவர்மீது ஒருமாதிரியான பார்வை விழுந்துவிட்டது. சிறந்த நிர்வாகி. அதிகம் பள்ளி ரீதியான கல்வி கற்காவிட்டாலும் அனுபவரீதியாகக் கற்றவர். அவர் தம் கீழ்வேலை செய்த மெத்தப்படித்த அதிகாரிகளைத் தட்டிக்கொடுத்து வேலைவாங்கிய விதம் வெகுவாக வெற்றிபெற்றது என்பதை யாரும் மறுக்கமுடியாது. அதனால்தான் அவரை இந்திய மேலான்மைக் கழகக் கல்லூரிகளில் முதன்மையானதான அகமதாபாத் கல்லூரியே அழைத்துப் பேசச்சொல்லிக் கேட்டது. அவரது ஊழல், ஒருதலைப்பட்ட ஓட்டுவங்கிக்கன்னோட்ட நடவடிக்கைகள் அவரை மக்களிடமிருந்து பிரித்துவிட்டது.

  அவரது தற்போதைய சினிமா பற்றிய கணிப்பு மிகவும் சரி. சினிமாக்காரர்கள் திருந்துவார்களா? நம்பிக்கை இல்லை.

 4. Ravanan

  குமரன் நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை அவர் ஓர் மிக சிறந்த நிர்வாகி… பார்பதற்கு தான் காமெடியன் போல்… ஆனால் கில்லாடி….

  அவரும் சட்டம் படித்த மேதை…

  லல்லு படிப்பு விவரம்
  B.A., LL.B.
  Educated at Patna University, Patna (Bihar)

 5. குமரன்

  ராவணன் அவர்களே,
  அப்படியா, இது எனக்குத் தெரியாது. அப்படியானால் அவர் தம் கல்வி விஷயத்தில் கூட ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கியிருக்கிறார்.
  ஊழல் மட்டும் இல்லாவிட்டால் லாலு நமது நாட்டுக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம்.

 6. palPalani

  1.மிக சிறந்த நிர்வாகி
  2.காமெடியன் போல்… ஆனால் கில்லாடி….
  அது மட்டுமல்ல அவரோட ரவுடியிசமும், ஆடம்பரமும் பெயர்பெர்ரதுதான்.
  அவர் ரிக்சாவில் ஒட்டு கேட்க்க போவார், நடந்து சென்று குடிசை வாழ் மக்களோடு இருப்பார். ஆனால் அவர் குடும்பத்தில் அப்படியில்லை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *