BREAKING NEWS
Search

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கமல்ஹாசனுக்கு இடமில்லை?!

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கமல்ஹாசனுக்கு இடமில்லை!

திரையுலகில் பொன்விழா காணும் நடிகர் கமல்ஹாசனின் சாதனைகளை நினைவுகூறும் வண்ணம், இந்த ஆண்டு கோவாவில் நடக்கும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (Iffi) கெளரவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.iffi2009

ஆனால் இப்போது அவரது படங்கள் இந்தவிழாவில் காட்டப்படாது என்றும் அடுத்த ஆண்டு தனி விழா ஒன்றில் காட்டப்படும் என்றும் தெரிய வந்துள்ளது.

இந்த விழாவின் ‘ரெட்ரோஸ்பெக்டிவ்’ பிரிவில், இந்திய திரையுலக சாதனையாளர்களுள் ஒருவரான கமல் ஹாசனின் மூன்று திரைப்படங்களை மட்டுமே காட்டப் போவதாகக் கூறியுள்ளனர் அமைப்பாளர்கள். ஆனால் கமல் தனது சிறந்த ஏழு படங்கள் இடம் பெற வேண்டும். அதுதான் தனது பங்களிப்பை ஓரளவு சரியாக பிரதிபலிக்கும் என கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு தங்களது 50 ஆண்டு சினிமா வாழ்க்கையை பூர்த்தி செய்துள்ள முன்னாள் கலைஞர்களான ஷர்மிளா தாகூர், ஆஷா பரேக் மற்றும் சவுமித்ரா சாட்டர்ஜி ஆகியோரின் படங்களுடன் சேர்த்து கமல் படத்தையும் காட்டப் போவதாக கூறியுள்ளனர். இல்லாவிட்டால் தனி விழாவொன்றில் அவர் படங்களை போட்டுக் காட்டலாம் என்றும் கருத்து தெரிவித்திருந்தனர்.

“இந்த ஆண்டு சர்வதேச பட விழாவில் கமல்ஹாசனின் ஏழு படங்களை திரையிடும் அளவுக்கு இடமில்லை. எனவே, அவரது படங்கள் டெல்லியில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பிரத்யேகமாக கெளரவிக்கப்படும்,” என ஐ.எஃப்.எஃப்.ஐ ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கோவா மாநிலம் பனாஜியில் இம்மாதம் 23-ம் தேதியில் இருந்து டிசம்பர் 3 வரை 10 நாட்களுக்கு நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் உலக அளவில் 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 200 படங்கள் திரையிடப்படுகின்றன. பென் கிங்ஸ்லி இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார். சர்வதேச திரையுலகப் பிரபலங்கள் பலரும் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில், கமல்ஹாஸனை திட்டமிட்டே தவிர்த்துவிட்டதாக குமுறுகிறார்கள் ரசிகர்கள்.

-என்வழி
10 thoughts on “இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கமல்ஹாசனுக்கு இடமில்லை?!

 1. சூர்யா

  //…பென் கிங்ஸ்லி இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறான்….//
  ஐயா, கவனம்.
  _______________
  Thanks

 2. Kannaiah

  இதே செய்தியை http://www.thatstamil.com இப்படி வெளியிட்டுள்ளது. அது தான் ஒரு செய்தி வெளியிடுபவரின் சரியான பார்வை என எனக்கு தோன்றுகிறது. குறிப்பாக செய்திக்கு தலைப்பு எப்படி தரப்படுகிறது என்பது மிக முக்கியம். மேலும் அமிதாபிற்கு அவமானம் பற்றிய செய்தியை என்வழி விட்டு விட்டது ஏன்? வினோ தயவு செய்து இதையும் போடவும்.
  ———————
  From http://www.thatstamil.com
  கம்ஹாசனின் கோரிக்கையை நிராகரித்த கோவா இந்திய பட விழாக் குழு
  செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17, 2009, 16:14 [IST]

  திரையுலகில் பொன் விழா காணும் கலைஞானி கமல்ஹாசனைக் கெளரவிப்பதாக கூறிக் கொண்டு வெறும் 3 படங்களை மட்டுமே திரையிடுவதாக கோவாவில் நடைபெறவுள்ள சர்வதேச இந்திய திரைப்பட விழாக் குழுவினர் கூறி கமல்ஹாசனை கிட்டத்தட்ட அவமதித்துள்ளனர்.

  ஆனால் 7 படங்களைப் போட்டால் நான் வருகிறேன் என்று கமல்ஹாசன் கூறி விட்டார்.

  இந்தியத் திரையுலம் வெறும் இந்தித் திரையுலகமாகவே இருக்கிறது. மும்பையைத் தாண்டி தென்னகத்தின் பக்கம் தங்களது பார்வையை அவர்கள் முழுமையாக திருப்புவதே இல்லை. எல்லாமே அவர்களுக்கு இந்திதான்.

  கோவாவில் நடைபெறவுள்ள சர்வதேச இந்திய திரைப்பட விழாக் குழுவினரும் இதற்கு விதி விலக்கல்ல. பல்வேறு சாதனைகளுடன் இன்றளவும் வேகத்துடனும், விவேகத்துடனும் நடை போட்டுக் கொண்டிருக்கும் கமல்ஹாசன் திரையுலகில் நுழைந்து 50 ஆண்டுகளாகி விட்டது. அமிதாப் பச்சனை விட சீனியர் கமல்ஹாசன்.

  தென்னிந்தியத் திரையுலகில் பல்வேறு புதிய உத்திகளையும், தொழில்நுட்பங்களையும் அறிமுகப்படுத்தியதில் முன்னோடியான கமல்ஹாசனைக் கெளரவிக்கும் வகையில் கோவை [^] சர்வதேச இந்திய படக் குழுவினர் முடிவு செய்தனர்.

  ஆனால் கமல்ஹாசனை மட்டும் கெளரவித்தால் தமிழையும் தென்னிந்திய மொழிப் படங்களையும் பெரிதாக கெளரவித்தது போலாகி விடுமோ என்று நினைத்தார்களோ என்னவோ என்றைக்கோ ரிடையர்ட் ஆகி விட்ட, ஆஷா பரேக், ஷர்மிளா தாகூர் மற்றும் செளமித்ரா சாட்டர்ஜி ஆகியோருடன் சேர்த்து கமல்ஹாசனைக் கெளரவப்படுத்தும் வகையில் அவரது 3 படங்களைத் திரையிட திட்டமிட்டனர்.

  ஆனால் கமல்ஹாசன் இதை ஏற்கவில்லை. 7 படங்களைத் திரையிட வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார். ஆனால் அதை நிராகரித்து விட்டது விழாக் குழு. அதற்குப் பதிலாக அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லியில், கமல்ஹாசன் குறித்த தனி திறனாய்வு நிகழ்ச்சி ஒன்றை நடத்தப் போகிறார்களாம்.

  இதுகுறித்து கோவா திரைப்பட விழா குழு இயக்குநர் [^] எஸ்.எம்.கான் கூறுகையில், கமல்ஹாசனின் கோரிககையை எங்களால் ஏற்க முடியாத நிலை. எனவே அடுத்த ஆண்டு பி்ப்ரவரி மாதம் டெல்லியில் கமல்ஹாசன் குறித்த தனி திறனாய்வு நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளோம் என்றார்.

  1959ம் ஆண்டு களத்தூர் கண்ணம்மா மூலம் நடிப்பைத் தொடங்கினார் கமல். முதல் படத்திலேயே சிறந்த குழந்தை [^] நட்சத்திரத்துக்கான தேசிய விருதையும் தட்டிச் சென்றார்.

  இந்த ஆண்டு கோவா பட விழாவில் 45 நாடுகளைச் சேர்ந்த 55 படங்கள் திரையிடப்படவுள்ளன. போட்டிப் பிரிவில் 13 படங்கள் இடம் பெறுகின்றன. இதில் 2 படங்கள் இந்தியாவைச் சேர்ந்தவை.

  அமிதாப்புக்கும் அவமானம்…

  கமல்ஹாசனை இப்படி அவமானப்படுத்தியதைப் போல தற்போது அமிதாப்பச்சனையும் அவமானப்படுத்தியுள்ளனர்.

  அமிதாப்பச்சனை இந்த விழாவுக்கு அழைப்பது தொடர்பாக இஃபி குழுவுக்கும், கோவா பொழுது போக்குக் கழகத்திற்கும் இடையே மோதல் [^] மூண்டுள்ளதாம்.

  போட்டியை நடத்தும் சர்வதேச இந்திய திரைப்பட விழா இயக்குநரகம், அமிதாப்பை அழைக்க விரும்பவில்லையாம். ஆனால் கோவா பொழுதுபோக்குக் கழகம், அமிதாப்பை அழைக்க வேண்டும் என கூறுகிறதாம்.

  இதுகுறித்து பொழுதுபோக்குக் கழக உறுப்பினர் ராஜேந்திர தலக் கூறுகையில், பச்சனை அழைக்க நாங்கள் விரும்புகிறோம். ஆனால் இயக்குநரகம் மறுக்கும்போது நாங்கள் என்ன செய்ய முடியும் என்றார்.

  இஃபிக்கு ஏன் இந்த வேலை…
  ——————–

  திரு கன்னையா… இது செய்தியல்ல… அவர்கள் பார்வை. நாம் தந்திருப்பது இது தொடர்பான செய்தி. அவ்வளவுதான்.

 3. Rajan

  //ஆனால் கமல் தனது சிறந்த ஏழு படங்கள் இடம் பெற வேண்டும். அதுதான் தனது பங்களிப்பை ஓரளவு சரியாக பிரதிபலிக்கும் என கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.//

  ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் .

  ஏழு படங்களின் அவசியம் என்ன ?

  ராஜன் .

 4. Kannaiah

  //ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் .

  ஏழு படங்களின் அவசியம் என்ன ?//

  திரு ராஜன் அவர்களே, உங்கள் கேள்விக்கு கீழ்கண்ட பதிவில் இருக்கிறது பதில். மேலும் கமல் தரப்பு வாதம் எப்படி திரிக்கப்பட்டு வெளியாகியுள்ளது என்பதும் அதில் புலப்படும்.

  “7 படம் வேண்டும் என நான் கேட்கவில்லை! – கமல்ஹாஸன்”

  கமல் மீதும் அவர் படைப்புகள் மீதும் உங்களுக்கும், உங்களை போன்றவர்களுக்கும் மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும், இப்போதாவது நாம் இதை கமல் சம்பந்தப்பட்ட விஷயமாக மட்டும் அணுகாமல் ஒரு தமிழக அல்லது தென்னிந்திய கலைஞன் சார்ந்த ஒரு விஷயமாய் பார்ப்போமே. இதுவே கேரளாவிலோ, ஆந்திராவிலோ அல்லது கர்நாடகத்திலோ அங்குள்ள கலைஞர்களுக்கு இப்படிப்பட்ட ஒரு சங்கடம் நேர்ந்து இருந்தால், அதை ஒரு பொது பிரச்சினையை அணுகி இருப்பார்கள். என்ன செய்வது இன்னும் நாம் தனித் தனி கட்சிகளாக தான் இருக்கிறோம். இதில் மட்டுமல்ல, இலங்கை தமிழர் பிரச்சினை, கேரள அணை பிரச்சினை என்று எல்லாவற்றிலும் தான்.

 5. dhans

  //ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் .

  ஏழு படங்களின் அவசியம் என்ன ?

  ராஜன் .//

  avar samaikkum veraity rice ellame நல்ல இருக்கு என்றால் ஒரு sotril எப்படி therinthu vidum.

  its same for rajini kamal or whoever. do not comment its just because its kamal news. please change your approach.

 6. Rajan

  கமல் :

  //“நான் அப்படி எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. எனது டெல்லி நண்பர்கள்தான், 3 படங்களில் 50 ஆண்டு திரைப் பயணத்தை அடக்கி விட முடியாதே, 7 படங்களாவது இருக்க வேண்டும் என கோரியிருந்தனர்.//

  திரு கன்னையா அவர்களே , கமல் மீதும் அவர் படைப்புகள் மீதும் என்றுமே எனக்கு மாற்று கருத்து கிடையாது . அவர் படைப்பின் மேல் உள்ள மரியாதையினால் சொல்கிறேன் . ஏழு படங்களை வைத்துத்தான் அவரின் திறமையை அளவிட வேண்டும் என்ற அவசியம் இல்லை .

  கமல் மட்டும் அல்ல எந்த ஒரு மாநிலத்தை சேர்ந்த கலைஞராக இருந்தாலும் என் கருத்து இது தான் . இதில் என்ன பிரிவினை ?

  ராஜன் .

 7. Rajan

  To dhans :

  I know each of his movies are different and he cant take the same movie again n again. So u want to screen all of his movies in a film festival in order to prove his talent ?

  ராஜன் .

 8. harisivaji

  //இந்திய சர்வதேச திரைப்பட விழா- கமல் திரைப்பட விழா இல்ல
  கமல் கேட்கவில்லை என்றாலும் தன் நண்பர்களிடம் எனக்கு 3 படம் போதும் சொல்லிருக்கலாம்ல நான் அவரை குறை சொல்ல வில்லை ….
  எதுக்கு கிடைகிற சந்தர்பத்த நழுவ விடுவானே …

  சர்வதேச திரைப்பட விழா வில் காண்பிச்சு தான் ஒருத்தர் திறமைய காமிகனுமா என்ன …
  படம் நல்லா ஓடுன தமிழ் படமா இருந்தா கூட உலகத்துல எந்த மூலைல ஓடினாலும் அங்க உங்க திறமை தெரிய வருமே

  எது எப்படியோ கடசில வடை போச்சே …

 9. dhans

  to rajan:

  Rajan i dont want to screen all his movies or 3 movies or n number of movies. its not we decide how many movies but at the same time it should not be decided tthat we should be screen only 3 movies by comparing his work with others.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *