BREAKING NEWS
Search

இந்திய அரசின் நிபந்தனைகளை நிராகரித்தார் பிரபாகரன் தாயார்!

இந்திய அரசின் நிபந்தனைகளை நிராகரித்தார் பிரபாகரன் தாயார்… உறவினர்களுடன் கடைசி காலத்தைக் கழிக்க முடிவு!

கொழும்பு: பல்வேறு கடுமையான நிபந்தனைகளுடன் கூடிய இந்தியாவின் சிகிச்சை வாய்ப்பை விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் நிராகரித்து விட்டார். தனது எஞ்சிய காலத்தை சொந்த ஊரான வல்வெட்டித் துறையில் உறவினர்களுடன் கழிக்கவே அவர் விரும்புவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் சிகிச்சை பெற பார்வதி அம்மாள் விரும்பினார். இதற்காக முறையாகப் பெற்ற 6 மாத கால விசாவுடன் சென்னைக்கு வந்த அவரை குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் மனிதாபிமானம் சற்றும் இல்லாமல், விமானத்திலிருந்து கூட இறங்க விடாமல் தடுத்து திருப்பி மலேசியாவுக்கே அனுப்பி விட்டனர்.

இந்த மிருகத்தனமான செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இதுகுறித்து கருத்துதெரிவித்த முதல்வர் கருணாநிதி , அரசுக்குத் தெரிவிக்காமல் வந்து விட்டார் பார்வதி அம்மாள். அவருக்கு சிகிச்சை அளிக்க அனுமதிக்குமாறு மத்திய அரசு க்கு கடிதம் எழுதப்படும் என்றார். அதன்படி மத்திய அரசுக்கும் கடிதம் எழுதினார்.

இதையடுத்து பல்வேறு கடும் நிபந்தனைகளுடன் பார்வதி அம்மாள் சிகிச்சைப் பெற மத்திய அரசு அனுமதி அளித்தது. இதை நேற்று சட்டசபையில் முதல்வர் கருணாநிதி அறிவித்தார். கிட்டத்தட்ட மருத்துவமனையில் சிறைப்படுத்தப்படும் நிலை இது என தமிழ் உணர்வாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் மத்திய அரசின் நிபந்தனையுடன் கூடிய சிகிச்சை வாய்ப்பை பார்வதி அம்மாள் தரப்பு நிராகரித்து விட்டது. நேற்று திடீரென மலேசியாவிலிருந்து பார்வதி அம்மாள் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்து யாழ்ப்பாணம் கொண்டுசெல்லப்பட்டார்.

வல்வெட்டித்துறையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு பார்வதி அம்மாள் செல்லவுள்ளதாகவும், தனது எஞ்சிய காலத்தை அங்கேயே அமைதியாக கழிக்கப் போவதாகவும் அவரது உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசு சார்பிலேயே பார்வதி அம்மாளுக்கு சிகிச்சை தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிவாஜிலிங்கம் தெரிவித்ததாக இலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
8 thoughts on “இந்திய அரசின் நிபந்தனைகளை நிராகரித்தார் பிரபாகரன் தாயார்!

 1. eelam tamilan

  I really salute you on this decision… Indian karuna will get such jail in his latter age and understand what he did…

 2. palPalani

  நன்றி கலைஞர் அய்யா… உங்களின் இந்த உதவியை நான் மறக்கவே மாட்டேன்.
  உங்களுக்கு தலைவலின்னா, எதோ ஊருக்கே தலைவலி மாதிரி பில்டப் பண்ணி பேசுவீங்க! ஆனா, மத்தவங்களுக்குன்ன, கடிதம்தான?

 3. Manoharan

  தமிழன் தன்மானமுள்ளவன் என்று நிரூபித்துவிட்டார் பார்வதி அம்மாள். சோனியாவும்,கருணாநிதியும் போடும் பிச்சையை வாங்குவதைவிட அவர் இலங்கையிலிருப்பதே மேல்.அவர் உடல் நலம் பெற பிராத்திப்போம்.

 4. ராம்குமார் சிங்காரம்

  அட கேடுகெட்ட கருணாநிதி

  உலகமே போற்றிய உத்தமத் தலைவனைப் பெற்ற தாயடா அவர்கள். அவர்களுக்கு பிச்சையா போடுகிறீர்கள்?

  இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும், தமிழின தலைவன் எங்கள் பிரபாகரன்தான். நீயில்லை. தமிழினத் தலைவனின் அன்னையை அந்த கடவுள் பார்த்துக் கொள்வான்.

 5. updown

  ASS HOLE KARUNA , ITALIAN BITCH SONYA & CROSS BELT CROCODILE P CHITHAMBARAM ONE DAY THEY HAVE TO ACCOUNT THIS KARMA

 6. Raja

  தமிழன் தன்மானமுள்ளவன் என்று நிரூபித்துவிட்டார் பார்வதி அம்மாள்.
  அவர் உடல் நலம் பெற பிராத்திப்போம்.
  — ரிப்பீட்டு.

 7. குமரன்

  சிலைன்ஜர் கருணாநிதி ௧௨௦ வயது வரை வாழ வேண்டும். அவர் தனது மகன் மகள் பேரன் பேத்தி மரணம் கண்டு சோகப்படவேண்டும். தயவு செய்து அவர் சாகவேண்டும் என்று அன்பர்கல்யாரும் வேண்டாதீர்கள்.

  அவருக்கு அவரது குடும்பமே கஷ்டத்தை தருவார்கள்.

 8. குமரன்

  சிலைன்ஜர் கருணாநிதி 120௦ வயது வரை வாழ வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *