BREAKING NEWS
Search

இந்தியில் மூன்று வேடங்களில் ஜெயித்த ஒரே நடிகர் ரஜினி!- டி ராமாராவ் ஃப்ளாஷ்பேக்!

இந்தியில் மூன்று வேடங்களில் ஜெயித்த ஒரே நடிகர் ரஜினி!- டி ராமாராவ் ஃப்ளாஷ்பேக்!

தினேனி ராமாராவ்…

john_jani_janardhanஇந்திய சினிமாவில் இவரைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது.

மிகப் பிரபலமான தெலுங்கு மற்றும் இந்திப் பட இயக்குநர் – தயாரிப்பாளர்… ரஜினியை வைத்து அதிக இந்திப் படங்களை இயக்கியவர். ரஜினியின் முதல் இந்திப் படமான அந்தாகானூனை சூப்பர் டூப்பர் ஹிட் படமாக்கியவர்.

ரஜினியின் நலம் விரும்பிகளுள் மிக முக்கியமானவர்.

இன்னும் அவரைத் தெரியவில்லையென்றால்…

இன்றைய முன்னணி தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களில் ஒருவர் இவர். இவரது சமீபத்திய ஹிட் படம் ‘சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்’! இதற்கு முன் தில், அருள் படங்களை எடுத்தார்.

ரஜினியை வைத்து பூர்ணச்சந்திரராவுடன் இணைந்து நான் சிவப்பு மனிதன் படத்தைத் தந்தார்!

இப்போது முழுக்க முழுக்க இவரது மகன் அஜய்குமார்தான் தயாரிப்புப் பணிகளை கவனிக்கிறார். ராமாராவ் மேற்பார்வை செய்வதேடு சரி.

சமீபத்தில் ததினேனி ராமாராவ் எனப்படும் டி ராமாராவைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அவரது திரையுலக அனுவங்கள்,  ஒரு புத்தகம் எழுதும் அளவுக்குப் பெரியது.

அதுமட்டுமல்ல, தமிழில் எப்படி எஸ்பி முத்துராமன் அதிகபட்ச கமர்ஷியல் வெற்றிகளைக் கொடுத்தாரோ, அதைப்போல தெலுங்கு மற்றும் ஹிந்தியில் அதிக வெற்றிகளைக் கொடுத்தவர் ராமாராவ்.

ரஜினியை வைத்து அந்தா கானூன், தோஸ்தி துஷ்மனி, ஜான் ஜானி ஜனார்தன், டாகு ஹஸீனா, புலந்தி என பல படங்களை இயக்கியவர் ராமாராவ்.

அமிதாப்பை வைத்தும் பெரிய ஹிட்களைக் கொடுத்தவர்.

இவரது முதல்படம் நவராத்திரி. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த தமிழ் நவராத்திரியை தெலுங்கில் நாகேஸ்வரராவை வைத்து எடுத்தார், அதே தலைப்பில். படம் மிகப்பெரிய ஹிட்.

ரஜினி – அமிதாப்பை வைத்து ராமாராவ் இயக்கிய அந்தாகானூன் பாலிவுட்டில் பெரிய சரித்திரமே படைத்தது.

ரஜினி – ராமாராவ் கூட்டணியின் மிகப்பெரிய வெற்றிப் படம் ஜான் ஜானி ஜனார்தன்.

தமிழில் ரஜினி நடித்த மூன்று முகம் படம்தான் ஜான் ஜானி ஜனார்தனாக ஹிந்தியில் வெளியானது.

அதுவரை இந்தியில் மூன்று வேடங்களில் எந்த ஹீரோவுமே ஜெயித்ததாக சரித்திரம் இல்லை. அமிதாப் மூன்று வேடங்களில் நடித்த மஹான் திரைப்படம் கூட தோல்வியையே தழுவியது (ஆனால் ஆர்டி பர்மன் இசையில் பாடல்கள் படு ஹிட்).

அதனால் ரஜினியை மூன்று வேடங்களில் நடிக்க வைத்து ராமராவ் இயக்கிய  இந்தப் படம் குறித்து பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமலிருந்தது அன்றைக்கு. ஆனால் படம் வெளியாகி 25 வாரங்கள் கடந்து வெற்றி நடைபோட்டு, எல்லோரையும் மூக்கின் மேல் விரல் வைக்க வைத்தது.

இந்தப் படம் குறித்த விமர்சனங்களில், ‘ஒரு பக்கா கமர்ஷியல் படம். ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்துச் செல்லும் அத்தனை பொழுது போக்கு அம்சங்களும்’ உண்டு என்று விமர்சனம் எழுதியிருந்தது டைம்ஸ் ஆப் இந்தியா.

2hztopg

இந்தப் படத்தை இயக்கிய அனுபவம் குறித்து ராமாராவ் இப்படிக் கூறுகிறார்:

“மல்டிபிள் ரோல்… அதாவது ஒரே நடிகர் பல வேடங்களில் நடிப்பது, அது எந்த அளவு சிக்கனமாக எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து ரஜினியிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஏதோ வீம்புக்காக பல வேடங்களை ஏற்கவேண்டும் என்பது அவர் விருப்பமல்ல. அந்தக் கதைக்கு அப்படி நடிப்பது தேவையா என்று மட்டுமே ரஜினி பார்ப்பார். இல்லாவிட்டால் ‘வேண்டாம்…விட்டுடுங்க. நிறைய கலைஞர்கள் இருக்கிறார்கள், அவர்களைப் பயன்படுத்திக் கொள்வோம்’ என்பார்.

ஜான் ஜானி ஜனார்தன் படத்தில் ரஜினி மூன்று வேடங்களில் நடித்தே தீர வேண்டி வந்தது. காரணம் அந்தக் கதை அப்படி. இல்லாவிட்டால் வேண்டாம் என்றுதான் சொல்லியிருப்பார் அவர்.

இன்னொரு பெருமைக்குரிய விஷயம்… ரஜினி அந்தப் படத்தில் மூன்று வேடங்களில் நடித்தது ஒரு Passion (தொழில் மீதான பற்றுதல்) காரணமாகத்தான். இத்தனை வேடங்களில் நடித்ததால் அதிக சம்பளம் வேண்டும் என்று அவர் கேட்டதில்லை. வழக்கமான சம்பளம்தான் வாங்கினார்.

ஜான் ஜானி ஜனார்தனுக்கு முன் பாலிவுட்டில் ஒரு மூட நம்பிக்கை இருந்தது. அதாவது, இந்தியில் மூன்று வேடங்களில் யார் நடித்தாலும் எடுபடாது, ஜெயிக்காது என்று பலர் சொல்லி வந்தனர். இந்தப் படத்தை நான் எடுக்க ஆரம்பித்தபோதே இதைச் சொல்லி என்னை பலர் அதைரியப்படுத்த முயன்றார்கள்.

இன்னொரு பக்கம், இந்தக் கதையில் சிரஞ்சீவியை வைத்து எடுக்கலாம் என்று என் சகோதரர் உள்ளிட்டவர்கள் சொன்னார்கள். காரணம் தமிழில் ரஜினி நடித்து வென்ற மூன்று முகத்தை, தெலுங்கில் வேறு நடிகரை வைத்து நான்தான் எடுத்தேன்.

ஆனால் இதை இந்தியில் எடுத்தால் மீண்டும் ரஜினியே நடிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தேன்.

சிரஞ்சீவியை இந்தப் படத்தில் வேண்டாம் என்று சொன்னதற்குக் காரணம், ரஜினி அளவுக்கு அவருக்கு மார்க்கெட் கிடையாது. தென்னகத்திலும், வட மாநிலங்களிலும் பேதமின்றி ரஜினியை ஏற்றுக் கொண்டதுபோல சிரஞ்சீவியை ஏற்கவில்லை.

இந்தியில் ஜான் ஜானி ஜனார்தனுக்கு கிடைத்த வரவேற்பு எல்லோரையும் திகைக்க வைத்தது. பலர் என் காதுபடவே இதனை ‘பி கிரேடு படம்’ என்றார்கள். ஆனால் ஏ சென்டர்களில் அதிகபட்ச வசூலுடன் ஓடியது ஜான் ஜானி ஜனார்தன்.

அமிதாப் என்னிடம் தனிப்பட்ட முறையில், இதே மாதிரி கமர்ஷியலாக ஒரு படம் செய்துதர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

25 வாரங்களை சர்வ சாதாரணமாகக் கடந்த படம் ஜான் ஜானி ஜனார்தன். ரஜினி என்னைச் சந்திக்கும் போதெல்லாம் இதை நினைவு கூர்வார். நான் கடைசியாக இந்தியில் இயக்கிய படம் புலந்தி. இதில் ரஜினி சிறப்பு வேடத்தில் நடித்தார் (பெத்தராயுடுவின் இந்திப் பதிப்பு).

ஒரு நல்ல மனிதரின் நட்பும், அவருடன் பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்ததில் எனக்கு மகிழ்ச்சிதான்!

அவருக்கு இந்தியில் பெரிய வாய்ப்புகள் வந்தாலும் மறுத்து விடுகிறார். என்னைப் பொறுத்தவரை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நேரடி இந்திப் படத்தில் அவர் நடிக்கலாம்…”, என்றார் ராமராவ்.

குறிப்பு 1: படம் குறித்த விவரங்கள்

ஜான் ஜானி ஜனார்தன் படம் வெளியான ஆண்டு 1984, அக்டோபர் 24.

நடித்தவர்கள்: ரஜினிகாந்த் (3 வேடங்கள்), ரத்தி அக்னிஹோத்ரி, லீனா தாஸ், சந்திரசேகர் மற்றும் பூனம் தில்லான்

இசை: லட்சுமிகாந்த் ப்யாரிலால்

தயாரிப்பு: ஏ பூர்ணசந்திர ராவ் – லட்சுமி புரொடக்ஷன்ஸ்

பாக்ஸ் ஆபீஸ் ஸ்டேட்டஸ்: சில்வர் ஜூப்ளி படம்

குறிப்பு 2: ரஜினி பற்றி ராமாராவ் மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளைச் சொல்லியிருக்கிறார். வாய்ப்பு, தேவை வரும்போது எழுதுவோம்.

-வினோ
17 thoughts on “இந்தியில் மூன்று வேடங்களில் ஜெயித்த ஒரே நடிகர் ரஜினி!- டி ராமாராவ் ஃப்ளாஷ்பேக்!

 1. Rajan

  //ஏதோ வீம்புக்காக பல வேடங்களை ஏற்கவேண்டும் என்பது அவர் விருப்பமல்ல. அந்தக் கதைக்கு அப்படி நடிப்பது தேவையா என்று மட்டுமே ரஜினி பார்ப்பார். இல்லாவிட்டால் ‘வேண்டாம்…விட்டுடுங்க. நிறைய கலைஞர்கள் இருக்கிறார்கள், அவர்களைப் பயன்படுத்திக் கொள்வோம்’ என்பார்.//

  சத்தியமான வார்த்தைகள் …

  தேவையே இல்லாமல் பத்து வேடங்கள் நடிப்பவர்கள் கவனிக்கவும் ….

  எத்தனையோ கலைஞர்கள் இருக்கிறார்கள் . அவர்களுக்கும் நடிக்க தெரியும் அவர்களும் வாழ வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும் .

  மைகேல் மதன காமராஜன் படத்தில் நான்கு வேடங்கள் செய்தால் அதை தேவை என்று சொல்லலாம் . அந்த கதைக்கு அது தேவை . அருமை .ஆனால் தேவையே இல்லாமல் துணை நடிகர்கள் செய்ய வேண்டிய கதாபாத்திரங்களையும் வெறும் வீம்புக்காக, பப்ளிசிட்டி மற்றும் ரெக்கார்டுக்காக தன் கதாபாத்திரத்துடன் சேர்த்து பத்து அவதாரம் எடுப்பதைத் தான் ஏற்றுக் கொள்ள முடிய வில்லை .

  ராஜன்

 2. harisivaji

  /////ஏதோ வீம்புக்காக பல வேடங்களை ஏற்கவேண்டும் என்பது அவர் விருப்பமல்ல. அந்தக் கதைக்கு அப்படி நடிப்பது தேவையா என்று மட்டுமே ரஜினி பார்ப்பார். இல்லாவிட்டால் ‘வேண்டாம்…விட்டுடுங்க. நிறைய கலைஞர்கள் இருக்கிறார்கள், அவர்களைப் பயன்படுத்திக் கொள்வோம்’ என்பார்.////

  இதுக்கு மேல வேற ஒன்றும் சொல்ல தேவ இல்ல

 3. Padmini

  In aval vikatan mettioli Rajam (mother in law – villi character)has given an interview saying that for her husband’s operation our thalaivar had helped giving her money. Likewise a lot of his charities are not known to outside world. Thanks to her for letting us know this.

 4. prashanthan

  நீங்க உங்க சூப்பர் ஸ்டார் சார்பா எழுதுவிங்க … மற்ற நடிகர்களை மறைமுகமாகவும் , நேரடியாகவும் தாக்கி பேசுவீர்கள் … இதையே மற்ற நடிகர்களின் ரசிகர்களும் செய்வார்கள் … இப்படியே மாத்தி மாத்தி பேசியே உங்க காலம் வீனா போயிடும் .. உங்க சூப்பர் ஸ்டாரும் , உலகநாயகன்னும் , இளைய தளபதியும் நல்லா பணம் சம்பாதிச்சுடுவாங்க .. அதுக்கு அப்புறமா கட்சி தொடங்குவாங்க நீங்க கொடிய புடிச்சுக்கொண்டு “தலைவர் வாழ்க” அப்புடின்னு கத்துவீங்க ….. அவங்களுக்கும் பதவி கிடைக்கும் , கண்டிப்பா மக்களுக்கு எதுவுமே செய்ய போறது இல்ல… அவங்க குடும்பம் மட்டும் நல்ல வசதியா வாழும் ….
  அப்ப நீங்க ?????????

  கோவிந்தா கோவிந்தா எண்டு நடுத்தெருவில நிக்க வேண்டியது தான் …..

 5. ஈ ரா

  சூப்பர் இண்டர்வியூ …

  ரஜினி பற்றி ராமாராவ் மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளைச் சொல்லியிருக்கிறார். வாய்ப்பு, தேவை வரும்போது எழுதுவோம்.

  விரைவில் எதிர்பார்க்கிறேன்…

  நன்றி

  ஈ ரா

 6. கிரி

  விரைவில் இதை தரவிறக்கம் செய்து பார்த்து விட வேண்டியது தான்

 7. கிரி

  அப்படியே யு டியுப் பாட்டை போட்டு இருந்தா கும்முன்னு இருந்து இருக்கும் 😉

 8. Valluvan

  This is for Rajan

  தேவையே இல்லாமல் பத்து வேடங்கள் நடிப்பவர்கள் கவனிக்கவும் ….

  This is an insult to Shivaji who doned 9 roles in Tamil (Navarathri), Nageshwara Rao in Telugu and Sanjeev Kumar in Hindi.

  Or till 9 it is acceptable and only 10 is unacceptable (since Kamal did that)?

  Yosichu pesanum thambi………….

 9. வடக்குப்பட்டி ராமசாமி

  ராஜன் சார், நீங்க சொல்றது எனக்கும் சரினுதான் படுது, அவரு கஷ்டப்பட்டு செஞ்ச சில ரோளுக்குப் பதிலா அசினோட ஹீரோயின் வேஷம் போட்ருந்தா படத்துக்கு ஒரு பினிஷிங் கிடைச்சிருக்கும்!

 10. Rajan

  This is for Valluvan

  ஒன்பது அல்லது பத்து வேடங்கள் செய்வது தவறு என்று நான் சொல்ல வில்லை . தேவையே இல்லாமல் செய்வதை தான் ஏற்று கொள்ள முடிய வில்லை என்று கூறி இருந்தேன் . கமல் இல்லை யார் செய்தாலும் தான் .

  If I am targeting only kamal, I would have refrain from saying that what Kamal have done in the movie Michael madana kama rajan is worthful in the same paragraph.

  Yosichu thaan pesuren annan. Neenga modhalla commentta fulla padichuttu pesunga…

  ராஜன்

 11. Rajan

  What I mean to say in my first comment is , only 3 or 4 roles are really meant to be done by Kamal in that movie. All the remaining characters are done deliberately for record sake. But that is not the case in any of the other movies that you told.

  ராஜன்

 12. r.v.saravanan

  nalla padivu vino
  enakku theriyatha seithigal evai
  hindi padathai parkka venkum endru arvam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *