BREAKING NEWS
Search

‘இந்தியா வரும் எண்ணம் இப்போதைக்கில்லை!’ – பார்வதி அம்மாள்

‘இந்தியா வரும் எண்ணம் இப்போதைக்கில்லை!’ – பார்வதி அம்மாள்

சென்னை: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் இந்தியா வரும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என்று இந்திய அரசுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது இந்த பதிலை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர் அதிகாரிகள்.

மருத்துவச் சிகிச்சைக்காக மலேசியாவில் இருந்து சென்னை வந்த பார்வதி அம்மாளை குடியுரிமை அதிகாரிகள் அதே விமானத்தில் திருப்பி அனுப்பினர். விமான நிலைத்தில் கால் வைக்கவும் அனுமதிக்கவில்லை.

நோயாளியான அவரை திருப்பி அனுப்பியது மனிதாபிமானமற்ற செயல் என்றும், அவரை தனி விமானத்தில் இந்தியாவுக்கு அழைத்து வந்து மருத்துவச் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் கோரி வழக்கறிஞர் கருப்பன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி எலிப் தர்மாராவ், நீதிபதி கே.கே.சசிதரன் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்தியாவில் சிகிச்சைப் பெறுவது குறித்த பார்வதி அம்மாளின் கருத்து என்ன என்று நீதிபதிகள் கேட்டனர்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக இந்திய வெளியுறவுத் துறை சார்பில் உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:

கொழும்பில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த பார்வதி அம்மாளிடம் இந்தியாவில் தங்கி சிகிச்சை பெறவும், அவருக்கு மருத்துவ விசா வழங்கவும் உதவி செய்ய தயாராக இருப்பதாக தூதரக அதிகாரிகள் மே 11-ம் தேதி தெரிவித்தனர்.

இந்த சந்திப்பின் போது விழித்திருந்த பார்வதி அம்மாள் அதிகாரிகளின் கருத்துக்கு பதில் ஏதும் தெரிவிக்கவில்லை. அவர் அப்போது சுய நினைவில் இருந்தார்.

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன், பார்வதி அம்மாளின் சார்பில் எங்களிடம் பேசினார். இந்தியாவுக்கு தற்போது வரும் எண்ணம் பார்வதி அம்மாளுக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்..”

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

வழக்கு விசாரணை புதன்கிழமைக்கு தள்ளிக்கப்பட்டுள்ளது.




2 thoughts on “‘இந்தியா வரும் எண்ணம் இப்போதைக்கில்லை!’ – பார்வதி அம்மாள்

  1. Dinesh

    நீங்க அங்கேயே இருங்க… இங்க வந்தா உங்கள இவணுங்க சும்மா விட மாட்டாணுங்க…

  2. prabhu ramaswamy

    இங்கே வராதீர்கள்… உங்களையும் வைத்து வியாபாரம் செய்ய இங்கே ஒரு கும்பல் காத்து இருக்கிறது..

    **** சோனியா காந்திக்கு அம்பானி, குட்ரோச்சி யுடன் இந்திய நாட்டை விற்பது வாங்குவது தொடர்பான வேலைகள் இருக்கும்…. உங்களை எல்லாம் மனிதாபிமான ரீதியில் கூட கண்டு கொள்ள மாட்டார்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *