BREAKING NEWS
Search

இந்தியாவின் முன் மாதிரி மழலையர் பள்ளி ‘ஆனந்தவனா’; துவங்குகிறார் லதா ரஜினி!!

லதா ரஜினிகாந்த்தின் “ஆனந்தவனா” : இந்தியாவின் முதல் மாதிரி மழலையர் பள்ளி!

சிறு மழலைகளுக்காக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், சென்னையில், 1-ந் தேதி (சனிக்கிழமை) புதிய பள்ளிக்கூடம் தொடங்குகிறார். இந்தப் பள்ளிக்கு ‘ஆனந்த வனா’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

rajini-latha

இது பற்றி லதா ரஜினிகாந்த் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆரோக்கியமான குழந்தைப் பருவமே நல்ல மனிதர்களை உருவாக்க முடியும். ஒழுக்கமான, அர்த்தமுள்ள கல்வி முறையினால், மட்டுமே, இப்படிப்பட்ட மனிதர்களைக் கொடுக்க முடியும். அதற்கு தரமான அடிப்படைக் கல்வியை சரியான நேரத்தில் நம் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.

இந்தப் பணியில் என்னை ஈடுபடுத்தி க்கொண்டு, நான் சின்னஞ்சிறு நல்ல உள்ளங்களுக்காக, அவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு 1991-ம் ஆண்டு “ஆஷ்ரம்” பள்ளிக்கூடத்தைத் தொடங்கினேன். அது இன்று பல கிளைகளாக வளர்ந்து உள்ளது.

படிக்கும் காலத்திலேயே அவர்களின் திறமையை வளர்க்கும் விதமாக ஆஷ்ரம் பள்ளிகளில் மாணவர்களுக்கு அனைத்தையும் கற்றுக் கொடுக்கிறோம். படிப்பு மட்டுமின்றி அதற்கேற்ப தனி ஆஷ்ரம் கல்வி முறையை வகுத்துள்ளோம். (`டாஸ்க்’ கல்வித்திட்டம்).

இது சிபிஎஸ்ஸி, மாநிலக் கல்வி முறையைப் போன்று தனியானதொரு பாடத் திட்டம்.

“ஆனந்தவனா”

டாஸ்க்கின் செயல்பாடுகள், மாணவர்கள் இன்னும் உயர்ந்த நிலைக்குப் போக வேண்டும் என்ற கொள்கையை நோக்கிச் செல்கிறது. இது `ஐசிஎஸ்சி’ பாடத்திற்கு இணையானதாக அமையும்.

அந்த வகையில், இப்போது இளம் பிஞ்சுகளுக்காக “ஆனந்தவனா” என்ற பெயரில் பள்ளிக் கூடம் தொடங்கப்பட்டது.

இது மற்ற கின்டர் கார்டன் பள்ளிகளைவிட வித்தியாசமானதாகவும், மேம்பட்டதாகவும் இருக்கும். பிஞ்சு உள்ளங்களை புண்படுத்துவதாக கல்வி அமையக் கூடாது என்ற எண்ணத்தில் “ஆனந்தவனா” தொடங்கப்படுகிறது. இங்கு வரும் குழந்தைகள் சந்தோஷமாக இருக்கும். கல்வியைத் திணிக்கும் போக்கு இருக்கக்கூடாது. குழந்தைகள் அவர்கள் போக்கில் கற்க வேண்டும்.

குழந்தைகள் எப்போதும் வரலாம்!

இந்த பள்ளிக் கூடம் காலை, மதியம், மாலை என்று மூன்று வேளைகளிலும் செயல்படும். எப்போது வேண்டுமானாலும் குழந்தைகள் ஆனந்தவனா பள்ளிக்கு வரலாம். ஆனந்தமாக கல்வி பெறலாம். ஆனந்தவனா பள்ளிக்கு குழந்தைகளை தனியாக அனுப்பக்கூடாது. உறவினர் யாராவது ஒருவரின் துணையோடுதான் குழந்தை பள்ளிக்கு வரவேண்டும். குழந்தையுடன் வரும் உறவினர்கள் அவர்களுடனேயே இருந்து பின்னர் வீட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

5-வது வகுப்பு வரையில் `ஆனந்தவனா’ பள்ளியில் படிக்கலாம். முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என்று இல்லாமல், ஒவ்வொரு வகுப்புக்கும் `பட்டர்பிளை’ `ரோஸ்’ என்று பெயர் சூட்டி உள்ளோம். 5 ஆண்டு படிப்பு முடிந்ததும் வழக்கமான மேல் நிலைப்பள்ளிக்குச் செல்லலாம்.

ஆனந்தவனா பள்ளிக்கூடம் சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் அமைக்கப்பட்டு உள்ளது. 1-ந் தேதி (சனிக்கிழமை) திறக்கப்படுகிறது. படிப்படியாக சென்னையில் மற்ற பகுதிகளிலும், மற்ற மாவட்டங்களிலும் ஆனந்தவனா பள்ளி திறக்கப்படும், என்றார் லதா ரஜினிகாந்த்.

புத்தக வெளியீடு

முன்னதாக, டாக்டர் முத்து எழுதிய குழந்தைகள் பல் பராமரிப்பு மற்றும் பல் சிகிச்சை முறைகள் குறித்த புத்தகத்தை, லதா ரஜினிகாந்த் வெளியிட, ரஜினியின் மகள் சௌந்தர்யா ரஜினி பெற்றுக்கொண்டார்.

இந்தியாவில் இத்தகைய முன் மாதிரிக் கல்வி அமைப்பு வேறு எங்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகளின் மனம் போல நடந்து ஆரம்பக் கல்வியைத் தருவதே சிறந்த கல்வி முறை என உளவியலாளர்களும் கல்வியாளர்களும் வற்புறுத்தி வரும் நேரத்தில் காலம் மற்றும் அவசியமறிந்து லதா ரஜினி அவர்கள் இந்தப் புதிய கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
7 thoughts on “இந்தியாவின் முன் மாதிரி மழலையர் பள்ளி ‘ஆனந்தவனா’; துவங்குகிறார் லதா ரஜினி!!

 1. கிரி

  பணக்கார குழந்தைகள் மட்டுமே படிக்க முடியும் என்று நினைக்கிறேன் ..லதா மேடம் அனைத்து தரப்பு குழந்தைகளும் படிக்கும் படி பள்ளி அமைத்தால் நல்லது

 2. idhyam

  அடுத்த வசூல் வேட்டை! வாழ்க லதா ரஜினி கல்வி பணி!

 3. muhesh

  பணம் சம்பாதிக்க ஆயிரம் வழி இருக்கு. அதற்க்கு புனிதமான கல்வியை பயன் படுத்தாதீங்க. ( இது எங்கயோ கேட்ட குரலா இருக்கோ?)

 4. Sivaji Rao Veriyan

  My two cents worth
  — ஏழை குழந்தைகளுக்கு முதலில் அரசு எதாவது செய்யட்டும். நல்ல கல்வி கூடங்கள் அமைத்து தரட்டும், அதை விட்டு விட்டு இட ஒதுக்கீடு செய்து கெடுப்பதை நிறுத்தட்டும். இதை செய்வது லதா அவர்களின் வேலை அல்ல.
  –வசூல் வேட்டை பற்றி நண்பர் குறிப்பிட்டிருந்தார். ஏன், நீங்கள் காலையில் இருந்து மாலை வரை என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? முதலில் தன்னை பார்த்து கொண்டு மற்றவர்களை பார்க்க வேண்டும். நமக்கு பள்ளி தொடங்கும் அளவுக்கு தைரியம் இல்லை எனில் அமைதியாக இருப்பது நல்லது.
  –இப்பொழுது பள்ளியில் கற்று கொடுக்கும் கல்வி வாழ்க்கைக்கு உபயோகமானதா? அதுவும் ரொம்ப புனிதமானதா? அப்படி என்றால் தாங்கள் ஏன் அந்த புனிதமான அறப்பணியை செய்ய கூடாது? ஏன் ஐ.டி கூலி ஆகவோ அல்லது வேறு புனிதம் இல்லாத தொழிலை செய்ய வேண்டும்?
  –மக்களுக்கு ஒன்றும் செய்யாமல் தன் சுகத்தை மட்டும் பார்த்து கொள்பவர்கள், லதா போன்றோருக்கு அறிவுரை கூற தகுதி இல்லை என்பது என் தாழ்மையான கருத்து.

 5. pisasu

  ille velaiyillama engalukku munnale padichittu ithula punch dialogue vera? athai olunga link panni eluthi puththisaalinnu nirubichathu illa po po.

  I do not think that this school will be that much costly nowdays Indian youth are earning much better after IT industries and outsourcing from US?CANADA.
  But the approach is really different , a relative should be there with the kid.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *