BREAKING NEWS
Search

‘இந்தியாவின் அவதார்… இந்தியாவின் ஜேம்ஸ் கேமரூன்’! – ஷங்கருக்கு பாலச்சந்தர் பாராட்டு

‘இந்தியாவின் அவதார்… இந்தியாவின் ஜேம்ஸ் கேமரூன்’! – ஷங்கருக்கு பாலச்சந்தர் பாராட்டு


ந்திரன் சாதனை மிகுந்த நிறைவைத் தருகிறது! – ஷங்கர்

எந்திரன் படத்துக்கு மக்கள் தந்துள்ள வரவேற்பு, மீடியா அளித்துள்ள பாராட்டு, வசூலில் அந்தப் படம் நிகழ்த்தும் சாதனைகள் நிறைவையும் மகிழ்ச்சியும் தருகிறது, என இயக்குநர் ஷங்கர் கூறியுள்ளார்.

இதுகுறித்து தனது ப்ளாக்கில் அவர் எழுதியுள்ளதாவது:

ந்திரன் வெளியாகிவிட்டது. இந்தப் படத்துக்கு உலகம் முழுக்க பெரும் ஆதரவு தந்து, பாராட்டி ரசித்து மகிழும் அனைவருக்கும் எனது நன்றி. பத்திரிகைகள் மற்றும் மீடியாவுக்கு நன்றி. சில பத்திரிகைகள் இந்தப் படத்துக்கு 5-க்கு 5 நட்சத்திரங்கள் அளித்து உற்சாகப்படுத்தியுள்ளன. இன்னும் சில, 4 நட்சத்திரங்கள் அளித்துள்ளன. வடக்கு தெற்கு என்ற பேதமில்லாமல் உலகமெங்கும் வசூலில் சாதனை புரிகிறது எந்திரன் என்பது மகிழ்ச்சியைத் தருகிறது.

படம் பார்த்துவிட்டு இந்திய சினிமாவின் பெரும் கலைஞர்கள், படைப்பாளிகள் என்னை நேரிலும் போனிலும் பாராட்டியது அற்புதமான உணர்வைத் தந்தது.

படம் பார்த்து முடித்ததும் அமீர் கான் என்னை வீட்டுக்கு அழைத்தார். அங்கே விடியும் வரை அவரும் இயக்குநர் ராஜ்குமார் ஹிராணியும் எந்திரன் பற்றியே பேசிக் கொண்டிருந்தனர்.

ஹ்ரித்திக் ரோஷன் தொலைபேசியில் அழைத்துப் பாராட்டினார். கமல்ஹாஸன் தனது வாழ்த்துக்களோடு, ஒரு அழகான மெஸேஜையும் அனுப்பியிருந்தார்.

இன்னும் கன்னட நடிகர் உபேந்திரா, நடிகர் பிரகாஷ் ராஜ், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பலரும் பாராட்டியவண்ணம் உள்ளனர்.

எனக்கு மிகுந்த இன்ப அதிர்ச்சியாக அமைந்தது இயக்குநர் கே பாலச்சந்தரின் பாராட்டுக் கடிதம்தான். 30 ஆண்டுகளுக்கும் மேல் வெற்றிகரமாக சினிமாவில் இயங்குபவர் அவர். எனக்கு ரோல்மாடல் என்று கூட சொல்லலாம். அவரது பாராட்டுக் கடிதம் படித்தபோது, என்னையும் மீறி கண்களில் கண்ணீர் துளித்தது. இந்தப் பாராட்டு என்னை இன்னும் கடின முயற்சிகளை மேற்கொள்ளத் தூண்டுகிறது..” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் அவதார்… இந்தியாவின் ஜேம்ஸ் கேமரூன்!!

ஷங்கரைப் பாராட்டி பாலச்சந்தர் எழுதிய கடிதத்தில், எந்திரன் படத்தை இந்தியாவின் அவதார் என்றும், இயக்குநர் ஷங்கரை இந்தியாவின் ஜேம்ஸ் கேமரூன் என்றும் வர்ணித்துள்ளார்.

ஆங்கிலத்தில் இரண்டு பக்கங்களில் எழுதப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில், “ரஜினியை நான்தான் அறிமுகப்படுத்தினேன். நடிகராக்கினேன். இன்னும் சில இயக்குநர்கள் அவரை ஹீரோவாக்கினார்கள். மணிரத்னமும் சுரேஷ் கிருஷ்ணாவும் அவரை பெரிய கமர்ஷியல் நாயகனாக்கினார்கள். ஆனால், சினிமாவின் பன்முகப் பரிமாணங்களிலும் ஜொலிப்பவராக நீங்கள் ரஜினியை மாற்றுயுள்ளீர்கள். உங்கள் எந்திரனுக்கு தலை வணங்குகிறேன்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் கடிதம்:

Dear Shankar,

A craftsman uses his tools, an engineer his learning, a painter his talent, a musician his gifts, a singer his skills, a politician his experience, a philosopher his knowledge, a swami his faith, a priest his prayers, a businessman his resources, – but you use all these – but more important you use the opportunities too, with all your mind, heart and soul.

If somebody had given me the opportunity to make a film with Rajinikanth and Aishwarya, given me unlimited resources, given me the permission to use whatever canvas or geography I choose too – I certainly would not know what to do!

I would probably in the end, made a film, which may have made the audience applaud – but I certainly could not have made a film that makes a eighty years old man like me- clap his hands in glee!

The most saleable star in the country, the most beautiful woman in the world, the most acclaimed composer in all music, and a discerning knowledgeable producer, with deep endless pockets is the sort of gauntlet that not many people would take-up because it is like walking a knife – edged precipice to doom – but you have accepted the challenge with your characteristic courage – and have come out rocking and smelling of roses.

I can modestly say that I know Rajnikanth. Infact I christened him. And also converted him into an actor. After me, a few other directors made him a hero. After that Manirathnam and Sureshkrishna made him a commercial certainty. But you have made him into a cinema conglomerate.

I introduced Rajini as a bad man. You have made him worse. Wonderfully worse.

The scene where Chitti dismantles himself brought a lump to my throat. I turned to see my grandson sobbing and my son also casually wipe his eyes. You can make three generations dance to your tunes? Are we in the same business, the same profession superman?


But then I forget that cinema is not a mere business for you. It is like a beast inside, which chases your obsession for creativity and pushes your imagination and drives your horizons, to greater and wider geographies.

When I see the crowds that throng the theatres all over the world, when I have personally experienced their reactions inside, it seems that you are the Pied piper, who has taken cinema back to it magic and its fascination.

And finally- atleast for cinema’s sake, may the SUN never set on the Maran empire, or lights ever fade, or curtains ever fall on Shankar film ever.

Bravo brave boy – I bow to your courage, conviction and commitment.

Bravo – I bow to you for ENTHIRAN.

A POST SCRIPT LITERALLY WILL IT BE TOO MUCH IF I SAY ENTHIRAN IS “AVATHAR”

YOU ARE OUR JAMES CAMERON

AND SUN PICTURES OUR MGM..?

WHY NOT?

Yours Sincerely,

K.Balachander

-இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

-என்வழி
7 thoughts on “‘இந்தியாவின் அவதார்… இந்தியாவின் ஜேம்ஸ் கேமரூன்’! – ஷங்கருக்கு பாலச்சந்தர் பாராட்டு

 1. kicha

  Thanks KB sir.

  Indha letterukaga mattum illai. Ippadi oru nalla manidharai Tamil cinemavuku thandhadharkagavum.

 2. Dinesh

  “நடிகை பிரகாஷ் ராஜ்” எழுத்துப் பிழையை சரி செய்யவும்.

  -______________
  Thanks

 3. Vikram

  ராஜேஷ்.. correcta சொன்னிங்க…

  Shankar has no stuff at all….

  And he is not worth to be called James Cameron……………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *