BREAKING NEWS
Search

இந்தக் கேள்விகளுக்கு நிச்சயம் விடை கிடைக்காது என நம்புவோமாக!!

இந்தக் கேள்விகளுக்கு நிச்சயம் விடை கிடைக்காது!!

பொதுவாக நம் நாட்டில் ஒரு வழக்கம் இருக்கிறது. எந்த ஒரு விவகாரமாக இருந்தாலும் அது உச்சத்தைத் தொடும் வரைதான் பரபரப்பு,. விமர்சனம்… தார்மீகக் கோபம் எல்லாமே. அதன் பிறகு அந்த உணர்வு போகும் இடம் தெரிவதில்லை. ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளை எழுப்பிவிட்டு போய்க் கொண்டே இருக்கிறார்கள் மக்கள்… அவற்றுக்கான பதில்களைப் பெறும் அளவுக்குக் கூட பொறுமையும் நிதானமும் இல்லை…

கோவையில் குழந்தைகள் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில், அனைத்துமே ஒரு வாரத்துக்குள் முடிந்துவிட்டது. ஏதோ சோகமான சினிமா பார்த்து, இரண்டு சொட்டு கண்ணீர்விட்டு, அடுத்த காட்சிக்குத் தயாராகும் உணர்வே இதில் மேலோங்கியிருந்தது. இதன் விளைவுதான், இதே போன்ற 16 குற்றங்கள் அதற்கடுத்த வாரத்திலேயே நடந்துள்ளன!

மறதி, எதையுமே அந்நேரத்து பொழுதுபோக்கு கண்ணோட்டத்தில் பார்ப்பது, யாருக்கோ நடந்ததுதானே நமக்கென்ன? என்ற அலட்சியம்…. போன்றவையே, அடுத்தடுத்த குற்றங்களுக்கு ஆழமான அடித்தளமாக அமைகிறது.

ஸ்பெக்ட்ரம் முறைகேடு விவகாரத்தில் இப்போதுள்ள பரபரப்பும் மக்களின் கோப உணர்வும் எத்தனை நாளைக்கு நீடிக்கும் என்கிறீர்கள்? அடுத்த சில தினங்களிலேயே இது மறக்கடிக்கப்படும். அதற்கு வசதியாக இருக்கவே இருக்கிறது கூட்டணி சமாச்சாரம்… அல்லது ரயில் தண்டவாள தகர்ப்பு செட்டப்கள். இதற்குத் தோதாக, பிரபாகரன் பிறந்த நாள்வேறு வருகிறது!

‘செம்மொழி மாநாட்டு ஸ்பெஷல் தண்டவாள தகர்ப்பு’க்கு காரணமானவர்களை கண்டுபிடித்துவிட்டதா போலீஸ்? என்று கேட்கக்கூட நாதியில்லா நாடு இது.

2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த ரூ 1.76 லட்சம் கோடி இழப்புக்கு காரணமான ஆ ராசா பதவி விலகியுள்ளார். இது இயல்பாக, தார்மீக அடிப்படையில் நடந்த ராஜினாமா அல்ல… எந்த நிமிடமும் கழுத்தைப் பிடித்து தள்ளப்படக் கூடும் என்ற நிலையில், வேறு வழியின்றி செய்யப்பட்ட ஒன்றே என்பது சலூன் கடையில் அரசியல் அலசுவோர் வரை நன்கு புரிந்திருக்கிறது.

அடுத்து?

ராசா பதவி விலகியதால் எல்லாம் சரியாகி விடுமா? இந்திய அரசு இழந்த ரூ 1.76 கோடி திரும்பக் கிடைத்துவிடுமா?

இந்த முறைகேட்டின் பலன் மொத்தத்தையும் ராசாதான் அனுபவித்தாரா?

ராசா ராஜினாமா கடிதம் கொடுப்பதற்கு முன்பு வரை, அவர் மீது எந்தத் தவறும் இல்லை என்றே சாதித்து வந்த பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோருக்குத் தெரியாமலேயே எல்லாம் நடந்தது என்று சொல்ல வருகிறார்களா?

‘2 ஜி ஏலத்தில் என் கவனத்துக்கு வராமல் எதுவும் நடக்கவில்லை’ என்று பிரதமர் ஆணித்தரமாகக் கூறினாரே… அப்படியெனில் இந்த ரூ 1.76 லட்சம் கோடி இழப்பும் அவர் கவனத்துக்கு வந்ததிருக்க வேண்டுமே!

நாடு இவ்வளவு நஷ்டப்பட, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் யார் யாருக்கு எவ்வளவு கொடுத்தன? அதில் மத்திய – மாநில ‘ஒதுக்கீட்டு’ விகிதம் என்ன?

இதற்கு முன் எத்தனை ராஜினாமாவை பார்த்திருக்கிறோம்… எப்போதாவது, குறிப்பிட்ட மந்திரியின் ராஜினாமாவுக்குப் பின் அந்தப் பிரச்சினை முறையாக தீர்த்து வைக்கப்பட்டதா.. ஊழல் களையப்பட்டதா… களவாடிய பணம் திரும்பப் பெறப்பட்டதா..?

ம்ஹூம்… இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் நிச்சயம் கிடைக்காது என்று நம்புவோமாக!

மக்களின் அடுத்த அக்கறை… ‘ராசாவின் பதவி கனிமொழிக்கு ஏன் கிடைக்கவில்லை? கருணாநிதி அடுத்த பேரத்துக்கு டெல்லி போவாரா? கூட்டணி மாறுமா?’ போன்றவற்றில்தான் என்பது, அவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது!!

-வினோ

ஆசிரியர்

என்வழி
12 thoughts on “இந்தக் கேள்விகளுக்கு நிச்சயம் விடை கிடைக்காது என நம்புவோமாக!!

 1. santhosh

  நம் மக்கள் இன்று நடக்கும் பிரச்சனையை நாளை மறந்துவிடுவார்கள்… இதற்கு ஒரு உதாரணம்………
  இலங்கை தமிழர் பிரச்சனை……………. அதன் பின் நடந்த 2009 நாடாளமன்ற தேர்தல்கள்………………

 2. endhiraa

  ஏற்கனவே சென்னை ஏர்போர்ட் ல பயங்கர வரவேற்பாம் !! இவங்கள திருத்த முடியாது !!!

 3. Shriram

  Thought provoking article, indeed. In fact like you, i too echoing the same sentiment in all my postings to various journals. As one gentlemen rightly pointed out, it is a pity that this tainted minister got a rousing reception at the airport, and a foreigner standing behind me was very much annoyed and it was really a disgusting scene to watch.We,as a civil soceity have no sense of belonging or an identity. we all appluad honest people only in cinema and encourage dishonest politicians in real life. The most uncomfortable part in the whole drama was, to the best of my knowledge, this Poetess(!), daughter of MUTHAMIZH VITHAGAR(?), never made a worthwhile visit to New Delhi, be it a cause when Ezham was burning, Cauvery water issue, Mullai Periyar Dam or any other thing which affected the common man, but she had the whole world of time to fly out to make a deal for the minister. what to do, we, the proud tamilians will again elect these people and allow them to continue their swindle.See, America, their country’s people may indulge in activities which may not be ok for us culturally. But when it comes to electing their politicians they expect all kinds of meritocracy. even the daughter of president Bush has to undergo a mild punishment for taking a Beer, as she was one year less than the prescribed age limit for drinking. preseident clinton got impeached and had to make public apology for his extra marital affair.. The list goes on.. but here, see, the most shameful display of utterance from the chief minister to defend this scam tainted minister, by, invoking his cast identity!. One thing is veryt clear and true also.. WE GET WHAT WE DESERVE! JAI HIND!

 4. nishanthan

  இலெமுரியா என்கிற ஆசியாவையும் தென் ஆபிரிக்காவையும் ஆஸ்திரேலியாவையும் இணைத்த கண்டத்தில் வாழ்ந்து வந்தோம் ,முதலில் கடற்கோள் என்கிற இயற்கை அழித்தது,பின்னர் மொகஞ்சதாரோ ,ஹரப்பாவில் செழித்து வாழ்ந்தோம் .சப்பாத்திக்கு வழியன்றி வந்த நீங்கள் எங்களை அடித்தீர்கள் ,உன்குல பெண்களைக் கொண்டு எம்குல மன்னர்களை வளைதீர்கள்,பின்னோக்கி வந்தோம் ,நம் உண்டு நம் மொழி உண்டு என்று வாழ்ந்தோம் ,விடவில்லை நீங்கள் ,எங்களை அரக்கர்கள் என்றீர்கள் ,குரங்குகள் என்றீர்கள் ,நம்பினோம் ,நம்ப மட்டுமா செய்தோம் ,எங்களை அப்படி அழைத்த உங்கள் ராமாயணத்தை எங்கள் பிள்ளைகளுக்கு நாமே சொல்லிக்கொடுத்தோம் ,உங்களுக்கு இருக்கின்ற நரி மூளை எம்மிடம் இல்லை அல்லாவா,அதோடு விட்டீர்களா ?எங்கள் மன்னனயே கொலைசெய்து அந்த நாளை தீபாவளியாக எம்மையே கொண்டாட செய்தீர்கள் ,செய்தோம் இன்றும் செய்கின்றோம் ,விடவில்லை நீங்கள், உங்கள் தேவடி யா மொழியை தேவ மொழி என்றீர்கள் ,கல் தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கு முன் தோன்றிய மொழியாம் எம்மொழியை உங்கள் தேவடி யா மொழியாம் தேவ மொழியை கொண்டு சிதறடித்தீர்கள்,தெலுங்கு ,மலையாளம் ,கன்னடம் என்று ஒன்றாய் இருந்த எங்களை நாலு பேராகப் பிரிதீர்கள்.அப்போதும் இந்தியா என்கிற உங்கள் பொந்தியாவுடன் தான் இருந்தோம் ,செம்புத் தண்ணீரில் குன் டி கழுவும் நீங்கள் தண்ணீருக்காக எங்களை எங்கள் சகோதரருடன் சண்டைபோட வைத்தீர்கள் ,எங்களுக்கும் எங்கள் சகோதரருக்குமாய் சேர்த்து திராவிட தனிநாடு கேட்டோம் ,சட்டம் பாயும் என்றீர்கள் ,என்ன செய்வது ,வேறு வழியன்றி கூரை இருந்தால்தான் வீடு கட்ட முடியும் என்று சொல்லி அதனையும் கைவிட்டோம் ,நீங்கள் சப்பாத்தியும் சப்ஜியும் சாப்பிட நாங்கள் உங்கள் பொந்தியாவுடன் தொடர்ந்து இருந்தோம் .உங்களின் மொத்த வருமானத்தில் திராவிடர்கள் நாம் மட்டும் 75 சதவீதம் தந்தோம் ,பொந்திய நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து 60 ஆண்டுகளாக எமது உழைப்பில் சப்பாத்தி சாப்பிட்டீர்கள் ,அப்போதும் விடவில்லை எதோ காரண காரியங்களை சொல்லி எம்மை நொண்டிக்கொண்டே இருந்தீர்கள் ,நீங்கள் எம்மை சொறியோ சொறி என்று சொறிந்தீர்கள்.நீங்கள் சொறிந்த சொறியைப் பார்த்த பக்கத்துக்கு நாட்டுக்காரன் ,அதாவது சிங்கத்துக்கும் பொண்ணுக்கும் பிறந்தான் என்று இன்றும் நம்புகிறானே அவன் எம் சகோதரர்களை கும்மோ கும் என்று கும்மினான் ,நீங்கள் பார்த்துகொண்டு மட்டுமா இருந்தீர்கள் ?உங்கள் இராணுவத்தை அனுப்பி எங்கள் சகோதரர்களை புல்டோசர் போட்டு நெரித்து கொன்றீர்கள்,இத்தனை காலமாக நாங்கள் உங்களை திருப்பி அடிக்கவில்லை .ஆனால் இந்தமுறை ஓங்கி அடித்தோம் ,உங்களின் பகத் சிங் செய்த அந்த வேலையை நாமும் செய்தோம் ,பகத் சிங்கை வீர புருஷன் ஆக்கிய நீங்கள் பிரபாகரனை பயங்கரவாதி என்றீர்கள் ,அவரையும் அவர் சார்ந்த மக்களையும் போர் நெறிகளுக்கு மாறாக கொலை செய்தீர்கள் .போரை நிறுத்த போராடிய கருணாநிதியை போலி உண்ணாவிரதம் இருக்கச் செய்து அவரையும் எம்மிடம் இருந்து அந்நியப்படுத்த முயற்சித்தீர்கள் ,எங்களுக்கு என்று சில தலைவர்கள் இருந்தார்கள் ,இறந்தார்கள் .அவர்களை எல்லாம் மறந்து விட்டு மைசூர் ராணி ஜெயலலிதாவை அவர் எங்கள்அப்பாக்களுடன் படுத்துதான் நாங்கள் பிறந்ததாக நினைத்துக்கொண்டு அம்மா அம்மா என்று சொல்ல வைத்தீர்கள்,அதையும் செய்தோம் ,இப்போதும் உங்கள் பொந்தியாவுக்காக நாம் தான் உங்கள் நாட்டு எல்லையில் சாகிறோம்.சொல்லுங்கள் உங்களுக்காக எவ்வளவு இழந்தோம் ?உங்களுக்காக எவ்வளவு செய்தோம் ?நாங்கள் உங்களுக்காக இழந்ததும் செய்ததும் எவ்வளவு ,?இப்போது நீங்கள் சொல்கீறீர்களே நாங்கள் ஊழல் செய்தோம் என்று . அது எவ்வளவு ?உங்கள் பொந்தியாவின் வீணாய்ப் போன ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற தேவையான ஒருவருட பாதுகாப்பு செலவுதானே அது ?

 5. நாஞ்சில் மகன்

  அதிகமாய் கோபப்படுகிறார் நண்பர் nishanthan . நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே. வடஇந்தியர் அனைவரும் சப்ஜியும் சப்பாத்தியும் சுகமாக சாப்பிட்டு கொண்டு இருக்கவில்லை. பிகார் ஒரு மாநிலம் போதும் இந்த இந்தியாவின் வறுமையை உலகுக்கு காண்பிக்க. போரை நிறுத்த போராடிய கருணாநிதி என்கிறிர்கள். யார் இவரா நிறுத்த போராடினார் .? உலக தமிழர்களுக்கு தெரியும் இவரது போலி உண்ணாவிரத நாடகம். தீலிபனை தவிர உலகில் உண்ணாவிரதம் நடத்திய எல்லோருமே ஏமாற்றுப் பேர்வழிகளே. இப்போது ராசாவின் ஊழலுக்கு புதிய நியாயம் கற்பித்து இருக்கிறிர்கள் அதாவது இந்தியாவி்ன் ஒரு வருட பாதுகாப்பு செலவுதானே என்று. ஒன்று தமிழ்குடிமகனாக பேசுங்கள் அல்லது இந்தியகுடிமகனாக பேசுங்கள . அதைவிட்டுவிட்டு ஊழல்குடிமகனாக ராசாவுக்கு வக்காலத்து வாங்காதீர்கள். நன்றி

 6. Vivek

  Sariyaga Soneergal Nangil….

  Irukkiravargal thollaye thaanga mudiyavillai… ithil ivar jaalra veru kaathai kizhikkirathu

 7. r.v.saravanan

  இதற்கு முன் எத்தனை ராஜினாமாவை பார்த்திருக்கிறோம்… எப்போதாவது, குறிப்பிட்ட மந்திரியின் ராஜினாமாவுக்குப் பின் அந்தப் பிரச்சினை முறையாக தீர்த்து வைக்கப்பட்டதா.. ஊழல் களையப்பட்டதா… களவாடிய பணம் திரும்பப் பெறப்பட்டதா..?

  CORRECT VINO

 8. shriram

  தரம் கெட்ட மனிதர்களின் வக்கிர எண்ணங்களை எல்லாம் கருத்து என்கிற பெயரில் வினோத் போன்ற மனிதர்கள் ஒரு பொழுதும் அனுமதிக்கவே கூடாது. மல்லாந்து படுத்து எச்சில் துப்புவதால் பாதிப்பு வழி போக்கனுக்கு இல்லை என்கின்ற போதிலும், நாராசம் நாராசம் தான். யாரும் யாரையும் பிரிக்கவே முடியாது. ஏன், இப்பொழுதும் எந்த கால தாமதமும் வந்து விடவில்லையே. தமிழன் தமிழன் என்று தூக்கி வைத்து கொண்டாடும் இந்த அறிவிலிகள், எதற்காக சாதியால் பிளவு பட்டு கிடக்கிறான்? அதற்கும் இவர் கூறும் சதி என்றல், உங்களுக்கு என்று எந்த சுய புத்தியும் கிடையவே கிடையாதா?. தமிழை தமிழ் என்று உச்சரிக்க தெரியாத கூட்டம், எங்கு போனாலும் உதை வாங்கும் கூட்டம், இது தானே தமிழர்கள் இன்று வரை பெருமை சேர்த்த விஷயங்கள் , இதற்கெல்லாம் காரணம், மிதை மிஞ்சிய தற்பெருமை தான். இந்த நாட்டின் மாபெரும் காப்பியங்கள் என்று போற்றபடுகின்ற நல்ல விஷயங்களை கூறுகின்ற நூல்கள், அதுவும், கம்ப நாடானால் கம்ப ராமாயணம் என்று தமிழ் கூறும் நல் உலகால் … இதுவெல்லாம் உங்கள் கண்ணுக்கு அசிங்கம் என்று தெரிந்தால், நீங்கள் வந்த பாதை தான் கோளாறு. பெரியார் எழுதிய கட்டுரைகள், அதுவும், கருணாநிதி போன்றவர்கள் தூக்கி வைத்து கொண்டாடும், கண்ணகி யை பற்றி, கேவலமாக, கற்பே கூடாது என்கின்ற கணக்கில் அவரின் விளக்கங்கள்.. ஏன், தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி என்று ஏளனம் செய்து, ஏன் தமிழன் ஆங்கிலம் தான் கற்க வேண்டும் என்று சொன்ன பெரியாரை எல்லாம் இவர் எந்த வரிசையில் சேர்ப்பர்? இல்லை அவருக்கும் இதே வாழ்த்து மடல் தானா? உங்கள் சொந்த நாடு வெந்த நாடு பெருமை எல்லாம், ஏன் வேண்டாம் திராவிட நாடு என்ற கட்டுரை எழுதிய திராவிட தந்தையை படித்து பாருங்கள். இன்னும் சொல்ல போனால் தமிழ் இனம் என்கின்ற வார்த்தையே ஒரு போலியானது தான். ஏன் இன்று வரை தமிழகத்தில் உள்ள எவனும், தன்னை ஒரு தமிழன் என்று அடையாளம் காட்டி கொள்வதை விட ஜாதி யை முன் நிறுத்துவதில் தான் பெருமை கொள்கிறான். உங்களை பொறுத்த மட்டில் எல்லா வீழ்ச்சிக்கும் வட இந்தியன் அதிலும் உங்கள் தரம் கெட்ட பேச்சிலி இருந்து தெரியும் பார்பன எதிர்ப்பு தான் காரணம் என்றால், ஏன் எந்த தமிழனும் தன்னை ஜாதி அடையாளம் காட்டி கொள்கிறான்?.. ஒரு விதத்தில் எனக்கு வேதனை அவமானம் இருக்கிறது. நல்ல இனைய தளத்தில், அதுவும், ரஜினி இன் ரசிகர்களால் அதிக ஆதரவுடன் நடத்தப்படும் இந்த தளத்தில், கேடு கெட்ட, மூன்றாம் தரம் சிந்தனை உடைய, வெற்றிகொண்டான், தீபொறி ஆறுமுகம் இவர்களின் தத்து பிள்ளைகளுக்கு எல்லாம் இடம் தர வேண்டுமா? . நானும் ஒரு தமிழன் தான், அனால் அதை மீறி இந்த நாட்டின் கலாச்சாரத்தில், அதிக நம்பிக்கை உள்ளவன். பாழா போன அரசியல் தலைவர்களால் அதுவும் தமிழ் தமிழ் என்று மொழி வெறியை ஊட்டி, எந்த விதத்திலும், சிந்திக்கவே விடாமல், ஒரு சாதியை இன்னொரு சாதியின் எதிரியாய், பகைமை உணர்வை கொழுந்து ஏறிய விட்டு, இன்று தமிழன் என்கின்ற உணர்வே இல்லாமல், மழுங்கடிக்க பட்டு, அதுவும், சில தலைவர்கள், ஒரு படி மேலே, போய், நாம் தான் தமிழகத்தில், அதிக எண்ணிக்கை உடையவர்கள், எல்லோரும் நம்ம சாதிகாரனுக்கு ஓட்டு போட்டால், நாம் தான் இந்த நாட்டை ஆளுவோம் .. என்றெல்லாம். பேச முடிகிறதே? இதெற்கெல்லாம் யார் காரணம்? எங்கே போயிற்று தமிழ் பற்று?.இங்கே இருக்கின்ற சுய நலம் பிடித்த அரசியல் பொறுக்கிகளுக்கு அதிகார சுகம் கிடைக்க ஒரு வழி தேவை பட்டது. அதற்க்கு அவர்களுக்கு கிடைத்த ஒரு ஆயுதம், பிராம்மண எதிர்ப்பு மற்றும் வட இந்திய எதிர்ப்பு. ஏன் என்றால் எண்ணிகையில் குறைந்தவர்களை எதிர்ப்பது தானே சுலபம்.. எதிர்த்தார்கள், கதை கட்டினார்கள், ஆட்சியை பிடித்தார்கள், சொத்து சேர்த்தார்கள், கண்ணதாசன் என்கின்ற மாபெரும் கலைஞன் மனவாசம் என்கின்ற புத்தகத்தில் பிரித்து மேய்ந்து இருக்கிறார். முடிந்தால் படியுங்கள் அன்பரே . அனால் ஒன்று. ஒருவன் சொல்லும் சொல், எழுதும் எழுத்து, இதை வைத்து தான் ஒருவனின் தரம் முடிவு செய்ய படுகின்றது. இதை இந்த மனிதர் புரிந்து கொள்ளட்டும். வேண்டாம் இந்த இன வெறி. நல்ல சிந்தனை, நல்ல மனிதர்களின் பழக்கம் இது தான் என்றும் வழி நிற்கும். மேலும், இனைய தளத்தின் வழியாக பல சிந்தனையாளர்கள் தொடர்பு கிடைக்கும்.உங்களுடைய இந்த தரம் கெட்ட எழுத்து, அதற்க்கு கண்டிப்பாக ஒரு தடைகல்லாக நிற்கும். வன்மம் எதிலும் வேண்டாம். அதிலும் சிந்தனையில், ஒருபொழுதும்.

 9. karthik

  சரியாக சொன்னிர்கள் திரு ஸ்ரீராம் அவர்களே இங்கு இன்று நடப்பது நாளை மறக்கபடுகின்றது சாதி பெயரை சொல்லி போழுப்பு நடத்தும் ஈன பிறவிகள் இருக்கும் வரை நாம் தமிழர் என்ற உணர்வு யாருக்கும் வரபோவுதும் இல்லை இவர்கள் வரவிடபோவுதும் இல்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *