BREAKING NEWS
Search

இதற்குப் பெயர் போர்க் குற்றமில்லையா?

இதற்குப் பெயர் போர்க் குற்றமில்லையா?

கொழும்பு: இலங்கையில் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது கையில் கிடைத்த தமிழர்களையும் பெண் போராளிகளையும் மிகவும் கொடூரமாக கொன்று குவித்துள்ளது இலங்கை ராணும். இதுகுறித்து இதுவரை வெளிவராத புதிய படங்களை வெளியிட்டுள்ளது தமிழ்வின் இணையதளம்.

புலிகளுடனான போரில், பொதுமக்களை ராணுவம் கொல்லவில்லை என இலங்கை அரசாங்கம் தொடர்ந்து மறுத்து வருகிறது. ஆனால் சர்வதேச அளவில் பெருமளவில் போர்க்குற்றம் செய்த நாடு என பல நாடுகளும் குற்றம்சாட்டியுள்ளன.

இதனை தொடர்ந்து மறுத்து வருகிறது இலங்கை. இந்தியாவும் அந்த நாட்டுக்கு பெரும் ஆதரவு காட்டுகிறது. இந்த போர்க்குற்ற புகார்கள் எடுபடாமல் போக இந்திய ஆதரவே முக்கியமாக உள்ளதென இலங்கை தமிழர் அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. தொடர்ந்து, இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான ஆதாரங்கள் நாளுக்கு நாள் வெளி வந்து கொண்டே உள்ளன.

அந்த வகையில் மிக அண்மையில் சில கொடூரமான படங்கள் வெளியாகியுள்ளன. இப்படங்கள் கடந்த 2009 மே மாதம் வன்னியில் இடம்பெற்ற கொடூர யுத்தத்தின்போது சிங்களப் படைகள் தமிழர் மீது நடத்திய வெறியாட்டத்தின்போது எடுக்கப்பட்டவை.

ஆண்கள் பெண்கள் என்ற பேதமின்றி, அனைவரும் நிர்வாணமாக்கப்பட்டு, மிகக் கோரமாக கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக தமிழ்ப் பெண்கள் மற்றும் போராளிகளைக் கொன்று உடல்களை தெருவில் வீசிவிட்டு சிங்களர்கள் செல்லும் காட்சிகள், உயிரோடு தமிழர்களை ஓடவிட்டு சுட்டுக் கொல்லும் கொடூரம் போன்றவை இந்தப் படங்களில் இடம்பெற்றுள்ளன.

போர்க் குற்றம் குறித்து பொதுமக்களும் தங்களுக்குத் தெரிந்த, தங்களிடம் உள்ள ஆதாரங்களைத் தரலாம் என ஐநா நிபுணர் குழு கூறியுள்ள நிலையில் இந்த படங்கள் வெளியாகியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

இவற்றையும் ஐநா போர்க்குற்ற விசாரணை நிபுணர் குழுவுக்கு ஆதாரங்களாக அனுப்பி வைக்க முடியும்.

-படங்கள்: தமிழ்வின்
4 thoughts on “இதற்குப் பெயர் போர்க் குற்றமில்லையா?

 1. Muthu

  இன படுகொலைகளின் கொடுரத்தை கண்டால் ரத்த கண்ணீர் வருகிறது. எந்த மனித நேய மக்களுக்கும் பேரஅதிர்ச்சி அலைகளை ஏற்படுத்த கூடிய கொடிமைகள் ஈழத்தில் நடந்து இருக்கின்றன. காந்தியின் பேரை சொல்லி ஆட்சி புரியும் காங்கரஸ்காரர்கள் இனி மேலும் ராஜபக்சே மற்றும் சிங்கள அரக்கர்களுக்கு உலக அளவில் வக்காலத்து வாங்கும் வேலையை நிறுத்தி கொள்ள வேண்டும். நிறுத்தா விட்டால் காந்தி என்றும், அகிம்சை என்றும் சொல்லி கொள்ள உங்களுக்கு அருகதையே இல்லை மற்றும் இந்திய நாட்டின் மதிப்பும் உலக அளவில் மாசுபடும். கண்ணகி மதுரையை எரித்து நீதியை நிலை நாட்டியது போல நீங்களும் (சோனியா உள்பட) எரிக்கபடுவீர்கள்… ஆண்டவன் நீதி மன்றத்தில்…

 2. DEEN_UK

  @Muthu …
  /////காந்தியின் பேரை சொல்லி ஆட்சி புரியும் காங்கரஸ்காரர்கள் இனி மேலும் ராஜபக்சே மற்றும் சிங்கள அரக்கர்களுக்கு உலக அளவில் வக்காலத்து வாங்கும் வேலையை நிறுத்தி கொள்ள வேண்டும். நிறுத்தா விட்டால் காந்தி என்றும், அகிம்சை என்றும் சொல்லி கொள்ள உங்களுக்கு அருகதையே இல்லை மற்றும் இந்திய நாட்டின் மதிப்பும் உலக அளவில் மாசுபடும். ////
  இவர்கள் எப்போது சிங்கள அரசுக்கு கூஜா தூக்க ஆரம்பித்தார்களோ..அப்போதே இந்திய மதிப்பு மாசு பட்டு விட்டது…இனி மாசு படவோ மான மரியாதை எதிர்பார்க்கவோ ஒன்றும் இல்லை..உண்மையில் சொல்ல போனால் என்னை போன்ற தமிழ் நாட்டு தமிழர்களுக்கு அவமானமாக இருக்கிறது..எங்கள் தொப்புள்கொடி உறவுகளுக்கு உதவமுடியாமல் போனதற்கு…அந்த நேரத்தில் மாநிலத்தை (இப்போதும் தான் ) ஆண்டு கொண்டு இருந்தவர் நினைத்து இருந்தால் ஒரு தமிழ் புரட்சி செய்து இருக்கலாம்..தமிழ் நாடு மக்கள் அனைவரும் நிச்சயம் அவரது போராட்டத்துக்கு உறுதுணையாக இருந்து இருப்பார்கள்..பதவி ஆசை,ஆட்சி பயத்தால் இப்படி இருந்து விட்டார்..ஆனால் அவர் ஈழ தமிழனுக்கு ஆதரவாக மத்திய அரசாங்கத்தை எதிர்த்து இருந்தால்,அவருக்கு தமிழ் நாடு மட்டும் அல்ல,உலக தமிழன் அனைவரும் ஆதரவாக இருந்து இருப்பார்கள்..அவரை எந்த சக்தியாலும் ஒன்றும் செய்து இருக்க முடியாது…இது ஈழ மக்களுக்கு ஆதரவாக…ஈழ தமிழனுக்கு அது மிகவும் உதவியாக இருந்து இருக்கும்..எல்லாமே முடிந்து விட்டது…இந்த காட்சிகள் காட்டுமிராண்டிகள் செய்த கொடூரத்தின் உச்சம்….இந்த விசயத்தில்..இவர்களுக்கு இந்தியா அரசியல் ஆதாயம் கருதி உதவாமல் போனதை நினைத்தும்,தமிழனாக இருந்தும் ,எங்களால் உதவ முடியாமல் போனதற்கும்…ஒரு இந்திய தமிழன் என்று சொல்வதற்கு வெட்கி தலைகுனிகிறேன்…எனது தொப்புள்கொடி உறவினர்களின் ஆத்மா சாந்தி அடையவும்…அவர்கள் கொடுத்த விலை மதிப்பு இல்லா உயிரின் விலைக்கு கூடிய விரைவில் தமிழ் ஈழம் மலரவும் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்…ஆமீன்.

  கடவுள் என்று ஒருவன் இருந்தால்,எனது ரத்த சொந்தங்களுக்கு விரைவில் விடிவு காலம் பிறக்க வேண்டும்.பிறக்காவிட்டால் கடவுள் இல்லை என்பதே உண்மை..

 3. Ramanan

  கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை!

 4. sudhaharan

  இலங்கையில் நடந்து முடிந்த கொடூர இனப்படுகொலையை உலகம் ரசித்ததோ இல்லையோ நமது மைய அரசும் மாநில அரசும் நன்கு ரசித்தது என்றுதான் சொல்ல வேண்டும் .லண்டன் ,நார்வே போன்ற நாடுகளுக்கு உள்ள அக்கரையில் கொஞ்சம் அக்கறை இருந்தால் கூட ,இவ்வளவு கொடூரமான இனப்படு கொலையில் இருந்து நம் இன மக்களை சிறிதளவேனும் காப்பாற்றி இருக்கலாம் .மைய, மாநில அரசுகளின் சொந்த அரசியலுக்கு நம் இனம் பலிகடா ஆனதை நினைக்கும் போது, நம் இதயத்தில் இன்னமும் ரத்தம் கசிந்து கொண்டுதான் இருக்கின்றது ..இதற்கு அந்தந்த அரசியல் கட்சிகளின் சொந்தக்காரர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும்..பதில் சொல்வார்கள் …இல்லையென்றால் காலம் பதில் சொல்லும்.. ………………………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *