BREAKING NEWS
Search

இணையதளம் மூலம் மாணவர்களுக்கு அரசு கல்வி உதவி!

இனி இணையதளம் மூலம் மாணவர்கள் அரசு கல்வி உதவி பெறலாம்!

Presentation1பிற்படுத்தப்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க புதிய இணைய தளம் துவங்கப்பட்டுள்ளது.

www.edistrict.tn.gov.in எனும் இந்த தளத்திலேயே மாணவர்கள் இனி கல்வி உதவித் தொகைக்கான அனைத்து விவரங்களையும் பெறலாம்.

பிற்படுத்தப்பட்ட மாணவர்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள், இணையதளத்தின் மூலம் கல்லூரி முதல்வர்களால் பதிவு செய்யப்படும்.

இதன்பின், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலரால் பரிசீலிக்கப்பட்டு ஒப்புதல் செய்யப்படும். பின்னர், இணையதளத்தின் மூலம் பிற விவரங்கள் அறிந்து அதற்கேற்ப கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

இதன் காரணமாக தேவையற்ற தாமதம் தவிர்க்கப்படும். மாணவர்கள் தங்களது விண்ணப்பங்கள் எந்த நிலையில் உள்ளது; யாரிடம் உள்ளது; எப்போது கிடைக்கும்; எவ்வளவு உதவித் தொகை கிடைக்கும் என்ற விவரங்களை தாங்களாகவே இணையதளம் மூலம் அறிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மட்டும் முதல்கட்டமாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் கல்வி உதவித் தொகையும் இந்த முறையில் வழங்கப்படும் என்று அரசு உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த இணையதள துவக்க நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடந்தது. இதில் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பூங்கோதை உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

மாணவர்கள், உடனடியாக தங்கள் கல்லூரி முதல்வர்களை அணுகி விவரங்கள் பெற்றுக் கொள்ளவும்.




10 thoughts on “இணையதளம் மூலம் மாணவர்களுக்கு அரசு கல்வி உதவி!

  1. pavithra

    iam pavithra.iam studying in miet engg college.trichy(3rd year electronics and communication engg) iam from the caste of DNC(denotified community)

  2. pavithra

    iam pavithra.iam studying in miet engg college.trichy(3rd year electronics and communication engg) iam from the caste of DNC(denotified community).நான் கல்வி உதவி தொகை பெற நினைக்கிறன் எனவே எனக்கு அதன் விதிமுறைகளை அனுப்புமாறு கேட்டுகொள்கிறேன்.எனக்கு உதவுமாறும் கேட்டுகொள்கிறேன்.நான் என் இணையதள முகவரியை இத்துடன் இணைத்துள்ளேன்.

  3. mohamed ghouse

    SIR I AM MOHAMED GHOUSE DOING MY 2nd YEAR MBBS.IN SALEM GOVT.MOHANKUMARAMANGALAM MEDICAL COLLEGE.CAN I KNOW THE SCHOLARSHIP OFFERS AND THEIR TERMS WHICH I CAN GET THROUGH THIS SCHEME.

  4. nithiyal

    நான் கல்வி உதவி தொகை பெற நினைக்கிறன் எனவே எனக்கு அதன் விதிமுறைகளை அனுப்புமாறு கேட்டுகொள்கிறேன்.எனக்கு உதவுமாறும் கேட்டுகொள்கிறேன்.நான் என் இணையதள முகவரியை இத்துடன் இணைத்துள்ளேன்.

  5. v.senthil kumaar

    நான் கல்வி உதவி தொகை பெற நினைக்கிறன் எனவே எனக்கு அதன் விதிமுறைகளை அனுப்புமாறு கேட்டுகொள்கிறேன்.எனக்கு உதவுமாறும் கேட்டுகொள்கிறேன்.நான் என் இணையதள முகவரியை இத்துடன் இணைத்துள்ளேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *