BREAKING NEWS
Search

இடைத் தேர்தல் புறக்கணிப்பு! – ஜெ அறிவிப்பு

இடைத் தேர்தல் புறக்கணிப்பு! – ஜெ அறிவிப்பு

குன்னூர்: தமிழகத்தில் ஐந்து சட்டசபை தொகுதிகளில் நடக்கும் இடைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அதிமுக அறிவித்துள்ளது.jjaya

குன்னூரில் அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் நடந்த செயற்குழு கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கொடநாடு எஸ்டேட்டில் ரெஸ்ட் எடுத்து வரும் ஜெயலலிதா அவருக்கு வசதியாக குன்னூரில் செயற்குழுக் கூட்டத்தை இன்று கூட்டினார்.

உபாசி சாலையில் உள்ள விவேக் ஹோட்டலில் இந்த செயற்குழு கூட்டம் நடந்தது. ஜெயலலிதா கொடநாடு எஸ்டேட்டில் இருந்து காரில் குன்னூர் வந்தார்.

பிற்பகல் 3 மணிக்கு நடந்த இக் கூட்டத்திற்கு அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை தாங்கினார். இக் கூட்டத்தில் இளையான்குடி, தொண்டாமுத்தூர், கம்பம், பர்கூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஆகஸ்ட் 18ம் தேதி நடக்கும் இடைத் தேர்தலை புறக்கணிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடந்த 2004ல் நடந்த மக்களவைத் தேர்தலில் ஆரம்பித்து சட்டப்பேரவைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், அனைத்து சட்டமன்ற இடைத் தேர்தல்கள், மக்களவைத் தேர்தல் ஆகியவற்றில் அதிமுக தொடர்ந்து தோல்வியே அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இடைத் தேர்தலில் தனது வசம் இருந்த வைத்திருந்த மதுரை மேற்குத் தொகுதியை இழந்தது. மதிமுகவிடமிருந்து பெற்று போட்டியிட்ட திருமங்கலத்திலும் தோல்வியைத் தழுவியது. இதன் காரணமாக அதிமுகவினர் சோர்வடைந்துள்ளனர்.

இந் நிலையில், இப்போது வந்துள்ள இடைத் தேர்தலிலும் நிச்சயம் ஆளுங்கட்சியின் ‘சகலகலா பலம்’ விளையாடும் என அதிமுக எதிர்பார்க்கிறது.

இடைத் தேர்தலிலும் தோற்று விட்டால், அதிமுகவினர் இன்னும் சோர்ந்து போய் விடுவார்கள், தேர்தல் என்ற வார்த்தையைக் கேட்டாலே கிலி ஏற்பட்டு விடும். இந்த மனநிலையுடன் 2011ல் நடைபெறும் சட்டசபைத் தேர்தலை சந்தித்தால் மேலும் பின்னடைவே ஏற்படும் என்பதால் இடைத் தேர்தலை புறக்கணிக்கலாம் என்று ஜெயலலிதா முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இதே பயத்தில் உள்ள பாமக, மதிமுகவும் இடைத் தேர்தலை புறக்கணிக்கலாம் என்று கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிமுகவுடன் முறைத்துக் கொண்டு நிற்கும் நிலையில் இந்திய கம்யூனி்ஸ்டை மட்டுமே நம்பி ‘கோதாவில்’ குதிக்க வேண்டிய நிலை அதிமுகவுக்கு.

இந்த நிலையில் இடைத் தேர்தலை சந்திப்பதற்குப் பதில் தேர்தல் புறக்கணிப்பு என்ற முடிவை ஜெயலலிதா எடுத்துள்ளார். தேர்தலை அதிமுக புறக்கணிக்கத் திட்டமிட்டிருப்பதாக ஏற்கெனவே பேச்சிருந்தது குறிப்பிடத்தக்கது.




5 thoughts on “இடைத் தேர்தல் புறக்கணிப்பு! – ஜெ அறிவிப்பு

  1. Manamketta thamizhan

    DMK and ADMK mattume thamizh nattyum nattumakkalaiyum kudthagaiku yeduthu irrukirargal…yarum ulle varakudathu aamam!!!…silanatkalukku DMK modtha kudthagaiku yeduthu irrukindra karanathaal Naangal piragu yeduppom…. Muttal makkale…. neengal innum neraya anubavikka pogireergal!!

  2. Manamketta thamizhan

    I think DMK and Congrss no need to spend too much money…
    The competition is not tough… Quarter biriyani mattum podhum indha Manam ketta thaizhanukku….Vote thana vizhum…

  3. Manoharan

    ஜெயலலிதாவுக்கு குவார்டர் பிரியாணி தமிழன் என்ன பாவம் செய்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *