BREAKING NEWS
Search

இச்… நச்… ஹச்!

‘இச்’!

popcorn - Copyஜெயம் ரவி நடிக்கும் புதுப்படத்தை இயக்குகிறார் பிரபு தேவா. இந்தப் படத்தின் தலைப்புதான் மேலே நீங்கள் படித்த ‘இச்’!

இந்தப் படத்தின் படப்பிடிப்புக்கான இடங்களைத் தேர்வு நயன்தாராவுடன் கிளம்பியிருக்கிறார் பிரபுதேவா!

நச்!

popcorn - Copyங்களை எதிர்த்துக் கேள்வி எழுப்பிய இயக்குநர் வேல்முருகன் (ஆட்டோகிராபில் நடித்தவர்) என்பவரை சங்கத்தை விட்டே நீக்கிவிட்டார்கள் இயக்குநர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா மற்றும் செயலாளர் செல்வமணி இருவரும்.

அப்படி என்ன கேட்டார்… நினைத்தால் கருணாநிதிக்கு எதிராக மௌனவிரதம் காப்பதும், அதை தங்கள் வசதிக்காக அவ்வப்போது கலைப்பதுமாக நாடகம் போடுவது ஏன்? என்றுதானாம்!

ப்ச்..!

popcorn - Copyங்களிடம் சொல்லாமல் கொள்ளாமல் திடீரென்று முதல்வரிடம் ரூ.5 லட்சம் வெள்ள நிவாரண நிதி கொடுத்துவிட்டார் என்று நடிகை சோனா மீது செம கடுப்பிலிருக்கிறார்களாம் நடிகர் சங்க நிர்வாகிகள்.

இருக்காதா… அடுத்து இவர்களும் வரிசையாக நிற்க வேண்டுமே, நிதி கொடுக்க!

ஹச்..!

popcorn - Copyமுதல்வர் கருணாநிதிக்கு திரையுலகம் சார்பில் இன்னும் மூன்று விருது வழங்கும் விழாக்கள் தாயாராகிட்டு இருக்கு. அதில் ஒன்று ஜனவரியில் நடக்கப் போகிறது. அடுத்த விழாவுக்கு தேதி கேட்டு நிற்கிறது இயக்குநர்கள் சங்கம்!

செம ஐஸ்ம்மா!




7 thoughts on “இச்… நச்… ஹச்!

  1. Mariappan

    மானம் கேட்ட அரசியல்வாதிக்கு பல்லக்கு தூக்கும் திரையுலகம் என்றைக்குதான் திருந்துமோ?

  2. தமிழன்

    மானம் கேட்ட திரையுலகத்துக்கு பல்லக்கு தூக்கும் சனங்க திருந்தும் நாளில்தான்!

  3. Adango

    தமிழன் says:
    //மானம் கேட்ட திரையுலகத்துக்கு பல்லக்கு தூக்கும் சனங்க திருந்தும் நாளில்தான்!//

    அப்பிடி போடு தமிழா. பத்து பக்கத்துல சொல்ல வேண்டியதை ஒரே வரியிலே சொல்லி பட்டைய கிளப்பிடீங்க.

    நமக்கு மொதல்ல உரைக்குதான்னு பாப்போம்.

  4. M.S.Vasan

    கலைஞர் அதுக்குத்தான் அட்வான்சா சினிமா கருத்து அரங்கத்துக்கு 50 லட்சம் கொடுத்து சரி பண்ணிட்டருள்ளே !! அவுங்க சிநேமவுள்ள அரசியல் பண்றன்ங்க, இவர் அரசியல்லே சீன் கட்டுறாரு. எப்படியோ நம்ம நல்லாத்தான் வோட்டையும் பணத்தியுஇம் போடுரோமேள்ள!!!!
    வாசன்

  5. r.v.saravanan

    Mariappan says:
    மானம் கேட்ட அரசியல்வாதிக்கு பல்லக்கு தூக்கும் திரையுலகம் என்றைக்குதான் திருந்துமோ?

    தமிழன் says:
    மானம் கேட்ட திரையுலகத்துக்கு பல்லக்கு தூக்கும் சனங்க திருந்தும் நாளில்தான்!

    repeat………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *