BREAKING NEWS
Search

ஆ ராசாவுக்கு அமலாக்கப் பிரிவு நோட்டீஸ்!

ஆ ராசாவுக்கு அமலாக்கப் பிரிவு நோட்டீஸ்!

டெல்லி: 2 ஜி முறைகேடுகள் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ ராசாவுக்கு மத்திய அமலாக்கப் பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ராசா தவிர தொலைத் தொடர்புத் துறை அமைச்சக உயரதிகாரிகள் சிலருக்கும் அமலாக்கப் பிரிவு வெள்ளிக் கிழமையன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அரசியல் தரகராக செயல்பட்ட நீரா ராடியாவிடம் அமலாக்கப் பிரிவு புதன்கிழமை விசாரணை நடத்தியது. அவரிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஆ.ராசா மற்றும் அதிகாரிகளிடம் அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்த இருக்கிறது.

இது தொடர்பாக அமலாக்கப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், தொலைத் தொடர்பு நிறுவனத்துக்கும், ராடியாவின் தரப்பினருக்கும் இடையே பணப் பரிமாற்றம் நடைபெற்ற விதம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இதில் வரி முறைகேடுகளும் பெருமளவில் நடந்துள்ளதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடை சட்டப்படியும் அன்னியச் செலாவணி நிர்வாகச் சட்டப்படியும் விசாரணை நடைபெறுகிறது,” என்றார்.

இந்த விவகாரத்தில் பெரும் நிறுவனங்களிடமிருந்து அமைச்சகம் சார்பில் பணம் பெறப்பட்டதா என்பதைக் கண்டறிய ஏற்கெனவே விசாரணை துவங்கியுள்ளது. இது தொடர்பாக ஆ ராசாவின் முன்னாள் உதவியாளர்கள் மற்றும் துறை அதிகாரிகளும் விசாரிக்கப்பட்டுள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *