BREAKING NEWS
Search

‘ஆஹா தங்கம்’… ஆலாய் பறந்த மக்கள்!

‘ஆஹா தங்கம்’… ஆலாய் பறந்த மக்கள்!

சென்னை: உழைக்காமல் கிடைக்கும் எந்தப் பலனையும் முழுமையாய் அடைய மக்கள் ஆலாய் பறக்கிறார்கள். gold1

பிச்சைக்காரனாக இருந்தாலும் பெரிய கோட்டீஸ்வரனாக இருந்தாலும், உழைத்துச் சம்பாதிப்பதில் காட்டும் ஆர்வத்தை விட இப்படி ஓசிப் பொருளுக்கு அலைவதில் விலக்கில்லாமல்தான் இருக்கிறார்கள் என்பதற்கு இன்னும் ஒரு உதாரணம் நேற்று நடந்தது.

வெள்ளிக்கிழமை காலை சென்னை மதுரவாயல் நெடுஞ்சாலையில் மஞ்சள் நிறத்தில் உலோகத்தின் துகள்கள் மின்னுவதைப் பார்த்த மக்கள், அது தங்கமாக இருக்கும் என நம்பி அதை முடிந்து வரை அள்ளிக் கொள்ள கூட்டம் கூட்டமாக நெடுஞ்சாலையில் கொளுத்தும் வெயிலில் குவிந்தனர்.

இதனால் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்தே ஸ்தம்பித்துப் போனது. அதுவும் மதுரவாலிலிருந்து பூந்தமல்லி வரை போக்குவரத்து  மாலை 4 மணிவரை,  10 கிலோமீட்டர் தூரம் வரை இந்த கூட்டம் நீண்டதுதான் கொடுமையிலும் கொடுமை.gold2

இந்த மஞ்சள் நிற உலோகத் துகள் ஏதோ ஒரு லாரியிலிருந்து நெடுஞ்சாலையில் கொட்டியிருக்கிறது. சென்னையில் சுட்டெரிக்கும் வெயிலில் அந்த துகள் மின்னித் தொலைக்க, நிச்சயம் இது தங்கத்தின் பளபளப்புதான் என கிளம்பிவிட்டனர் மக்கள்.

அருகில் போய் அது என்னவென்று கூட ஆராயாமல் கைகளில் அள்ளிக் கொண்டு திரும்பியவர்கள்தான் நிறையப்பேர். உண்மை தெரிந்தபிறகு, தங்கமாக இருக்கக் கூடாதா என்ற நப்பாசையுடனும் கடுப்புடனும் அதனை வீசி எறிந்துவிட்டுச் சென்றனர் சிலர். ஆனால் பெரும்பாலான மக்கள் தங்கமாகவோ, அல்லது தங்கத்துடன் சேர்த்து நகை செய்யும் உலோகமாகவோ கூட இருக்கும். பத்திரமாக வைக்கலாம் என எடுத்துச் சென்றனர்.

இந்த துகள்களை சேகரிப்பதில் அக்கம்பக்கத்து பொதுமக்கள், இருசக்கர வாகன ஓட்டிகள், காரில் வந்தவர்கள் என வித்தியாசமின்றி அனைவரும் தீவிரமாக இறங்கினர். சில அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் வண்டியை ஓரம்கட்டிவிட்டு தங்கம் தேடிப் போக, பயணிகளும் உற்சாக இறங்கி கிடைத்ததை சேகரித்தனர்.n-j-12-24

அம்பத்தூர் எஸ்டேட்டில் பித்தளை மற்றும் வெண்கல நட்டு-போல்டுகள் தயாரிக்கும் நிறுவனத்தின் கழிவுப் பொருட்கள் ஏற்றிச் சென்ற லாரி கவனக் குறைவாக இந்த துகள்களை சிதறியபடி சென்றுவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
5 thoughts on “‘ஆஹா தங்கம்’… ஆலாய் பறந்த மக்கள்!

  1. Paarvai

    ஒன்னும் சொல்றதுக்கில்ல. பிரியாணிக்கும், குவார்ட்டருக்கும், கறி சோறுக்கும் , இலவச டிவிக்கும் ஆலாய் பறந்தவர்கள் தங்கம் கிடைக்குதுன்னா சும்மா இருப்பாங்களா?
    இந்த நிகழ்வைப் பார்த்து வெற்றி பெற்ற அரசியல்வாதிகள் நிச்சயம் மனதுக்குள் சிரித்திருப்பார்கள்(நம்மள அசைக்கமுடியாதுய்யா….இப்படிப்பட்ட மக்கள் இருக்கும்வரை)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *