BREAKING NEWS
Search

ஒரே குட்டையில்… நாறிப்போன மட்டைகள்!

ஓரே குட்டையில்… நாறிப்போன மட்டைகள்!

ரசியலை தள்ளி நின்று விமர்சித்து அறிவு ஜீவித்தனம் காட்டியவர்கள், பின்னர் அதே அரசியலுக்குப் போய், ஒரு கட்சியில் பதவியும் பவிசும் அனுபவித்துவிட்டு, தலைமையிடம் கசப்பைச் சம்பாதித்து வெளியில் வந்ததும், அதே தலைமை பற்றி ஆயிரம் கதைகளை அவிழ்த்து விடுவதற்குப் பெயர்தான் அரசியல் என்றாகிவிட்டது.

இந்த வழக்கமான அரசியல்வியாதிகளின் கூட்டத்தில் தானும் ஒருவர் என்பதை நடிகர் – எம்எல்ஏ எஸ்வி சேகரும் நிரூபித்துவிட்டார்.

இப்போது ஜெயலலிதா குறித்தும் அவர் சசிகலாவின் ‘பிடியில்’ எப்படியெல்லாம் சிக்கித் தவிக்கிறார் என்பதைக் குறித்தும் ‘தொடர்கதை’ எழுத ஆரம்பித்துவிட்டார் ஜூவியில். அவர் இதில் காட்டும் வேகத்தைப் பார்த்தால் ஏதோ ‘அஸைன்மென்ட் ஒர்க்’ போலத்தான் தெரிகிறது… இருக்கட்டும்!

ஆனால், ‘ஜெயலலிதா மோசமானவர், அவர் இயல்பை யாராலும் மாற்ற முடியாது, மரியாதை தெரியாதவர், கட்சியை அழிக்கிறார்…’ என்றெல்லாம் இப்போது குற்றம் சாட்டி தொடர்கதை எழுதும் சேகருக்கு, இந்த உண்மைகள் அதிமுகவில் சேருவதற்கு முன்பே நன்கு தெரியுமாம்.

தெரிந்தே ஏன் இவர் அதிமுகவில் சேர்ந்தார்? நல்ல புத்திசாலிகள் நிறைந்த கட்சியில், சுயமரியாதை நிரம்பக் கிடைக்கிற, யோக்கியமான கட்சியில் சேர்ந்திருக்கலாமே!

அதுவும் ஜெயலலிதா, கழுத்தைப் பிடித்துத் தள்ளும் வரை இவர் அந்தக் கூடாரத்தில் ஆணி அடித்தபடி உட்கார்ந்திருக்க வேண்டிய அவசியமென்ன… சந்தர்ப்பவாதிகளே சந்தர்ப்பவாதம் பற்றியும் அயோக்கியர்களே நீதி நெறிமுறைகள் குறித்தும் பேசலாமா…

இன்னொருவர் அனிதா ராதாகிருஷ்ணன். இவர் அதிமுகவில் சர்வபலம் பொருந்திய அமைச்சராகவும், மாவட்ட செயலாளராகவும் இருந்தார். இப்போதும் இவர் ஒரு எம்எல்ஏ வேறு.

ஆனால் ஜெயலலிதாவால் சில  தினங்களுக்கு முன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, ‘ஜெயலலிதா ஒரு கொலையைச் செய்தார்’ என்று குற்றம்சாட்டியுள்ளார். ஒரு அமைச்சராக இருந்தவர், கொலை நடந்ததை மூடி மறைத்திருக்கிறார் என்பதே மிகப்பெரிய குற்றம்.

அதிமுகவில் இருக்கும் வரை அம்மாவே கடவுள் என புகழ் பாடியவர்கள்தான் இந்த இருவரும். ‘சிவனுக்குப் பக்கத்திலுள்ள அம்மாவை விட எங்கம்மாவுக்கு பவர் ஜாஸ்தி’ என நாடக வசனம் பேசியவர்கள், இப்போது ஜெயலலிதா ஒரு காற்றுப் போன பலூன் என்று வர்ணிக்கிறார்கள்.

அப்படியே அடுத்த அரசியல் கூடாரத்துக்கு தாவவும், வேஷ்டியின் கரையை மாற்றிக் கட்டிக் கொள்ளவும் தயாராகிவிட்டனர்.

ஆக, கட்சிவிட்டு கட்சி தாவி அரசியல் வியாபாரம் நடத்தும் சராசரி அரசியல் வியாபாரிகளான இவர்களுக்கு சக வியாபாரிகளைக் குறை சொல்ல யோக்கியதை உண்டா!

caert-30

-விதுரன்

காjdட்டூன்: தினமலர்
3 thoughts on “ஒரே குட்டையில்… நாறிப்போன மட்டைகள்!

 1. r.v.saravanan

  i am like it s.v.sekar in acting , diming joke

  but his politics life not like it because this is comedy politics

 2. murugadoss

  Hi Guys,

  My friend’s experience with this fellow S. V. sekar 13 years back in Bangalore.
  They booked S.v. sekar’s drama for their NGO activity. for that they paid 15,000 rupees advance. Some unexpected reason they were not able to conduct that programme in that particular day. They also informed him within the time period.
  But till date they never get single paisa from this fellow. Now he is writing story about JJ. that one also can be a comedy story only. IDHUKKUTHAAN NAMMA OORULA SOLLUVAANGA. SAATAAN VEDHAM ODHAKUDAADHUNNU.

 3. Radhakrishnan

  இவனுகளுக்கெல்லாம் **னிய அறுத்து விடனும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *