BREAKING NEWS
Search

ஆரம்பமானது லிங்கா சாதனை… தமிழகத்தில் மட்டும் ரூ 17 கோடி வசூல்.. எந்திரனை முந்தி சாதனைப் படைத்தது!

ஆரம்பமானது லிங்கா சாதனை… தமிழகத்தில் மட்டும் ரூ 17 கோடி வசூல்.. எந்திரனை முந்தி சாதனைப் படைத்தது!

thalaivaa2

ஜினியின் லிங்கா படம் வெளியான முதல் நாளே தமிழகம் மற்றும் ஆந்திராவில் எந்திரன் படத்தின் முதல் நாள் சாதனையைத் தகர்த்தெறிந்தது.

தமிழகம் முழுவதும் 700 அரங்குகளில் லிங்கா படம் நேற்று வெளியானது. பல திரையரங்குகளில் லிங்கா நள்ளிரவே திரையிடப்பட்டது. நள்ளிரவு 1 மணி, அதிகாலை 4 மணி, காலை 8 மணிக்கு சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டன.

அதன்பிறகுதான் வழக்கமான நேரங்களில் காட்சிகள் இருந்தன. இன்றும் காலை 8 மணிக்கு சிறப்புக் காட்சி திரையிடப்படுகிறது. நாளையும் இந்தக் காட்சி உண்டு.

இந்த சிறப்புக் காட்சிகள் தவிர்த்த ரெகுலர் ஷோக்கள் மூலமாக மட்டுமே ரூ 17 கோடியை லிங்கா தமிழகத்தில் குவித்திருப்பதாக முதல் கட்ட செய்தி வந்துள்ளது. தமிழகத்தில் முதல் நாளில் ரூ 11 கோடியை எந்திரன் வசூலித்திருந்ததுதான் இதுவரை சாதனையாக இருந்தது.

ஆந்திராவில் லிங்காவுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. அங்கு முதல் நாளில் ரூ 8 கோடி வசூலாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

கேரளா மற்றும் கர்நாடகத்தில் லிங்கா வசூல் நிலவரம் தெரியவில்லை.

வெளிநாடுகளில் 1000-க்கும் அதிகமான அரங்குகளில் லிங்கா வெளியானது (இன்னும் இந்திப் பதிப்பு வெளியாகவில்லை). அங்கு படத்துக்கு பெரிய வரவேற்பும் வசூலும் கிடைத்துள்ளது. குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், வளைகுடா நாடுகள் மற்றும் அமெரிக்கா. அந்த விவரங்கள் விரைவில் தெரிய வரும்.




10 thoughts on “ஆரம்பமானது லிங்கா சாதனை… தமிழகத்தில் மட்டும் ரூ 17 கோடி வசூல்.. எந்திரனை முந்தி சாதனைப் படைத்தது!

  1. M.MARIAPPAN

    தலைவரின் லிங்கா மீண்டும் பல உலக சாதனைகள் படைக்கும் . MR .வினோ தங்களுக்கு நன்றி .உலகம் முழுவதும் உள்ள வசூல் விவரத்தை உடனுக்கு உடன் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்

  2. gandhidurai

    சமீபத்தில் வந்த ஒரு படம் எல்லாம் சேர்த்து 23 கோடி வசூலித்தாக சொன்னாங்க.லிங்கா தமிழ்நாடு மற்றும் ஆந்த்ரா மட்டுமே 25 கோடி ஆயிடுச்சு.இன்னும் கேரளா,கர்னாடகா ,வெளிநாடு எல்லாம் சேர்த்தால் எவ்வளவு வருமோ.தலைவரின் ஒவ்வொரு படமும் ஒரு சாதனையை கடந்து போகும்.

  3. raja

    intha vijay fans tholla thanka mudila.,..linga first day collection 23 cr…..linga 20 crnu vada suttu sagadikuranunga….vijay mathiriye avanoda fansayum mental akki vachurukan….na ThaLa fan…but linga supper…fyt mattum telungu padam mathiri ovara irukku…thalaiverngurathala atha namma ethukka mudithu vera yaravathuna kevalama ayidukkum…..graphics sothappala irukku…but thalaiver kalakitaru….

  4. BP

    Want Lingaa to be successful for only and one superstar!

    Wish family audience and ladies come to movie theatre to watch thalaivar? will that happen.

    i think vijay fans are creating the spoilers of the movie… not a good sign

  5. Devaraj

    Agree with BPs comment.
    To recover decent returns movie need to do well for at least 2 weeks.
    Is that a possibility we have to wait and watch.
    Overall movie good, SS kalakkal.

  6. SwaminathN

    Very Simple Calculation is below

    Theatres 3,000
    No of Avg Seats Per Show 300
    No of Avg Shows Per day 5
    Avg Amount Per Ticket 150
    Total Collection Per Day 675,000,000
    For the First Days Collection itself 2,025,000,000

    If all the theatre owners produce their accounts properly, the movie should have collection minimum 200 crores by Sunday night.

    Above collection amount is excluding the Food and Parking Charges, which is almost equal to the same ticket collections…

    Let us wait and see!!!!

  7. rajagopalan

    andha climax mattum nall panni erundhangana , Lingaa engeyo poi erukum…
    KSR en apadi loosa thanamana climax vachar? dont mistake me… but it still bothering me…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *