BREAKING NEWS
Search

ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் ரஜினி போன்ற கலைஞர்கள் வருவார்கள்! – அமிதாப்

ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் ரஜினி போன்ற கலைஞர்கள் வருவார்கள்! – அமிதாப்

ஜினி இந்திய மண்ணின் நிஜமான மைந்தன். ஒரு இந்தியக் குடிமகனுக்கு உதாரணம். அவரைப் போன்ற கலைஞர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் வருவார்கள், என்றார் அமிதாப் பச்சன்.

ரஜினி – ஐஸ்வர்யா ராய் நடித்த ரோபோ படத்தின் இசை வெளியீட்டு விழா மும்பையில் பிரமாண்டமாக நடந்தது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இசைத் தகடை வெளியிட்டார்.

அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், இயக்குநர் ஷங்கர், ரசூல் பூக்குட்டி, ஏ ஆர் ரஹ்மான், சக் பிக்சர்ஸ் ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா என பிரபலங்கள் இந்த விழாவில் பங்கேற்றனர்.

இசை வெளியீட்டுக்குப் பிறகு அமிதாப் பச்சன் பேசியது:

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இருப்பது எப்போதுமே மகிழ்ச்சிக்குரிய விஷயம். அவரைப் போன்ற கலைஞர்கள் ஆயிரம் ஆண்டுக்கு ஒருமுறைதான் வருவார்கள்.

இந்திய மண்ணின் உண்மையான மைந்தன் ரஜினிதான். ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் உதாரணமாகத் திகழ்பவர் ரஜினி.

அவரது மனித நேயம், எளிமையை நான் மிகவும் விரும்புகிறேன். வானளாவிய புகழ், செல்வாக்கு எல்லாம் இருந்தும், ஒரு சாதாரண மனிதனாகவே தன் வாழ்நாள் முழுதும் இருந்து வருகிறார் ரஜினி. அவரைப் போன்ற ஒரு சிறந்த மனிதரை, நண்பரை, கலைஞரை நான் பார்த்ததில்லை,” என்றார் அமிதாப்.

இயக்குநர் ஷங்கர் பேசுகையில், “ரோபோ ஒரு தமிழ்ப் படமோ, தெலுங்குப் படமோ, இந்திப் படமோ அல்ல. இது ஒரு இந்தியப் படம். இந்தியாவின் படைப்பாற்றலை உலகுக்குப் பறைசாற்றும் ஒரு படம். வருகிற செப்டம்பர் மாதம் வெளியாகிறது” என்றார்.

ரோபோ – இந்தி இசை வெளியீடு வீடியோ:

-என்வழி




7 thoughts on “ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் ரஜினி போன்ற கலைஞர்கள் வருவார்கள்! – அமிதாப்

  1. kavirimainthan

    ரஜினியை பற்றி மற்றவர் பேசினால்
    நமக்கு பெருமையாக இருக்கிறது !

    அமிதாப் பச்சனின் பேச்சு அமிதாபின்
    பெருந்தன்மையை காட்டுகிறது !

    கமல் கவனிக்க வேண்டும் இவற்றை !

    காவிரிமைந்தன்
    http://www.vimarisanam.wordpress.com

  2. Naan

    காவிரி மைந்தன் தேவையில்லாமல் கமலை ஏன் வம்புக்கு இழுக்குறீங்க?

  3. Juu

    இவன்பேரைச் சொன்னதும் பெருமை சொன்னதும்
    கடலும் கடலும் கைதட்டும்.

    IvanUlagam Thandiya Uyaram Kondathil
    Nilavum Nilavum ThalaiMuttum.

    -Robo Thiruvalluvar.

  4. Muthu

    இந்தி சூப்பர் ஸ்டாரே சொல்லி விட்டார் இந்திய சூப்பர் ஸ்டார் ரஜினி என்று… ரஜினியின் புகழ் மென்மேலும் பிரகாசிக்க வாழ்த்துக்கள்…

  5. kavirimainthan

    நண்பர் நான் அவர்களே –
    தேவையோடு தான் கூப்பிடுகிறேன் கமலை !

    நல்ல கலைஞராக மட்டும் இருந்தால் போதாது.
    நல்ல கலைஞர்கள் ஆயிரம் பேர் வருவார்கள் –

    “ஆயிரம் ஆண்டுகளில் ஒருவர் தான் இவரைப்போல்
    வருவார்கள்” என்று அமிதாப் கூறும் அளவிற்கு
    உயர்வு பெற ரஜினி எவ்வளவு தியாகங்கள்
    செய்திருப்பார் ?

    நல்ல கலைஞர் என்று பெயர் பெறுவதோடு
    மட்டும் இல்லாமல் – நல்ல மனிதராக,
    நல்ல வாழ்க்கை வாழ்பவராக,
    மனசாட்சியை மதிப்பவராக,
    உதாரண புருஷனாக – கமலும் உயர வேண்டும்
    என்ற ஆசையில் தான் கமலை
    கவனிக்கச் சொல்கிறேன்.

    சரி தானே நண்பரே ?

    – காவிரிமைந்தன்
    http://www.vimarisanam.wordpress.com

  6. r.v.saravanan

    சூப்பர் ஸ்டார் ரஜினியின் புகழ் மென்மேலும் பிரகாசிக்க வாழ்த்துக்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *