BREAKING NEWS
Search

ஆயிரம் அதிமுக வந்தாலும் வெல்ல முடியாது! – கருணாநிதி

ஆயிரம் அதிமுக வந்தாலும் வெல்ல முடியாது! – கருணாநிதி

சென்னை: தி.மு.க.வினரிடம் முழுமையாக ஒற்றுமை வந்துவிட்டால், ஆயிரம் அ.தி.மு.க. வந்தாலும் நம்மை யாரும் வெல்ல முடியாது என்று கலந்துரையாடல் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசினார்.

தமிழ்நாடு முழுவதும் மாவட்டவாரியாக தி.மு.க. நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெறும் என்று தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அறிவித்திருந்தார். இதன் அடிப்படையில் தி.மு.க. நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நேற்று தொடங்கியது.

முதலாவதாக ராமநாதபுரம் மாவட்ட, நகர, ஒன்றிய, பகுதி கழக நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் நேற்று காலை தொடங்கியது. இதில் கலந்துகொள்வதற்காக தி.மு.க. தலைவரும், முதல்வருமான கருணாநிதி கலைஞர் அரங்கத்திற்கு வந்தார்.

பின்னர் முதல்வர் கருணாநிதி தலைமையில் ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் முதல்-அமைச்சர் கருணாநிதி பேசியது:

தி.மு.க. ஆட்சியினுடைய சாதனைகளைப் பற்றியெல்லாம் இங்கே வியந்து போற்றினீர்கள்; கழகத் தலைவர்களுடைய ஆற்றலைப் பாராட்டினீர்கள். இவற்றையெல்லாம் வியந்து போற்றவும், பாராட்டவும் உங்களுக்குக் கிடைத்துள்ள இந்த வாய்ப்பைத் தொடர்ந்து காப்பாற்ற வேண்டுமென்ற ஒரு சூழ்நிலை இருக்க வேண்டுமேயானால், எங்களுக்காகக் கூட அல்ல; எனக்காகக் கூட அல்ல; தலைமைக் கழகத்தில் இருக்கின்ற மற்றவர்களுக்காகக் கூட அல்ல; உங்களுக்காகவே நீங்கள் அதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஜனநாயகத்தில் யாரும், எந்தப் பொருள் பற்றியும் பேசலாம். எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருப்பவர்களைப் பற்றியும் குறை கூறலாம், குற்றம் சாட்டலாம்; அதுதான் ஜனநாயகம். அந்த ஜனநாயகத்தை இன்று நேற்றல்ல; அண்ணா காலத்திலேயிருந்து நாம் பின்பற்றி வருகிறோம்.

அண்ணா மீது குற்றச்சாட்டு

நான் பல நேரங்களில் சொல்லியிருக்கின்றேன் – இப்போதும் சொல்ல விரும்புகின்றேன். அப்போது நடந்த கதையைச் சொல்கிறேன். ஒரு பொதுக் குழுவில் அண்ணா மீதே ஒருவர் குற்றம் சாட்டினார்.

அந்தக் குற்றச்சாட்டை அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போது, அண்ணா எழுந்து, “பொதுச் செயலாளராகிய என் மீது குற்றச்சாட்டு வருகிற நேரத்தில், நான் இங்கே அமர்ந்திருப்பது அழகல்ல; ஆகவே, நான் கீழே இறங்கி உட்கார்ந்து கொள்கிறேன் – தோழர் ஆசைத்தம்பி இந்தக் கூட்டத்திற்குத் தலைமை வகித்து தீர்ப்பு அளிக்கட்டும்,” என்று சொல்லிவிட்டு; யாருடைய மறுப்பையோ, பதிலையோ எதிர்பாராமல் கீழே இறங்கி, பொதுக் குழுவிலே மற்ற உறுப்பினர்களோடு அமர்ந்து கொண்டார்.

பிறகு அண்ணாவின் மீது சொல்லப்பட்ட அந்தக் குற்றச்சாட்டிற்கான இருபுறத்து வாதங்களையும் ஆசைத்தம்பி கேட்ட பின்பு, தீர்ப்புக் கூறினார் இறுதியாக. “இதிலே அண்ணா மீது எந்தக் குற்றமும் இல்லை – இந்தப் புகாரைச் சொன்னவர்கள்தான் குற்றவாளிகள்” என்று ஆசைத்தம்பி தீர்ப்பளித்தார்.

இது நம்முடைய இயக்கம். அண்ணா காலத்திலேயிருந்து இதுவரையிலே கடைப்பிடித்து வருகின்ற ஜனநாயகம். அப்படிப்பட்ட ஜனநாயகத்தை உருவாக்கி அதைத் தருவாக்கி, நிழல் தருகின்ற ஒரு இயக்கமாக, திராவிட இயக்கமாக மலர்ந்திருக்கின்ற இந்த இயக்கத்திற்கு சோதனைகள் எத்தனையோ வந்ததுண்டு. அந்தச் சோதனைகளையெல்லாம் தாண்டி, வெற்றிகளை இன்றைக்குக் குவித்து வருகிறது திராவிட இயக்கம்.

திராவிட இயக்கம் தமிழகத்திலே மாத்திரமல்லாமல், வேறு மாநிலங்களிலும் பரவ வேண்டும்; நம்முடைய கொள்கைகளைப் பிற மாநிலத்தாரும் உணர வேண்டும் என்பதற்கான முயற்சிகளிலே நாம் ஈடுபட ஆயத்தம் செய்து வருகின்ற இந்த நேரத்திலே, தமிழகத்திலே தி.மு.க. ஆட்சியிலே இருக்கின்ற இந்தக் காலக்கட்டத்தில் – வருகின்ற சட்டமன்றத் தேர்தலிலே வெற்றி பெற வேண்டியது மிகமிக முக்கியமானது என்பதை மறந்து விடக்கூடாது.

ஜெயலலிதாவுக்கு இடம் தரக்கூடாது!

அப்படிப் பெறுகின்ற வெற்றிக்கு இன்றைக்குத் தடை போட வேண்டும் என்று சில கட்சிகள் – குறிப்பாக ஜெயலலிதா தலைமையிலே இருக்கின்ற அ.தி.மு.க. பகீரதப்பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறது. அதற்கு நாம் இடம் தரக்கூடாது. இங்கே சிலர் சொன்னார்கள். தலைவரிடத்திலே மனுக்கள் கொடுத்தோம் – கவனிக்கப்படவில்லை; அமைச்சரிடத்திலே புகார்கள் சொன்னோம் – அவை கவனிக்கப் படவில்லை; அமைச்சரிடத்திலே போய் மாவட்டத்தில் நடைபெறுகின்ற சில காரியங்களைப் பற்றிச் சொன்னோம்; ஆனால், அவர் அதை அலட்சியப்படுத்தி விட்டார் என்று.

எனக்குள்ள குறை

இப்படி அமைச்சர் மீது, தலைவர் மீது – நம் பிரதிநிதிகள் மீது சொல்லப்பட்ட குறைகளே தவிர, வேறு பெரும் குறைகள் எதுவுமில்லை. கொள்கைக்குப் புறம்பாக நடந்து கொண்டார் என்றோ, லட்சியத்திற்கு எதிராக நடந்து கொண்டார் என்றோ யாரையும் குறை சொல்லி – இங்கே யாரும் பேசவில்லை.

ஒரேயொரு குறை எனக்கிருக்கிறது. உங்களுக்குள்ளே இன்னும் முழுமையான ஒற்றுமை வர வேண்டும் என்பதுதான். அந்த ஒற்றுமை மாத்திரம் வந்து நிலைத்து விட்டால்; அ.தி.மு.க. அல்ல – ஆயிரம் அ.தி.மு.க-க்கள் வந்தாலும், நம்மை யாரும் வெல்ல முடியாது என்பதை நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும்.

மதுரை கூட்டம் உலக அதிசயமா?

நேற்றைக்கு முன்தினம் மதுரை மாநகரத்தில் ஒரு பெரிய கூட்டத்தைக் கூட்டியதாக, தனக்குத் தானே பெருமை பேசிக் கொண்டு, தன்னுடைய ஆதரவுப் பத்திரிகைகளை அதைப் பற்றி எழுதச் சொல்லி, படங்கள் போட்டு – உலகத்திலே ஒரு பெரிய அதிசயம்போல; ஒரு கம்யூனிஸ்டு பத்திரிகையில், முதல் பக்கத்தில், அரை பக்கம் அளவிற்கு மதுரையிலே நடைபெற்ற அ.தி.மு.க. கூட்டப் படத்தினை வெளியிட்டிருக்கிறார்கள் என்றால்; இதைவிட காக்கா பிடிக்கின்ற காரியம் வேறு எது இருக்கும் என்று கருதுகிறீர்கள்? எந்த கம்யூனிஸ்டு? கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு – அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – பழங்குடி மக்கள், ஆதி திராவிட மக்களுடைய நிலங்களை எல்லாம் சுருட்டிக் கொண்டிருக்கிறார்கள்; அதை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எந்த கம்யூனிஸ்டு தலைவர்கள் என்னிடத்திலே கொண்டு வந்து மனு கொடுத்தார்களோ, அந்தத் தலைவர்கள் நடத்துகின்ற பத்திரிகையில், அவ்வளவு பெரிய விளம்பரத்தைப் போட்டு, ஏதோ இந்தியாவிலேயே பெரிய கட்சி அ.தி.மு.க.தான் என்பதைப்போலவும், அதனுடைய நிழலிலே தாங்கள் இருப்பதைப் போலவும் காட்டிக்கொள்கிறார்கள் என்றால்; இதிலே ஏமாறப்போகிறவர்கள் யார் என்பது எனக்குத் தெரியும். நிச்சயமாக இந்தக் கம்ïனிஸ்டுகள்தான் ஏமாறுவார்கள்.

யாரும் வெல்ல முடியாது

நம்மை வெற்றி பெறுவதற்கு – நாம் ஒற்றுமையாக இருந்தால், நாம் வலிமையோடு இருந்தால், நாம் எந்தக் கணத்திலும் நிதானம் இழக்காமல், நேர்மையான முறையில், அண்ணா வழியில் அயராது உழைத்து, தொடர்ந்து நம்முடைய தொண்டினை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆற்றிக் கொண்டிருந்தால், யாராலும் நம்மை அசைக்க முடியாது.

ஆகவே, காலையிலேயிருந்து இதுவரை நடைபெற்ற விவாதங்களுக்கு நான் மேலும் விரிவான பதில்களைச் சொல்ல விரும்பவில்லை. எல்லோரும் இங்கே வந்து பேசிய பல விஷயங்களை – அதிலே உங்களில் பலருக்கு மாறுபட்ட விஷயங்கள் இருந்தால், ஒருவரைக் குறை கூறிப் பேசியிருந்தால், அவற்றையெல்லாம் இந்த இடத்திலேயே மறந்துவிட்டு; வீட்டுக்குச் சென்றதும், நண்பர்களாக, தோழர்களாக, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய உடன்பிறப்புகளாக நீங்களெல்லாம் சேர்ந்திருக்க வேண்டும் – மற்றவற்றை இங்கேயே மறந்து விட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.




13 thoughts on “ஆயிரம் அதிமுக வந்தாலும் வெல்ல முடியாது! – கருணாநிதி

  1. palPalani

    எதுக்கு இந்த ரீலு? அப்பறம் ஏன் ஒரு விரலுக்கு ஏங்கி நின்னீங்க?

  2. பாலாஜி குவைத்

    போடா ப*** உனக்கும் உன் குடும்பத்துக்கும் ஒரு வேலையும் இல்லை உங்களுக்கு இருக்கிற ஒரே வேலை மக்களை ஏமாற்றுவது தான்

  3. LAx

    If he had guts – he should have said the same during MGR’s regime or when MGR was alive – Till MGR was alive – he could not even anything but watch MGR winning again and again and again.

    Only after MGR’s demise – this old man could think about coming to power

  4. tamil4true

    இந்த வாய் மட்டும் இல்லையினா, உங்களையெல்லாம் ஒரு நாய் கூட சீண்டாது. உங்களுக்கெல்லாம் ஆப்பு ரெடியாயிருச்சு கருணா, ஒரு மூனு மாசம் வெய்ட்டு பண்ணு.

  5. Manoharan

    ஆமாம் எங்களை யாரும் அழிக்க முடியாது. நாங்களே எங்களை அளிச்சுக்குவோம். இன்னும் புதுசா சொல்லனும்னா நாங்க எங்களையே Dismantle பண்ணிக்குவோம். Dot.

  6. பாலாஜி குவைத்

    பன்னாட வேற வேல இல்லியா போடா ,,,,,,,,,,,,

  7. unmai

    கலைஞர் க்கு பின் மன்னிக்கவும் (இவருக்கெல்லாம் என்ன மரியாதை) கருணாநிதி க்கு பின் திமுக இருந்த இடம் தெரியாம போகும் ,, இதான் உண்மை ,, வருகிற தேர்தலில் திமுக ஜெய்தால் தமிழகம் நாசமா போகும் ,, அது நடக்காது

  8. T. Julius Sebastian

    Dear Mr. Vino
    I am a rajini fan. Rajini respect Mr. Karunanidhi very much. I saw in your article you give too much grace to MGR. I am asking you, At the time of MGR period what is the status of Tamilnadu state in the industrial progress. He dont bring any single factory to tamilnadu, He modify Thalivar Kamarajer’s after noon food system change the name only to SATTHUNAVU THITTAM,
    He was a MLA for My area in Madurai (Merku thoguthi) for the period of 1980 to 1985, that time he dont bring any single improvement plan. So please understood the real factor, Mr. Karunanidhi’s 1995 to 2001 rulling period most of the middle glass people got Govt. Jobs thru employment exchange. Onec again I request u to go back to the old history and what type of problems are people facing in Jayalalitha period. And u know those M.G.R & Jayalalitha they dont like Mr. Rajinikanth.

    Thanks & Regards

    T. Julius Sebastian

  9. Muthu

    வக்கீல் வண்டு முருகனை பார்த்து கூட்டத்தில் ஒருவன் கேட்பது போல `செமத்தியா தான் அடிவாங்கிட்டு கட்சி தொண்டனை எதிர்கட்சிகாரன் ரவுண்டு கட்டி அடித்து விட்டான் என்று மேடை போட்டு பேசுகிறான் பார் என்கிற காமெடி தான் எனக்கு வருகிறது… இவன் வீட்டில் ஒற்றுமையாக இல்லாததை ஊர் ஊராக கட்சிகாரர்களை கூப்பிட்டு புலம்பி கொண்டு இருக்கிறார்…

  10. Paul

    At the time of MGR period what is the status of Tamilnadu state in the industrial progress.
    >> Sebastian,

    Kalignar also ruled during those times.What did he do? The issues is we were completely decoupled with north America in those days and we were too young to go for industrialization. We had our honey moon with Russia.We were about to file BK in 1990 and after the reforms only we started our real economic growth.

    China did the foundation back in 1985 and it took 25 years for them to give a tough fight with Americas economy and with in next 15 to 20 years they will over take America. North America and Europe growth has been roofed and until they found some new innovation there is no growth over there. So what US will do? Just pump the money to emerging market like India and east Asian countries( Why civil war has come to an end in Srilanka? because if they( Investment banks) stop the war, they can invest money over there and reap the benefit. For that a script has been written and has been executed nicely. Look at the investment in Lanka now and with in 5 years you will see tremendous growth over there). In India US started their investment back in 2002 and thats the years we set the foundation for our economic growth. Next 25 years its going to be a non stop growth for India. So our(TN) real growth stared just 2003 only.

    Now answering your question, who ever ruled during 2003 and will be ruling Tamil Nadu, they have to go with the flow. So if our TN government likes it or not, investment is going to come in to TN and any ruling party would capitalize that in long run. Chennai harbor is our backbone and no one could stop the investment. In some way, Kalignar has capitalized this opportunity. I do not know how much % goes to their pocket, but the fact is THEY DID really something for TNs growth. What I do not like DMK government is, they give all these FREE crap.

    BTW, I am not a supporter of any political party in TN.

  11. T. Julius Sebastian

    To Mr. Paul

    The DMK govt done too much good things for poor & middle glass people. Giving free was started by MGR, so it was followed by the after come govts. it is not major fault from DMK govt. No one can without mistake in the world.

    So my conclussion is DMK is the chooseable party for rulling Tamilnadu.

    Thanks

    T. Julius sebastian

  12. பாலாஜி குவைத்

    போடா உனக்கும் உன் ரௌடி கும்பலுக்கும் ஒரு நாள் இருக்கு ஆப்பு …………………உன் புள்ள ஸ்டாலின் ஒரு பொருக்கி . அழகிரி ஒரு பொறம்போக்கு ரௌடி, அப்றோம் என்ன சொல்ல எல்லாம் சேர்ந்து தமிழ்நாட்டைய நாசம் செய்றீங்க ………………………… உங்களுக்கு எல்லாம் ஒரு நால் இருக்கு ஆப்பு………………..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *