BREAKING NEWS
Search

‘பிரபாகரன் வீரமரணம்’… புலிகளிடமிருந்து மீண்டும் ஒரு அறிக்கை!

‘பிரபாகரன் வீரமரணம்’…. விடுதலைப் புலிகளிடமிருந்து மீண்டும் ஒரு அறிக்கை!

செய்திக்குப் போகும் முன்…

பின் வரும் செய்தி தமிழீழ விடுதலைப் புலிகளின் முத்திரையுடன் கூடிய அறிக்கையாக அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. தலைவர் வீரமரணமடைந்தார் என முதலில் அதிகாரப் பூர்வமாக செல்வராசா பத்மநாதன் அறிக்கை விட்டபிறகு, அதனை மறுத்து தலைவர் நலமாக உள்ளார் என அறிவித்தது இந்த உளவுப் பிரிவுதான்.

அதே உளவுப் பிரிவு அலுவலகத்திலிருந்துதான்  இந்த புதிய அறிக்கை ‘அறிவழகன்’ பெயரில் வெளியாகியுள்ளது.

இந்த அறிக்கையை தமிழ்நெட் இன்னமும் வெளியிடவில்லை. மற்ற தளங்களில் பெரும்பாலானவை வெளியிட்டுள்ளன.

இந்த அறிக்கையின் பின்னணி, இதில் வேறு ஏதேனும் ‘மறைபொருள்’ உள்ளதா என்பது குறித்து பின்னர் ஆராயலாம்… இப்போதைக்கு அமைதியாக இருப்போம் என்பதே இந்த அறிக்க சொல்லும் செய்தி!

முதலில் நாமும் இந்த அறிக்கையை அப்படியே வெளியிட்டோம். பின்னர் ஒரு  முக்கியமான தலைவர் மற்றும் ஈழ ஆதரவாளர்கள் சிலரின் தொடர்ச்சியான விளக்கங்களின் பேரில் இந்த முன்குறிப்பைத் தருகிறோம்.

முதல்வர் கலைஞருக்கு இந்த விவகாரத்தில் பல சந்தேகங்கள் இருப்பதாகவும், அதனாலேயே அவர் அமைதி காப்பதாகவும் தமிழக உளவுத் துறை அதிகாரி ஒருவரும் மற்றும் தடவியல் துறையின் அதிகாரி ஒருவரும் சற்று முன் நம்மிடம் தெரிவித்தனர். அவர்கள் விவரம் இப்போதைக்கு வேண்டாம்.

மற்றபடி பிரபாகரன் குறித்து ஆயிரக்கணக்கான செய்திகளில் ஒன்றாக இதனை எடுத்துக் கொள்ளுங்கள்…

வன்னி: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் வீரமணமடைந்து விட்டார் என்று புலிகள் அமைப்பின் உளவுத்துறை இன்று தெரிவித்துள்ளது.SRI LANKA-TAMIL-PRABHAKARAN

ஆரம்பத்தில் இந்த அமைப்பு பிரபாகரன் மரணமடையவில்லை என்று தெரிவித்திருந்தது. அந்த அறிக்கையை வெளியிட்டவரான புலிகள் அமைப்பின் அயலக உளவுப் பிரிவு பொறுப்பாளரான கதிர்காமத்தம்பி அறிவழகன்தான் பிரபாகரன் மரணமடைந்து விட்டார் என்ற தகவலையும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அறிவழகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

எம் பாசத்துக்குரிய தமிழ் பேசும் மக்களே!

எமது இயக்கத்தின் தலைவரும் பிரதம ராணுவத் தளபதியுமான தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் வீரச்சாவு அடைந்துவிட்டார் என்பதனை விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை இப்போது உறுதிப்படுத்தியிருக்கின்றது.

தேசியத் தலைவர் அவர்களைப் பாதுகாப்பான இடத்தை நோக்கி நகர்த்தும் முயற்சிகள் தொடர்பான இறுதி நேரச் சம்பவங்கள் பற்றிய தகவல்கள் அறிந்த – தற்போது பாதுகாப்பான இடத்தை அடைந்துள்ள – எமது புலனாய்வுப் போராளிகள் வேறு துறைப் போராளிகள் மற்றும் இலங்கை படைத் துறையின் உயர் பீடத்துடன் தொடர்புடைய எமது தகவலாளர்கள் ஆகியோர் தலைவர் அவர்களது வீரச் சாவினை இப்போது உறுதிப்படுத்துகின்றனர்.

கடந்த மே மாதத்தின் நடுப் பகுதியில் – 15 (வெள்ளிகிழமை) முதல் 19 ஆம் திகதி (செவ்வாய்கிழமை) வரையான காலப் பகுதியில் வன்னி – முள்ளிவாய்க்கால் களப் பிரதேசத்திலிருந்து முரண்பட்ட பல தகவல்கள் வெளிவந்தபடி இருந்தன.

சீரான தகவல் பரிமாற்ற வசதிகள் இருக்காமையாலும் அங்கிருந்து வெளியேறிய எமது புலனாய்வுப் பேராளிகள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று சேர முடியாமல் இருந்தமையாலும் அவர்களால் அனுப்பப்பட்ட பல தகவல்கள் சிதைவடைந்த நிலையிலேயே வெளியில் கிடைத்திருந்தன.

அதனால் – அப்போது கிடைத்த தகவல்களைச் சீர்ப்படுத்தி எடுத்ததன் அடிப்படையில் – எமது அன்புக்குரிய தலைவர் அவர்கள் நலமாக இருப்பதாகக் கருதியே அவ்வாறான ஒரு செய்தியை வெளியிட நாம் மே மாதம் 22 ஆம் நாள் தீர்மானித்தோம்.

இதே வேளை – தலைவர் அவர்களது பாதுகாப்பான இருப்பு மற்றும் நகர்வுகள் தொடர்பாக – இறுதிவரை அவருடன் கூட இருந்த தளபதிகளால் பல தகவல்கள் வழங்கப்பட்டு வந்தன. இவற்றின் அடிப்படையிலேயே – எமது இயக்கத்தின் அனைத்துலக உறவுத் துறையின் இயக்குனர் செல்வராசா பத்மநாதன் அவர்களும் – ஆரம்பத்தில் – இரு வேறு முரண்பட்ட செய்திகளைத் தரும் சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டிருந்தார் என்பதையும் எம்மால் உணர முடிகின்றது.

குழப்பியதற்காக மன்னிப்பு கேட்கிறோம்…

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களது அந்த மாபெரும் தியாகம் தொடர்பான உறுதிப்படுத்தப்படாத ஒரு செய்தியை 22 ஆம் திகதி வெளியிட்டமைக்காக வருத்தப்படுகின்ற அதே வேளையில், அவ்வாறான ஒரு செய்தியை வெளியிட்டு குழப்பகரமான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியதற்காக எமது அன்புக்குரிய மக்களிடம் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை மன்னிப்புக் கோருகின்றது.

எமது தேசியத் தலைவரின் வீரச்சாவு தொடர்பாக பல்வேறு தரப்பினர் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வந்தனர். அவர் கைது செய்யப்பட்டதாகவும் சரண் அடைந்ததாகவும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின் கொல்லப்பட்டதாகவும் அவர் தற்கொலை செய்துகொண்டார் எனவும் பல்வேறு மாறுபட்ட செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் – எந்த செய்தியினையும் தகவலையும் முழுமையாக உறுதிப்படுத்தி வெளியிட வேண்டிய கடமை புலனாய்வுத்துறையினர் ஆகிய எமக்கு உண்டு.

அதனடிப்படையில் – தேசியத் தலைவர் அவர்கள் சரணடையவோ அல்லது கைது செய்யப்படவோ இல்லை என்பதையும் அவர் இலங்கை படையினருடன் போரிட்டே வீரகாவியம் ஆகினார் என்பதையும் நாம் மிகத் திடமாக உறுதிப்படுத்துகின்றோம்.

இப்போது தோன்றியுள்ள மிக உச்ச நெருக்கடியான கால கட்டத்தில் – எம் பெருந் தலைவர் அவர்கள் உருவாக்கி வளர்த்தெடுத்து நமது கைகளில் தந்து விட்டுச் சென்றுள்ள எமது விடுதலைப் போராட்டத்தை – அதே உறுதிப்பாட்டுடனும் அதே கட்டுக்கோப்புடனும் அதே ஒருங்கிணைவுடனும் நாங்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

ltte_20090618001

ltte_20090618002

தமிழீழ அரசுக்காக இணைந்து பாடுபடுவோம்…

எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் எமது இறுதி இலட்சியத்தை நோக்கிய எமது போராட்டத்தின் அடுத்த படிநிலையாக – தற்போது உருவாக்கப்படவுள்ள ‘நாடு கடந்த தமிழீழ அரசு’ அமைவதற்கு நாம் எல்லோரும் சேர்ந்து பணியாற்றுவதே எம் முன்னால் உள்ள கடமையாகும்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுக்கும் அவருடன் வீரச்சாவடைந்த எமது இயக்கத்தின் போராளிகள் தளபதிகளுக்கும் வீரவணக்கத்தைச் செலுத்துவதுடன் இந்தப் போரில் படுகொலை செய்யப்பட்ட எமது பாசத்துக்குரிய மக்களுக்கு விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை தனது அஞ்சலியையும் தெரிவித்துக்கொள்ளுகின்றது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், உயிருடன் இருப்பதாக கூறப்படும் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான் குறித்து அறிவழகன் அறிக்கையில் பெயர் குறிப்பிட்டு எந்தத் தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.




22 thoughts on “‘பிரபாகரன் வீரமரணம்’… புலிகளிடமிருந்து மீண்டும் ஒரு அறிக்கை!

  1. யோகன்

    இருக்கும் தமிழர்களை பைத்தியக் காறர் ஆக்கி வருகின்றீர்கள் காரணம் மதிப்பிற்குரிய பிரபாகரனைப்பற்றிய முரண்பட்ட கருத்துக்கள் எது உண்மை எது பொய் என்று தெரியாமல் உள்ளது சட்டப்படியான முத்திரையா சட்டம் அற்ற முத்திரையா என பொதுமக்களுக்கு தெரியாது அவர் உயிருடன் இருக்கின்றாரா? இல்லையா? ஒவ்வரு நாழும் முரண் பட்ட கருத்துக்கள் தலைமையகம் என்று
    ஒவ்வருதரும் ஏமாற்றுகிறீர்கள் காலம் தான் பதில் தரும்

  2. Thamizhan

    இந்த செய்தி தமிழ்நெட் இணையத்தளத்தில் வெளிவரவில்லை.

  3. Muthu

    Unbelievable??? This report may not be true. Tamilaga leaders Vaiko, Nedumaran… are saying in cool manner `Prabhagaran is safe and alive’… How do they say like this without any true and definite information…

  4. Ilaya

    ungalathu pathivukalin mel enakku mariyathai irukkirathu athai nambakam illa seythigal mulam keduthu vidathirkal

  5. raj.s

    Vino
    intha seithiyai eduthu vidungal.praba oru uyir alla avar than eelam.thayavu seithu sila naatkal nambikai udan irupom praba veru oru uravathil varum varai avaathu..nandri.

  6. Gopi

    Friends

    Let us not react to this news. No other media, website or channel had reported this News. This being such sensational and breaking news, do you think that CNN & NDTV would have kept quite. They would have celebrated a Diwali in their Channels with this News by now.

    So let’s just wait for more follow-ups and clarifications.

  7. Ananthapaul

    I think this people are say lie because inter pole, CIA and Raw are very eager to know what happen to Mr.Prabhakaran so they are release this news like that so dont belive this news ,srilankan government needs inter pole help.

  8. kavin

    prabakaran iyarkayaga maranathai sandhithalum adhanai ennal etrukolla mudiyadhu. ennai porutha varaiyil avar manidharalla, dheivam. dheivam irukiradha, illaiya endru kelvigal eluppi araichi seiyya mudiyadhu. yaar indha seidhiyai etru kondalum ennal mudiyadhu.

  9. vetrivel.T

    MUdiyavillai ean eandral nampavum mudiyavillai nambamal erukavum mudiyavillai eran endral antha alvuku udagangal vallrthuvittana ‘ elangaien enavery thakuthal pulikalin imayavery thakuthal’. entha erandumay oyathu yar oruvar ventralum thotravargal santaipodathan seaivargal. athanal etharku arasial thervu kanbathey sariyana vali (ethanai india munnindru nadathaventrum)illai entral veru emtha nadavthu nadthi mudithal indiarkalai elangai thamilargal manikamatargal athu oru pali sollagamarividum

  10. jana

    Enough. If you all can do something for Tamils, in Tamilnadu and outside, in a benefitting and helpful manner, please do so. But all this harping on Prabakaran’s death is starting to become disgusting. Over 20,000 Tamils were killed in the last weekend of the fight. Yet, no one seems to be upset over that!

  11. தமிழன்

    அய்யாமாரே.
    மக்களுக்கு பிரபா உயிருடன் தேவை. உலகுக்கு பிரபா உடலமாகத் தேவை.
    இந்த இரு கரைகளுக்கும் நடுவில், நல்லது கெட்டதை பகுத்தறிந்து எங்கள் பயணம் தொடரட்டும்….

    ராஜ தந்திர ஆயுதம் இனிநம்
    ஈழ சுதந்திர மார்க்கம்

    சூரியப் பிரபாகரம் நம்வீரிய மெய்யைக்
    காரியஞ் செய்விக்கும் உயிர்

    பயணந் தொடர்வோம் படிகளின் முடிவில்
    பயனாய்ப் பெறுவோம் ஈழம்

  12. Josh

    If Prabha is alive, he will definitely come back! so there’s no argument about it but at the same time, if he is dead, he cannot.

    So lets forget about these news(rumors?!) and lets do something or atleast pray for the well being and peace for the rest of the Tamil people who are now in the hands of the barbaric lankan army!

    “Mere talking cannot do anything”

  13. VALAIYAPATHI

    அட அறிவுகெட்ட அறிவழகா நீ அனுப்பிய கடிதத்தில் உன்னுடைய கையெழுத்து எங்கே? நீஉம் ரா உடன் சேர்ந்து ஆளகட்டீ ஆகிவிட்டாயா துரோகி l

    வளையாபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *