BREAKING NEWS
Search

ஆசை ஆசை… ரஜினியுடன் நடிக்க ஆசை! – தீபிகா படுகோன்

ஆசை ஆசை… ரஜினியுடன் நடிக்க ஆசை! – தீபிகா படுகோன்

ந்தியாவின் எந்த மாநில மொழிப் பட ஹீரோயினாக இருந்தாலும் சரி… உங்கள் லட்சியம், ஆசை, கனவு என்னவென்று கேட்டால், அவர்களில் அநேகர் சொல்லும் பதில், “சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்க வேண்டும்” என்பதாகத்தான் இருக்கும்.

பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரம் தீபிகா படுகோன் மட்டும் இதற்கு விலக்காக இருப்பாரா?

சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தீபிகா படுகோனே நேற்று சென்னை வந்தார்.

நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்.ஓ.பி. பெண்கள் வைஷ்ணவா கல்லூரியில் மாணவிகளைச் சந்திக்கும் நிகழ்ச்சிக்கு வந்த அவர், நிருபர்களிடம் பேசினார். அவர் கூறுகையில்,

“சென்னை என்னால் மறக்க முடியாத இடம். இங்கு வரும்போது பழைய நினைவுகள் மனதில் நிழலாடுகின்றன. மாடலிங்கில் இருந்தபோது பலமுறை வந்து இருக்கிறேன்.

இங்குள்ள மெரினா கடற்கரை எனக்கு மிகவும் பிடிக்கும். மும்பையில் உள்ள ஜமுகி பீச்சோடு இதை ஒப்பிட விரும்பவில்லை. சென்னை என்னை ஈர்ப்பதற்கு இன்னொரு முக்கிய காரணம் ரஜினி இங்கு இருப்பதுதான்! அவரை எனக்கு எந்தளவு பிடிக்கும் என்று வார்த்தைகளால் சொல்ல முடியாது. நான் ஒரு நடிகை என்பது அப்புறம்தான். முதலில் அவரது ரசிகை. ரஜினியுடன் ஒரு படத்திலாவது நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.

இந்தியில் திரில்லர் படமொன்றில் நடித்து வருகிறேன். டிசம்பரில் ரிலீசாகும். மேலும் சில படங்களில் நடிக்கிறேன். சினிமாவுக்கு வந்து கொஞ்ச காலம்தான் ஆகிறது. இதற்குள் வித்தியாசமாக நிறைய கேரக்டர்களில் நடித்துவிட்டேன்.

ஐ.பி.எல். கிரிக்கெட் அணியை வாங்கப்போவதாக வதந்திகள் பரவியுள்ளன. அதில் உண்மை இல்லை. எனக்கு விளையாட்டு பிடிக்கும். அவ்வளவுதான்,” என்றார்.

-எனவழி




One thought on “ஆசை ஆசை… ரஜினியுடன் நடிக்க ஆசை! – தீபிகா படுகோன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *