BREAKING NEWS
Search

ரஜினி என்ற உணர்வு…! – ஒரு ரசிகனின் கடிதம்

அகவை அறுபது… இருபத்தைந்து வருட பந்தம்..!

1984 ம் ஆண்டு ..சினிமாவை பற்றி அறியாத வயதிலேயே.. என்னை ஈர்த்த அய்யனார் காபி விளம்பரத்துக்காக அம்பாசமுத்திரம் பூக்கடை சந்தில் வரையப்பட்ட ரஜினிப்படம்.. பின்னர் அம்பை கிருஷ்ணா திரையரங்கில் நான் பார்த்த நான் சிகப்பு மனிதன் திரைப்படம்.

அன்றைய நாட்களில் ஏதோ ஒரு விளம்பரத்தில் “காதலின் தீபம் ஒன்று…” பாடலில் ரஜினியை அடிக்கடி காண்பிப்பார்கள்.. ரஜினியின் முகம் மிகப்பரிச்சயமாயிற்று… ரஜினி சாயலில் இருக்கும் நளினிகாந்த கூட திரையில் அடி வாங்கக்கூடாது.. கடைசியாக நான் அம்பை மண்ணில் நண்பர்களோடு சென்று பார்த்த திரைப்படம் தர்மதுரை ( பதிவர் எறும்பு உள்பட ).. அடிப்படையில் ரஜினியை ரசித்து பின்னர் டீசன்ட் கும்பலில் சேர்வதற்காக ரஜினியை விமர்சித்து தன்னையும் ஒரு டீசென்ட் கும்பலில் இணைத்துக்கொண்டவர்களில் இவரும் ஒருவர்..ஒரு சில காரணங்களுக்காக..

இடம் மாறினாலும்.. ரஜினி என்ற ஒற்றை விஷயம் மட்டும் என்னோடு தொடர்ந்து வந்தது..எங்கு சென்றாலும் என் நண்பர்களை, உறவினர்களை பார்க்கும் சந்தோஷம் கிடைக்காவிட்டாலும்.. ரஜினி படம் பார்க்கும் சந்தோசம் மட்டும் நிலையாக இருந்தது .

எனது இத்தனை வயதில்.. ரஜினியைப் பற்றி மகா கேவலமாக விமர்சிப்பவர்களை பார்த்திருக்கிறேன்.. ஜாதி உணர்வால் புதியதாய் முளைத்த ஒரு நடிகனுக்கு கொடி பிடித்துக்கொண்டு ரஜினியை தாழ்த்திப் பேசியவர்கள் அதிகம்.. இன்னும் ஒரு சிலர் கிழிந்த லுங்கியை அண்ட்ராயர் இல்லாமல் ஏற்றிக்கொண்டு சொன்ன விமர்சனம் (‘டீசண்டானவன் எவனும் ரஜினியை ரசிக்க மாட்டான்’ ) எனக்குள் இன்றும் நிழலாடும்.. ‘ஒ அப்டியாண்ணன்….’ என்று நான் அந்த ‘டீசன்டானவர்’ இருக்கும் இடத்தை விட்டு நகன்றிருக்கிறேன்.

இவர்களின் தரம் தாழ்ந்த விமர்சனம் ஒரு போதும் எனக்கு ரஜினியின் மேல் உள்ள மதிப்பை குறைக்கவில்லை.. மாறாக, அப்படி விமர்சிப்பவர்கள் மீதான மரியாதைதான் குறைந்தது!

இதை அந்த அறிவு ஜீவி விமர்சகர்கள் ஒரு போதும் உணரப்போவதில்லை. எனக்கு தெரிந்து உண்மையான, அடிப்படை கமல் ரசிகர்கள் ஒருபோதும் ரஜினியை கீழ்த்தரமாய் வசை பாடியதில்லை!!

இதோ இந்தியாவின் அத்தனை நடிகர்களையும் பின்னுக்கு தள்ளி என் தலைவன் மட்டுமே முன்னுக்கு செல்கிறான். அவமானங்களையும் வசவுகளையும், தூற்றல்கள் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு முன்னேற்றத்தை நோக்கி பயணப்படுவது ரஜினி என்ற மனிதனால் மட்டுமே சாத்தியப்படுத்த முடிகிறது..

சினிமா உலகில் இடம் தெரியாமல், தடம் இல்லாமல் தொலைந்து போனவர்களை எல்லாம் ரஜினியோடு ஒப்பிட்டு பேசி இருக்கிறார்கள்…

காலம் மாறிக்கொண்டிருக்கிறது.. மாறாத ஒரு விஷயம்.. ரஜினியின் மவுசு மட்டும்தான்…

இன்றும் ரஜினியை தாழ்த்தி கேவலமாக விமர்சனம் எழுதிக்கொண்டிருக்கிரார்கள்.. எந்த நடிகரையும் தயவு செய்து ரஜினியோடு ஒப்பிட்டு அந்த நடிகரை சினிமா உலகில் நீர்த்துப் போகசெய்துவிடாதீர்கள்… அவர்களும் முன்னேற வேண்டும்!

ரஜினி படங்களை ரஜினிக்காக பார்க்கிறேன்…. மற்ற படங்களை சினிமாவாகப் பார்க்கிறேன்.. அதனால்தானோ என்னவோ என்னால் எந்த வித ஒப்பிடலும் இல்லாமல் எல்லா நடிகர்களையும் ரசிக்க முடிகிறது.. எல்லா நல்ல படங்களையும் மனதார பாராட்ட முடிகிறது தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்றி… ரசிகன் ரஜினிக்கு மட்டும்.. மற்றபடி கதை, சினிமா எல்லாம் என் பொழுதுபோக்கிற்காக!

புது இடம், புதிய நண்பர்கள் என்று புதியதாய் நிறைய விஷயங்கள் மாறிக்கொண்டே வந்திருக்கிறது… மாறாத ஒரே விஷயம் அன்று முதல் ( அய்யனார் காப்பி விளம்பர படத்திலிருந்து ) இன்று வரை என்னை வசீகரிக்கும் ரஜினியின் பாட்ஷா – 2 ரிலீசுக்கு முந்திய அட்டைப்படம் வரை..

…ரஜினி ரஜினி ரஜினி மட்டுமே!

-பஹ்ரைன் பாபா
33 thoughts on “ரஜினி என்ற உணர்வு…! – ஒரு ரசிகனின் கடிதம்

 1. santhosh

  ரஜினி ரசிகனின் மனதில் உள்ளதை பிரதிபலிக்கும் வரிகள் “ரஜினி படங்களை ரஜினிக்காக பார்க்கிறேன்…. மற்ற படங்களை சினிமாவாகப் பார்க்கிறேன்.. ”

  என்னிடம் சிலர் தலைவரை பற்றி விமர்சிக்கும் பொது, விமர்சிப்பவர்கள் மீதான மரியாதைதான் குறைந்தது!

 2. devraj

  Excellent write up.
  The TV advert was for a TV , called Ajith TV (I think), it was a sister concern of Dynaora TV.
  Amazing stills of olden/ golden days of SUPERSTAR.

 3. eppoodi

  கலக்கல், ஒவ்வொரு ரஜினி ரசிகனதும் உள்ளத்தையும் நிழலாக காட்டும் பதிவு. வாழ்த்துக்கள் பஹ்ரைன் பாபா

 4. NAREN

  காலம் மாறிக்கொண்டிருக்கிறது.. மாறாத ஒரு விஷயம்.. ரஜினியின் மவுசு மட்டும்தான்…-

 5. kicha

  Naan partha mudhal thalaivar padam (en 6 vayasula) Rajadhi raja. Appolerndhu indha manushan mela pudicha paithiyam vida matengudhu.

  Paithiyam gunam aaganumanu ketta, kandipa vendamnudhan solluven. Nadiganagavum, manushanagavum avara pidichukittedhan iruku.

  @BABA. Unga letterala en flashbackum ninaichu kiten. Thanks.

 6. Raja

  பஹ்ரைன் பாபா கலக்கிட்டீங்க.
  ரஜினி என்ற உணர்வு… சூப்பர்ப். எல்லா ரசிகர்களும் இப்படி தான்,

 7. Inian

  நான் பார்த்த முதல் ரஜினி படம் எனக்கு சரியாக நினைவில்லை ஆனால் எனக்கு இன்றும் அன்று பார்த்த முரட்டுக்காளை, போக்கிரிராஜா, பாயும்புலி, பில்லா, தீ, மூன்றுமுகம்(எனக்கு மிகவும் பிடித்த படம், அதிகம் பார்த்த படம்) , கழுகு…..நல்லவனுக்கு நல்லவன்…..மாவீரன், படிக்காதவன்…எல்லாம் என் நினைவில் இருக்கிறது. +1 ,+௨ படிக்கும் காலத்தில் நீ ரஜினி ரசிகனா என்று கிண்டலடித்த நண்பர்கள் கூட ரஜினி படம் வந்தால் பார்க்காமல் இருக்க மாட்டார்கள். நன்றாக விபரம் தெரிந்தவுடன் அவருடைய பழைய படங்களை எல்லாம் தேடிப்பிடித்து பார்க்க ஆரம்பித்தேன். அபூர்வ ராகங்களில் இருந்து இன்று வரை உள்ள படங்கள் எல்லாவற்றையும் பார்த்து விட்டேன். அன்று பார்த்த பிரமிப்பு இன்றுவரை அடங்க வில்லை. ஹி காட் சம்திங் ஸ்பெசல் அட்ராக்சன் இன் ஹிச் ஃபேஸ். அவர் என்ன செய்தாலும் அழகு என்றாகிவிட்டது.

  இன்று இந்தியா, இண்டர்னேஷனல் என்று எல்லோரையும் கவர்ந்திழுக்கும் கரிஷ்மா.

 8. Prasanna Kumar

  @Bahrain baba super !!!!!
  @ Kicha even i became fan after watching Rajadhi raja at that time when i was 5 yrs old since then upto now the attraction towards him & craze hasn’t reduced but still rising…..Thats Rajini for you ..:)

 9. Muthukumar

  என்னுள் உள்ளதை சரியாக சொல்லிவிட்டார்

 10. Ram

  நானும் அந்த காலகட்டத்தில் அந்த ஊரில் அந்த திரை அரங்கில் படம் பார்த்துள்ளன்.

 11. Madan

  எனக்கு இதுவரை ரஜினி தவிர வேறு எந்த நடிகரயும் பிடிப்பதில்லை.

 12. Juu

  /*** ரஜினி படங்களை ரஜினிக்காக பார்க்கிறேன்…. மற்ற படங்களை சினிமாவாகப் பார்க்கிறேன்.. ***/
  இது தான் நான்..

 13. Senthil Pammal

  Very nice statement. Let us follow our leader’s natural good charactors. Thalaivar doesn’t blame others directly or indirectly.

 14. Vennila

  Wow What a writing. Great thinking Mr.Baba. Rajni the name itself enough for the Rajni fans like me. he can just appear on the screen without even saying a word and can Just sit back and watch him for ever. Thats the kind of magnetic personality he has. and he is enhancing his appeal with his Pure and Gentle character i believe. You brought up Nostalgic memories to many of the Rajni Fans.
  Only Rajni deserves to have such dedicated fans. Long live to Our Super star. the only SUPERSTAR.

 15. jawahar

  என்னுள் உள்ளதை சரியாக சொல்லிவிட்டார் எனக்கு இதுவரை ரஜினி தவிர வேறு எந்த நடிகரயும் பிடிப்பதில்லை.ரஜினி படங்களை ரஜினிக்காக பார்க்கிறேன்…. மற்ற படங்களை சினிமாவாகப் பார்க்கிறேன்.. ***/
  இது தான் நான்..

 16. sri

  ரஜினி என்ற உணர்வு… nice… மாதா, பிதா,ரஜினி, தெய்வம்… தலைவரின் தர்மம் தரணியை ஆளும்…

 17. bahrainbaba

  வெறும் பின்னூட்டலாக நான் சமர்ப்பித்த எழுத்துக்களுக்கு ” ரஜினி எனும் உணர்வு.. ஒரு ரசிகனின் கடிதம்” என்று மிக சரியான தலைப்பிட்டு..நேர்த்தியான புகைப்படத்தையும் சேர்த்து ஒரு கட்டுரையாக தன இணையத்தளத்தில் வெளியிடுவதற்கு ஒரு பெருந்தன்மை வேண்டும்.. உங்கள் இயல்பான பெருந்தன்மைக்கு.
  நன்றி வினோ..

  santhosh :
  devraj :
  eppoodi :
  காத்த‌வ‌ராய‌ன் :
  NAREN :
  endhiraa :
  Venky :
  Gokul :
  Inian :
  Prasanna Kumar :
  Muthukumar :
  Ram :
  Madan :
  Juu :
  r.srinivasan :
  Senthil :
  Senthil Pammal :
  Vennila :

  Thank You Friends. Iam really elated to read each and every one of your comments..

  Once again thanks Vino..

  பஹ்ரைன்பாபா
  http://bahrainbaba.blogspot.com/

 18. adhi

  *** ரஜினி படங்களை ரஜினிக்காக பார்க்கிறேன்…. மற்ற படங்களை சினிமாவாகப் பார்க்கிறேன்.. ***/

 19. Anand

  ரஜினி படங்களை ரஜினிக்காக பார்க்கிறேன்…. மற்ற படங்களை சினிமாவாகப் பார்க்கிறேன்…
  Very Very Very Nice Statement பஹ்ரைன் பாபா sir…

  one & only superstar Rajini….. forever…………
  Thalaivaaaaaaaaaaaa…………

 20. rajasekar

  ரஜினியை சச்சினோடு ஒப்பிடலாம். சச்சின் என்ற மாபெரும் சாதனையாளர் ஒரு மட்சில் சரியாக விளையாடாவிட்டாலும் ஓய்வு பெற சொல்லி கூப்பாடு போடுவதும், சதத்தை நெருங்கும் போது சற்று மெதுவாக ஆடினால் தனி நபர் சாதனைக்காக ஆடுவதாகவும், ஜெயிக்கும் நிலைக்கு அணியை கொண்டு வந்து அவுட் ஆகி விட்டு அணி தோற்றால் சச்சின் ஒரு மேட்ச் winner இல்லை என்று விமர்சனம் வரும். ஆனால் சச்சினின் வரலாற்றை புரட்டி பார்த்தால் கடந்த காலத்திலும் சரி, நிகழ் காலத்திலும் சரி சச்சினின் சாதனைகளுக்கு அருகில் ஒருவர் கூட இல்லை. இருவது வருடங்களாக கிரிக்கெட் உலகின் முடி சூடா மன்னன்.எத்தனை புகழ் இருந்தாலும் சற்று கூட தலைகனம் இல்லாத ஒரு மனிதர். விமர்சனம் செய்பவர்களுக்கு தனது மட்டையால் மட்டுமே பதில் சொல்வார். மொத்தத்தில் கிரிக்கெட் உலகின் எந்திரன்.
  ரஜினிக்கு ஒரு படம் சரியாக ஓடாவிட்டால் பணத்தை தரச் சொல்லி கேட்பதும், ரஜினியின் சரித்திரம் முடிந்துவிட்டது என்றும், ரஜினியை வம்புக்கு இழுப்பதும் என ஒரு கூட்டமே அவருக்கு எதிராக செயல் படும். ஆனால் தலைவர் தனது அடுத்த படத்திலேயே ஒரு புது வரலாற்றை படைப்பார் அப்போது அந்த கூட்டம் ஓடி ஒளிந்து கொள்ளும்.கடந்த முப்பது வருடங்களாக தமிழ் திரை வரலாற்றின் முடி சூடா வசூல் மன்னன். அவர் ஒத்துழைத்தால் தமிழ் நாட்டுக்கே ஆகலாம் முடி சூடிய மன்னன். ஆனால் தனது ரசிகர்களை ஒரு போதும் சுயநலத்திற்காக பயன் படுத்தாதவர். ரஜினி காலத்தில் அறிமுகம் ஆகி உச்சத்தில் இருந்து காணமல் போன எத்தனையோ நட்சத்திரங்கள் உண்டு. ரஜினி மட்டுமே உச்சத்தில் இருந்தார்,இருக்கிறார், இருப்பார். பாலி உட் கான்களை அண்ணாந்து பார்க்க வைத்தவர். இந்திய வசூல் சாதனைகளை தகர்த்தெறிந்த சக்தி ரஜினி.

 21. Manoharan

  ///அன்றைய நாட்களில் ஏதோ ஒரு விளம்பரத்தில் “காதலின் தீபம் ஒன்று…” பாடலில் ரஜினியை அடிக்கடி காண்பிப்பார்கள்..///

  அது Solitaire TV விளம்பரம். ஒவ்வொரு ரசிகனையும் பழைய நினைவுகளுக்கு கொண்டு சென்றுவிட்டீர்கள். 1980 ல் வெளிவந்த முரட்டுக்காளை படத்திலிருந்து 30 வருடங்கள் என் வாழ்க்கையில் கூடவே பயணிக்கிறார் ரஜினி. என் வாழ்வில் சிறு வயதில் நடந்த சம்பவங்களில் அதிகமாக நினைவில் இருப்பவை ரஜினி சம்பந்தப்பட்டவையே. முரட்டுக்காளையிலிருந்து இன்றுவரை ஒவ்வொரு படத்தையும் நான் பார்த்தது இன்னும் நினைவில் இருக்கிறது. யாருடன் எந்தக்காட்சி என்பது உட்பட. இன்றும் ரஜினி படத்தை 2 வினாடிகள் பார்த்தால் போதும், அது எந்தப்படம் என்பதை என்னால் 99 சதவீதம் சொல்லிவிட முடியும். முரட்டுக்காளையிலிருந்து எந்திரன் வரையிலான ரஜினி படங்களின் பெயர்களை மூச்சுவிடாமல் தடுமாறாமல் என்னால் சொல்லமுடிகிறது. இது எல்லாம் வாழ்க்கையில் ஒரு பெரிய விஷயம் இல்லை. ஆனால் ரஜினி எந்த அளவுக்கு என்னில் ஊடுறவியுள்ளார் என்பதை நினைக்கும்போது அதுவும் சொல்லத் தோன்றவில்லை. லதா ரஜினி அவர்களுக்கு முன்பிருந்தே ரஜினியை நேசித்தவன் நான். அந்த வகையில் அவருக்கு நான் சீனியர்.

 22. Mohd. Allah

  குவைத் பாக்ஸ் ஆஃபிஸில் முதன் முறையாக இந்திய சினிமா(எந்திரன்) ஒன்று முதலிடம் பிடித்துள்ளது. நம்ம சூப்பர் ஸ்டார் நடித்த ‘எந்திரன்’ படம் குவைத்திலும் வசூல் சாதனை புரிந்துள்ளது. இந்த சந்தோஷமான விஷயத்தை நமது இணைய வாசகர்(குவைத்) ஒருவர் தெரிவித்துள்ளார். இதற்கான இணைய முகவரியை அவர் வெளியிட்டுள்ளார். இதில் எந்திரனுக்கு முதலிடம் கிடைத்துள்ளது, பிரபல ஹாலிவுட் திரைப்படங்களான டேக்ர்ஸ், ரேஸிடண்ட் ஈவில், அடுத்தடுத்த இடங்கள் கிடைத்துள்ளது.

 23. abdul vahab

  எங்க ஊர் காரர் கமெண்ட் எழுதி உள்ளார். அவர் சொன்ன அம்பை கிருஷ்ணா திரையரஙகம் இப்போது இல்லை புதிய திரையரஙகம் உள்ளது. அம்பை என்ற சின்ன ஊரில் 3 திரையரஙகம் உள்ளது. 3 எந்திரன் ஓடுகிறது.

 24. Nnada

  எல்லாம் சரி , ரொம்ப கஷ்டமா இர்ருக்கு எல்லலரும் ஈப்டி சொன்ன எப்படி , பஹ்ரைன் பாபா நீங்க கமல் இரசிகர இர்ருந்து தன மரிநிங்க
  போற்றுபவர் போர்ர்டும் , துர்த்ருபிவர் துரட்டம் , அல்வய்ஸ் ஸ்பெஷல்!!!!!

 25. r.v.saravanan

  புது இடம், புதிய நண்பர்கள் என்று புதியதாய் நிறைய விஷயங்கள் மாறிக்கொண்டே வந்திருக்கிறது… மாறாத ஒரே விஷயம் அன்று முதல் ( அய்யனார் காப்பி விளம்பர படத்திலிருந்து ) இன்று வரை என்னை வசீகரிக்கும் ரஜினியின் பாட்ஷா – 2 ரிலீசுக்கு முந்திய அட்டைப்படம் வரை..
  …ரஜினி ரஜினி ரஜினி மட்டுமே!

  குட் குட்

  வாழ்த்துக்கள் பஹ்ரைன் பாபா

 26. naren

  லதா ரஜினி அவர்களுக்கு முன்பிருந்தே ரஜினியை நேசித்தவன் நான். அந்த வகையில் அவருக்கு நான் சீனியர்.

  இ லைக் இட். சூப்பர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *