BREAKING NEWS
Search

அழைக்க முடியவில்லையே…! – ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்த ரஜினி

அழைக்க முடியவில்லையே…! – ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்த ரஜினி

சென்னை: மகளின் திருமணத்துக்கு ரசிகர்களை அழைக்க முடியாமைக்காக அவர்களிடம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் இளையமகள் சௌந்தர்யா – அஸ்வின் திருமணம் செப்டம்பர் 3-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. அரசியல், சமூகம், பத்திரிகைத் துறை என தமிழகத்தின் சகல தரப்பு முக்கிய வி.ஐ.பி.களுக்கு ரஜினியே நேரில் சென்று பத்திரிகை வைத்து அழைப்பு விடுத்தார்.

நேற்று புதன்கிழமை மாலை பத்திரிகையாளர்களுக்கும் அழைப்பிதழ்களை பிஆர்ஓக்கள் மூலம் வழங்கினார். உடன் அவரது அறிக்கையும் வழங்கப்பட்டது.

அதில், தனது பல லட்சம் ரசிகர்களை இந்த மங்கல நிகழ்வுக்கு அழைக்க முடியவில்லையே என வருத்தம் தெரிவித்திருந்தார் ரஜினி. பத்திரிகைகளின் வழியாக ரசிகர்களுக்கு அவர் தனது கைப்பட எழுதி அனுப்பியுள்ள இந்த செய்தியின் விவரம்:

“எனது மகளின் திருமணத்தை ரசிகர்கள் நேரடியாக வந்து பார்க்க வேண்டும். வாழ்த்த வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் தொலைபேசி மூலமாகவும், தபால் மூலமாகவும் எனக்கு தகவல் வந்து கொண்டு இருக்கிறது.

இதற்காக ரசிகர்களை அழைப்பதற்கு ஆசையாக இருந்தாலும் சென்னை நகரின் இட நெருக்கடி காரணமாகவும், போக்குவரத்து இடையூறுகள் கருதியும் ரசிகர்களை அழைக்க முடியவில்லை என மிக வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன். மணமக்களுக்கு உங்களின் நல்லாசிகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்…”

-இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.
24 thoughts on “அழைக்க முடியவில்லையே…! – ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்த ரஜினி

 1. P.G.R

  தலைவர் நினைத்திருந்தால் ரசிகர்களுக்கென தனியாக ஒரு வரவேற்பு நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருக்கலாம்… அது ஏன் தோணவில்லை என்று தெரியவில்லை ?????

 2. M.Mariappan

  உண்மையில் தலைவர் கூறுவது நூத்துக்கு நூறு உண்மை. சென்னைக்கு போவதென்றால் ஒரு நபருக்கு ரூபாய் 1000 தேவைப்படும் அது போக இந்தியாவில் உள்ள அணைத்து ரசிகர்களும் வந்தால் சென்னை நகரம் தாங்காது தலைவர் எல்லா ரசிகர்களையும் கவனிக்க முடியாது, இதிலேயும் தலைவரின் பொது நலம் தான் உள்ளது ஆகவே அவரவர் ஊரில் இருந்து தலைவரின் மகள் திருமணத்திக்கு நம்மோளோட ஆசிர்வாதத்தை வழங்க வேண்டும் என்பது என்னுடைய பணிவான வேண்டுகோள்

 3. Raja

  இது போதும் தலைவா. எங்க வாழ்த்துக்கள் எப்பவும் உண்டு தலைவா.

 4. rasigan

  மொக்க தலைவர்… அன்புமணி அழைக்க முடியுது…. ரசிகர அழைக்க முடில….. போங்கையா புள்ள குட்டிய படிக்க வைங்க

 5. mukesh

  //மொக்க தலைவர்… அன்புமணி அழைக்க முடியுது…. ரசிகர அழைக்க முடில….. போங்கையா புள்ள குட்டிய படிக்க வைங்க//

  சொல்லிட்டாருயா கருத்து கந்தசாமி.

  மாரியப்பன் அவர்கள் கருத்து மிக சரி. பெத்தவங்களை பாருங்க…. புள்ள குட்டிய படிக்க வைங்க….இதானே இதுக்கு அர்த்தம்.

  மணமக்களுக்கு வாழ்த்துக்கள்

 6. Thambi thiagarajah

  மணமக்கள் வாழ்க வளமுடன். இறைவன் துணை என்றும்…………

  தம்பி தியாகராஜன் … வந்குவேர் , பிரிட்டிஷ் கொலம்பியா , கனடா.

 7. karthik

  குறைந்தது ரசிகர் மன்ற தலைவர்கலைஆவது அழைத்திருக்கலாம்… பவம் அவங்களால் தான் இன்று நீங்கள் இந்த நிலையல் உளிர்கள்.. அனுபமணி கு நாங்க என்னக கொறஞ்சு போய்டோம்?

 8. Juu

  தலைவா!!! நீ வருஷத்துக்கு ஒரு படம் நடி!!
  அது போதும் எங்களுக்கு…

  உன்கிட்ட எதிர்பார்க்கிறது அது ஒன்னுதான்.

 9. krish

  யாரு அவரை எதிர்த்தார்களோ அவர்கள் வேணும் சப்போர்ட் செய்த தொண்டன் வேண்டாம். அட ரசிகனை விடுங்கள் மன்ற தலைவர்களை கூட கூப்பிடக்கூடாதா.இந்தமாதிரி செயல்களால்தான் தலைவரை சில நேரங்களில் பிடிப்பதில்லை

 10. kiri

  அரசியல், சமூகம், பத்திரிகைத் துறை என தமிழகத்தின் சகல தரப்பு முக்கிய வி.ஐ.பி.களுக்கு ரஜினியே நேரில் சென்று பத்திரிகை வைத்து அழைப்பு விடுத்தார்.

  //
  500 VIP யா அழைக்க முடியுது ,ரசிர்கள அழைக்க முடியாதம்.

 11. kicha

  thalaivar indha arikayai rasigargaluku solli irukar.
  Avaradhu rasigargal adhai purindhu kolvar.

  Matravanga enna sonna enna?

 12. mukesh

  kiri போன்ற கமல் ரசிகர்களுக்கு ஏன் இந்த வேலை. உங்களை போன்றவர்களும் எத்தனை தடவைதான் இப்படி comments போட்டு தோற்பீர்கள். கூட்டத்தை அழைத்தாலும் அரசியலுக்கு வர இப்படியெல்லாம் செய்கிறார் என்று சொல்ல போகிறீர்கள்.

  //இதே செய்தி தான் thatstamil.com புப்ளிஷ் பண்ணி இருக்கிங்க comments 1000 தாண்டிட்டு … ப்ளீஸ் அந்த comments கொஞ்சம் படிசிபாருங்க //

  என்ன பண்ணலாம்னு சொல்லுங்களேன். கமல் ரசிகரா மாறிடனுமா!!!

  ரஜினி ரசிகர்களுக்கும் ஆயிரம் வேலை இருக்கிறது. போய் உங்கள் வேலையை பாருங்கள்.

 13. samuvelu

  25 வருசமா உங்களின் ரசிகர் மன்றத்தில் தொடர்ந்து உறுப்பினரா இருக்க ஒரு நூறு ரசிகர்களையாவது மதிச்சு கூப்பிடுங்க சார். பாவம் சார்… அவங்க சந்தோசம் முக்கியம் இல்லையா? உங்கள உச்சில தூக்கி வச்சு அழகு பாத்தவங்க சார் அவங்க. இந்த கருணாநிதிய விட அவங்க என்ன பாவம் செஞ்சாங்க?

 14. Naan Tamilan

  அன்புமணிக்கு அழைப்பு ஆனா ரஜினிக்காக பாமாக கிட்ட அடி வாங்கின ரசிகனுக்கு அழைப்பு இல்ல .
  மக்கள் யார் நல்லவர்கள் கெட்டவர்கள் காரியவாதிகள் இன்னு தெரிஞ்சுகிட்டா போதும்.

 15. kiri

  25 வருசமா உங்களின் ரசிகர் மன்றத்தில் தொடர்ந்து உறுப்பினரா இருக்க ஒரு நூறு ரசிகர்களையாவது மதிச்சு கூப்பிடுங்க சார். பாவம் சார்… அவங்க சந்தோசம் முக்கியம் இல்லையா? உங்கள உச்சில தூக்கி வச்சு அழகு பாத்தவங்க சார் அவங்க. இந்த கருணாநிதிய விட அவங்க என்ன பாவம் செஞ்சாங்க?//
  உண்மையா சொன்ன !! கமல் ரசிகனா !! கமல் அடுத்த அரைவேட்காடு !!

 16. Khalifa

  தேவையில்லாமல் விவாதம் வேண்டாம்,
  100 வருஷம் இந்த மாப்பிள்ளை யும் பொண்ணும்தான் வாழனும்.
  இது நாம்ம குடும்ப கல்யாணம்.

 17. Robo Venkatesh

  Rajini knows if he invites fans club president then some pigs and dogs say rajini is bias in inviting fans club memebers it is better to treat every one equal. very easy to find mistake very difficult to accept the facts. grow up baby before posting comments against rajini

 18. பொது ஜனம்

  அம்மாவும் அம்மாவை சார்ந்தவர்களும் திருமணத்திற்கு போகவில்லையே. ஏன் ? ஏன் ? ஏன்?

 19. kicha

  500 VIP யா அழைக்க
  முடியுது ,ரசிர்கள அழைக்க
  முடியாதம்.//

  idhilirundhe neenga romba budhisaalinu theridhu.

  500 vip, 5000000 rasigargal. Chennai pathuma?

 20. arul

  தம்பிகளா ரஜினி யை பத்தி இன்னும் உங்கள்ளுக்கு புரிய வில்லையா ? ரஜினி என்ற ஒரு நல்லவர் சம்பாரிப்பது எல்லாம் தமிழ் நாடு என்ற ஒரு ஸ்டேட் ஆனால் இன்வெஸ்ட் பண்ணுவது எல்லாம் கர்நாடக வில் ******************************தமிழரே திருந்துங்கள்

  ___________________

  முடிந்தால், உதாரணத்துக்கு ஒரே ஒரு தொழிற்சாலையைக் காட்டுங்களேன் பார்க்கலாம்…!

  -வினோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *