BREAKING NEWS
Search

அழுத குழந்தையை புன்னகைக்க வைக்கும் ரஜினி ஸ்டைல்!


அழுத குழந்தையை புன்னகைக்க வைக்கும் ரஜினி ஸ்டைல்!

popcorn-logoமீர் நாயகனாக நடித்துள்ள யோகி படத்தில் ஒரு காட்சி…

ஒரு வயது கூட நிரம்பாத பச்சிளம் குழந்தை அது. புதிய இடம், முன் பின் பார்த்திராத மனிதர், பசி… அழுகிறது. அந்தக் குழந்தையை சமாதானப்படுத்தத் தெரியாமல் தவிக்கிறார் அமீர் (அதாவது யோகி). நேரமாக ஆக அழுகைச் சத்தம் தாங்க முடியாத அளவு போக, சட்டென்று யோசிக்கும் அமீர் டிவியை ஓடவிடுகிறார்.

அதில் நம்ம தலைவர் ரஜினி பாட்டு. சிவாஜி படத்தில் வரும் ஒரு கூடை சன்லைட் ஒரு கூடை மூன்லைட் பாடல் ஓட, அதில் வரும் ரஜினியை இமிடேட் செய்தபடி ஆடுகிறார்… அழுத குழந்தை சட்டென்று அடங்கிவிட, பாடல் தொடர்கிறது. சில வினாடிகளில் அதே குழந்தை அழகான பூவாய் தன் பொக்கை வாய் திறந்து சிரிக்க, அரங்கம் விசில் – கைதட்டலால் அதிர்கிறது!!


எந்திரன் பாடல்கள்: ரஹ்மானைப் பாராட்டிய ரஜினி

popcorn-logoசிவாஜியை விட அசத்தலான பாடல்களை எந்திரனுக்கு தந்திருப்பதாக இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானைப் பாராட்டியுள்ளார் ரஜினி.

எந்திரன் படப்பிடிப்பு முடிந்து டப்பிங் பணிகள் நடக்கின்றன. இன்னொரு பக்கம் ஆடியோவும் பக்காவாக ரெடியாகிக் கொண்டிருக்கிறது.

ஆடியோ வெளியீட்டை பெரிய விழாவாக நடத்துவதா அல்லது சிவாஜி ஸ்டைலில் ரசிகர்களை வைத்தே வெளியிட்டுவிடுவதா என்பதில் இன்னும் முடிவுக்கு வரவில்லையாம்.

இடையில் பாடல்களை ஏற்கெனவே முழுமையாகக் கேட்டிருந்தாலும், இப்போது மும்பையில் மாஸ்டரிங் முடிந்து வந்துள்ள புதிய பதிப்பைக் கேட்டு சந்தோஷத்தில் ரஹ்மானைப் பாராட்டினாராம் ரஜினி.

‘நான் தயாரிக்கும் படத்துக்காக அப்பா கிட்ட பணம் கேட்டதில்லை!’

popcorn-logoக்கர் ஸ்டுடியோ வெளியில் ஃபைனான்ஸ் வாங்கி படம் தயாரிக்கிறது, சிரமத்தில் தள்ளாடுகிறது என்று கூறிவரும் மீடியாவுக்கு பொருத்தமான மேடை ஒன்றில் விளக்கம் தந்தார் சௌந்தர்யா ரஜினி.

“எல்லோரும் எங்களை ‘அவங்களுக்கென்ன ஸ்டாரோட வாரிசு… ஈஸியா ஜெயிச்சு வந்திருவாங்கன்னு’ நினைக்கிறாங்க. ஆனா, ரசிகர்கள் எங்க அப்பா மேல வெச்சிருக்கிற அதே எதிர்பார்ப்பை எங்க மீதும் வெச்சிருக்காங்க. அந்த எதிர்பார்ப்பைச் சமாளிப்பது பெரிய சவால். என் ஆக்கர் ஸ்டுடியோவை நான் வெளியில் இருந்து ஃபைனான்ஸ் வாங்கித்தான் நடத்திட்டு இருக்கேன். இதுக்காக நான் அப்பாகிட்ட ஒரு தடவைகூடப் பணம் கேட்டதில்லை!’

-சமீபத்தில் நடந்த எப்ஐசிசிஐ மாநாட்டில் சௌந்தர்யா பேசியது.

-என்வழி




One thought on “அழுத குழந்தையை புன்னகைக்க வைக்கும் ரஜினி ஸ்டைல்!

  1. r.v.saravanan

    புதிய பதிப்பைக் கேட்டு சந்தோஷத்தில் ரஹ்மானைப் பாராட்டினாராம் ரஜினி.

    songs ketka சந்தோஷத்தில் avalai kathirukirom………..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *