BREAKING NEWS
Search

அருமையான படமாக்கம்… மோசமான எடிட்டிங்… காட்சிகளில் குழப்பம்! – ராவணன் பற்றி அமிதாப்

அருமையான படமாக்கம்… மோசமான எடிட்டிங்… காட்சிகளில் குழப்பம்! – ராவணன் பற்றி அமிதாப்

மும்பை: ராவணன் படம் அருமையாக படமாக்கப்பட்டுள்ளது. ஆனால் மோசமாக எடிட் செய்யப்பட்டுள்ளதால் முக்கிய கததாபாத்திரம் எப்போதும் குழப்பதுடன் காட்சி தருகிறது என அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.

ராவணன் படம் இந்தியில் ராவண் ஆக வெளியாகியுள்ளது. அபிஷேக் பச்சன் ஹீரோவாக நடித்துள்ளார். இந்தப் படம் குறித்து அமிதாப்பச்சன் அதிருப்தி அடைந்துள்ளார். தனது மகன் அபிஷேக் பாத்திரம் தொடர்புடைய முக்கிய காட்சிகள் வெட்டி எறியப்பட்டுள்ளதால் குழப்பம் உள்ளதாக அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

ராவண் படத்தின் சிறப்புக் காட்சி லண்டனில் நடந்தது. இந்த காட்சியை அமிதாப்பச்சன், ஜெயா பச்சன், அபிஷேக் பச்சன், விக்ரம், ஷாருக்கான் உள்ளிட்டோர் பார்த்தனர். படம் குறித்து அமிதாப் பச்சன் இப்படிக் கூறினார்:

ராவண் படமாக்கப்பட்ட விதம் ஒரு பெரிய ஆச்சர்யம். இந்தப் படத்தைப் பார்த்தது ஒரு அற்புதமான அனுபவம்.

மணிரத்னம் இந்திய சினிமாவுக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய சொத்து. காட்சிகளில் அவரது அணுகுமுறை, அவரது மனம், அவரது அறிவு, பல்வேறு கதைக் களங்களை வெளிக்கொண்டு வருவதில் அவரது கெட்டிக்காரத்தனம் தனித்துவம் மிக்கது. அவரது படைப்புகள் உற்சாகம் தருபவை.

ஆனால் ராவண் மோசமாக எடிட் செய்யப்பட்டுள்ளது. எடிட்டிங் செய்யப்பட்டபோது படத்தின் முக்கிய காட்சிகள் வெட்டி எறியப்பட்டுள்ளதால் அபிஷேக்கின் கதாபாத்திரமான பீரா எப்போதும் குழப்பமாகவே காட்சி அளிக்கிறது. இதுவே படத்துடன் ஒன்ற விடாமல் செய்துவிட்டது..,” என தெரிவித்துள்ளார்.

ரசிகர்களே சொல்லட்டும்….

அமிதாப் கருத்துக்கு ராவணன் தமிழ்ப் படத்தின் கதாநாயகன் விக்ரமும், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனும் பதில் அளித்துள்ளனர்.

நடிகர் விக்ரம் கூறும்போது, “நான் அமிதாப்பச்சனை மதிக்கிறேன். மணி ரத்னம் சாரையும் மதிக்கிறேன். இது அவர்களுக்கிடையேயான பிரச்சினை. நான் கருத்து தெரிவிக்க முடியாது. அதே நேரத்தில் இது தொடர்பாக 100 விதமான கருத்துக்கள் வரலாம். சிலர் நன்றாக இருக்கிறது என்கிறார்கள். சிலர் மோசமாக இருக்கிறது என்கிறார்கள். ஆனால் இறுதி முடிவை ரசிகர்களே சொல்லட்டும்…” என்றார்.

‘வெட்டுவது இயக்குநரின் உரிமை’!

சந்தோஷ் சிவன் பதில் அளிக்கும்போது “எல்லோருக்கும் அவரவர் கருத்துக்களை தெரிவிக்கிற உரிமை உள்ளது. தெற்கே மிகப் பெரிய வெற்றி கண்டுள்ள ராவணன் படம் பற்றி, ஒரு மாறுபட்ட கோணத்திலான கருத்தை அமிதாப் சொல்லியிருக்கிறார். அதே நேரத்தில் எதையெல்லாம் வெட்டி எறிவது என்பது ஒரு படத்தின் இயக்குனரின் பிரத்யேக உரிமை. அதை யாரும் கேள்வி கேட்க முடியாது,” என்றார்.




6 thoughts on “அருமையான படமாக்கம்… மோசமான எடிட்டிங்… காட்சிகளில் குழப்பம்! – ராவணன் பற்றி அமிதாப்

  1. mukesh

    //நடிகர் விக்ரம் கூறும்போது, “சிலர் நன்றாக இருக்கிறது என்கிறார்கள். சிலர் மோசமாக இருக்கிறது என்கிறார்கள். ஆனால் இறுதி முடிவை ரசிகர்களே சொல்லட்டும்…” என்றார்.//

    //சந்தோஷ் சிவன் பதில் அளிக்கும்போது “எல்லோருக்கும் அவரவர் கருத்துக்களை தெரிவிக்கிற உரிமை உள்ளது. //

    சம்பந்தப்பட்டவர்களே நல்லாத்தான் புரிஞ்சி இருக்காங்க.

    ஆனால் அப்புறம் என்ன நீங்க ஆரம்பிங்கய்யா….. அமிதாப்பை. திட்டுங்க சந்துல சம்பந்தமே இல்லாமே ரஜினியையும் வம்புக்கு இழுங்க.

  2. Ravanan

    வாடா இந்தியனின் ரசனை வேற – தென் இந்தியனின் ரசனை வேற. வாடா இந்தியாவில் படத்தின் பெயர் ராவன் – தென் இந்தியாவில் படத்தின் பெயர் ராவணன்.

    “தெற்கே மிகப் பெரிய வெற்றி கண்டுள்ள ராவணன் படம் பற்றி, ஒரு மாறுபட்ட கோணத்திலான கருத்தை அமிதாப் சொல்லியிருக்கிறார்.”

  3. Ravanan

    ஐயா … ரஜினிக்கு பேரன் பிறந்திருக்கிறான்….

  4. senthil

    மணிரத்தினம் தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்புவதில் வல்லவர்.

  5. Manoharan

    ///தெற்கே மிகப் பெரிய வெற்றி கண்டுள்ள ராவணன…./

    அப்படின்னு யாருங்க சொன்னது…?

  6. Rasigan

    இவன் மகனுக்கு நடிக்க தெரியாது. என்ன பாத்திரமா இருந்தாலும் நம்ம விக்ரம் சும்மா சாதரணமா நடிச்சிட்டு போயிருவாரு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *