BREAKING NEWS
Search

அரவான்… 18-ம் நூற்றாண்டைப் பதிவு செய்யும் வசந்த பாலன்!

வசந்த பாலனின் ‘அரவான்’!

பொதுவாக யாரும்  தோல்வியுற்றவனின் வாழ்க்கையை கலை வடிவில் கூட தொட்டுப் பார்க்க விரும்புவதில்லை. ஆனால் அதையே வெயிலாக எடுத்து வெற்றி கண்டவர் வசந்தபாலன். அந்தப் படம் நூறு நாட்களுக்கும் மேல்  ஓடி தேசிய விருது, தமிழக அரசு விருது உட்பட 26 விருதுகளைப் பெற்றது. உலகப் புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றது.

அடுத்து, இந்தியாவின் மிகப் பிரபலமான, பரபரப்பான, வணிக வீதியான ரங்கநாதன் தெரு தொழிலாளர்களின் அவல வாழ்க்கையை அங்காடித் தெரு என்ற திரைப்படமாக பதிவு செய்தார். பத்திரிகை மற்றும் அனைத்து ஊடகங்களின் பாராட்டையும் பெற்றது அந்தப் படம்.

முன்னணி நடிகர்களின் தோல்விப் பட நஷ்டத்தால் துவண்டு போயிருந்த கோடம்பாக்கத்தை, தனது பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் மூலம் நிமிர வைத்தது இந்தப் படம். நூறு நாட்களைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது.

படத்துக்குப் படம் வித்தியாசமான, சுவாரஸ்யமான முயற்சிகளை மேற்கொள்ளும் வசந்தபாலன், தனது நான்காவது படத்தில் 18-ம் நூற்றாண்டின் தமிழக மக்களின் வாழ்க்கையை, கலாச்சாரத்தை, வீரத்தை, காதலைப் பதிவு செய்யும் முயற்சியை மேற்கொண்டுள்ளார் (வசந்தபாலன் முதல் படம் ‘ஆல்பம்’).

அரவான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை அம்மா கிரியேஷன்ஸ் டி சிவா தயாரிக்கிறார்.

அரவான் என்றால் ஆண்மை மிகுந்தவன், சர்வ லட்சணங்கள் பொருந்தியவன், மகா வல்லமை படைத்தவன், இளகிய மனம் கொண்டவன் என்று அர்த்தம் சொல்கிறது பாரதம்.

இந்தப் படத்தில் அரவானாக நடிப்பவர் ஆதி. மிருகம், ஈரம், விரைவில் வெளியாகவுள்ள அய்யனார், ஆடுபுலி படங்களின் நாயகன் இவர். இவருக்கு ஜோடியாக பேராண்மைத் படத்தில் 5 நாயகிகளில் ஒருவராக நடித்த தன்ஷிகா நடிக்கிறார். முக்கியக் கதாபாத்திரத்தில் பசுபதி நடிக்கிறார்.

இயல்பான கிராமத்து முகங்களை பெருமளவில் நடிகர்களாக்கும் தேடுதல் முயற்சி, நூறு கிராமங்களில் நடந்து கொண்டிருக்கிறது.

வெயில் திரைப்படத்தில் பின்னணிப் பாடகர் ஜி.வி பிரகாஷை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியவர், இந்தப் படத்தில் பிரபல பின்னணிப் பாடகர் கார்த்திக்கை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்துகிறார். யாரடி நீ மோகினி, குங்குமப் பூவும் கொஞ்சு புறாவும் ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சித்தார்த் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.

படப்பிடிப்பின் முன் தயாரிப்பு வேலைகள் போர்க்கால அடிப்படையில் நடக்கின்றன. மிகப் பிரம்மாண்டமாக, தமிழ் மற்றும் தெலுங்கு என ஓரே நேரத்தில், இரு மொழிகளிலும் பல கோடி ரூபாய் பொருட் செலவில், இதுவரை திரையில் பதிவாகாத, இந்தியாவின் முக்கியப் பகுதிகளில் படமாக்கப்பட இருக்கும் இப்படம் இம்மாத இறுதியில் துவங்குகிறது.

மக்கள் தொடர்பாளராக நிகில் பணியாற்றுகிறார்.
6 thoughts on “அரவான்… 18-ம் நூற்றாண்டைப் பதிவு செய்யும் வசந்த பாலன்!

 1. Barani

  it is not 3rd movie for vasnathabalan, It is fourth movie.
  1.Album
  2.Veyil
  3.Angadi theru
  4.Aravan
  ____________

  நன்றி. திருத்தப்பட்டது.

 2. Dinesh

  திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகின்றேன். களவாணி விமர்சனம் எப்போ போடுவீங்க ?

 3. r.v.saravanan

  பதினெட்டாம் நுற்றாண்டின் பின்னணியில் உருவாகும்
  வசந்த பாலனின் அரவான் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

 4. ramji_yahoo

  நான் வசந்த பாலன், இதை விட சிறப்பான மாறுபட்ட கதை காலத்தோடு வருவார் என நினைத்து இருந்தேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *