BREAKING NEWS
Search

அரசு விழாவாக நடக்கிறது திருவள்ளுவர் சிலை திறப்பு… பெங்களூரில் கோலாகல ஏற்பாடு!


அரசு விழாவாக நடக்கிறது திருவள்ளுவர் சிலை திறப்பு… பெங்களூரில் கோலாகல ஏற்பாடு!

பெங்களூர்: பெங்களூரில் திருவள்ளுவர் சிலைத் திறப்பு விழாவை 1373070307_cd51ad9267அரசு விழாவாக நடத்துகிறது கர்நாடக அரசு. எனவே இந்த விழாவை தமிழர் திருவிழாவாக கொண்டாட பெங்களூர்த் தமிழ்ச் சங்கம் திட்டமிட்டுள்ளது.

பெங்களூர் தமிழ்ச்சங்கம் சார்பில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை ஒரு வழியாக வருகிற 9ம் தேதி திறப்பு விழா காண்கிறது. தமிழக முதல்வர் கருணாநிதி இந்த சிலையைத் திறந்து வைக்கிறார்.

சிலை திறப்புக்கு ஒரு காலத்தில் இடையூறாக இருந்து வந்ததாக கூறப்பட்ட கர்நாடக அரசே இப்போது விழாவை ஏற்று நடத்துகிறது. அதாவது இனி இது அரசு விழா.

அதனால், இந்த விழாவை, தமிழர் விழாவாக கோலாகலமாக கொண்டாட பெங்களூர் தமிழ்ச் சங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்த சங்கத்துக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

சிலை சிறப்பு விழா ஏற்பாடுகள் குறித்து நேற்று தமிழ்ச் சங்கத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

ரஜினி சேவா சமிதி…

தமிழ்ச் சங்க தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். கூட்டத்தில், சங்க செயலாளர் கோ. தாமோதரன், துணைத்தலைவர் விவேகானந்தன், பொருளாளர் சம்பத், முன்னாள் தலைவர் இராசு.மாறன், காங்கிரஸ் கட்சியின் நகர மாவட்ட தலைவர் ஜெயகுமரேசன், முன்னாள் கவுன்சிலர் டி.ஏ.சரவணா, பெங்களூர் மக்கள் நலச்சங்க தலைவர் செந்தில்குமார், ரஜினி சேவா சமிதி தலைவர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் பல்வேறு தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகளும், தமிழ் ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விழா ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும் திருவள்ளுவர் சிலை திறப்பு நமக்கு கிடைத்த இமாலய வெற்றி என்றும், இதற்கு முயற்சி எடுத்த தமிழக முதல்வர் கருணாநிதி, கர்நாடக முதல்வர் எடியூரப்பா மற்றும் பெங்களூர் தமிழ்ச் சங்கத்துக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

மேலும் கூட்டத்தில் தமிழ் அமைப்புகளும், தமிழ் பிரமுகர்களும் தானாக முன்வந்து விழா ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. கூட்டத்தில், பலர் நிதியுதவி வழங்கினார்கள்.

பலர் அலங்கார வளைவுகள் செய்து கொடுப்பதாகவும், வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கு உணவு வசதி செய்து கொடுப்பதாகவும் தெரிவித்தனர்.

தமிழர்கள் அனைவரும் கருத்து வேறுபாடுகள் இன்றி ஒன்றுபட்டு சிலை திறப்பு விழாவை தமிழர்களின் வெற்றி விழாவாகவும், தமிழர்களின் திருவிழாவாகவும் நடத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

இந்த விழாவில் கன்னட மக்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

சிலை திறப்பை எதிர்த்து பந்த் நடத்தப் போவதாக அறிவித்த கன்னட அமைப்பினரும் இந்த விழா நடக்க ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

அனைத்துக் கட்சிக் கூட்டம்!

இதற்கிடையே, அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்புடன் திருவள்ளுவர் சிலைத் திறப்பை நடத்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா முடிவு செய்துள்ளார். இதற்காக அனைத்துக் கட்சியினர் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் பெங்களூர் விதான சபாவில் இன்று நடந்தது.

கூட்டத்துக்கு முன் நிருபர்களிடம் பேசிய எடியூரப்பா, “தமிழக முதல்-அமைச்சரும், நானும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி திருவள்ளுவர் சிலை திறக்கப்படும். அதேபோல சென்னையில் சர்வக்ஞர் சிலையும் திறக்கப்படும். திருவள்ளுவர் சிலையை திறக்க எதிர்ப்பு தெரிவிப்பது சரியல்ல.

ஆலோசனை கூட்டத்தில் அனைவரின் ஒருமித்த கருத்தை பெற்று வருகிற 9-ந் தேதி பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறப்பு மிக பிரமாண்டமாக நடத்தப்படும்”, என்றார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *