அரசு கல்லூரிகளில் 1000 உதவி பேராசிரியர் பணியிடங்கள்
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் புதிதாக ஆயிரம் உதவி பேராசிரியர்களை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் முன்பு தொடக்கநிலை ஆசிரியர் பணி, விரிவுரையாளர் (Lecturer) என்று இருந்தது. பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) உத்தரவின்படி, இப்போது விரிவுரையாளர் பதவி நீக்கப்பட்டுள்ளது.
அதற்கு பதில் உதவி பேராசிரியர் பதவி தொடக்கநிலை கல்லூரி ஆசிரியர் பதவியாக மாற்றப்பட்டுள்ளது. மேலும், முன்பு கல்லூரி ஆசிரியர் பணிக்கு முதுநிலை படிப்புடன் எம்.பில். படித்திருந்தால் போதும் என்ற நிலையும் மாற்றப்பட்டுவிட்டது.
எம்.பில். படிப்புக்கு பதிலாக ஸ்லெட் அல்லது நெட் தகுதி தேர்வில் தேறியிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எம்.பில்., பி.எச்டி. முடித்திருந்தால் கூடுதலாக ‘இன்கிரிமெண்ட்’ மட்டும் பெற்றுக்கொள்ளலாம். ஸ்லெட் அல்லது நெட் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே இனி கல்லூரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.
தமிழகத்தில் 1,000 காலி இடங்கள்
தமிழ்நாட்டில் முன்பு அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஆசிரியர் பணி இடங்கள் போட்டித் தேர்வு மூலமாக நிரப்பப்பட்டன. கடந்த சில ஆண்டுகளாக தேர்வு முறை மாற்றப்பட்டு, ஸ்லெட், நெட் தேர்ச்சி, கூடுதல் கல்வித் தகுதி, புத்தகம் மற்றும் ஆய்வுக் கட்டுரை வெளியீடு, பணி அனுபவம் ஒன ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட மதிப்பெண் வழங்கி தேர்வு செய்யும் முறை பின்பற்றப்பட்டு வருகிறது.
அண்மையில் அரசு கல்லூரிகளில் 1,200 விரிவுரையாளர்கள் இதே முறையில் தேர்வு செய்யப்பட்டார்கள். இந்த நிலையில், மேலும், 1,000 ஆசிரியர் பணி இடங்களை நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது. யு.ஜி.சி. உத்தரவின்படி, உதவி பேராசிரியர் என்ற பெயரில் இந்த காலி இடங்கள் நிரப்பப்படும். சம்பந்தப்பட்ட பாடத்தில் முதுநிலை படிப்புடன் ஸ்லெட் அல்லது நெட் தேர்ச்சி கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்படும்.
தேர்வுமுறையில் மாற்றம்?
தேர்வுமுறை, தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வரும் மதிப்பெண் வழங்கும் முறையில் இருக்குமா? அல்லது போட்டித்தேர்வு மூலம் இருக்குமா? என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கூறியுள்ளது.
யு.ஜி.சி புதிய சம்பள விகிதப்படி, உதவி பேராசிரியர் பணிக்கு ரூ.31 ஆயிரமும், எம்.பில், பி.எச்டி. முடித்திருந்தால் கூடுதலாக ரூ.2 ஆயிரமும் பெற முடியும்.
உதவி பேராசிரியர் பதவியில் சேருபவர்கள், அடுத்து இணை பேராசிரியர், பேராசிரியர், துறைத்தலைவர், கல்லூரி முதல்வர் (கிரேடு-2), முதல்வர் (கிரேடு-1), கல்லூரி கல்வி இணை இயக்குனர் என்று பதவி உயர்வு பெறலாம்.
ஸ்லெட் / நெட் தேர்வு குறித்து பல்கலைக் கழகங்களை அணுகி, விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
செவி குளிரும் செய்தி..
காலையில் படித்ததும் மகிழ்ச்சி…
நெட்,ஸ்லெட் தேர்வுகளில் தேர்வு பெற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுத்த பின்பு எஞ்சியவர்களுக்கு வாய்பளிப்பது தானே முறை..