BREAKING NEWS
Search

அரசியல்… கட்சி… மன்னிப்பு!- விஜய் கிளப்பும் பரபரப்பு

அரசியல்..கட்சி..மன்னிப்பு!- விஜய் கிளப்பும் பரபரப்பு

நான் அரசியலுக்கு வருவதை எண்ணி ‘அண்ணன் விஜய்காந்த்’ பயப்படுகிறார் என்று என் அப்பா சொன்னதாக வந்த தகவல்கள் முற்றிலும் vijay1உண்மையற்றவை. இதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும், விஜய்காந்தை அந்த செய்தி புண்படுத்தும் என்பதால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” என்று நடிகர் விஜய் கூறினார்.

விஜய் தனிக்கட்சி துவங்குகிறார் என்று பரபரப்பான செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இதுகுறித்து சில வார இதழ்களுக்கும் அவர் பேட்டியளித்து வருகிறார். நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என்று அவர் கூறிவருகிறார்.

சமீபத்தில் குமுதத்துக்கு அளித்த பேட்டியிலும் தனது அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தியுள்ளார் விஜய்.

இந் நிலையில், விஜய் அரசியலுக்கு வருவதையெண்ணி விஜய்காந்த் பயப்படுவதாக, விஜய்யின் தந்தை எஸ்ஏ.சந்திரசேகரன் கூறியதாக சில பத்திரிகைகளில் செய்தி வெளியானது.

இது விஜய்காந்த் தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு விஜய் அளித்துள்ள விளக்கம்:

நான் அரசியலுக்கு வர விரும்புவது உண்மையே. அதற்கான ஆலோசனைகளும் நடந்தன. நடந்து கொண்டுள்ளன. ஆனால் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.

என்னுடைய ரசிகர்கள் என்மீது மிகப் பெரிய நம்பிக்கையை வைத்துள்ளனர். என் அரசியல் சிறப்பானதாக இருக்க வேண்டும் என்பதற்காக தங்கள் சக்திக்கு மீறிய உதவிகளை அவர்கள் செய்து வருகிறார்கள்.

இந்த நற்பணி மன்றங்களை அரசியல் அமைப்பாக மாற்றி, இன்னும் பெரிய அளவில் ஜனங்களுக்கு உதவணும் என்பது இவர்களின் விருப்பம். அவர்கள் சொல்வதில் உள்ள உண்மையும், நடைமுறை நியாயமும் எனக்குப் புரிகிறது.

என் வளர்ச்சிக்கு காரணமான ரசிகர்களுக்கும், அவர்களின் எதிர்காலத்துக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்று நீண்டகாலமாக எனக்குள் திட்டம் இருந்தது.

அதேபோல் ஒவ்வொரு வீட்டிலும் என்னை குடும்பத்தில் ஒருவனாக நினைக்கும் தமிழக மக்களுக்கு நிறைய நன்மைகள் செய்ய ஆசைப்படுகிறேன். அதனால் அரசியலுக்கு வரவேண்டும் என்ற ரசிகர்களின் வேண்டுகோளில், எனக்கும் உடன்பாடு ஏற்பட்டது. நிச்சயம் அரசியலுக்கு வருவேன்.

இது தொடர்பாக ரசிகர்களின் விருப்பத்தை மட்டுமல்லாமல், பொதுமக்களின் கருத்தையும் கேட்டு அறிய விரும்பினேன். இதற்காக சென்னையிலும், சில மாவட்ட தலைநகரங்களிலும் ஆலோசனை கூட்டங்கள் நடந்தன. படித்த இளைஞர்கள், பெண்கள் என பல பிரிவினரிடம் கருத்துக்களை கேட்டு, என் ‘மூளையில்’ பதிவு செய்து, அதற்கான தகுந்த நேரத்துக்காக காத்திருக்கிறேன்.

எடுத்தேன், கவிழ்த்தேன் என்று உடனடியாக அரசியலில் குதிப்பதிலும், கட்சி தொடங்குவதிலும் எனக்கு உடன்பாடு இல்லை.

மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்..!

சமீபத்தில் என் தந்தை அளித்த ஒரு பேட்டியில், என்னுடைய அரசியல் பிரவேசத்தை நினைத்து விஜய்காந்த் பயப்படுகிறார் என்று கூறியதாக செய்தி வந்துள்ளது.

நிச்சயம் இது உண்மையாக இருக்காது. காரணம் என் வளர்ச்சியில் பெரிதும் அக்கறை கொண்டவர் விஜய்காந்த். சினிமாவில் எனக்கு பல உதவிகளை செய்தவர். அப்பாவின் நீண்டகால நண்பர். அவர் எங்கே, நான் எங்கே? எங்கோ தப்பு நடந்து இருக்கிறது. அதற்காக, நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

அதேபோல வேறு யாருக்கும் நான் போட்டியாகவோ, அவர்களின் வளர்ச்சியைத் தடுக்கும் விதத்திலோ இருக்கமாட்டேன். மக்களுக்கு நல்லது செய்யவே நான் அரசியலுக்கு வருகிறேன்…”, என்றார்.

வரும் 22ம் தேதி தனது பிறந்த நாளன்று இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவிருக்கிறாராம். ஆனால் பெரிய மாநாடு கூட்டுவதாக இருந்த திட்டத்தை மட்டும் ஒத்தி வைத்துள்ளாராம்.
12 thoughts on “அரசியல்… கட்சி… மன்னிப்பு!- விஜய் கிளப்பும் பரபரப்பு

 1. r.v.saravanan

  makkalukku nalladu pannanum nu arasiyalukku vanga

  rasigargalkku yethavadhu pannanum nu varadinga

 2. Rajan

  //படித்த இளைஞர்கள், பெண்கள் என பல பிரிவினரிடம் கருத்துக்களை கேட்டு, என் ‘மூளையில்’ பதிவு செய்து, அதற்கான தகுந்த நேரத்துக்காக காத்திருக்கிறேன்.
  //

  மூளையா ? அப்படி ஒன்று இருந்தால் நீங்கள் அரசியலை பற்றி நினைக்க கூட கூடாது. முதலில் தெலுங்கு படத்தை காப்பி அடிக்காமல் ஒரு ஹிட் படம் பண்ணுங்க . அப்புறம் அதெல்லாம் பத்தி யோசிக்கலாம் ..

  என்ன தகுதி இருக்குன்னு இப்ப அரசியலுக்கு வரீங்க ….

  இந்த கூத்தெல்லாம் பாத்தா தலைவரின் இந்த பாபா வசனம் தான் நியாபகத்துக்கு வருது
  “நெனச்சவநெல்லாம் CM . எப்பேர்பட்ட பதவி எவ்வளோ அறிவு வேணும் எவ்வளோ தியாகம் வேணும் ”

  இனிமே அந்த ஆண்டவனே நெனச்சாலும் தமிழ் நாட்ட காப்பாத்த முடியாது போல….

  ராஜன் .

 3. Rajan

  //விஜய் அரசியலுக்கு வருவதையெண்ணி விஜய்காந்த் பயப்படுவதாக, விஜய்யின் தந்தை எஸ்ஏ.சந்திரசேகரன் கூறியதாக சில பத்திரிகைகளில் செய்தி வெளியானது.
  //

  ஐய்யய்யோ .. உங்க ரெண்டு பேரையும் நெனைச்சு ஜனங்க தான் பயப்படனும் ..

 4. வடக்குப்பட்டி ராமசாமி

  விஜய்காந்த் ஒன்னும் எடுத்தவுடனே அரசியலுக்கு வரவில்லை, அதுக்கு முன்னாலை நிறைய ஹோம் வொர்க் பண்ணிட்டுத்தான் வந்தாரு!

  அவர நினைச்சுகிட்டு வந்தா அப்பறம் பாக்யராஜ் நிலைமைதான்!

  ஹோம் வொர்க்-ன்னா மக்களுக்கு மக்களுக்கு நல்லது பண்றது இல்லை, கட்சிய எப்படி நடத்துறது!

 5. s.vasanth

  ivvanukku enna thakuthi irukku, nam thalivrai thavira vera nermaiyana oru manithar yarum thirai ulakil yarum illai ,avarukku maddumthan cm akum thakuthi ullathu,

 6. harisivaji

  ஏற்கனவே அரசியல் ஒரு சாக்கடை சொல்லுவாங்க
  நீ வந்து அத செப்டிக் tanka மாத்திடு
  உனக்கு விஜயகாந்த் எவ்வளவோ பரவல்யே
  எல்லாம்
  தலையெழுத்து

 7. Manithan

  indha kodumaiya ellam makkal anupavika venuma….vendam ithoda niruthikuvom….. enaku kopam varadhu……

 8. bala

  Ivanga yellam unmayileye makkalukku nallathu seiya thaan katchiarambikirangala? Aaiya Vijay…mothalla nee nalla nadika kadthukko…makkalukku arasiyi illamale nee nallathu seiyalam!!! Neenga ithuvaraikum yenna nalla kariyam seithu irrukeenganu mothalla sollunga!!!

 9. kar

  அண்ணா வணக்கம் அண்ணா தமிழ்நாடுல நிறைய கட்சி இருக்கு அதுல எதவுல சேர்ந்து நன்மை செய்யலாம் உங்க உழைப்பல முதல்வர் ஆகலாம் கட்சி எல்லாம் நமக்கு எதுக்கு அப்பறம் மாமா டவுசர் கிளிசுந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *