BREAKING NEWS
Search

‘அரசியலுக்கு வருவியா, மாட்டியா..?’ – ரஜினி – கேபி அசத்தல் நேர்காணல்!

தமிழர்களுக்கு பெருமை தரும் விஷயத்தைச் செய்வேன்! – ரஜினி – கேபி நேர்காணல்

ன்று உலக சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்தாலும், தன்னை அபூர்வ ராகங்களில் அறிமுகப்படுத்திய இயக்குநர் கே பாலசந்தரை குரு ஸ்தானத்தில் வைத்து வணங்குபவர் சூப்பர் ஸ்டார் ரஜினி.

சனிக்கிழமை மாலை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் 40 வது ஆண்டு விழாவின் சிகரமாய் அமைந்தது அந்த நேர்காணல் நிகழ்ச்சி.

ஒவ்வொரு இயக்குநரும் தாங்கள் அறிமுகப்படுத்திய மாணவரிடம் சில கேள்விகளைக் கேட்க வேண்டும் என்பது கான்செப்ட். இந்த நிகழ்ச்சிக்கு மகுடம் வைத்தது போல அமைந்தது குரு பாலச்சந்தர் – மாணவர் ரஜினி நேர்காணல்.

பாலச்சந்தரின் ஒவ்வொரு கேள்விக்கும் ரஜினி பதிலளித்த விதம், வேகம், தெளிவு… அபாரம்!

‘உனக்குப் பிடிச்ச இயக்குநர் யார்.. தயங்காம சொல்லு?’ இப்படி ஒரு கேள்வியை கேபி கேட்க, அதற்கு சற்றும் யோசிக்காமல் ‘மகேந்திரன்’ என்று ரஜினி பதில் தர, ஒரு நிமிடம் ஸ்தம்பித்து அதிர்ந்தது அரங்கம். நேர்மையின் மறுபெயர் ரஜினி என்றால் மிகையல்ல!

இந்த தமிழ் சினிமாவுக்கும் தமிழ் நாட்டுக்கும் என்ன செய்யப் போகிறாய்? என்ற கேள்விக்கு ரஜினி அளித்த பதில், அவர் மனதில் இந்த மக்களுக்காக மிக அழுத்தமான திட்டங்கள் உள்ளதை வெளிச்சம்போட்டுக் காட்டியது.

ஒரு குறும்புக்கார அப்பாவுக்கும் பாசமிக்க மகனுக்குமான உரையாடலைப் போல அத்தனை பாந்தமாக அமைந்த நிகழ்ச்சி இது என்பதே சரியாக இருக்கும்.

நிகழ்ச்சியை கேபி இப்படி ஆரம்பித்தார்:

ரஜினி இன்றைக்கு உலக சினிமாவுக்குப் போய்விட்டார். இந்திய சினிமாவின் உச்ச நடிகர். எவ்வளவோ வளர்ந்து விட்ட நிலையிலும் இன்றும் எனக்கு அவர் மாணவன்தான். என்னை எப்போதும் குருவாகவே மதிக்கிறார். அவரிடம் கேட்க ஏராளமான கேள்விகளை வைத்திருக்கிறேன். இந்த விழா மேடையில் கேட்டுவிடப் போகிறேன்… இந்த மேடையைப் பொறுத்தவரை என்னை குருன்னு நினைக்காம ஒரு பிரஸ்காரனா அவர் நெனச்சிக்க வேண்டியதுதான். அவருக்கு பதில் சொல்ல தயக்கமா இருக்கிற கேள்விகளுக்கு தாராளமா நோ கமெண்ட்ஸ்னு சொல்லிடலாம்…”

– கேபி இப்படிச் சொன்னதும் பதில் சொல்லத் தயாரானார் ரஜினி.

அந்த அசத்தலான கேள்வி – பதில்:

கேபி: சிவாஜி ராவை நான்தான் நடிகனாக்கினேன். ஆனால் இப்போது, எந்திரனுக்குப் பிறகு, நினைத்துப் பார்க்க முடியாத பெரிய உயரத்தில் நீ இருக்கிறாய். அதுவும் மூன்று இமயமலை உயரம்… இப்போ மீண்டும் உன்னால் சிவாஜி ராவாக முடியுமா?

ரஜினி: நான் இன்னும் சிவாஜி ராவாகவே இருக்கிறதாலதான் ரஜினிகாந்த்தா இருக்க முடியுது. இந்த பேர், புகழெல்லாம் சிவாஜி ராவை பாதிக்கவில்லை!

கேபி: இன்னைக்கு நீ பெரிய நடிகன். உன்னால நினைச்சமாதிரி எங்கும் போக முடியாது. ஊரில் உள்ள சரவணபவனையெல்லாம் விலைக்கு வாங்கும் அளவுக்கு நீ இருந்தாலும், அதே ஹோட்டலில் போய் உன்னால உட்கார்ந்து சாப்பிட முடியாது.. நடிகரான பிறகு நிறைய இழந்துட்டோமேங்கிற வருத்தம் உண்டா?

ரஜினி: சாதாரண மனிதர்களைப் போல எனக்கும் ஓட்டல்களுக்கு சென்று சாப்பிட்டு வர ஆசை உண்டு. அந்த சந்தோஷத்தை இழந்துவிட்டேன். சில நேரங்கள்ல நிம்மதியை இழந்திருக்கிறேன். சூழ்நிலை கைதியாக இருக்க வேண்டியும் உள்ளது. இவைகளை தியாகம் செய்துதான் இந்தப் புகழை அடைந்திருக்கிறேன்.

‘மகாத்மாவின் துணிச்சல் எனக்கும் வரும்போது…

கேபி: உன்னோட வாழ்க்கை வரலாற்றை சுயசரிதையாக எழுதலாமே…?

ரஜினி: சுயசரிதை எழுதினால் உண்மைகளை மறைக்காமல் அதில் குறிப்பிடவேண்டும். நான் உண்மைகளை அப்படியே எழுதினால் நிறைய பேர் மனசு கஷ்டப்படும். மகாத்மா காந்தியிடம் சுயசரிதை எழுதுவதற்கு தைரியம் இருந்தது. அந்தத் தைரியம் எனக்கும் வரும்போது எழுதுவேன்.

கேபி: உன்னை உச்சத்தில் வைத்துள்ள சினிமாவுக்கு என்ன செய்யப் போகிறாய்?

ரஜினி: நிச்சயம் நல்லது செய்வேன். தமிழர்களும், தமிழ் சினிமாவும் பெருமைப் படுகிற மாதிரி ஒண்ணை நிச்சயம் செய்வேன் (விசில் – கைதட்டல் பறக்கிறது).

கேபி: இன்னிக்கு நீதான் இந்தியாவின் உச்ச நட்சத்திரம். வட இந்திய மீடியாவே சொல்லுது. டிவியில பார்த்தேன். இந்த நிலையை தக்க வைக்க என்ன பண்ணப் போறே?

ரஜினி: இதை எதிர்ப்பார்த்து நான் எதையும் செய்யல. அதனால காப்பாத்திக்கவும் முயற்சி பண்ணலை. நான் என் வேலையை செய்துட்டு இருக்கேன். இப்போ இருக்கிற நிலை ஒரு எந்திரனால மட்டும் வந்ததில்லை. அதுக்கு முன்ன நான் பண்ண நிறைய படங்களும் காரணம். அதேநேரம், இந்த நிலையை எப்படி தக்க வச்சிக்கப் போறோம்ங்கிற பயம் இருக்கத்தான் செய்யுது.

கேபி: சில்வர்ஸ்டர் ஸ்டெலோன் மாதிரி ஒரு ஒன்மேன் ஆர்மி நீ. உன்னோட பன்முகப் பரிமாணத்தைக் காட்டும் அளவு படம் எடுக்க இனி யாராலும் முடியாதுன்னு நினைக்கிறேன். நீயே ஏன் ஒரு படத்தை இயக்கக் கூடாது?

ரஜினி: படங்களை டைரக்டு செய்யற ஐடியா எதுவுமில்லை. அது எனக்குத் தெரியாதது. நிறைய பொறுப்புமிக்கது.

கேபி: ஒருவேளை நீ படம் டைரக்ட் பண்ணா என்னை உதவியாளரா சேர்த்துக்குவியா?

ரஜினி: நிச்சயம் உங்களை உட்கார வச்சி வணங்கி, நீங்க சொல்ற வேலையை செய்வேன்.

கே பி: இதுவரை எத்தனை படங்கள் நடிச்சிருப்பே?

ரஜினி: (சற்றும் யோசிக்காமல்) 154 படங்களில் நடித்துள்ளேன்.

கேபி: இந்தப் படங்களில் நாம நடிக்காம போயிட்டோமேன்னு நினைச்சுதுண்டா..?

ரஜினி: ஓரிரு படங்கள் உண்டு.

கேபி: என்னென்ன படங்கள்னு சொல்ல முடியுமா?

ரஜினி: இல்லே… இப்போ சொல்றது சரியா இருக்காது. நான் சொல்லவும் விரும்பல.

கேபி: வீரபாண்டிய கட்ட பொம்மன், எங்க வீட்டுப்பிள்ளை போன்ற பல படங்கள் இப்போதும் பேசப்படுகிறது. அதுபோல் 50 ஆண்டுகளை தாண்டியும் நிற்கிற உன்னோட படங்கள்ன்னு எதைச் சொல்லுவே?

ரஜினி: ராகவேந்திரா, பாட்ஷா, எந்திரன்.

கேபி: நீ மிகச் சிறந்த நடிகன். ஆனா தேசிய விருது கிடைக்கலேன்னு ரசிகர்களைப் போலவே எங்களுக்கும் ஏக்கம் உண்டு. எப்போது தேசிய விருது பெறுவாய்?

ரஜினி: அது டைரக்டர்ஸ் கையில இருக்கு.. நீங்க பண்ணினா கிடைக்கலாம்!

கேபி: அது  இனிமே முடியாதுப்பா… உன்னை வெச்சு என்னால படம் எடுக்க முடியாது.நீ எங்கேயோ போயிட்ட, உன் இமேஜுக்கு நான் படம் பண்ண முடியாது. அது எனக்கு தெரியாது. ஆனா நாடகங்களில் நடிக்கணும் என்ற ஆர்வம் உனக்கு உண்டு. நீயே பல முறை சொல்லியிருக்கே. இப்போது நாடகங்கள் போட்டால் நடிப்பியா?

ரஜினி: கண்டிப்பா நடிப்பேன்.

கேபி: மேஜர் சந்திரகாந்த் நாடகத்தை ஏப்ரல் 15-ந் தேதி போடப் போறேன். இரண்டு நாள் உன்னோட கால்ஷீட் வேணும்…  மேஜரா நடிப்பியா?

ரஜினி: நீங்க சொன்னா, சரி.

கேபி: கமல் என்னை நடிக்க வைச்சு டைரக்ட் பண்றேன்னு சொல்றார்.. ஆனா நீ ஏன் அது மாதிரி சொல்ல மாட்டேன்ற..?

ரஜினி: ஐடியா இருந்தா சொல்றேன்..

சிகரெட் பிடிப்பதை குறைத்துவிட்டேன்!

கேபி: சினிமாவுக்கு வந்த புதிதில் சிகரெட்டை தூக்கி போட்டு ஸ்டைல் காட்டினே. சிகரெட்டும் அதிகமா பிடிப்பே. இப்போ குறைச்சிட்டியா?

ரஜினி: ஆமா, சிகரெட் பிடிப்பதை இப்போ குறைச்சிட்டேன்.

கேபி: நீ விட்டுட்டா நாட்ல நிறைய பேர் விட்டுடுவாங்க. உனக்கே தெரியும் நான் பாக்கெட், பாக்கெட்டா ஒரு நாளைக்கு எத்தனை ஊதியிருக்கேன்னு. ஆனா நானும் ஒரு நாள் விட்டேன். நீயும் விட்டுடு.. சரியா.?

ரஜினி: சரி.. முயற்சி பண்றேன் (அப்போது இடையில் குறுக்கிட்ட இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், “அவரை சிகரெட் பிடிக்க வெச்சதே நீங்கதான்” என்று கலாய்க்க, கேபியோ, ‘நான் அவனை சிகரெட்டை தூக்கிப் போட்டு ஸ்டைல்தான் பண்ணச் சொன்னேன், புகைய விடச் சொல்லலய்யா’, என்றார்!)

கேபி: சரி.. நான் இயக்கிய படங்களில் உனக்குப் பிடிச்ச படங்கள் என்னென்ன?

ரஜினி: 2 படங்கள் ரொம்ப பிடிக்கும். ஒண்ணு, அவள் ஒரு தொடர்கதை. இன்னொன்னு அரங்கேற்றம்.

கேபி: எந்திரன் படத்தை 2 தடவை பார்த்தேன். ரொம்ப அருமையா பண்ணியிருந்தே… ஹேட்ஸ் ஆஃப். என் வாழ்க்கைல சந்திரலேகாவுக்கு அப்புறம் ரெண்டாவது முறை பார்த்த படம் எந்திரன்தான். உனக்காகத்தான்…

ரஜினி: உங்க பெருந்தன்மை சார்…

கேபி: சரி, நீ என் படத்தை எப்பவாவது 2 தடவை பார்த்திருக்கியா?

ரஜினி: நிறைய பார்த்திருக்கேன்.. சர்வர் சுந்தரம், அபூர்வ ராகங்கள், அவர்கள், அரங்கேற்றம்… அவர்கள் படத்தை மட்டும் 8 முறை பார்த்தேன். அரங்கேற்றத்தை 12 முறை பார்த்தேன். (நம்ப முடியாமல் நிஜமாகவா என்று கேட்கிறார் கேபி)

கேபி: எந்திரன் மாதிரி இன்னொரு படம் எடுக்க முடியுமா தெரியல. அருமையை பண்ணியிருந்தே. உன்னை சரியா பயன்படுத்தியிருக்கார் ஷங்கர். எந்திரன் உன் அல்டிமேட் படமா..?

ரஜினி: இல்லை (குட்… என்று கூறி ரஜினியைப் பாராட்டுகிறார் கேபி)!

கேபி: எந்திரன் படத்தை முடிச்சிட்ட? மகள்களுக்கும் கல்யாணத்தை முடிச்சிட்டே. அடுத்து என்ன?

ரஜினி:  எதுவும் இல்லை. ஆனா அடுத்த படம் ஒத்துக்கிட்டா கவலை வந்துடும்!

கேபி: ரஜினிகாந்த்ன்னு உனக்கு என்னிக்கு பேர் வைச்சேன்னு ஞாபகம் இருக்கா..?

ரஜினி: ஹோலிப் பண்டிகை அன்னிக்கு..

கேபி: அப்போவெல்லாம் ஒவ்வொரு வருஷமும் ஹோலிப் பண்டிகைக்கும் இந்தப் பேர் வைச்சதை ஞாபகம் வைச்சிருந்து என்னைப் பார்க்க வருவே.. கொஞ்ச வருஷம் வந்தே… அப்புறம் வர்றதில்லையே!

ரஜினி: தப்புதான்… இனிமேல்  கண்டிப்பா தொடர்ந்து வருவேன்.

கேபி: என் படங்கள்ல நடிக்கும்போது ஏன்டா இவங்கிட்ட மாட்டிக்கிட்டோம்னு நினைச்சதுண்டா?

ரஜினி: நிறையவாட்டி…

கேபி: நிறையவாட்டியா.. நான் உன்னைவெச்சு நாலஞ்சு படம்தான் பண்ணிருப்பேன். ஆனால தில்லுமுல்லு படத்தை என்னால மறக்கமுடியாது. இந்தப் படத்துல நடிக்கவே மாட்டேன்னுட்ட… மீசைய எடுக்கணுமேன்னு தயக்கம் உனக்கு. ஆனால் நான்தான் உனக்கு காமெடி நல்லா வரும்னு சொன்னேன்…

ரஜினி: ஆமா.. காமெடி நமக்கு சரிப்பட்டு வருமான்னு யோசிச்சேன்..

கேபி: அப்புறம் அவர்கள் ஷூட்டிங்லே உன்னைத் திட்டிட்டு செட்டிலிருந்து நான் வெளியேறினேனே…

ரஜினி: ஆமா… நல்லா ஞாபகம் இருக்கு.

கேபி: அதை பின்னால் நினைச்சி ரொம்ப வருத்தப்பட்டிருக்கேன். உன்னோட வளர்ச்சியின் ஒவ்வொரு ஸ்டேஜ்லயும் அதை நினைச்சுப் பார்த்து என்னை நானே திட்டிக்குவேன். சரி… பஸ் கண்டக்டரா இருக்கும்போது யாரையாவது லவ் பண்ணியிருக்கியா..?

ரஜினி: ஆமா…

கேபி: என்கிட்ட மட்டும் சொல்லு.. என்ன?

ரஜினி: அப்புறமா சொல்றேன்!

கேபி: திருமதி லதாவை என்கிட்ட அழைச்சிட்டு வந்து அறிமுகப்படுத்தினது நினைவிருக்கா?

ரஜினி: கலாகேந்திரா ஆபீஸ்ல. நான் லதாவை உங்களுக்கு அறிமுகப்படுத்தினதும், “நீ கோவக்காரனாச்சே… உன்னை எப்படி இவங்க சமாளிப்பாங்க?”ன்னு சொன்னீங்க. லதாகிட்ட, “ரொம்ப நல்லவன். ஆனா கோபக்காரன். பார்த்துக்க”ன்னு சொன்னீங்க.

கேபி: இன்னும் ஞாபகம் இருக்கா…  தில்லுமுல்லு சமயத்துலதானே கூட்டிட்டு வந்தே…

ரஜினி: ஆமா, தில்லுமுல்லு ஷூட்டிங்லதான்!

கேபி: உனக்குப் பிடித்த புத்தகம் எது?

ரஜினி: பொன்னியின் செல்வன்.

கேபி: நீ இப்பவும் நினைச்சுப் பார்த்து சந்தோஷப்படுற நாள்..?

ரஜினி: கே.பி. ஸார் என்னை அவர் படத்துல புக் செஞ்ச நாள்..

கேபி: நீ இப்பவும் நினைச்சு துக்கப்படுற நாள்..?

ரஜினி: எங்கப்பா செத்த நாள்.

கேபி: நீ இப்பவும் மறக்காம வைச்சிருக்கிறது..?

ரஜினி: முள்ளும் மலரும் படம் பார்த்துட்டு நீங்க எனக்கு எழுதின லெட்டர்.

கேபி: உனக்குப் பிடிச்ச சூப்பர் ஸ்டார் -அவர் எந்தத் துறையா வேண்டுமானாலும் இருக்கலாம்- யாரு?

ரஜினி: லீ குவான் யூ. நவீன சிங்கப்பூரை உருவாக்கிய தலைவர்.

கேபி: வாழ்க்கையில யாரையாவது பார்த்து பொறாமைப் பட்டிருக்கியா?

பதில்: இமயமலையில் உள்ள துறவிகளைப் பார்த்து ரொம்ப பொறாமைப் பட்டிருக்கிறேன்.

கேபி: உனக்குப் பிடிச்ச இயக்குனர் யார்… தயங்காம சொல்லு!

ரஜினி: மகேந்திரன்.

கேபி: நீ விரும்பிச் சாப்பிடற உணவு எது?

ரஜினி: சிக்கன்.

கேபி: யார்கிட்ட சொல்றான் பாருங்க…  இமயமலையெல்லாம் போறானே, ஏதாவது வெஜ் அயிட்டம் சொன்னான்னா நான் அதை பாலோ பண்ணலாம்னு நினைச்சேன்!  சரி, வாழ்க்கையில் நீ நட்புக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பது எல்லோருக்கும் தெரியும். உனக்கு நெருங்கிய நண்பர் யார்?

ரஜினி: ராஜ் பகதூர்.

கேபி: என்கிட்டே உனக்குப் பிடிக்காத விஷயம் எது?

ரஜினி: உங்க கோபம், அதைக் குறைச்சிக்கணும்!

கேபி: எல்லோரும் கேட்கணும்னு நினைக்கிற கேள்வி இது. நீ அரசியலுக்கு வருவியா மாட்டியா, என்கிட்ட மட்டுமாவது சொல்லு?

ரஜினி: அது அந்த ஆண்டவன் கையில் இருக்கு (மேலே கையைத் தூக்கி காட்டுகிறார்)!

கேபி:  சரி, இப்போ என்கிட்ட ஏதாவது கேட்கணுமா?

கேபி: இந்தக் கேள்வி பதில் எப்போ முடியும் சார்!

குறிப்பு: இந்த கேள்வி பதில் நிகழ்ச்சி தீபாவளியன்று சன் டிவியில் சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாக உள்ளது!

-வினோ

என்வழி ஸ்பெஷல்
52 thoughts on “‘அரசியலுக்கு வருவியா, மாட்டியா..?’ – ரஜினி – கேபி அசத்தல் நேர்காணல்!

 1. S Maharajan

  //உனக்குப் பிடிச்ச இயக்குநர் யார்.. தயங்காம சொல்லு?’ இப்படி ஒரு கேள்வியை கேபி கேட்க, அதற்கு சற்றும் யோசிக்காமல் ‘மகேந்திரன்’ என்று ரஜினி பதில் தர, ஒரு நிமிடம் ஸ்தம்பித்து அதிர்ந்தது அரங்கம். நேர்மையின் மறுபெயர் ரஜினி என்றால் மிகையல்ல!//

  இந்த மனிதனுக்கு ரசிகன் என்பதில் மீண்டும் மீண்டும்
  பெருமை கொள்ளுவோம்

 2. khalifa

  உண்மையை சொல்லி நன்மைகள் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும் நிலை உயரும் பொது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்

 3. Santhosh

  தலைவர் மனதில் பட்டதை சொல்லுவார் என்பதை மீண்டும் ஒரு முறை நிருபித்து உள்ளார்….

  தலைவர் மனதில் ஒரு திட்டம் உள்ளது என்பது மட்டும் தெரிகிறது….

  தலைவர் புள்ளி வைத்தால் போதும் மற்றதை அவரின் ரசிகர்கள் படை பார்த்துகொள்ளும்………………………..
  இதை படித்ததும் எனக்கு பாபா படத்தின் பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது “”” உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன். “”””…

 4. Ravi, USA

  இந்த நிகழ்ச்சியின் வீடியோ கிடைத்தால் லிங்க் போடவும் ப்ளீஸ்!

 5. devraj

  தேங்க்ஸ் வினோ.
  Once again Rajini has proved that he is not afraid to speak his heart out.
  Proud to be a follower of this good human being.

 6. r.v.saravanan

  ரஜினி அவர்களின் பதில்கள் சும்மா நச்சுனு இருக்கு தாங்க்ஸ் வினோ

 7. கிரி

  வினோ கலக்கிட்டீங்க! பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

  தலைவர் பதில் அருமை! ரொம்ப வருடத்திற்கு பிறகு இப்படி ஒரு நேர்காணல் வாய்ப்பு!

  நன்றி கே பி சார்!

 8. mathan

  thanks for the interview vino.hats off to your hard work.i tried to see the headlinestoday programme today.but couldnt.if you get any link please update.will be in touch.
  thanks again

 9. Mahesh

  ippa enakku Hogenakkal issue appa nadanthathellam nyabagam varuthu !!
  Satyaraj thalivar a Karnataka karannu pesunanae , innaikku South , North ellam kondadra ‘Global Super Star’ nu per vangittaru.

  Aarula irunthu arubathu varai la oru dialogue varum ,”Aandavan nallavangala sodhikaranna edho oru nalla vishayathukku thayar panrannu arthamnu ” – Now it has been proved by thalaivar himself.

  Beyond slightest doubts , Thalivar is now shining like a Sun. Ippa stayrajlam enga ? Indha function la Satyaraj kalandhukittara ? What was his reaction ?

 10. DEEN_UK

  ‘/////மகாத்மாவின் துணிச்சல் எனக்கும் வரும்போது…‘///

  இந்த துணிச்சல் உங்களை விட்டால் இவ்வுலகில் வேறு எவருக்குமில்லை தலைவா..நீயே ஒரு வாழும் மகாத்மா தான் தலைவா..

  ////ரஜினி: நிச்சயம் உங்களை உட்கார வச்சி வணங்கி, நீங்க சொல்ற வேலையை செய்வேன்.////

  தலைவா…! உங்களை உட்கார வெச்சி வணங்கி, நீங்க சொல்றதை கேட்டு செயல்பட கோடிக்கணக்கான அன்புப்படை உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது தலைவா!!!

 11. SASI

  “BABA CLIMAX BEGINS”(IMAYAMALAI RETURNS)

  “உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டன்”

  DEC-12TH OPENING NEW PARTY

  (BUT BASE FRAME – DMK-MK ONLY BECOS VIJAYKANTH IN ADMK PARTY)

 12. Paul

  கேபி: எந்திரன் படத்தை முடிச்சிட்ட? மகள்களுக்கும் கல்யாணத்தை முடிச்சிட்டே. அடுத்து என்ன?
  ரஜினி: எதைப் பத்தியும் நினைக்கலை!

  It looks like he has not decided anything about his next movie. So not quite sure about Mr.RMV project. Am I right or wrong?

 13. endhiraa

  சூப்பர் ! மனசு ரொம்ப நிம்மதியா இருக்கு இப்போ இதெல்லாம் படிச்சதும் !! தலைவர் தலைவர் தான் !!

 14. வைகுண்டம்

  ஆண்டு: 1995

  ரஜினியின் வயது: 45

  ரஜினியின் பஞ்ச்: “நான் எப்போ வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா வர வேண்டிய நேரத்துல கண்டிப்பா வருவேன்”.
  ——————-
  ஆண்டு: 2000

  ரஜினியின் வயது: 50

  கேள்வி: அரசியலுக்கு வருவீங்களா?

  ரஜினியின் பதில்: மேலே கையை காட்டி “ஆண்டவன் கையில தான் இருக்கு”
  ——————-
  ஆண்டு: 2010

  ரஜினியின் வயது: 60

  கேள்வி: அரசியலுக்கு வருவீங்களா?

  ரஜினியின் பதில்: மேலே கையை காட்டி “ஆண்டவன் கையில தான் இருக்கு”
  ——————-
  ஆண்டு: 2020

  ரஜினியின் வயது: 70

  கேள்வி: அரசியலுக்கு வருவீங்களா?

  ரஜினியின் பதில்: மேலே கையை காட்டி “ஆண்டவன் கையில தான் இருக்கு”
  ——————–
  ஆண்டு: 2030

  ரஜினியின் வயது: 80

  (வயதான) ரஜினி ரசிகன்: எங்க தலைவரு…… நிச்சயம்….. ஒரு நாள்…. அரசியலுக்கு வருவாரு……….ஹுக்கும்….ஹுக்கும்……ஹுக்கும் (இருமுகிறார்)…..

 15. YESMI

  உனக்குப் பிடிச்ச இயக்குநர் யார்.. தயங்காம சொல்லு?’ இப்படி ஒரு கேள்வியை கேபி கேட்க, அதற்கு சற்றும் யோசிக்காமல் ‘மகேந்திரன்’ என்று ரஜினி பதில் தர, ஒரு நிமிடம் ஸ்தம்பித்து அதிர்ந்தது அரங்கம். நேர்மையின் மறுபெயர் ரஜினி என்றால் மிகையல்ல!//——

  BALU MAHENDRA SIRA ADHU VINNO
  ___________

  No, it is Mahendiran.
  -Vino

 16. karthik

  அரசியலுக்கு வந்தால், வழி நடத்த இப்போ நல்ல குரு யாரு இருக்க சார்?

 17. Juu

  Perfect answer for Last Question.
  தலைவா!!! இப்போ எல்லாம் நச்சன்னு பேசுற..
  I think, Its the time to rock.. 🙂

 18. Manoharan

  எனக்கு பிடித்த இயக்குனரும் மகேந்திரந்தான். ரஜினியை இயக்கியதிலேயே மிகச் சிறந்த இயக்குனர் மகேந்திரந்தான்.

  @ வைகுண்டம்.

  ரஜினி நிச்சயம் ஒருநாள் அரசியலுக்கு வருவார் ஆனால் அது ஓட்டு அரசியலாக இருக்காது என்பது என் கணிப்பு. காந்தி மற்றும் பெரியார் வழியாக இருக்கலாம். 1995 முதல் உங்களை போன்ற நிறையப் பேர் எங்களை கிண்டல் செய்யும் விஷயம் இதுதான். இந்த கிண்டலுக்கு பயந்தவர்கள், சுயநலத்துக்காக இருந்தவர்கள், என பலரும் சென்றுவிட்டார்கள். இப்போது இருக்கும் எங்களைப் போன்றவர்கள் எதற்கும் அசையாதவர்கள். இது ரஜினியின் உண்மையான பலம். இது எப்போதும் இருக்கும். அவர் 2030 ல் இதே பதில் சொன்னாலும் சரி.

 19. கோபிகிருஷ்ணன்

  //கேபி: எல்லோரும் கேட்கணும்னு நினைக்கிற கேள்வி இது. நீ அரசியலுக்கு வருவியா மாட்டியா, என்கிட்ட மட்டுமாவது சொல்லு?

  ரஜினி: அது அந்த ஆண்டவன் கையில் இருக்கு (மேலே கையைத் தூக்கி காட்டுகிறார்)!//

  பால் தாக்கரே கையிலா?

 20. eppoodi

  @ Manoharan

  //வைகுண்டம்.

  ரஜினி நிச்சயம் ஒருநாள் அரசியலுக்கு வருவார் ஆனால் அது ஓட்டு அரசியலாக இருக்காது என்பது என் கணிப்பு. காந்தி மற்றும் பெரியார் வழியாக இருக்கலாம். 1995 முதல் உங்களை போன்ற நிறையப் பேர் எங்களை கிண்டல் செய்யும் விஷயம் இதுதான். இந்த கிண்டலுக்கு பயந்தவர்கள், சுயநலத்துக்காக இருந்தவர்கள், என பலரும் சென்றுவிட்டார்கள். இப்போது இருக்கும் எங்களைப் போன்றவர்கள் எதற்கும் அசையாதவர்கள். இது ரஜினியின் உண்மையான பலம். இது எப்போதும் இருக்கும். அவர் 2030 ல் இதே பதில் சொன்னாலும் சரி.//

  சூப்பரா சொன்னீங்க….

  இவர்களை பார்த்தால் பாவமாக இருக்கிறது. ரஜினியை பிடிக்காத இவர்களை போன்றவர்களுக்கு ரஜினியின் இமாலய வளர்ச்சியினை சகிக்க்கமுடியாமல் தங்களை தாங்களே ஆசுவாசப்படுத்திக்கொள்ள இந்த ஒரு விடயம்தான் ஆறுதலாக இருக்கிறது. ரஜினி அரசியலுக்கு வந்தால் இவர்களது நிலை என்ன?

 21. eppoodi

  @ கோபிகிருஷ்ணன்

  //பால் தாக்கரே கையிலா?//

  ரஜினி பால்தாக்ரே ‘எனக்கு’ கடவுள் போன்றவர் என்றுதான் கூறினாரேயல்லாது பால்தாக்ரே கடவுள் என்று கூறவில்லை. உங்களுக்கு மிகவும் வேண்டிய ஒருவரை “இவர் எனக்கு அப்பா மாதிரி ” என்று அன்பின் மிகுதியால் உயர்த்தி கூறினால் அவர் உங்களது அப்பா என்றாகிவிடுமா? அதேபோலத்தான் இதுவும்.

  கடவுள் என்பது வேறு, கடவுளைபோன்றவர் என்பது வேறு. மன்னிப்புக்கும் வருத்தத்திற்கும் வித்தியாசம் தெரியாத உங்களுக்கு இது எங்கே புரியப்போகிறது.

 22. Muthu

  ரஜினியின் பதில்கள் அருமை. மனதில் உள்ளதை பட்டென்று சொல்கிறார். ஆனால் அரசியலுக்கு வருவியா? மாட்டியா? என்பதற்கு மட்டும் பதில் தெளிவாக இன்னும் கிடைக்கவில்லை. ரசிர்களின் காத்திருப்பு தொடர்கிறது…

 23. kicha

  Vino,
  2 naala naan pala comments anupium, edhuvum submit aagalai. Manase vittuten. Enna problemnum therilai.
  ______________

  அடடா… உங்க கமெண்ட் எதுவும் வரலையே கிச்சா… உங்களுக்கில்லாத அனுமதியா! மீண்டும் அனுப்புங்க ப்ளீஸ்! அல்லது envazhi@gmail.com, info@envazhi.com -க்கு அனுப்புங்க.

  -வினோ

 24. Sathish

  //கேபி: உன்னை உச்சத்தில் வைத்துள்ள சினிமாவுக்கு என்ன செய்யப் போகிறாய்?//
  எனக்கு இதில உடன்பாடு இல்ல. எதுக்கு எப்ப பார்த்தாலும் தலிவர பார்த்து ” நீ எங்களுக்கு என்ன பண்ண போற ….என்ன பண்ண போறன்னு ” கேட்டுகிட்டே இருக்காங்க …..அவரு எதாவது பண்ணனும்னு கட்டயாம் இருக்கா என்ன?
  ஏன் இந்த கேள்விய கேக்குற எல்லாரும் ரஜினிக்கு பிரச்சன வர்றோப்ப என்ன செஞ்சாங்க? வாயில கெட்ட கெட்ட வார்த்தய வருது….சாரி வினோ.

 25. Kicha

  Oru rajini rasiganah evlo sodhanaigala thanginalum, indha comment anupa mudiyadha sodhanai perum sodhanaya iruke!

  Arumayana badhilgal.
  Asarama adichitarpa thalaivar.

 26. Manoharan

  In wikipedia once Sivaji’s Collection was mentioned as 450 Crores and Dasavatharam’s Collection as 250 Crore. But before few months somebody had changed Sivaji’s collection as 120 crore. Is it possible to Change this ?
  _________________

  ஆம்… யார் வேண்டுமானாலும் விக்கிபீடியா கட்டுரைகளைத் திருத்தலாம். நாம் புகார் அளித்தால் பின்னர் விக்கிபீடியாக்கார்ரகள் மாற்றுவார்கள். அதனால் பெரும்பாலான விக்கிபீடியா கட்டுரைகள் நம்பகத்தன்மை இழக்கின்றன. சிவாஜியின் வசூல் ரூ 300 கோடிக்கும் அதிகம் என்பது அனைவரும் அறிந்ததே. அதை வைத்துதான் கலாநிதி மாறன் எந்திரனை எடுத்தார். இன்றைக்கு விக்கிபீடியாவில் எந்திரன் வசூல் தொகையைப் பாருங்கள்!!

  -வினோ

 27. கடலூர் எழில்

  இன்னும் குழப்பத்திலிருந்து வெளியே வரவே இல்ல நீங்க,
  உண்டு அல்லது இல்லை என்று ஒரு தெளிவாக சொல்ல இயலாதவர் தான் இந்த ரஜினி. கடைசி படம் நடிக்கும் வரை இதே வாக்குமூலம் தான் தருவார், இதெல்லாம் ஒரு வியாபார நேர்த்தி !!!! தான் அரசியலுக்கு வரவில்லை என்றால் எவன் கடவுட் கட்டுவான், பாலாபிஷேகம் செய்வான், பீராபிஷேகம் செய்வான்.படம் எடுக்கு ஒரு பய முன்வரமாட்டான்.
  இது கூட புரியாம ரசிகனுங்க ரஜினிய தொல்லைப் பண்ணுறானுங்க?பாவம் அவர் அவர் உண்டு தன வேலை உண்டு என்று இருக்கிறார்,
  “சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்பார்கள்” அதுப் போல் தான். புரிஞ்சா சரி

 28. Paul

  @ வைகுண்டம்.

  ரஜினி நிச்சயம் ஒருநாள் அரசியலுக்கு வருவார் ஆனால் அது ஓட்டு அரசியலாக இருக்காது என்பது என் கணிப்பு.

  I have a different perspective on this. Rajini always speak truth. And he never plans or forecast anything big and he takes life as it comes day by day. No one could predict his moves that said he takes decision as it comes and moves on. Thats why he says, entry to politics is gods wish which is 100% true. He never lives in past neither in future.

  1. During Arunachalam days, there was a talk that was his last movie. Even in the climax he says I wanted to get away from this money and fame and live in a place where I am unknown.
  After that he acted many movies.
  2. No one expected Muthu will be a hit in Japan.
  3. When BABA did not do well as trade expected , he chooses Chandramuhi movie director as Vasu which no one ever expected. On top of that everyone thought its going to be a mess at box office. Rest is history.
  4. After that no one expected Shankar would be roped in to Sivaji. No one expected north media coverage for Sivaji in those days.
  5. After Sivaji no one expected Shankar goes back to S* and no one expected SUN TV would get this project. Rest is history. No one ever thought he will be India’s super start at 61 years age which is just unbelievable.

  Like this if you watch his moves, most of the times it surprises every one. That means he thinks that “Every day(his) he has been driven by god and he takes life as it comes”. So there is no motivation in his words and looks like its from his heart. Now question is what incident would make him to get into politics? He is not a person who takes revenge. So if there is a vacuum in TN politics and that may lead him to decide but who knows! Most of his elderly fans are in mid 30s and they are financially stable ( they were not kids like 15 years back Badsha day).

  But, he always surprise every one! I have watched BABA movie this week. The climax speaks everything. But he may keep acting until his last days, who knows! Lets see.

 29. Paul

  This comment is quite unrelated to this post. I was going through the days after BABA release. Man! media wrote him off. Young actors thought he is DONE. Media make fun out him as well as young actors. The so called theater owners who made tons of money using his movies just turned back to him. There was no support from the industry either. The big surprise is the so called morons in cinema industry could not understand, if he goes down the whole industry would go down.

  After 8 years I am looking at where he is now. I just laughed out aloud. In financial industry stock exchange index is just a measure of the economic health. If any domain goes down today, it would come back at some point. You need to be patience and do what you are good at. One day you will get the money back. Super star reads many books ( which our younger generation should learn from him ) and he knows how to keep quite and when to bounce. Of course he may say, its gods call but he knows whats going on around him in this thankless world and what to do an when!

 30. Balaji Babu

  To anyone who worries about rajinikanth’s political entry, i believe you have your own job to do and if you are not a fan/follower/liker of this man, then please go by your own way…
  Don’t show off yourself by saying you care about people who follow him, because its their life and they well knew about it and you are not a social reformer too…
  Sorry to say this, even though everybody have their democratic right to voice out their opinion, you need not get a cheap publicity by pouring ill-words against this person, which is worse than a man who eats his own dung…..

 31. நண்பேண்டா

  @ Balaji Babu

  //To anyone who worries about rajinikanth’s political entry, i believe you have your own job to do //

  இந்த பதில், ரஜினி கிட்டே “அரசியலுக்கு வருவியான்னு?” கேட்ட பாலச்சந்தருக்கும் பொருந்தும் தானே?

  பின்ன என்னங்க. ரஜினி அரசியலுக்கு வருவதை பத்தி அவருடைய ஒவ்வொரு படம் வரும் போதும் கேள்வி எழும், அவரும் எப்போ பாரு மையமா பதில் சொல்வாரு. (ஒரு 10 வருஷமா இந்த கூத்து). ஒரு வருஷம் முன்னாடி கூட ரஜினியோட அண்ணன் சத்திய நாராயணா “எந்திரன் படம் வெளியானவுடன் ரஜினி அரசியலுக்கு வருவதை பற்றி முடிவு செய்யப்படும்” அப்படீன்னு யாரும் கேக்காமலே அவரே சொன்னாரு. இதெல்லாம் ரஜினி தரப்புல இருந்து சொல்றது தானே. அப்புறம் அதை பத்தி மக்கள் யாரும் பேசக்கூடாது, கேள்வி கேக்கக் கூடாது, அவங்க அவங்க வேலைய பாருங்க அப்படீன்னா, அதையே சத்தியநாராயனாவுக்கும் ஏன் சொல்லக் கூடாது.

 32. lokesh

  ///அவங்க அவங்க வேலைய பாருங்க அப்படீன்னா, அதையே சத்தியநாராயனாவுக்கும் ஏன் சொல்லக் கூடாது.///

  இந்த கேள்விக்கு அவர் பதிலளித்து உங்களை போல் யாரோ ஒருவர் கேட்ட தர்க்குதன்….இந்த தலத்தில் பெரும்பாலும் தலைவரை பற்றிய செய்திகளே இடம் பெரும், உங்களக்கு அவரை பிடிக்கவில்லை என்றல் எதற்காக இங்க வந்து உங்களது ஸ்பீச் ரைட் காட்றீங்க….. உங்களளுக்காக எதாவது ஒரு ஒதவாத ப்ளாக் இருக்கும் அல்லவே அங்கே செல்ல வேண்டியது தானே….

 33. Roshan

  DEAR VINO I AM VISITOR OF YOUR SITE LAST TOW OR THREE YEARS AS A RAJINI FAN U R DOING A WONDERFUL JOB AT THE SAME TIME CERTAIN BLOGGERS ( KARUNTHEL , DENIMOHAN CHARU ECT ECT ) ARE COMMENTING VERY BAD ABOUT RAJINI SIR & ENTHIRAN WHEN FANS LIKE ME GIVING OUR COMMENT THEY ARE NOT PUBLISHING WHY SHOULD U & OTHER RAJINI BLOGGERS OPPOSE THEM OR TEACH A GOOD LESSION TO THEM PLS DO IT

 34. karthik

  எல்லாம் சரி தான். ஆனா அது என்ன அவர் சிகரட்ட விட்டா எல்லோரும் விற்றுவாங்க்னு சொல்றிங்க சார்? ரஜினியா போய் எல்லோரும் சிகரட்டே புகைங்கநு சொன்னாரு? இல்ல அவர் எதாவது சிகரட்டே விளம்பரத்துல நடிச்சு இருக்காரா? புகைப்பது தப்புன்னு அவனவனுக்கு புரியணும், அத விடனும். என்னமோ அவர்தான் தமிழர்களுக்கு புகைக்க காதுகொடுத்த மாதிரி இருக்கு. யார் சொன்னாலும் அவரவருக்கு சுய புத்தி வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *