BREAKING NEWS
Search

அரசியலுக்கு வரும் விஜய்க்கு ஆரம்பமே சறுக்கல்?!

அரசியலுக்கு வரும் விஜய்க்கு ஆரம்பமே சறுக்கல்?!

விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்த அடுத்த செய்தி இது. தினமலர் வெளியிட்டுள்ள ஒரு சி(ரி)றப்புச் செய்தி. இதெல்லாம் நமக்கெதற்கு vijayஎன்று யோசிக்கும் முன், கட்டுரையை முழுமையாக வாசித்துவிடுவது நல்லது. இன்றைய காமெடி ஸ்பெஷலாகவும்கூட அது அமையக் கூடும்!

இந்தக் கட்டுரையில் நமது கருத்தென்று எதுவும் இல்லை. இதில் தினமலர் எழுப்பியுள்ள கேள்விகள், உண்மையில் சில தினங்களுக்கு முன் விஜய்யின் கல்யாண மண்டபத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ரசிகர்களால் கேட்கப்பட்டவை என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கடைசி பாரா தினமலருக்கே உரித்தான ஸ்டைல். அதற்கு யாராலும் சொந்தம் கொண்டாடவே முடியாது!

இனி அந்தக் கட்டுரை:

மிழக அரசியலுக்குள் அடுத்து களம் இறங்குபவர் நடிகர் விஜய்.

வரும் 21ம் தேதி சென்னை தீவுத் திடலில், ரசிகர்களின் ‘மெகா’ கூட்டத்தை திரட்டி, அரசியல் பிரவேசம் பற்றி அறிவிக்க திட்டமிட்டிருந்த விஜயின் தந்தை இயக்குனர் சந்திரசேகர், திடீரென பின்வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சென்னையில் கடந்த ஞாயிறன்று, விஜயின் நற்பணி இயக்க நிர்வாகிகளுக்கான பாராட்டு விழாவில் பேசிய சந்திரசேகர், தீவுத்திடலில் கூட்டம் நடத்த தேதி கிடைக்காததால் ஆறு மாதங்களுக்கு பின், கூட்டம் நடத்துவதாக தெரிவித்துள்ளார்.

ஆனால், இதன் பின்னணியில், லோக்சபா தேர்தல் முடிவுகளோடு, சில சிக்கலான பிரச்னைகளும் இருப்பதாக தகவல்கள் கசிகின்றன.

“விஜய்க்கும், அவரது ரசிகர்களுக்கும் பாலமாக இருப்பேன்; விஜய்க்காக பாடுபடும் ரசிகர்களுக்கு எதிர்காலத்தில் பொறுப்புகள் தேடி வரும்” என்று, ரசிகர் கூட்டங்களில் பேசிய சந்திரசேகர், ‘விஜய் அரசியலில் ஈடுபடுவார்’ என, மறைமுகமாகவே ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தார்.

சில மாதங்களுக்கு முன் விஜயின் முழு ஆதரவுடன், இயக்குனர் சந்திரசேகரை தலைவராக கொண்ட புதிய கட்சி துவங்கவும், கட்சிக்கொடி அறிமுகப் படுத்தவும் முடிவானது. இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருந்த 21ம் தேதி கூட்டம், திடீரென ஆறுமாதம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

காரணம் என்ன?

30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் இருந்து, கட்சி துவங்கிய விஜயகாந்த், சட்டசபை தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றார். லோக்சபா தேர்தலில் அந்த வெற்றியும் இல்லை; தேர்தல் பிரசாரத்தில் அவருக்கு திரண்ட கூட்டம் எல்லாம் ஓட்டுகளாக மாறவில்லை என்பது சந்திரசேகரை கலங்கடித்துள்ளது.

விஜய் தரப்பில் கட்சி துவங்குவது ரசிகர்கள் மத்தியிலும் பல்வேறு சந்தேகங்களை, குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளது. விஜய்க்கு 25 வயதுக்கு உட் பட்ட ரசிகர்கள் அதிகளவில் உள்ளனர். இவர்கள் சொந்த வேலைகள் மற்றும் தொழிலை விட்டு கட்சியில் ஈடுபட்டால், எதிர்காலத்தில் பொறுப்புகள் கிடைக்குமா என்பதும், நற்பணி இயக்க திட்டங்களுக்கும், ரசிகர் மன்ற செலவுகளுக்கும் இதுவரை பைசா தராத சந்திரசேகர், கட்சி துவங்கினால் அதற்கான செலவை யார் ஏற்றுக் கொள்வது என்பதும் மிகப்பெரிய கேள்விகளாக ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

பணம் செலவழித்தாலும் பொறுப்புகள் கிடைக்குமா என்பதோடு, விஜய் தலைவராக இல்லாமல், அவரது தந்தையை தலைவராக ஏற்றுக் கொள்வதற்கும் ரசிகர்களில் பலருக்கு உடன்பாடு இல்லை.

துவக்கத்தில் இருந்தே தன்னை தி.மு.க., தலைவர் கருணாநிதியின் ஆதரவாளராக காட்டிக் கொள்ளும் சந்திரசேகர், கட்சி துவங்கிய பின் ஆளுங்கட்சியை எதிர்ப்பாரா என்பதும் கேள்விக்குறி. கடந்த 10 ஆண்டுகளில் ரஜினி நடித்த படங்கள் வெகுவாக குறைந்ததால், அவரது பல ரசிகர்கள் விஜய் ரசிகர்களாகவும் மாறினர்.

இப்போது விஜயும் அரசியல் சார்ந்தவராக மாறினால் சூர்யா, விஷால் போன்ற நடிகர்களுக்கு தாவும் மனநிலையில் இளம் ரசிகர்கள் உள்ளனர். 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகள், இந்நிலையை விளக்கி, ‘கட்சி துவங்குவதில் விருப்பமில்லை’ என்பதை மறைமுகமாக சந்திரசேகரிடம் தெரிவித்துள்ளனர்.

சிவாஜி, சரத்குமார், கார்த்திக் போன்ற நடிகர்களை, அரசியல் தலைவர்களாக ஏற்றுக் கொள்ளாத மக்கள், விஜய் கட்சிக்கு எந்தளவுக்கு வரவேற்பு அளிப்பர் என்பதும் புதிராக உள்ளது. துவக்கத்தில், விஜயகாந்த் ரசிகர் மன்றங்களை கொண்டு துவங்கிய தே.மு.தி.க. வில், உண்மையான ரசிகர்கள் பலர் இப்போது இல்லை. பணபலமும், செல்வாக்கும் இல்லாதவர்களுக்கு எந்த கட்சியிலும் வாய்ப்புகள் குறைவு. நாளை விஜய் கட்சியிலும் ரசிகர்கள் காணாமல் போய்விடும் வாய்ப்புள்ளதாகவே கருதுகின்றனர்.

நகரங்களை கடந்து கிராமங்கள் மற்றும் கிளை மன்றங்களில் விஜய் ரசிகர் கூட்டம் வலுவாக இல்லை. விஜய் கட்சி துவங்கும் முயற்சியை, மாநில நிர்வாகிகள் சிலரே தனிப்பட்ட ஆதாயத்துக்காக தூபம் போட்டு வளர்ப்பதாக சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.

துவக்கத்தில் எம்.ஜி.ஆர்., ரசிகர்களாக இருந்தவர்கள், கட்சி நிர்வாகிகளாக மாறி இப்போது செல்வாக்குடன் உள்ளது போல், விஜய் ரசிகர்களையும் எதிர்காலத்தில் உருவாக்குவேன் என்று சந்திரசேகர் வாய்மொழி உத்தரவாதம் தந்தாலும், எம்.ஜி.ஆர்., அளவுக்கு கட்சியை வளர்க்கவும், நிலைநிறுத்தவும் சந்திரசேகர் மற்றும் விஜயால் முடியுமா என்பதும் ரசிகர்களின் கேள்வி.

பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்க மறுக்கும் விஜய், அப்படியே பங்கேற்றாலும் சில வார்த்தைகள் மட்டுமே பேசிச் செல்லும் விஜய், கட்சிக்காக எப்படி செயல்படுவார், மக்களை சந்தித்து எப்படி ஆதரவு திரட்டுவார் என்பதெல்லாம் ரசிகர்களின் மெகா கேள்விகள்.

கட்சி துவங்கினால், முழுமையாக அதில் ஈடுபட்டு பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும்; கட்சி பொறுப்புகளுக்கு வர வேண்டும். பெயரளவில் கட்சி துவங்கி, சில ஆயிரம் ஓட்டுகளை மட்டுமே வாங்குவதில் அர்த்தமில்லை. இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு பின், ரசிகர்களை இன்னும் பலமடங்கு அதிகரிக்கச் செய்து, அவர்களை ஒருங்கிணைத்து அன்றைய அரசியல் சூழ் நிலைக்கு ஏற்ப திட்டங் களை வகுக்க வேண்டும்; அதன்பின், கட்சி துவங்கினால் சிறப்பாக இருக்கும் என்பதும் ஒரு தரப்பு ரசிகர்களின் எதிர் பார்ப்பாக உள்ளது.

அரசியல் குறித்த தெளிவான சில முடிவுகளுக்கு பின், விஜய் கட்சி துவங்கினால் அது அவருக்கும், அவரது ரசிகர்களுக்கும் பிரகாசமாக அமையும். “எடுத்தோம் கவிழ்த் தோம்’ என்றில்லாமல், கட்சி பிரவேசம் குறித்த முடிவில் உள்ள சிக்கலான முடிச்சுகளை அவிழ்த்து, பின் அரசியலில் குதிப்பதே உத்தமம் என்று விஜய் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தனி சேனல்?

நற்பணி இயக்க செயல்பாடுகளையும், கட்சிப் பணிகளையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் முதல் முயற்சியாக ‘விஜய்’ பெயரில் தனி சேனல் துவங்க சந்திரசேகர் திட்டமிட்டுள்ளார்; மூத்த நடிகர்களான ரஜினி, கமல் ஆதரவு விஜய்க்கு கிடைக்குமா என்பது குறித்தும், ரகசிய ‘சர்வே’ நடப்பதாக தகவல்கள் கசிகின்றன!!
10 thoughts on “அரசியலுக்கு வரும் விஜய்க்கு ஆரம்பமே சறுக்கல்?!

 1. குமரன்

  ஆரம்ப காலத்தில் சங்கவி போன்ற கதாநாயகிகளின் கவர்ச்சிக் காட்சிகளால் சில படங்களும், ஏதோ குருட்டு அதிர்ஷ்டத்தில் சில படங்களும், சன் டி.வியின் தொடர்ந்த ஆதரவால் (எப்படியிருந்தாலும் டாப் டென்னில் விஜய் படம்தான் முதல் நிலை) சில படங்களும் நன்றாக ஓடின. இப்போது சன் டி.வியின் ஆதரவு சிதறிப்போனதால் தொடர்ந்து குருவி, வில்லு என தோல்விகள்.

  இப்போதைக்கு சூர்யா படந்தான் நன்றாக ஓடும் என்ற நிலை. இது தவிர, சன் கலாநிதியும் ‘கலைஞர்’ உதயநிதி, துரை அழகிரி ஆகியோர் தயாரிப்பு, விநியோகத்தில் இறங்கி விட்ட படியால் இந்தத் தொலைக்காட்சிகளின் ஆதரவு நிச்சயமில்லை.

  இந்த நிலையில் படத்தை ஓட்டுவதே பெரிய விஷயம். நடிகனாய் நடப்பதே நிலையில்லை என்றால், அரசியல் ரேஸில் எங்கே ஓடுவது? ஒருவேளை சினிமாவில் ரிடையர் ஆனால், அரசியல்வாதி என்ற விதியைக் கடைப்பிடிக்கிறாறோ?

 2. harisivaji

  Nadakanum
  ithu nadakanum
  Appa than namma makkal yosipaanga
  vadi va katchi thodangu
  appuram iruku unaku

 3. endhiraa

  அடடா..தொந்தரவு தாங்கமுடியலப்பா..

 4. kavundamani

  Narayana intha koshu tholla thanka mudiyala pa….ethuna marundhu irrundha vachi kollu pa…..

 5. vadivel

  Ennada poluthu sanjidiche ethumea natkalaiyenu pathen natandhudichi natatitanga………….

 6. vadivel

  athula oruthan sonnan ivan evlo adichalum tankuranda ivan romba nallanvanu…………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *