BREAKING NEWS
Search

அரசியலுக்கு அப்பால் நின்று தீர்த்துக் கொள்ள வேண்டிய விஷயம்!

அரசியலுக்கு அப்பால் நின்று தீர்த்துக் கொள்ள வேண்டிய விஷயம்!

மீண்டும் காவிரி அரசியல் தலைதூக்கும் அபாயம் ஏற்பட்டுள்ள karu-ediசூழலில் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும், தமிழக முதல்வர் கருணாநிதியும் மரியைதை நிமித்தம் நேற்று சந்தித்துப் பேசியுள்ளனர்.

இதனால் உடனடியாக பெரிய பலன் என்று ஏதும் இல்லை என்றாலும், இருதரப்பிலும் நிலவிய ஒருவித இறுக்கத்தைத் தணித்ததாகவே தெரிகிறது.

கர்நாடக முதல்வர் எடியூரப்பா கடந்த 3 நாட்களாக சென்னையில் தங்கி நீரிழிவு நோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார். அவரை நேரில் சந்தித்துப்பேச முதலில் நேரம் கேட்டவர் தமிழக முதல்வர் கருணாநிதியே. ஆனால் கருணாநிதியின் வயது மற்றும் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, எடியூரப்பாவே நேரில் கோபாலபுரம் போய் கருணாநிதிக்கு தனது மரியாதையைச் செலுத்தியுள்ளார்.

இச் சந்திப்பின் பலனாக இரு சாதகமான விஷயங்கள் நிகழ்ந்துள்ளன.

ஒன்று பல ஆண்டுகளாக கோணிப்பைக்குள் கிடைக்கும் திருவள்ளுவர் சிலைக்கு விடிவு காலம். அடுத்து, ஒகேனக்கல் பிரச்சினையைபே பேசி தீர்த்துக் கொள்வோம் என்ற தெளிவான நிலைப்பாடு. இதை பத்திரிகையாளர்களிடமும் தெரிவித்துள்ளார் எடியூரப்பா.

முக்கியப் பிரச்சினையான காவிரி விவகாரம் குறித்துப் பேசவில்லையென்றாலும், இந்த ஆரம்பகட்ட சந்திப்பு ஒருவித இணக்கமான மனநிலைக்கு இருதரப்பையும் கொண்டு வந்துள்ளது.

இனி இந்த விஷயத்தைக் கையிலெடுத்துக் கொண்டு கர்நாடக எதிர்கட்சிகள் குளிர்காயாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இந்தப் பிரச்சினைகளை வேண்டுமென்றே கிளறி, கர்நாடகத் தமிழர்களின் வாழ்க்கையை கேள்விக்குரியதாக்காமல் இருந்தாலும் கூட மக்கள் ஓட்டுப் போடத்தான் செய்வார்கள் என்ற உண்மையை கர்நாடக அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும். காரணம் கன்னட மக்கள் இந்த விவகாரங்களால் தேவையின்றி அமைதியைத் தொலைப்பதை விரும்பவில்லை.

அரசியலுக்கும் அப்பால் நின்று பேசி முடித்துக் கொள்ள வேண்டிய பிரச்சினை இது. காலம் கடந்த பிறகாவது இந்த உண்மை புரிந்து இருமாநில அரசுகளும் நடந்து கொள்ள வேண்டும்.

அதை விடுத்து, விழுகிற ஓட்டுக்களெல்லாம் காவிரி விவகாரம், திரையுலகினரைத் திரட்டி வைத்து மக்களை உசுப்பேற்றுவது, கர்நாடக தமிழருக்கு எதிரான வன்முறை போன்ற கீழ்த்தரமான அரசியலுக்கு கிடைத்தவை என நினைப்பது முட்டாள்தனம்!

-விதுரன்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *