BREAKING NEWS
Search

அயோத்தி நிலம் மூன்றாகப் பிரிப்பு… தீர்ப்பு முழு விவரம்!

அயோத்தி நிலம் மூன்றாகப் பிரிப்பு… தீர்ப்பு முழு விவரம்!

1. சர்ச்சைக்குரிய 2.5 ஏக்கர் நிலத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும்.

2. மூன்றில் ஒரு பங்கு பாபர் மசூதி கமிட்டிடம் ஒப்படைக்கப்படவேண்டும்.

3. மற்றொரு பங்கு நிர்மோகி அகாரா அமைப்பிடம் தர வேண்டும்.

3. மூன்றாவது பங்கு  ராமர் கோயில் கட்டும் இந்து மகா சபைக்கு வழங்கப்படும்.

4. மூன்றாக பிரிக்கும் வரை அடுத்த மூன்று மாதத்திற்கு தற்போதை நிலை தொடர நீதிமன்றம் உத்தரவு.

5.சர்ச்சைக்குரிய இடத்திற்கு உரிமைக்கோரிய சன்னிவக்பு நிர்மோகி அகரா மனு நிராகரிப்பு

லக்னெள: அயோத்தி நிலத்தை மூன்றாகப் பிரித்து ராமர் பிறந்த இடத்தை ராமர் கோவில் கமிட்டியிடமும், இரண்டாவது பகுதியை அங்கு சிறு கோவில் கட்டியிருந்த நிர்மோலி அகராவிடமும், மீதமுள்ள இடத்தை பாபர் மசூதி கமிட்டியிடமும் வழங்கவும் அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதில் ராமர் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் கோவில் கட்டிக் கொள்ள அனுமதி தர வேண்டும் என்று இத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

நாடே பரபரப்புடன் எதிர்ப்பார்த்துக் கிடந்த, 60 ஆண்டு காலமாக இழுத்துக் கொண்டிருந்த அயோத்தி நில உரிமை வழக்கில் நீதிபதிகள் தரம்வீர் சிங் சர்மா, சுதிர் அகர்வால், சிப்கத் உல்லா கான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று இந்தத் தீர்ப்பை வழங்கியது. மொத்தம் 6000 பக்கங்களில் இந்தத் தீர்ப்பு விவரம் அடங்கியுள்ளது.

ஆனால், ஒவ்வொரு நீதிபதியும் தனித்தனியே வெவ்வேறு தீர்பை வழங்கினர். மொத்தத்தில் அவர்கள் அளித்த தீர்ப்பின்படி நிலத்தை 3 மாதத்துக்குள் மூன்றாகப் பிரித்து இந்து மகா சபா, நிர்மோலி அகரா மற்றும் பாபர் மசூதி கமிட்டியிடம் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அதே நேத்தில் மொத்த நிலத்தையும் தங்களிடம் தர வேண்டும் என்ற சன்னி முஸ்லீம் வக்பு வாரியத்தின் கோரிக்கையை மூன்று நீதிபதிகளுமே ஒட்டு மொத்தமாக நிராகரித்துவிட்டனர்.

இதன் மூலம் பாபர் மசூதி இருந்த இடமான 2.5 ஏக்கர் நிலப்பரப்பும் மூன்றாகப் பிரிக்கப்படும். இதைப் பிரித்து மூவரிடம் வழங்கும் வரை இப்போது இருக்கும் நிலையே, அதாவது, மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே மொத்த நிலமும் இருக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தனர்.

இதில் மசூதியின் மையப் பகுதி அமைந்திருந்த இடத்துக்குக் கீழே உள்ள இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்பதை ஒப்புக் கொள்வதோடு, அந்த இடத்தில் ராமருக்கு கோவில் கட்ட ராமர் கோவில் கமிட்டிக்கு அனுமதிக்க வேண்டும் என்றும்,

மீதமுள்ள இடத்தை அங்கு சிறிய கோவில் கட்டியிருந்த நிர்மோலி அகராவிடமும் பாபர் மசூதி கமிட்டியிடமும் பிரித்து வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அயோத்தி ராமஜென்ம பூமி-பாபர் மசூதி விவகாரத்தில் நிலம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கு கடந்த 60 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்தத் தீர்ப்பை அனைத்துத் தரப்பினரும் அமைதியுடன் ஏற்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி உள்பட அனைத்துக் கட்சித் தலைவர்களும் கூறியுள்ளனர். என்றாலும் இதனை எதிர்த்து எந்தத் தரப்பும் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்யும் வாய்ப்புள்ளது.

-என்வழி
15 thoughts on “அயோத்தி நிலம் மூன்றாகப் பிரிப்பு… தீர்ப்பு முழு விவரம்!

 1. umadevi

  யாரும் வெற்றி பெறவில்லை . நல்ல தீர்ப்பு .

 2. raja

  நல்ல தீர்ப்பு .. யாரும் மேல் முறையேடு பண்ணாம இருக்கணும் .. இல்லனா அடுத்த 60 வருஷம் கேஸ் நடக்கும்

 3. S.M.Kader Ibrahim

  இப்படி ஒரு முட்டாள்தனமான மீண்டும் பிரச்னை வளர வகைசெய்யும் தீர்ப்பு தேவை இல்லாதது

 4. S.M.Kader Ibrahim

  இப்படி ஒரு முட்டாள்தனமான மீண்டும் பிரச்னை வளர வகைசெய்யும் தீர்ப்பு தேவை இல்லாதது ஆயிரம் பிரயுகலாக பிரிந்து கிடக்கும் முஸ்லீம்களுக்கு அல்லா குடுத்த மிக பெரிய அச்சுறுத்தல் ஆனால் நிச்சயம் அல்லாஹ்தான் ஒரே இறைவன் அவன் கண்டிப்பாக மூமிங்கழலை கைவிட மாட்டான்

 5. rajnianifa

  பாபர் மசூதி தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் நீதியை சாகடித்து ஆழ குழிதோண்டி புதைத்திருக்கிறது

  நீதிமன்றத்தின் இச்செயலால் தேசத்தின் மானம் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த முஸ்லிம்களும், நாட்டில் உள்ள நடுநிலைவாதிகள் அனைவரும் இத்தீர்ப்பை நிராகரிக்கிறார்கள்

 6. rajnianifa

  இந்தி மொழியில் துளசிதாசர் என்பவர் இராமாயணத்தை மொழி பெயர்த்து வெளியிட்டார். இதன் பின்னர்தான் இராமாயணம் மக்கள் அறியும் காப்பியமாக ஆனது. துளசி தாசர் இந்தியில் ராமாயணம் வெளியிட்ட பின்பு தான் இராமர் கடவுள் அவதாரம் என்று மக்களால் கருதப்பட்டார். துளசி தாசர் காலம் என்ன? எந்தக் காலத்தில் இராமர் கோவில் இடிக்கப்பட்ட தாகக் கூறுகிறார்களோ, எந்தக் காலத்தில் பாபர் ஆட்சி புரிந்தாரோ, அதே காலத்தில் தான் துளசி தாசரும் வாழ்கிறார். அதுவும் அயோத்தியில் வாழ்கிறார். 1500 களில்தான் பாபர் ஆட்சி புரிகிறார். அந்த ஆட்சியின் கீழ்தான் துளசி தாசரும் வாழ்கிறார். இராமாயணம் இந்தி மொழியில் ஆக்கப்பட்டதே பாபர் காலத்தில்தான் என்பதும், பாபர் காலத்தில் இராமர் கடவுளாகக் கருதப்படவுமில்லை. இந்து மக்கள் அவரைப் பற்றி அறிந்திருக்கவும் இல்லை என்பது இதன் மூலம் உறுதியாகிறது. இராமாயணமே இந்தியில் மக்கள் மத்தியில் பரவாத காலத்தில் இராமர் எப்படி கடவுளாகக் கருதப்பட்டிருப்பார்? எப்படி அவருக்குக் கோவில் கட்டபட்டிருக்கும் என்பதை நியாயவுணர்வுள்ள இந்துக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்….

 7. Umm Omar

  எப்படி ஒரே இடத்தில் கோவிலும் மசூதியும் இருக்க முடியும்? மீண்டும் பிரச்சினை வரத்து என்பதற்கு ஏதேனும் கேரண்டி உள்ளதா? அப்படியே இரண்டு கோவிலும் ஒரு மசூதியும் அதே வளாகத்தில் அமைந்து விட்டால் நாளைக்கு முன்று இடங்களிலும் பிரசினை இல்லாமல் வழிபாடு நடக்குமா? எப்படி இப்படி ஒரு தீர்ப்பை அறுபது வருடம் கழித்து கொடுத்துள்ளனர்? நாட்டின் விவரம் தெரியாமல் போய்விட்டதா? இதற்கு தீர்ப்பளிக்க முடியவில்லை என ஒத்து கொண்டிருக்கலாம். அதுதான் உண்மை.

 8. கடலூர் எழில்

  1 .அயோத்தி தீர்ப்பு: ராமர் பிறந்த இடமாம்!அவுங்க அப்பன் ஆத்தா யாரு ?தடயவியல் ஆதாரம் இருக்கிறதா ?யாரோட காதுல சுத்துரீங்க பூ!சிலர் வளர்வதற்கு இந்தத் தீர்ப்பு வழிசெய்துள்ளது.”நீதிபதிகள் அவர்களின் புத்தியை தீட்ட வேண்டிய இடத்தில் அவர்களின் பக்த்தியை தீட்டியிருக்கிறார்கள்”.
  2 . After 400C.E many buddhist and Jainist temples
  were demolished or destroyed and hindu temples were built on those
  sites by several rulers. They have more historical and archieological
  evidence than Mr.Ram’s birth place. What will happen if this judgement
  is implemented and applied to those “historical disputes”?

 9. kumar

  முதலில் அரிய வேண்டியது கம்பர் தமிழில் துளசிடசரின் ராமாயணத்தை மொழி பெயர்கவில்லை,வால்மீகி ராமாயணத்தை தன மொழி பெயர்த்தார்.இதுளிரிந்து தெரிவது வால்மீகி ராமாயணமும் மிக பிரபலம் தான்.மேலும் வால்மீகி ராமாயணத்தின் பல இடங்களில் ராமர் கடவுளாக எழுதபட்டிருக்கிறார்.எதோ பாபர் காலத்தில் தான் ராமர் கடவுளாக உருவானார் என்பது மிகவும் தவறு.மேலும் எதோ புத்தர் மற்றும் ஜெயின் கோவில் இடிக்கப்பட்டதாக கூறுகிறார்கள்,இந்த வழக்கு நடைபெறும் இடம் அயோத்யா.அந்த இடத்தை பற்றி தான் பேசவேண்டுமே தவிர இந்தியா முழுக்க பேச தேவையில்லை.மேலும் “As per history King ashoka has told his followers that buddhism need to be popularized in countries surrounding India.” Still In hinduism buddha is worshipped as an avatar of lord vishnu.It is very false to say that Buddha temples were destroyed.Please go through below site.
  http://www.voi.org/books/htemples1/

  இந்த தீர்பே தடவியல் ஆதாரத்தின் முலமாக தன வழங்கபட்டுள்ளது.தீர்ப்பு எட்டாயிரம் பக்கங்களுக்கு மேல் உள்ளது.முன்று நிதிபதிகளும் தனி தனியாக தீர்ப்பு வழங்கி உள்ளனர்.எதில் முக்கியமே முன்று நீதி பதிகளும் ராமரின் பிறந்த இடம் இது தான் என்று ஆணி தரமாக சொல்லயுள்ளனர்.முன்று நீதிபதிகளில் ஒருவர் இஸ்லாமியர் என்பது குறிபிடத்தக்கது.

 10. nilavan

  ஆஹா ராமன் பிறந்த இடம்தானம்!ராமன் எப்படி பிறந்தான் என்பதே ஒரு கேவலமான அறிவியலுக்கு ஒவ்வாத கதை.சரி அது கிடக்காட்டும் .ராமன் பிரந்த இடத்தில்தான் கோவில் கட்டுவோம் என்றால் அவன் பிறந்த இடத்திலேயே தாரளமாக கட்டிக்கொள்ளுங்கள்.அவன் ஆத்தா உயிரோடு இருந்தால்.எவன்டா சொன்னது அயோத்தியை பத்தி மட்டும் பேசவேண்டும் என்று.அப்படியென்றால் நீங்க கேக்குற மாதிரி பவ்த்தனும் சமணனும் கேக்க ஆரம்பிச்சிட்டா நாட்டுல பாதி கோவில் மிஞ்சாதுன்னு பயந்து வாய அடைக்க பாக்குறிங்க.ஒன்னு மட்டும் தெரியுது.இந்தியா ஜனநாக நாடு,மத சார்பற்ற நாடுன்னு பீற்றி திரிந்த்வனுங்க முக மூடிஎல்லாம் கிழிஞ்சி இது நடைமுறையில் பார்ப்பன ஆதிக்க நாடு என்றும் முஸ்லிம்களுக்கு பட்டை நாமம் போட்டுவிட்டார்கள் என்றும் நிரூபிக்க பட்டுள்ளது.

 11. kumar

  ஏன்டா முதலை தீர்ப்பு வருனும்னு சொல்லுவீங்க அப்புறம் எவண்டா தீரப கொடுத்ததுபீங்க.டேய் நீங்க நினைகரதுக்குலம் சட்டம் தீர்ப்பு குடுக்காது. எமந்துட்டன supreme courtukku போ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *