BREAKING NEWS
Search

அமிதாப் -40: ரஜினி, கமலுக்கு அழைப்பு!

அமிதாப் -40: ரஜினி, கமலுக்கு அழைப்பு!

பிக் பி என்று செல்லமாக அழைக்கப்படும் பாலிவுட்டின் ‘முடிசூடா மன்னன்’ அமிதாப் பச்சன் திரையுலகுக்கு வந்து 40 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன.

rajini-02

இதைக் கொண்டாடும் விதத்தில், இதற்கு முன் இப்படியொரு விழா நடந்ததில்லை என இந்தியாவே வியக்கும் அளவுக்கு பிரமாண்ட விழா  நடத்துகின்றனர்.

பாலிவுட்டின் அனைத்து நடிகர்களும் பங்கேற்கும் இந்த விழாவுக்கு, சூப்பர் ஸ்டார் ரஜினியை சிறப்பு விருந்தினராக அழைக்கும் திட்டமிருப்பதாக விழாக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தென்னிந்திய திரையுலகில் சாதனைகள் படைத்த கமல் ஹாஸன், மம்முட்டி, மோகன்லால், சிரஞ்சீவி என அனைவரையும் அழைக்கப் போகிறார்களாம்.

வரும் நவம்பர் 7-ம் தேதி இந்த விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகள் முழுவதையும் அனில் திருபாய் அம்பானி குழுமத் தலைவர் அனில் அம்பானி மேற்கொள்கிறார்.

அமிதாப் பச்சனின் புகழ்பெற்ற பாடல்கள், காட்சிகளை மேடையில் நடித்துக் காட்டுகிறார்கள் பாலிவுட் நட்சத்திரங்கள். இந்தக் குழுவில் அமிதாப்பின் மகன் அபிஷேக் மற்றும் மருமகள் ஐஸ்வர்யா ராயும் இடம்பெற்றுள்ளனர்.

நிகழ்ச்சியின் இறுதியில் மட்டும் அமிதாப் பச்சன் மேடையில் தோன்றி தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார்.

இன்னொரு பக்கம், வரும் அக்டோபர் 11- ம் தேதி அமிதாப்பின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடவும் ஏற்பாடுகள் நடக்கின்றன.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *